💟17💟-corrected

826 39 0
                                    

சிவநேசன் – சாரதா இவர்கள் இருவரின் பூர்விகம் தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு சிறு கிராமம். ஏழை விவசாய குடும்பம் தான்.  திருமணம் முடிந்து சாரதா கருவுற்ற பொழுது , தனக்கு பிறக்க போகும் குழந்தைகளாவது, நல்ல நிலைமையில் இருக்க வேண்டும் என முடிவெடுத்து, வடநாட்டிற்கு சென்று இவர்கள் குடி புகுந்தனர்.

ஆரம்பத்தில் ஒரு நிறுவனத்தில் விற்பனையாளராகதான் சிவநேசன் வேலை பார்த்தார். அங்கே தொழில் நன்றாக பயின்றபொழு அவருக்கு ப்ரஜன் பிறந்தான்.

ஒரு விதை எப்படி போராடி, மண்ணை முட்டி, தளிர் விட்டு, செடியாகி பின் மரமாகுதோ.. அதேபோல் போராட்டங்கள் பல சிவனேசன் தன் வாழ்வில் சந்தித்துஒரு கடையின் முதலாளி என்ற நிலைமைக்கு வரும்பொழுது அவருக்கு ஆதிரா பிறந்தாள்.

மகள் வந்த நேரம் தான், தனக்கு வசதி வந்தது என்பது, அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை. அவள் பிறந்த பின் அவருக்கு தொட்டதெல்லாம் ஏற்றம் தான்.

ஆரம்பத்தில் சாதாரண குடும்பத் தலைவியாய், பொறுப்பாய் இருந்த சாரதா, கணவர் முன்னேற்றம் அடைய அடைய, மாற ஆரம்பித்தார்அதிலொன்று தான் அவரது ஸ்டேட்டஸ். தாங்கள் வசதியானவர்கள், தங்களுக்கு இணையானவர்களை மட்டுமே மதிக்க வேண்டும்பழக வேண்டும், இப்படி பல.

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்Where stories live. Discover now