💖9⃣💖-corrected

892 43 2
                                    

 18 வருடங்களுக்குமுன், தேவ்குமார் ஆரம்பித்த தொழில் நஷ்டத்தில் சென்றது

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


18 வருடங்களுக்குமுன், தேவ்குமார் ஆரம்பித்த தொழில் நஷ்டத்தில் சென்றது. உதவி என்று நட்பினர் யாரும் ஒன்றும் செய்யவில்லை. சொந்தம் என்று சொல்லிக்கும் அளவும், யாரும் அவருக்கு கிடையாது. அவரே பெரும் முயற்சி செய்து, நஷ்டத்தில் இருந்து முன்னுக்கு வந்தார். பிறகு நன்றாக வளர்ச்சி அடைந்ததும், நட்பு பல தேடி வந்தது.

இதை மித்ரனின் தந்தை வழி பாட்டி அவனிடம் சொல்லி, "எப்போவும் காசு இருந்தா தான் உன்னை தேடி தேடி வருவாங்க. அப்படி வரவங்க எல்லாம், உன் பணத்தை பார்த்து வந்தவங்களா இருப்பாங்க. அதனால இனி உன்ன தேடி யார் வந்தாலும் நம்பாத. உன் பணத்தை பார்த்து விலகி போறவங்களா, உண்மையா இருக்கவங்க கிட்ட, நீயே நட்பு வச்சுக்கோ. அவங்க மட்டும்தான், நீ கஷ்டபட்டாலும் உன்கூட இருப்பாங்க." என சொல்லியே வளர்த்தார்.

அவன் பாட்டி சொல்லியதைப்போல், நிறைய அனுபவம் ஏற்பட்டது கல்லூரியில். எல்லாரும் அவனை வசதியானவன் என்று தெரிந்ததும், அட்டைபோல் ஒட்டிக்கொள்ள முயன்றனர். அதனால் அவனுக்கு நட்பு என்று இருந்ததில்லை.

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்Where stories live. Discover now