கண்டேன் என் ஜீவாமிர்தம்✔

By Vaishu1986

217K 9.9K 3K

பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நா... More

💟 ஜீவாமிர்தம் 1
💟 ஜீவாமிர்தம் 2
💟 ஜீவாமிர்தம் 3
💟 ஜீவாமிர்தம் 4
💟 ஜீவாமிர்தம் 5
💟 ஜீவாமிர்தம் 6
💟 ஜீவாமிர்தம் 7
💟 ஜீவாமிர்தம் 8
💟 ஜீவாமிர்தம் 9
💟 ஜீவாமிர்தம் 10
💟 ஜீவாமிர்தம் 11
💟 ஜீவாமிர்தம் 12
💟 ஜீவாமிர்தம் 13
💟 ஜீவாமிர்தம் 14
💟 ஜீவாமிர்தம் 15
💟 ஜீவாமிர்தம் 16
💟 ஜீவாமிர்தம் 17
💟 ஜீவாமிர்தம் 18
💟 ஜீவாமிர்தம் 19
💟 ஜீவாமிர்தம் 20
💟 ஜீவாமிர்தம் 21
💟 ஜீவாமிர்தம் 22
💟 ஜீவாமிர்தம் 23
💟 ஜீவாமிர்தம் 24
💟 ஜீவாமிர்தம் 25
💟 ஜீவாமிர்தம் 26
💟 ஜீவாமிர்தம் 27
💟 ஜீவாமிர்தம் 28
💟 ஜீவாமிர்தம் 29
💟 ஜீவாமிர்தம் 30
💟 ஜீவாமிர்தம் 31
💟 ஜீவாமிர்தம் 32
💟 ஜீவாமிர்தம் 33
💟 ஜீவாமிர்தம் 34
💟 ஜீவாமிர்தம் 35
💟 ஜீவாமிர்தம் 36
💟 ஜீவாமிர்தம் 37
💟 ஜீவாமிர்தம் 38
💟 ஜீவாமிர்தம் 39
💟 ஜீவாமிர்தம் 40
💟 ஜீவாமிர்தம் 41
💟 ஜீவாமிர்தம் 42
💟 ஜீவாமிர்தம் 43
💟 ஜீவாமிர்தம் 44
💟 ஜீவாமிர்தம் 45
💟 ஜீவாமிர்தம் 46
💟 ஜீவாமிர்தம் 47
💟 ஜீவாமிர்தம் 48
💟 ஜீவாமிர்தம் 49
💟 ஜீவாமிர்தம் 50
💟 ஜீவாமிர்தம் 51
💟 ஜீவாமிர்தம் 52
💟 ஜீவாமிர்தம் 53
💟 ஜீவாமிர்தம் 54
💟 ஜீவாமிர்தம் 55
💟 ஜீவாமிர்தம் 56
💟 ஜீவாமிர்தம் 57
💟 ஜீவாமிர்தம் 58
💟 ஜீவாமிர்தம் 59
💟 ஜீவாமிர்தம் 60
💟 ஜீவாமிர்தம் 61
💟 ஜீவாமிர்தம் 62
💟 ஜீவாமிர்தம் 63
💟 ஜீவாமிர்தம் 64
💟 ஜீவாமிர்தம் 65
💟 ஜீவாமிர்தம் 66
💟 ஜீவாமிர்தம் 67
💟 ஜீவாமிர்தம் 68
💟 ஜீவாமிர்தம் 69
💟 ஜீவாமிர்தம் 70
💟 ஜீவாமிர்தம் 71
💟 ஜீவாமிர்தம் 72
💟 ஜீவாமிர்தம் 73
💟 ஜீவாமிர்தம் 74

💟 ஜீவாமிர்தம் 75

5.1K 147 114
By Vaishu1986

"டேய் ஹல்க், எப்போ பார்த்தாலும் யார் கிட்டயும் சொல்லாம கொள்ளாம என்னைய இப்படி வாயைப் பொத்தி தூக்கிட்டு வந்துடுறியே...... வீட்ல நம்மள தேடப்போறாங்கடா. இன்னிக்கு ஷாப்ல எல்லார்ட்டயும் ப்ளெசிங்ஸ் வாங்கினப்போ உன்னைய கல்யாணம் பண்ணிக்கோன்னு அவசரப்படுத்தி அடம் பிடிச்சுட்டுனோன்னு ஃபீல் ஆச்சு நந்து...." என்று சொன்ன தன் மனைவியிடம் புன்னகையுடன்,

