❣️28❣️

782 40 1
                                    

மித்ரன் மெல்ல பிரஜனிடம் சென்று, அவன் கைப்பற்றியபடி

Йой! Нажаль, це зображення не відповідає нашим правилам. Щоб продовжити публікацію, будь ласка, видаліть його або завантажте інше.

மித்ரன் மெல்ல பிரஜனிடம் சென்று, அவன் கைப்பற்றியபடி.. “சாரி, நான் ஏதோ கோவத்துல உங்களோட சரியா பேசல..”

“நான் பண்ண காரியம் அப்டி மித்ரன்.. நீங்க பேசலங்குறது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல.. ப்ளீஸ் சாரி எல்லாம் கேட்காதீங்க”

பின் மித்ரன் ஆதியின் தற்போதைய நிலைமையை கூறினான், “ஆதி ரொம்ப உணர்ச்சி வசபட்டா.. மூக்குலருந்து ரத்தம் வரும். அவ ட்ரீட்மென்ட் முடியுற வர, அடிக்கடி அப்படி நடக்க கூடாதுன்னு, டாக்டர் சொல்லிருக்காங்க.. இத்தனை நாள் கோவமாவே பார்த்த உங்கள, திடீர்னு நெருக்கமான ஆளா, அவளால  ஏத்துக்க முடியாம தவிக்குறா.. கொஞ்சம் கொஞ்சமா அவ உங்ககூட பழகணும், ஒரே நாளில் நீங்க பாசம் காட்டினா.. அவளால அத தாங்க முடியாது.. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க ”

“அவ பாசம் வச்சப்போ, நான் ஒதுக்கி வச்சேன்.. இப்போ காட்டலாம்னு நினைக்கிறப்போ, அதுவும் அவளை பாதிக்குது.. இட்ஸ் ஓ.கே.. நான் இனி கவனமா இருக்கேன்”

“தேங்க்ஸ் மச்சான்” 

“ஹே...” என அனைவரும் கை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

நன்றாக தூங்கி எழுந்த ஆதி, ஒரு குளியல் போட்டு, வேறுடைக்கு மாறி, கீழிறங்கி வந்தால். அவளது நடையிலே ஒரு துள்ளல் இருந்தது. இருக்காதா பின்னே! தாயும் தமயனும் தன்னிடம் பாசமாக பேசி மன்னிப்பு கேட்டதே, அதற்கு காரணம்.

மாடிப்படியில் இறங்கியபடி, இதையெல்லாம் செய்த மித்ரனை பார்க்க, கதிரோடு ஏதோ சுவாரசியமாய் பேசி சிரித்துக் கொண்டிருந்தான்.

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்Where stories live. Discover now