💖1⃣💖-corrected

4.5K 66 1
                                    

வானம் சூரியன் என்னும் தன் பிள்ளையை பிரசவித்த அந்தப் பொழுதை, தன் வீட்டு மாடியில் இருந்து வெறித்து கொண்டிருந்தாள் ஆதிரா.

மனமோ! தான் வீட்டை விட்டு வந்து ஆறு மாதம் அதற்குள் ஆகிவிட்டதே என புலம்பிக்கொண்டிருந்தது. "எனக்கான வாழ்க்கையை நான் வாழ, இன்னும் ஒன்றரை வருஷம் தான் இருக்கு எனக்கு. அதன் பிறகு! " நினைச்சு பார்க்கவே ஆதிராக்கு பயமா இருந்தது.

மனதில் அவளே அவளுக்கு ஆறுதல் கூறிக்கொண்டாள். "ஆதி.. முடிந்தவரை கவலை தர விஷயம் எதையும் நினைக்காம இரு. அதே போல நீ யாருனு, யாருக்கும் தெரியவும் கூடாது கடைசி வரை. அப்படி மட்டும் தெரிஞ்சிட்டா, இப்போ கிடைக்குற போலி இல்லாத உறவுகளும், நிம்மதியும், சந்தோசமும் இல்லாம போயிடும்." என முடிவெடுத்த பின், மகிழ்ச்சியான மனநிலையில், இப்போது கதிரவனை ரசித்தாள்.

தன் எண்ண ஓட்டத்தில் மூழ்கிருந்த அதிராவை, லதாவின் குரல் நடப்புக்கு கொண்டு வந்தது.

"சின்னம்மா. காலை டிபனுக்கு என்ன செய்றது?"

இடுப்பில் கை வைத்து, ஒற்றை புருவத்தை அழகாய் உயர்த்தி, "உங்கள எத்தன தடவ சொல்றேன், என்னைய ஆதின்னு பேர் சொல்லி கூப்டுங்கன்னு" என்றாள் செல்லமாய்.

அசட்டு புன்னகை ஒன்றை தந்த படி, "அப்டியே சொல்லி பழகிருச்சு மா." என்றார் அவர்.

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்Where stories live. Discover now