💟15💟-corrected

866 41 0
                                    

பரிசல் ஒருநிலைக்கு வரும்வரை, என்ன நடந்தது என்பதை ஆதியும் மித்ரனும் உணரவில்லை

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.

பரிசல் ஒருநிலைக்கு வரும்வரை, என்ன நடந்தது என்பதை ஆதியும் மித்ரனும் உணரவில்லை. அர்ஜுன் தண்ணீரில் மூழ்கும் பொழுதுதான் , மித்ரன் கவனித்தான். ஆதியோ அர்ஜுனுக்கு ஆபத்து எனவும், பேயறைந்தது போல உறைந்து விட்டாள்.

"டேய் அர்ஜுன்.." என மித்ரன் நீரினுள் பாய்ந்து அவனை காப்பாற்ற முயன்றான்.

தனித்து விடப்பட்ட ஆதிக்கு அப்பொழுதுதான் சுயநினைவு வந்தது. "ஐயோ அஜூ.... மித்தூ....." என கத்தினாள்.

நீருக்குள் இவள் கத்தியது ஒன்றும் கேட்கவில்லை. பதிலொன்றும் வராமல் போகவும், "போச்சு.. என்னைய விழாம பிடிக்க போய், ரெண்டு பேரும் தண்ணீல விழுந்துட்டாங்க. எல்லாம் என்னாலதான்." என அழுதவாறே நீருக்குள் எந்த பக்கம் சென்றனர் என தெரியாமல், எல்லாப்பக்கமும் பார்த்து, "அஜூ, மித்தூ.." என அலறினாள்.

இவர்கள் பரிசலில் ரொம்ப தூரம் வந்ததால், இங்கு என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. அதனால் உதவிக்கு யாரையும் கூப்பிடவும் முடியவில்லை.

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்Donde viven las historias. Descúbrelo ahora