💖4⃣💖-corrected

1.2K 56 0
                                    

 காலையில் கண்ணுக்கு விருந்தாய் அமைந்த கதிரவன், நேரம் செல்ல செல்ல, தன் செந்நிற கதிர்களை, கோபக்கதிர்களாய் கக்க ஆரம்பித்தான்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

காலையில் கண்ணுக்கு விருந்தாய் அமைந்த கதிரவன், நேரம் செல்ல செல்ல, தன் செந்நிற கதிர்களை, கோபக்கதிர்களாய் கக்க ஆரம்பித்தான். அந்நேரத்தில் சென்னை டிராஃபிக்கை வெயிலில் கடந்து, அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு வருவதென்பது, பெரும்பாலான ஊழியர்களுக்கு, மலையை பிரட்டி வைப்பது போல தான். அப்படி அல்லோலப்பட்டு அன்றும், ஆதிரா பத்து நிமிடம் முன்பே, அலுவலகம் அடைந்துவிட்டாள்.

அத்தனை மனக்கஷ்டத்திலும்அவளுக்கு அலுவலகம் வரவேண்டும் என்றால், இனிக்க தான் செய்யும். காரணம் இரண்டு நபர்கள்.

தனக்கு பிடித்த அஜூ(அர்ஜுன்) அண்ணாவும், அவள் மனங்கவர்ந்த💚 மித்துவும் (மித்ரன்) தான் அவர்கள். அவள் வாழ்விலே, வலிய சென்று நட்பு பாராட்டிய ஆண்மகன் என்றால், அது அர்ஜுன் ஒருவனே. மித்ரனிடம் சென்று பேச, இன்னும் சந்தர்ப்பம் அமையவில்லை.

அலுவகத்திற்கு வந்த சில மணி துளிகளில், அவளிடம் வந்து நின்றான் சிவா. "ஹாய் பியூட்டி. யு ஆர் கார்ஜியஸ் டுடே."

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்Where stories live. Discover now