💞31💞

745 38 1
                                    

Sorry for the late update friends.

ஆதி கூறிய இடத்திற்கு வரும்போது, அந்த இடம் அலங்கோலமாய் கிடந்தது

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

ஆதி கூறிய இடத்திற்கு வரும்போது, அந்த இடம் அலங்கோலமாய் கிடந்தது. அங்கிருந்த ஒரு சிலரிடம் ஷீலாவை தேடியபடி என்னவென்று விசாரித்தனர். ஏதோ அரசியல்வாதி கைதானதற்கு, தொண்டர்கள் அராஜகம் செய்ததாய் கூறிவிட்டு சென்றார்.

ஷீலாவை அங்கு காணவில்லை. அர்ஜுன் ஒருபுறம், மித்ரன் மறுபுறம் என்று தேடியபடி சென்றனர். “ஷீலா..... ஷீலா...”

ஆதி கூறிய அடையாளத்தோடு ஒரு டாக்ஸி அங்கு நிற்க, அதன் கண்ணாடி எல்லாம் உடைத்து நொறுக்கப்பட்டிருந்தது. அதை பார்த்த அர்ஜுனிற்கு, ஒரு நிமிடம் உலகமே வெறுமையாய் தோன்றியது. “ஷீலுக்கு ஒன்னும் ஆகியிருக்காது” என ஜபம் போல் சொல்லிக்கொண்டே, அந்த இடம் முழுதும், அவள் பெயரை  சத்தமாக சொல்லியபடி தேடி அலைந்தான். “ஷீலா... ஷீலா..”

அப்போது அங்கிருந்த ஒரு வீட்டின் சுவற்றிற்கு அந்த பக்கம் இருந்து எழுந்த ஷீலா “அர்ஜுன்” என கண்ணீருடன் அழைத்தாள். ஒரே தாவலில் அந்த பக்கம் குதித்த அர்ஜுன், “இனி வாழ்வில் நாங்கள் பிரிவென்பதை சந்திக்க கூடாது கடவுளே” என வேண்டியபடி அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான். ஷீலாவிற்கும் இந்த அணைப்பு தேவையாய் இருந்தது. 

“நான் ரொம்ப பயந்துட்டேன்” என கூறியபடி நெற்றியில் முத்தமிட்டு, மறுபடியும் அவளை அணைத்துக்கொண்டான். அந்த ஒற்றை முத்தத்தில், அவளுக்கு தேவையான நட்பு, அன்பு, காதல், இத்தனை நேரம் தன்னை காணாமல் அவனின் தவிப்பு, இப்பொது தன்னை கண்டதும் ஏற்பட்ட மகிழ்ச்சி என்று அவன் வாயால் கூறாத உணர்வுகள், அனைத்தையும் புரிந்து ஆனந்தம் கொண்டாள்.

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்Where stories live. Discover now