"சாவிய கையில குடுத்து ஒரு வாரம் நாங்க இந்தப் பக்கம் வரமாட்டோம்னு லீடும் குடுத்து நம்மள கிளப்பி விட்டதே தாத்தா தான்; அதனால நம்ம ரெண்டு பேரையும் யாரும் தேட மாட்டாங்க! இந்த பாகி எரும வேணும்னா அய்யோ அம்மான்னு ரெண்டு சவுண்ட் விட்டுட்டு இருக்கும். கல்யாணம் பண்ணிக்க சொல்லி அடம் பிடிச்சத ஏம்மா இப்போ பேசி ஃபீல் பண்ணிட்டு இருக்க? கொஞ்சம் பார்வெர்டு திங்கிங்கோட இரு! நான் நம்ம ஜீனியரை ப்ளே ஸ்கூல்ல சேர்க்குற அளவுக்கு பில்டப் பண்ணிட்டேன். நீ இப்போ பார்த்து ஜெர்க் அடிச்சன்னா பண்ணையாரு மறுபடியும் முதல்ல இருந்து நமக்கு க்ராண்ட் வெட்டிங்னு ஆரம்பிச்சுடுவாரு, பை த வே இனியா ப்ரெக்னென்டா இருக்காளாம், இப்போ தான் பிக்பாய் மெசேஜ் பண்ணியிருந்தான். நாளைக்கு, இல்ல நாளைக்கு மறுநாள் நீ ஃப்ரீயா இருக்கும் போது அவளுக்கு விஷ் பண்ணி மெசேஜ் பண்ணிடு!" என்று சொல்லி விட்டு பாதையைப் பார்த்து வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவனிடம்,

"எங்க நந்து போறோம்? பூம்பாறைக்கா? எல்லாரும் வீட்டுக்கு வந்துருக்காங்க. இப்போ போய் எதுக்கு நம்ம ரெண்டு பேரு மட்டும் அங்க போகணும்? இன்னோரு தடவை தாத்தா வீட்டுக்கு வரலாம்ப்பா!" என்று சொன்னவளிடம்,

"........ஷ்ஷ்ஷ்! உன் கிட்ட ஏதாவது சஜஷன்ஸ் கேட்டா மட்டும் தான் வாயைத் திறக்கணும். அது வரைக்கும் எதுவும் பேசக்கூடாது!" என்று சொல்லி விட்டு அவன் அதற்கு மேல் அவளிடம் ஒன்றும் பேசாமல் இருந்து விடவும், கவிப்ரியாவிற்கு சற்று ஏமாற்றமாக இருந்தது.

இவ்வளவு தெளிவாக அவளது மனதை அவனிடம் உணர்த்தி ஆகி விட்டது! ஆனால் இதற்கு மேலும் அவன் தன் கம்பாட்டிபிளிட்டி கேமை பிடித்துக் கொண்டு தொங்கத் தான் போகிறானா என்று அவளுக்கு கோபமாக வந்தது. அவனிடம் பித்தான அவளது காதல் கொண்ட மனது இப்போது அவனது அணைப்பிற்கும், அருகாமைக்கும் ஏங்கத் துவங்கியது. ஆனால் அவன் மனதில் அப்படியெல்லாம் ஒன்றும் மாற்றம் ஏற்படவில்லை போலும். வழக்கமான அவன் இயல்புக்கு மாறாக சற்று இறுக்கத்துடன் தான் இருந்தான்.

