❣️25❣️

849 38 0
                                    

🌞🌞🌞அன்றைய தினம் ஏறக்குறைய பிறந்ததுமுதல் இல்லாத அளவு, நன்றாக விடிந்திருப்பதாய் ஆதிக்கு தோன்றியது

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

🌞🌞🌞அன்றைய தினம் ஏறக்குறைய பிறந்ததுமுதல் இல்லாத அளவு, நன்றாக விடிந்திருப்பதாய் ஆதிக்கு தோன்றியது.  காரணம், தனக்கு அருகில் படுத்திருக்கும் மித்ரனும் அவன் குடும்பமும் தான்.

பின் நேற்று மித்ரன் பேசியது நியாபகம் வர, மனம் வலித்தது. எழுந்து சென்று காலை கடன்களை முடித்து, குளித்துவிட்டு வெளி வருகையில், மித்ரன் விழித்திருந்தான்.  "குட்  மார்னிங் பேபி" என்றான் காதலாய்.

பதில் கூறாமல் ஆதி, தலை காய வைத்தபடி கண்ணாடிமுன் நின்றிருந்தாள். முகம் சுனங்க, அவளருகில் ஒரு எட்டு எடுத்துவைத்தான்.  நேற்றுபோல் வம்பிழுக்க வருகிறான் என புரிந்துகொண்ட ஆதி, பேச கூடாது என நேற்று இரவு எடுத்த முடிவை கைவிட்டு "குட் மார்னிங்" என கூறி வெற்றிகரமாய் பின்வாங்கினாள்.

மித்ரன் சிரித்தபடி, "நீ என்ன நினச்சு குட் மார்னிங் சொன்னியோ, அது நடக்காது" என ஆதிரா சுதாரிக்கும் முன், அவள் கன்னத்தில் முத்தம் பதித்து😘, குளியலறைக்குள் ஓடிவிட்டான்.

😇😊😊மித்ரனிடம் தோற்பது கூட ஆதிக்கு இனித்தது. சிரித்தபடி தயாராகி, கீழே சென்றாள். அங்கு சென்றபிறகு அவளுக்கு  என்ன செய்வது என தெரியவில்லை. ஆதிக்கு வருத்தமாய் இருந்தது, " நமக்கு ஒரு வேலையும் தெரியாது.. ஆண்ட்டிக்கு ஹெல்ப் பண்ணலாம்னா, என்ன பண்றது தெரில.. சரி ஆண்ட்டி வர வரைக்கும் டிவி பார்க்கலாம் " என அதை உயிர்ப்பித்து, பாடல் வைத்தாள்.

கௌசல்யா வந்தது கூட தெரியாமல், பாடலிலே ஆழ்ந்து போய் விட்டாள். ஏனெனில், அத்தனையும் அவளுக்கு மிகவும் பிடித்த பாடல்கள். இறுதியாய் கமல்ஹாசன் படத்தில் உள்ள " உன்னை காணாது " பாடலிற்கு தன்னை மறந்து, சுற்றம் மறந்து, பரதம் ஆட ஆரம்பித்தாள். பாடல் முடிவில், கேட்ட கரகோஷத்தில் சுய நினைவிற்கு திரும்பினாள்.

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்Where stories live. Discover now