💖3⃣💖-corrected

1.3K 47 0
                                    

"ஏன்பா, வேலைக்கு நேரம் ஆகலயா? நான் போய் மளிகை சாமான் எல்லாம் வாங்கிக்க மாட்டேனா?" என அர்ஜூனின் தாய் கமலா கேட்டுக்கொண்டிருந்தார்.


"இன்னும் டைம் இருக்குமா. நடந்து போனா பத்து நிமிஷம்ல போய்டலாம். நான் பைக்ல தானே போறேன், அதனால லேட் ஆகாது. நேத்துலாம் மூட்டுவலின்னு தைலம் தேச்சிட்டு இருந்தீங்க. இப்போ நடந்து கடைக்கு போகணும்நான் இரண்டு நிமிஷம்ல வாங்கிட்டு வரேன், பையை கொடுங்க" என பையை வாங்கி கடைக்கு கிளம்பினான்.

(இவன்தாங்க நம்ம பாசமலர் அர்ஜுன். அம்மா மேல மட்டும் இப்படி பாசம் வைக்கமாட்டான், தனக்கு பிடிச்ச எல்லார் மேலயும் இப்படி தான் அன்பா இருப்பான்)

தன்மகன் தன்னிடம் காட்டும் பாசம் கண்டு அந்த தாயுள்ளம் மகிழ்ந்தது. அவன் தங்கை கார்த்திகாவிடம் கூட, மற்ற அண்ணன்கள் போல் சண்டை வளர்க்காமல், பொறுப்பாக நடந்து கொள்வான்.


தன் கணவர் திடீரென்று மாரடைப்பில் இறந்து, தாங்கள் தவித்த போது, வீட்டின் தலைவனாய் பொறுப்பேற்று நடத்தி, தன்னையும் தன் மகளையும் துக்கத்திலிருந்து மீட்டெடுத்தவன் அவன் தான்.


அவன் வேலை பார்க்கும் அலுவலகத்தில், ப்ராஜெக்ட் மேனேஜர் பதவிக்கு வருவதற்கு, நிறைய உழைத்தான். கூடவே வீட்டு பொறுப்பையும் திறம்படச் செய்தான்அத்துடன் தன் தங்கையை அவள் விரும்பிய கோர்ஸ் படிக்க வைத்தான்.

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்Where stories live. Discover now