"நந்து இன்னும் நமக்குள்ள கம்பாட்டிபிளிட்டி டெவலப் ஆகலைன்னு நினைச்சு கோபமா இருக்கியா? காலையில எல்லாம் நல்லா தானே இருந்த, இப்போ ஏன் ஒரு மாதிரி ஸ்டிஃப்பா இருக்க! நான் எதுவும் தப்பா பேசிட்டேனா?" என்று கேட்டவளிடம் எரிச்சலுடன்,

"இந்த மாதிரி ரொம்ப பொலைட்டா எல்லாம் பேசாத. உன் கேரக்டருக்கு அது செட் ஆகவேயில்ல...... நீ நீயா இரு! எனக்காக உன் இயல்பை மாத்திக்குறேன்னு ஆரம்பிச்சு என் கூட சண்டை போடாம, கெத்தா ஒரு லுக் விடாம, கழுத்தை ஒரு வெட்டு வெட்டிட்டு போவியே அதெல்லாம் செய்யாம இருந்தன்னா நீ என் கேப்ஸி தானான்னு எனக்கு சந்தேகம் வந்துடும். நான் பாட்டுக்கு புலம்பிட்டு இருக்கேன். இப்படி சைடு லுக் விட்டா என்ன அர்த்தம்?" என்று கேட்டவனிடம்,

"ஒண்ணுமில்ல. நான் ஒரு கேள்வி கேக்க வந்தேன். நீ அத ஸ்கிப் பண்ற! உன்னை ஒரு லுக்கும் விடல, அமைதியா உட்கார்ந்து வர்றேன். போதுமா? டென்ஷன் ஆகாம பாதைய பார்த்து ஓட்டு!" என்று சொல்லி விட்டு தன் காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டு இருக்கையில் கண்மூடி சாய்ந்து விட்டாள் கவிப்ரியா.

அடுத்த இருபது நிமிடங்களில் தன் தாத்தாவின் வீட்டு காம்பவுண்டுக்குள் தன் வாகனத்தை செலுத்தியவன் தன் மனைவியை இரு கைகளிலும் ஏந்திக் கொண்டு வீட்டிற்குள் சென்றான்.

கணவனது கைகளில் இருக்கிறோம் என்று உணர்ந்த கவிப்ரியா, "தூங்கிட்டனா நந்து, எழுப்பி விட்டுருக்கலாமே.....டேய் டேய் என்னடா ம்ம்ம் ம்ஹூம்!" என்று வார்த்தைகளை முடிக்க முடியாமல் அவனது முத்தத் தாக்குதலில் சிக்கி அவனால் சில பல காயமடைந்து கொண்டு இருந்தாள்.

கணவனது கைகள் சற்று வேகத்தை கூட்டி அவளது மேனியை தழுவிய போது கவிப்ரியா அவன் மார்பில் சாய்ந்து கொண்டு சற்று யோசனையுடன் நின்று கொண்டு இருக்க அவளை தோளில் சுமந்து வந்து படுக்கையில் கிடத்தியவன் வீட்டின் கதவுகளை சாற்றி விட்டு மறுபடியும் அவளிடம் வந்தான்.

"ஏன்டீ மூக்கி உனக்கு நான் ஸர்ப்ரைஸ் குடுக்கணும்ன்னு பார்த்து பார்த்து எல்லாத்தையும் செஞ்சா, அப்பப்பப்பா வச்சியே எனக்கு ஒரு பிக் ஸர்ப்ரைஸ்..... எப்படி எப்படி ஜீவா தான் உன் ஜீவாமிர்தமாக்கும்...... புண்ணியவதி கல்யாணம் ஆகி நாலு மாசம் கழிச்சு இப்பவாவது நம்ம சின்க்குகுள்ள வந்தியே? ரொம்ப நல்லா இருப்ப!" என்று சொன்ன தன் கணவனை புரியாத பார்வை பார்த்து குழம்பிப் போய் அமர்ந்து இருந்தாள் கவிப்ரியா.

"என்ன மூக்கி ஒண்ணும் புரியலையா.... நமக்குள்ள வேவ் லென்த் சேம் லைன்ல வரும் போது தான் நம்ம லைஃப் ஸ்டார்ட் பண்ணணும்னு நம்ம பேசி வச்சிருந்தோமா......?" என்று கேட்ட தன் கணவனிடம்

"ஆமா....ஆனா இன்னும் நம்ம ரெண்டு பேரும் ஒரே மாதிரி எதையுமே யோசிக்கலையே..... நீ ஏன்டா இப்படி ஒரு கேமை இழுத்து விட்டன்னு எனக்கு எரிச்சலா இருக்கு. ஆனா நீ தான் அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாம எப்போ பார்த்தாலும் என் பீலிங்சை வச்சு விளையாடிட்டு இருக்க. லெட்ஸ் ஸ்டார்ட் அவர் லைஃப் நந்து!" என்று சொன்ன தன் மனைவியிடம் சிரிப்புடன் தலையசைத்து விட்டு,

"பொறுமை பொறுமை; இப்போ உன் மொபைல் கேஸ கழட்டு. உள்ள ஒரு லெட்டர் இருக்கும், அதை எடுத்துப் பாரு!" என்றான் அவள் தோள் வளைவில் சாய்ந்து கொண்டு.

