💖6⃣💖-corrected

1.1K 51 1
                                    

பகலவன் தன் பலம் முழுவதையும் காட்டும் அந்த நண்பகல் நேரம்

اوووه! هذه الصورة لا تتبع إرشادات المحتوى الخاصة بنا. لمتابعة النشر، يرجى إزالتها أو تحميل صورة أخرى.

பகலவன் தன் பலம் முழுவதையும் காட்டும் அந்த நண்பகல் நேரம். தேவ் அலுவலகம் போன்று, இன்னும் ஏராளமானோர் தங்கள் சோர்வை ஓரம் தள்ளி வைத்து, இலட்சியத்தை நோக்கி சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்.

தேவ்-வின் அலுவலகம் மெடிக்கல் பில்லிங்கை மையமாய் கொண்டு இயங்கி வருகின்றது. அமெரிக்காவில் ஒரு சில டாக்டர்ஸ்களுக்கு மட்டும் ஆரம்பத்தில் பில்லிங் செய்து கொண்டிருந்த அலுவலகம், இப்பொழுது அங்கு பாதி மாகாணங்களில் உள்ள மருத்துவர்களுக்கு பில்லிங் செய்யும் அளவு வளர்ந்து உள்ளது.

அன்று ஆதிக்கு நிறைய வேலை இருப்பதால், இடைவேளை நேரத்தில் மித்ரன் அர்ஜுனுடன் வரவில்லை. ஒருநாளைக்கு ஒருமுறையேனும் கண்ணில் படுபவளை, இன்று காணாததால், ஏக்கமாய் எப்போது உணவு இடைவேளை வரும், அவளை காணலாம் என யோசித்தவாறே, வேலை செய்ய பிடிக்காமல் அமர்ந்திருந்தான் மித்ரன்.

அவனது மனசாட்சி, "டேய் மித்ரா.. நீயா இது. அதும் ஒரு பொண்ண பத்தி நினைக்குற?" என கேள்வி கணைகளை தொடுத்தது.

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்حيث تعيش القصص. اكتشف الآن