❣️24❣️

810 41 0
                                    

தன்னை ஏமாற்றி இருக்கிறான் என சமையலறை வாசலை பார்த்ததும், புரிந்து கொண்டாள் ஆதிரா

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

தன்னை ஏமாற்றி இருக்கிறான் என சமையலறை வாசலை பார்த்ததும், புரிந்து கொண்டாள் ஆதிரா. ஏனெனில், அங்கு கௌசல்யாவே இல்லை. 🤨😤😤இடுப்பில் கை வைத்து அவனை முடிந்த மட்டும் முறைத்தாள்.

🤪🤪🤪கள்ள சிரிப்புடன் அவளை பார்த்துக்கொண்டிருந்தான் மித்ரன்.  "புளுகு மூட்டை" என அவன் காதில் விழுவதுபோல் முணுமுணுத்தாள்.

“🤗🤗இது என்னடா வம்பா போச்சு.. நான் கேட்டதும் கொடுத்திருக்கும்.. நீ குடுக்கலனதும் தான், நான் பொய் சொன்னேன்.. உன் மேல தான் தப்பு" என வம்பிழுத்தபடி அவளுக்கு ☕☕🫖டீ கப்பை, வரவேற்பறைக்கு எடுத்து வர உதவி செய்தான்.

குடும்பமாய் அமர்ந்து, ☕☕குடிப்பது ஆதிக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்பொழுது, வீட்டின் அழைப்பு மணியோசை கேட்டது.

கதவை திறந்த கௌசல்யாவிற்கு யாரென புலப்படவில்லை.  "மன்னிச்சிருங்க, யாருனு எனக்கு தெரியல"

வந்திருந்தவர், “அதுல உன் தப்பு இல்லமா.. இப்போதான் நாம பாக்குறோம் முதல் முறையா.. நான்.... ஆதியோட அப்பா, இவங்க ரெண்டு பேரும் அவ ஃப்ரெண்ட்ஸ் கதிர், ஷீலா" என அறிமுகப்படுத்தினார். 

“ 🙏🙏வாங்க ... உள்ள வாங்க அண்ணா.. வாமா, வாப்பா" என மனதார வரவேற்றார்.

வரவேற்பறைக்குள் நுழைந்தவரை பார்த்து, ஆதி ஒருகணம் பயந்தாள். பின் சாரதா ப்ரஜன் வரவில்லை என்றதும் மகிழ்ச்சியாய் தந்தையை பார்த்து ,"அப்பா.. எப்போ பா வந்தீங்க ? வீடு அட்ரஸ் எப்படி உங்களுக்கு தெரியும்" என கேள்வி கணைகளை துளைத்தாள்.

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்Where stories live. Discover now