கவிப்ரியா ஆச்சரியத்துடன் அதை எடுத்து பிரித்து பார்க்க,
"கண்டேன் என் ஜீவனுக்குள் அமிர்தமாய் நிறைந்திருக்கும் அவள் காதலை" என்ற வாசகம் எழுதி இருந்தது.

"இத எனக்கு தெரியாம எப்படா வச்ச? டார்லிங் உனக்கு போய் இப்படி ஒரு திருட்டுப் பையன் புள்ளையா வந்து பொறந்திருக்கான் பாரேன்......!" என்று சொல்லி தலையில் கை வைத்துக் கொண்ட தன் மனைவியின் உதட்டைப் பற்றி தன்னருகே இழுத்தான் ஜீவா.

"ஏய் எனக்கு வலிக்குதுடா..... உதடை விடு பிசாசு!" என்று கெஞ்சியவளிடம்,

"நீ என்னைய டார்லிங்ன்னு கூப்பிடாம அந்த பண்ணையார போய் டார்லிங்னு கூப்பிடறத கேட்டா எனக்கு கூட தான் வலிக்குது. நமக்குள்ள வேவ் லென்த் சேம் லைன்ல செட் ஆக மாட்டேங்குது நந்துன்னு சொல்லி மூணு லெட்டருக்கு அப்புறம் ஒரு கேப் விட்டியே...... அப்போ எழுதுன லெட்டர் தான் இது! என்னோட நாலாவது லெட்டர்; பட் உனக்கு இவ்வளவு நாள் கழிச்சு இப்போ தான் மண்டைக்குள்ள பெல் அடிச்சிருக்கு. சின்க் சூப்பரா வொர்க் அவுட் ஆகிடுச்சுங்களா மேடம்..... ஏய் மூக்கி இந்நேரம் பார்த்து கண்ல தண்ணிய வர வச்சன்னா உன்னைய கொன்னுடுவேன் பார்த்துக்க! ஐ டோண்ட் வாண்ட் சால்ட்டி வாட்டர் கிஸ்ஸஸ்..... எனக்கு ப்ரெஷ்ஷா நிறைய கிஸ்ஸஸ் வேணும். காலையில நிறைய ரொமான்டிக் டயலாக் எல்லாம் விட்டியே..... இப்போ அந்த லவ்வ உன் ஆக்ஷன்ல காட்டு பார்ப்போம்!" என்று கேட்ட தன் கணவனை கட்டிலில் உருட்டி விட்டு அவன் மேல் படர்ந்தாள் கவிப்ரியா.

இருவரது தேடலும் சற்று எல்லை கடந்து கொண்டிருந்த போது தன் கணவனை தோளில் சுரண்டினாள் கவிப்ரியா.

"ம்ம்ம்..... அம்முலு மை ஸ்வீட் லிட்டில் டாலி!" என்று அவள் கழுத்து வளைவில் தன் வருடல்களுடன் முணங்கிக் கொண்டு இருந்தவனிடம்,

"நந்து இது இப்போ தப்பு இல்ல தானே.....?" என்று கேட்ட தன் மனைவியை பரிதாபமாக பார்த்தவன்,

"உனக்கு என்னைய பார்த்தா கொஞ்சம் கூட பாவம்னு தோணலையாடீ! இவ்வளவு நாள் உன்னைய போட்டு தள்ளாம உன் கூட சேர்ந்து உன் மைண்ட் ரெடியாகணும், லவ்வை நீயும் ரியலைஸ் பண்ணணும்னு விளையாடிட்டு இருந்தேன் பாரு, அது தான்டீ நான் பண்ண பெரிய தப்பு. இப்போ இருந்து என் கூட கோ ஆப்பரேட் பண்ணினா தான் ஒரு வாரத்துல வீட்டுக்கு கூட்டிட்டு போவேன். இல்லன்னா பதினைஞ்சு இருபது நாள் ஆகும். பார்த்துக்க!" என்று சொல்லி புருவம் தூக்கியவனிடம்,

