💟20💟-corrected

852 43 0
                                    

ஆதியை சாரதா அழைத்து சென்ற பிறகு, மித்ரனும் அர்ஜுனும் லதாவை தேடி சென்றனர்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

ஆதியை சாரதா அழைத்து சென்ற பிறகு, மித்ரனும் அர்ஜுனும் லதாவை தேடி சென்றனர். "வாங்க பா.. எங்க ஆதிமாவ காணோம்?" என அவர்கள் பின்னே எட்டி பார்த்தார்.

"அது வந்து ஆண்ட்டி.. அவள... அவங்க வீட்ல இருந்து வந்து அழைச்சிட்டு போய்டாங்க" என அன்று நடந்ததை கூறினர்.

"ஐயோ.. பெரியம்மாவா? என் பொண்ண இனி என்ன பண்ணுவாங்கனு தெரியலையே.. கடவுளே" என தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்.

அர்ஜுன் அவரை சமாதானம் செய்தான். "பயப்படாதீங்கமா. உங்க உதவி இருந்தா, ஆதிய சீக்கிரம் இங்க கூட்டிட்டு வந்திடலாம்" என தைரியம் சொன்னான்.

"ரொம்ப வருஷம் கழிச்சு, எனக்குனு ஒரு சொந்தம் கிடைச்சது. ஆதிக்காக நான் எவ்ளோ பெரிய கஷ்டம்னாலும் செய்றேன். நான் என்ன செய்யணும்ப்பா. சொல்லுங்க."

"முதல அங்க உள்ளவங்கள பத்தி சொல்லுங்க. அங்க வேலை செய்றவங்க யாரையும் தெரியுமா? அவங்க வீட்டுல உள்ளவங்க பழக்க வழக்கம் எதும் தெரியுமா?" என அர்ஜுன் கேள்வி கணைகளை தொடுத்தான்.

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்Where stories live. Discover now