"என்னது ஒரு வாரமா..... நத்திங் டூயிங்!
இன்னிக்கு நைட் கிளம்பணும். ப்ராஜெக்ட்ஸ்லாம் நிறைய ஏய் மலைமாடு...... விடுறா என்னை!" என்று கத்திக் கொண்டு இருந்த கவிப்ரியாவிடம் ஜீவானந்தன் ஒரு தீர்மானத்துக்கு வந்தது போன்ற ஒரு முகபாவத்துடன்,

"அம்முலு உன்னோட இந்த காஸ்ட்யூம் எனக்கு பிடிக்கல, இப்போ என்ன பண்ணலாம்?" என்று கேட்டவனை பார்த்து கவிப்ரியா ஒரு மர்மப் புன்னகையுடன்,

"ச்ச்சீ போடா!" என்று சொல்லி விட்டு அவளது முகபாவத்தை அவனிடமிருந்து மறைக்க முயன்று கொண்டிருந்தாள்.

ஆனால் தன்னவளின் சிணுங்கலையே தன் அழைப்பாக ஏற்ற ஜீவானந்தன் கவிப்ரியாவுடனான தனது இத்தனை வருட உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு தன் மனைவியையும் அந்த பணிகளில் முனைப்புடன் செயல்படுவதற்கு தயார் படுத்தி விட்டான்.

சில மணி நேரம் கழித்து அவளை உறக்கத்தில் இருந்து விடாமல் எழுப்பிக் கொண்டு இருந்தவனிடம், "ம்ப்ச் டிஸ்டர்ப் பண்ணாத நந்து..... நீயும் தூங்கு. எனக்கு ரொம்ப டையர்டா இருக்கு!" என்று சொல்லி விட்டு போர்வையை நன்றாக இழுத்து போர்த்திக் கொண்டவளிடம்,

"அம்முலு சாப்பிட வேண்டாமா? லன்ச் கூட ரெண்டு பேரும் சாப்பிடல. ஐ'ம் ஹங்க்ரி; வேக் அப் மை கேர்ள்!" என்று சொன்னவன் மடியில் படுத்துக் கொண்டு,

"சத்தியமா இப்போ எனக்கு சமைக்கிற மூடும் ஸ்டெமினாவும் கொஞ்சம் கூட இல்ல நந்து..... ப்ளீஸ் வா நம்ம வீட்டுக்கே போயிடலாம்!" என்று அழைத்து அரைக்கண்களை திறந்த கவிப்ரியா "வ்வ்வாவ்!" என்றாள் மிகுந்த ஆச்சரியத்துடன்.

"பிக்கஸ்ட் ஸர்ப்ரைஸ்! ஹோப் யூ லைக் இட். இட்ஸ் ப்யூட்டிஃபுல் இஸின்ட் இட்?" என்று கேட்ட தன் கணவன் கழுத்தை கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டவள்,

"அன்னிக்கு ஷைலு கூட போட்டி போடணும்னு நினைச்சு சும்மா ஒரு விளையாட்டுக்காக தான்டா க்ளாஸ் ஹவுஸ் கட்டித் தான்னு கேட்டேன். பட் நீ நிஜமாவே! நந்து நான் என்ன கேட்டாலும் ஏன் எதுக்குன்னு யோசிக்காம அத செஞ்சு முடிச்சிட்டு தான் ஹாப்பியா இருப்பியா நீ?" என்று கேட்ட தன் மனைவியின் கன்னத்தில் வலிக்கும் படி ஒரு அறை வைத்தான் ஜீவானந்தன்.

"ஏன்டீ என்னைய பார்த்தா உன்னோட ஸ்லேவ் மாதிரி தெரியுதா..... இவங்க கார் வேணும்னு கேப்பாங்களாம், ஒட்டகம் வேணும்னு கேப்பாங்களாம், க்ளாஸ் ஹவுஸ் கட்டித் தான்னு கேப்பாங்களாம்.... நம்மளும் சரி லவ் பண்ற பிசாசு கேட்டு தொலைஞ்சிடுச்சுன்னு கஷ்டப்பட்டு அத செஞ்சு குடுத்தா நான் சும்மா தான் கேட்டேன். நீ செய்றியான்னு பார்க்கறதுக்காக கேட்டேன்னு இன்னொரு தடவ சொல்லு, அந்த கன்னத்திலயும் அறை விழும்! எனக்கு பசிக்குது, சாப்பிட வர்றியா இல்லையா?" என்று கேட்ட தன் கணவனிடம் கோப மூச்சுகளுடன் கன்னத்தில் கையை வைத்து கொண்டு,

"போடா மலைமாடு நீயே போய் கொட்டிக்கோ போ நான் வர மாட்டேன்!" என்று மறுபடியும் சண்டித்தனம் செய்தாள் அவனது மூக்கி.

"கொலைப்பசியில இருக்கேன். மச்சான் சமையலை டேஸ்ட் பண்ணனும்னு ஆசை இருந்தா இன்னும் ரெண்டு நிமிஷத்துல டைனிங் டேபிளுக்கு வா, இல்லைன்னா நீ சாப்பிட ரா காரட்டும், பீட்ரூட்டும் தான் இருக்கும்! அப்புறம் உன் இஷ்டம்!" என்று சொல்லி விட்டு சென்றவன் ஐந்து நிமிடங்கள் கழித்து கவிப்ரியா வந்து அவளது உணவை வாயில் வைக்கும் வரையிலும் தன் தட்டில் இருந்த சாதத்தை வெறுமனே அளைந்து கொண்டு இருந்து விட்டு பின்பு தான் சாப்பிட ஆரம்பித்தான்.

அந்த கண்ணாடி மாளிகையில் ஒரு அரைநிலா வடிவ ஸோபாவில் தன் மனைவியை மார்பில் தாங்கியிருந்த படி நட்சத்திரங்களை ரசித்து கொண்டிருந்தவனிடம், "நந்து ஏதாவது பாட்டு பாடு!" என்றாள் கவிப்ரியா.

"மண்ணில் வந்த நிலவே....." என்று அவன் ஆரம்பித்த போதே தடுத்தவள்,

"ரொம்ப வருஷமா இதத்தான் எல்லாரும் பாடிட்டு இருக்கீங்க, வேற பாடு!" என்றாள். சற்று யோசித்து விட்டு,

"அவன் வருவான், கண்ணில் மழை துடைப்பான், இருள் வழிகளே புது ஒளி விதைப்பான்; அந்த கண்ணனை அழகு மன்னனை தினம் பாடி வா மனமே!" என்று அழகாக பாடிக் கொண்டு இருந்தவனின் வாயை மூடி விட்டு,

"இந்த பாட்டை இனிமே பாடவே பாடாத! இந்த பாட்டு பாடும் போது நான் உன்னை நினைச்சு ரொம்ப அழுதுட்டே பாடினேன், அதனால இது ரிஜெக்டட்!" என்று சொல்லிக் கொண்டு இருந்தவளை பார்த்து தலையில் கை வைத்து கொண்டு,

"ஏன்டீ எவ்வளவு ஹார்டு வொர்க் பண்ணிட்டு, அதுக்கும் மேல உனக்கு பசிக்குமேன்னு சாப்பாடும் செஞ்சு வச்சுட்டு, உன்னை இப்படி நெஞ்சில போட்டு தட்டிக் குடுத்துட்டு ஏதோ தெரிஞ்ச நாலு பாட்டை பாடுவோம்னு பார்த்தா, இது நல்லாயில்ல; அது நல்லாயில்லன்னு சொல்லிட்டு இருக்கியா நீ? நான் பாடுற பாட்டெல்லாம் வேண்டாம்னா நீயே பாடு!" என்று சொன்ன தன் கணவனின் முகத்தை பார்த்து விட்டு,

"நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூ பறித்தேன்......
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடீ!
கன்னி உன்னை பார்த்திருப்பேன்
கால் கடுக்க காத்திருப்பேன்.....
ஜீவன் வந்து சேரும் வரை
தேகம் போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்து விட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்!! என்று பாடி முடித்த கவிப்ரியா ஜீவானந்தனிடம்,

"இது உன்னோட பேவரைட் ஸாங் தானே நந்து..... முந்தி நம்ம பேசாம இருந்தப்ப என்னை மிஸ் பண்றப்ப நீ இந்த பாட்டை தானே அடிக்கடி பாடுவியாமே? பாகி சொன்னான். இனிமே இந்த பாட்டை பாடுற அவசியம் உனக்கு வரவே கூடாது! சரி ஒரு வேளை நான் ராகவ் கூட சிங்கப்பூர் கிளம்பி இருந்தேன்னா என்ன நந்து பண்ணியிருப்ப?" என்று கேட்ட தன் மனைவியிடம் புன்னகையுடன்,

"என்னடீ இனிமே அழவே கூடாதுன்னு வேற சொல்லிட்டு இப்படி மனச டச் பண்ணிட்டு இருக்க மூக்கி..... என்ன விட்டுட்டு சத்தியமா நீ கிளம்பி இருக்க மாட்ட அம்முலு.... அப்படியே போயிருந்தாலும் இறங்குன கையோட அடுத்த ப்ளைட்ட பிடிச்சு இங்க ஓடி வந்துருப்ப! சண்டை போட்டுட்டே இருந்தாலும், என்னை திட்டுகிட்டே இருந்தாலும் நான் இல்லாம உனக்கு ரொம்ப போர் அடிக்கும் மூக்கி...... நம்மள பார்க்காம நம்ம குடைமிளகா ரொம்ப கஷ்டப்படும்னு நினைச்சு தான் உன் பொட்டீக் முன்னாடி டெய்லி வந்து நிப்பேன். இல்லன்னா என் ரேன்ஜ்க்கெல்லாம் உன்னைய மாதிரி அட்டு பீஸையெல்லாம் நான் எதுக்கு சைட் அடிக்க ஆஆ....... அம்மா! சக்தி முத்து கூட பரவாயில்லை. எதுக்குடீ இந்த கடி கடிக்குற? கொஞ்ச நாள் ஒழுங்கு புள்ளையா இருந்த...... மறுபடியும் உன் ரவுடித்தனத்தை ஆரம்பிச்சுட்ட பார்த்தியா? பட் உன்னை நம்ம வழிக்கு கொண்டு வர்றதுக்கு மச்சான் கொஞ்சநேரத்துக்கு முன்னாடி ஒரு சீக்ரெட் தெரபிய  கண்டுபிடிச்சுட்டனே...." என்று சொல்லி குறுஞ்சிரிப்புடன் அவள் இதழ்களை அவன் குறிபார்த்து கொண்டு இருந்த நேரம் வெண்ணிலவு அவர்கள் இருவரின் தலைக்கு மேல் நின்று கொண்டு தன் ஒளியை அந்த வீட்டிற்குள் புகுத்திக் கொண்டிருந்தது.

அவன் வாழ்வின் ஜீவ அமிர்தம் அவள் தான் என ஜீவாவும், அவளது வாழ்வின் ஜீவ அமிர்தம் அவன் தான் என கவியும் உணர்ந்து கொண்டதை எண்ணி வீட்டிற்குள் இருந்த பூக்களும் தென்றலும் தலையசைத்து மகிழ்ந்தன. ஜீவா, கவியின் இடையில் இப்போது தோன்றிய புரிதல் இன்னும் வளரவும், எத்தனை சோதனைகள் வந்தாலும் ஒன்றாக நின்று ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அதை தாங்கிக் கொள்ளும் இந்த குடும்பத்தினரின் மகிழ்ச்சி அவர்கள் வாழ்வில் என்றும் நிலைத்திருக்கவும் நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்.

ஜீவாமிர்தம் நிறைவுற்றது!!

Continue Reading

You'll Also Like

106K 4.8K 61
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு...
49.5K 1.3K 45
காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r
5.8K 524 30
ஹலோ இதயங்களே !!! இது எனது இரண்டாவது மினி தொடர்கதை. பிரத்திலிப்பி துருவங்கள் பதினாறு என்ற போட்டிக்காக எழுதப்பட்ட த்ரில்லர் மற்றும் மிஸ்ற்றி தொடர்கதை...
93.7K 4.5K 55
அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல...