கண்டேன் என் ஜீவாமிர்தம்✔

By Vaishu1986

214K 9.9K 3K

பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நா... More

💟 ஜீவாமிர்தம் 1
💟 ஜீவாமிர்தம் 2
💟 ஜீவாமிர்தம் 3
💟 ஜீவாமிர்தம் 4
💟 ஜீவாமிர்தம் 5
💟 ஜீவாமிர்தம் 6
💟 ஜீவாமிர்தம் 7
💟 ஜீவாமிர்தம் 8
💟 ஜீவாமிர்தம் 9
💟 ஜீவாமிர்தம் 10
💟 ஜீவாமிர்தம் 11
💟 ஜீவாமிர்தம் 12
💟 ஜீவாமிர்தம் 13
💟 ஜீவாமிர்தம் 14
💟 ஜீவாமிர்தம் 15
💟 ஜீவாமிர்தம் 16
💟 ஜீவாமிர்தம் 17
💟 ஜீவாமிர்தம் 18
💟 ஜீவாமிர்தம் 19
💟 ஜீவாமிர்தம் 20
💟 ஜீவாமிர்தம் 21
💟 ஜீவாமிர்தம் 22
💟 ஜீவாமிர்தம் 23
💟 ஜீவாமிர்தம் 24
💟 ஜீவாமிர்தம் 25
💟 ஜீவாமிர்தம் 26
💟 ஜீவாமிர்தம் 27
💟 ஜீவாமிர்தம் 28
💟 ஜீவாமிர்தம் 29
💟 ஜீவாமிர்தம் 30
💟 ஜீவாமிர்தம் 31
💟 ஜீவாமிர்தம் 32
💟 ஜீவாமிர்தம் 33
💟 ஜீவாமிர்தம் 34
💟 ஜீவாமிர்தம் 35
💟 ஜீவாமிர்தம் 36
💟 ஜீவாமிர்தம் 37
💟 ஜீவாமிர்தம் 38
💟 ஜீவாமிர்தம் 39
💟 ஜீவாமிர்தம் 40
💟 ஜீவாமிர்தம் 41
💟 ஜீவாமிர்தம் 42
💟 ஜீவாமிர்தம் 43
💟 ஜீவாமிர்தம் 44
💟 ஜீவாமிர்தம் 45
💟 ஜீவாமிர்தம் 46
💟 ஜீவாமிர்தம் 47
💟 ஜீவாமிர்தம் 48
💟 ஜீவாமிர்தம் 49
💟 ஜீவாமிர்தம் 50
💟 ஜீவாமிர்தம் 51
💟 ஜீவாமிர்தம் 52
💟 ஜீவாமிர்தம் 53
💟 ஜீவாமிர்தம் 54
💟 ஜீவாமிர்தம் 55
💟 ஜீவாமிர்தம் 56
💟 ஜீவாமிர்தம் 57
💟 ஜீவாமிர்தம் 58
💟 ஜீவாமிர்தம் 59
💟 ஜீவாமிர்தம் 60
💟 ஜீவாமிர்தம் 61
💟 ஜீவாமிர்தம் 62
💟 ஜீவாமிர்தம் 63
💟 ஜீவாமிர்தம் 64
💟 ஜீவாமிர்தம் 65
💟 ஜீவாமிர்தம் 66
💟 ஜீவாமிர்தம் 67
💟 ஜீவாமிர்தம் 68
💟 ஜீவாமிர்தம் 69
💟 ஜீவாமிர்தம் 71
💟 ஜீவாமிர்தம் 72
💟 ஜீவாமிர்தம் 73
💟 ஜீவாமிர்தம் 74
💟 ஜீவாமிர்தம் 75

💟 ஜீவாமிர்தம் 70

2.1K 122 15
By Vaishu1986

"ராம் என்னைய காணும்னு தேடி நம்ம வீட்டுக்கு யாராச்சு வந்தாங்களா? என்னை விசாரிச்சு எனி போன் கால்ஸ் ஆர் மெசேஜஸ்..... சம்திங் லைக் தட்?" என்று வீடியோ காலில் கேட்ட தன் மகனிடம்,

"ஏன்டா கிளம்பிப்போகும் போது
எவன் கிட்டயும் கடன் எதுவும் வாங்கி வச்சுட்டு போயிட்டியா..... இங்க உன்னை எவன்டா விசாரிக்கப் போறான்; அதெல்லாம் ஒரு பய கேக்கல!" என்று சொன்னார் பலராம்.

"ஒரு மெசேஜ் கூட வரலையா.....?" என்று கேட்ட தன் குரல் சற்றே மெலிந்து ஒலித்ததை ராகவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அன்று தன் மாமாவின் வீட்டில் அவளை பார்த்தவன் தான்...... அதற்கு பிறகு அவளும் அவனை தொடர்பு கொள்ளவில்லை. இவனும் அவளை அழைத்து பேசவில்லை.

"பெரிசா லவ் பண்றேன்னு மட்டும் சொல்லிட்டா போதுமா? ஒரு சின்சியர் கன்ஃபெஷன் வேண்டாம், என்னை பார்த்தவுடனே உனக்கு லவ் வந்ததுன்னா அது நிச்சயம் பப்பி லவ்வா தான் இருக்கும். ஷீ இஸ் நாட் யுவர் கேர்ள் ராகவ். டோண்ட் திங்க் அபௌட் ஹெர் சீரியஸ்லி....." என்று சொல்லி மூளை திரும்ப திரும்ப கன்னத்தில் அறைந்து கொண்டிருந்தாலும், அவனது மனம் சமீப காலமாக அனைத்து வேலைகளுக்கு மத்தியிலும் வசுந்தராவிடமே போய் நின்றது.

"ம்ம்ம்..... ஓகே நம்ம சரஸ் என்ன பண்றாங்க? அவங்க கிட்ட போனைக் குடுப்பா, நான் பேசணும்!" என்று சொன்ன தன் மகனிடம்,

"ம்ஹும் எங்கம்மா, உங்கம்மா, பெரியம்மா, அண்ணி யார்ட்டயும் நீ இப்போ பேச முடியாது. நாங்க எல்லாரும் ரெண்டு நாள்ல மலைக்கு கிளம்புறோம். கவி அக்கா பொட்டீக்கை இங்க க்ளோஸ் பண்ணிட்டு அங்க புதுசா ஓப்பன் பண்ண போறாங்க. மாமா ஒரு நாள் முன்னாடியே எல்லாரும் வரணும்னு சொல்லிட்டாங்க. ஸோ வழக்கம் போல கிச்சன்ல ஸ்வீட் அது இதுன்னு ப்ரிப்பரேஷன்ஸ் ஓடிட்டு இருக்கு. சரஸ் இஸ் பெர்பெக்ட்லி ஃபைன், நீ வச்சுடு. பை கண்ணா!" என்ற தன் தந்தையிடம்,

"ஏய் ராம்..... என்னைய யாரும் ஏன் பங்ஷன்க்கு கூப்பிடவேயில்ல, அட்லீஸ்ட் இன்ஃபார்ம் கூட பண்ணல. வாட் த ஹெல் இஸ் கோயின் ஆன் தேர்?" என்று கேட்ட தன் மகனின் கேள்விக்கு பதில் சொல்ல பலராம் லைனில் காத்திருக்கவில்லை.

"ச்சை ஒரு மனுஷன் பேசிட்டு இருக்கேன், பாதியில அப்ரப்ட்டா கட் பண்ணிட்டு போறியா நீ..... போ போ நான் பேச வேண்டியவங்க கிட்ட பேசிக்குறேன்!" என்று நினைத்தபடி அர்ஜுனுக்கு அழைத்தான் ராகவ்.

இரண்டு முறை கட் செய்தவர், மூன்றாவது முறையும் அவன் கூப்பிடவும் "க்ளாஸ்ல இருக்கேன் ராகவ். இன்னொரு டென் மினிட்ஸ்ல நானே கூப்பிடுறேன்!" என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.

கால் மணி நேரம் கழித்து அவர் அழைப்பு வந்ததும் ராகவ் அவரிடத்தில் புலம்பி தள்ளி விட்டான். யாரும் அவனை கண்டுகொள்ளவே இல்லை, கவிப்ரியாவின் கடை திறப்புக்கு தன்னை அழைக்கவில்லை என்று தன் பெரியப்பாவிடம் புகார் படித்துக் கொண்டிருந்தவனின் வித்தியாசமான மனநிலையை உணர்ந்தார் அர்ஜுன்.

"ராகவ் நீ இப்படி எல்லாம் எதையும் எக்ஸ்பெக்ட் பண்ற பையன் இல்லையே.... பொதுவா வீட்ல நடக்கிற பங்ஷன் எதுக்கும் என்னைய கூப்பிடாம நீங்களாகவே செஞ்சுட்டா ரொம்ப நல்லா இருக்கும்னு தானேடா எப்பவும் சொல்லுவ; இப்போ என்ன உன் பேச்சுல சடனா ஒரு சேன்ஜ் தெரியுது?" என்று கேட்ட தன் பெரியப்பாவிடம்,

"எனக்கு தெரியல அஜு; இவ்வளவு வருஷம் இல்லாம இப்போ தான் எனக்கு நம்ம பேமிலிய ரொம்ப மிஸ் பண்ற மாதிரி ஒரு ஃபீல் வருது. வொர்க்ல ஒழுங்கா கான்சென்ட்ரேட் பண்ண முடியல. இந்த மாதிரியெல்லாம் நான் இருந்ததே இல்ல. ரீசண்ட் டேஸா ஏதோ தப்பா இருக்கு!" என்றவனிடம் சிரிப்புடன்,

"எதுவும் தப்பா இல்ல; எல்லாம் சரியா தான் இருக்கு. இப்போ என்ன உனக்கு..... உங்க அக்கா பொட்டீக் ஓப்பனிங் செரிமனிக்கு உன்னை கூப்பிடணும் அவ்வளவு தானே? ஓகே ஃபைன். பெரியப்பா கூப்பிட்டுட்டேன். பங்ஷன்க்கு வந்துடு. அங்க என் ஸ்பெஷல் பிரெண்ட் ஒருத்தர் வேற வர்றாங்க. உன் மேல ரொம்ப கோபமா இருக்காங்கப்பா. உன்னால அவங்க வீட்ல செம மொத்து வாங்கிட்டாங்க போல, நீ வேற போகும் போது அவங்கட்ட சொல்லிட்டு கிளம்பலையாம். இந்த அகாடமிக் இயர் முடிஞ்சவுடனே பெரியப்பாவும் பெரியம்மாவும் மலைக்கு ஷிப்ட் ஆகப் போறோம். என் ஸ்பெஷல் பிரெண்ட் கொஞ்சம் அவங்க சப்ஜெக்ட்ஸ்ல இண்ட்ரெஸ்ட் இல்லாம இருக்காங்க. உங்க அக்கா அவ வேற நினைச்ச நேரமெல்லாம் எங்கள பார்க்கணும்ன்னு சொல்லிட்டு இருக்கா. ஸோ அவங்களுக்கு சிலபஸை இன்ட்ரஸ்டிங்கா சொல்லி குடுத்து பாஸ் பண்ண வைக்க ஹெல்ப் பண்றேன்னு ப்ராமிஸ் பண்ணி குடுத்துருக்கேன். அப்படியே கவியையும் பார்த்துகிட்ட மாதிரி ஆச்சு. கவிம்மா பங்ஷன்க்கு அவங்களும் வர்றாங்க. நீயும் வந்தன்னா கண்டிப்பா ஹெல்மெட், ப்ரொடெக்ட்டிவ் ஷீல்டு எல்லாம் போட்டுட்டு வா. அப்போ தான் வசதியா இருக்கும்!" என்று சொன்னவரிடம் ஒரு பெரிய நிம்மதி பெருமூச்சுடன்,

"என்ன தான் சொல்லு அஜு, உன் அளவுக்கு எல்லாம் ராமுத்தம்பிக்கு விவரம் பத்த மாட்டேங்குது. அவர்ட்ட நான் ஒரு கேள்வி கேட்டும் அவர் எனக்கு பதில் சொல்லாமலே கட் பண்ணிட்டாரு, ஆனா உங்கிட்ட கேள்வியே கேக்கல, ஆனா நீ எல்லா மேட்டரையும் எவ்வளவு அழகா எக்ஸ்ப்ளைன் பண்ணிட்ட! சரி ஒரே ஒரு மக்கு ஸ்ட்டூடெண்டை மட்டும் வச்சு நீ டீ ஆத்தினா இனிமே புவாவுக்கு என்ன பண்ணுவ?" என்று கேட்ட ராகவிடம்,

"தம்பி நான் என் டீச்சிங் புரபொஷனை ஆரம்பிச்சதே மலையில இருக்கிற ஒரு டாப் காலேஜ்ல தான்ப்பா...... மிஸ்டர் அர்ஜுன் வெண்ட் பேக் டூ த ஸ்டார்ட்டிங் பாயிண்ட் தட்ஸ் இட்!" என்று சொன்ன தன் பெரியப்பாவிடம் "சூப்பர்......பழைய வேலை, பழைய பொண்டாட்டி, பழைய ப்ரெண்டு, பழைய வீடு, பழைய கார் அடடே கலக்குறீங்க மிஸ்டர் அர்ஜுன்! தேங்க்யூ பெரியப்பா, ஐ'ம் ரிலீவ்டு ஃப்ரம் வொர்ரிஸ்..... என்ன ஒரு கவலை முன்னாடி எல்லாம் நானா எங்கயாவது போய் அடி வாங்கி என் மண்டை வீங்கும். இனிமே கேர்ள் ப்ரெண்டு கையால அடிவாங்கி வீங்கும் போலிருக்கு. சரி விடு, வீ ஹாவ் டூ ஃபேஸ் இட், பங்ஷன்ல மீட் பண்ணலாம். பை அஜு!" என்று சொல்லி வைத்த ராகவின் குரலில் இருந்த உற்சாகத்தை நினைத்து சிரித்துக் கொண்டு தன் கேபினுக்குள் சென்றார் அர்ஜுன்.

அம்பையில் இசக்கி ராசு தன் மனைவியின் கைப்பக்குவத்தில் உருவான உணவை ரசித்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.
"சிட்டு வர வர ரொம்ப தேறிட்டடீ..... இந்த வத்தக்குழம்பும் அதுக்கு தோதா கீரைக்கூட்டும், தேங்கா தொவையலும் சும்மா அள்ளுது போ..... அப்பத்தா சாப்பிட்டுடுச்சா?" என்று கேட்ட தன் கணவனிடம்,

"கொஞ்ச நேரம் முன்னாடி தான் சாப்பிட்டாங்க மாமா..... வந்து உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும். ஆனா கேட்டா தருவிங்களான்னு தெரியல?" என்று கேட்ட படி அவன் மார்பில் சாய்ந்து கொள்ள போனவளை தடுத்து,

"அங்கணயே உட்கார்ந்து கிட, பக்கத்துல வந்த பிச்சிப்புடுவேன் பார்த்துக்க ...... இந்த மொக்கைப்பயல பார்த்தா உனக்கு அம்புட்டு கூமுட்டை மாதிரி தெரியுதான்னு கேக்குறேன். என்னடா இந்த கண்ணாட்டி அதிசயமா வேலைக்கு லீவப் போட்டுட்டு நம்மளயும் சாப்பிட கூப்பிடுதாளேன்னு எனக்கு அப்பவே மண்டைக்குள்ள இடிச்சுச்சு..... அத்தாச்சி ஆஸ்பத்திரிக்கு இந்த மாசம் எழுத வேண்டிய மொய்யெல்லாம் எழுதியாச்சு. இதுக்கு மேல என் கிட்ட அம்மஞ்சல்லி கூட இல்ல. ஆள வுடு!" என்று கோபமாக சொன்ன தன் கணவனிடம் ஒன்றும் பதில் பேசாமல் மௌனச்சிரிப்புடன் அமர்ந்திருந்தாள் இனியா.

"இப்புடி நக்கலா சிரிச்சுகிட்டு உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தமுனு கேக்குறேன்!" என்று கேட்டு அவளை முறைத்தான் இசக்கி ராசு.

அரிசி ஆலையில் வரும் லாபம், வட்டிக் கடையில் அன்றாடம் நடக்கும் வியாபார வசூல் பணம், அவன் திருநெல்வேலியின் பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் ஃபாகல்டியாக அவன் சென்று வருவதற்கு கிடைக்கும் சம்பளம், வயலில் மற்ற விளை பொருட்களால் அவனுக்கு கிடைக்கும் லாபம் இதையெல்லாம் இனியா இங்கு வந்ததிலிருந்து அவள் பொறுப்பில் தான் கொடுத்து விட்டு ஒவ்வொரு முறையும் "ஒனக்கு ஏதாவது வேணும்னு மாமன் கிட்ட கேளு சிட்டுக் குருவி; அத வாங்கித் தாரேன்!" என்று சொல்லி இனியாவை இம்சை படுத்துவான். இனியாவோ அவனிடம், "ஹாஸ்பிட்டல்ல இன்னிக்கு ஒரு பாப்பாவை செக் பண்ணேன் ராசு, நியூட்ரிஷன் லெவல் ரொம்ப கம்மியா இருக்கு. அந்த பாப்பாவுக்கு நம்ம ஏதாவது ஹெல்ப் பண்ணலாமா?" "நம்ம வயல்ல வேலை பார்க்குறவங்களுக்கு எல்லாம் காலையிலயும், மதியமும் சாப்பிட பக்கத்துல நல்ல க்வாலிட்டி ஹோட்டல்ஸ்ல இருந்து நம்மளே சாப்பாடு வரவழைச்சு குடுத்தா என்ன ராசு.....?" "பத்து ரூபாய் குடுத்தா பத்து ரூபாயே திரும்பி வாங்குங்க. எதுக்கு இண்ட்ரெஸ்ட் எல்லாம் கேட்டுகிட்டு, எல்லாரும் டெய்லி வேஜஸ் தான் வாங்குறாங்க. எக்ஸ்ட்ரா பணம் குடுக்கறதுன்னா அவங்களுக்கு கஷ்டம் தானே?" என்று இனியா ஒவ்வொரு முறையும் இப்படிப்பட்ட ஒவ்வொரு தேவைகளை அவனிடம் சொல்லும் போதெல்லாம் இசக்கிராசுவின் காதுகளிலும், மூக்கிலும் அனல் காற்று வெளியேறும். என்ன இதையெல்லாம் பேசும் பொழுது இனியாவின் வாயில் அவளது உரையாடலுக்கு முன்புறமோ, பின்புறமோ ஒன்றிரண்டு மாமா சேர்ந்து கொள்ளும். அவனும் அந்த வார்த்தையை கேட்ட சந்தோஷத்திற்காக தன் மனைவியின் வேண்டுகோளை தன்னால் இயன்ற வரை நிறைவேற்றி கொடுப்பான். சிறு வயதில் இருந்து அடிபட்டு, தன்னுடைய சொத்துக்களை தன் உறவினர்களிமிருந்து காப்பாற்றிக் கொள்ள பாடுபட்டு, தன் அயராத உழைப்பு மற்றும் கல்வியால் இப்படி ஒரு நிலையில் நின்ற இசக்கி ராசுவுக்கு அவன் ஒன்றும் இல்லாமல் நின்ற போது அவனுக்கு யாரும் உதவவில்லையே, பிறகு அவன் ஏன் அடுத்தவர்களை பற்றி கவலைப்பட வேண்டும் என்ற எண்ணம். ஆனால் உன்னைப் போல் பிறரையும் பார்க்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்து அனைவரும் கற்றுக் கொடுத்து வளர்த்த இனியாவிற்கு ராசுவின் இந்த கறாரான குணம் சற்று மனந்தாங்கலை ஏற்படுத்தியது உண்மை.

"ஏய் சிட்டு உட்கார்ந்துட்டே ஒறங்கிட்டியாட்டீ?" என்று அவள் கண்முன்னே கைகளை ஆட்டிய இசக்கி ராசுவிடம் இல்லையென தலையசைத்தவள்,

"இன்னிக்கு சாயந்தரம் என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போயிட்டு, முடிஞ்சா கொஞ்சம் சூடா அல்வா வாங்கி தர முடியுமான்னு கேக்க வந்தேன். பரவாயில்லை. உங்க கிட்ட தான் காசே இல்லையே? விடுங்க மாமா பார்த்துக்கலாம்!" என்று நமுட்டுச் சிரிப்புடன் சற்று நகர்ந்து அமர்ந்து கொண்டவளை அவன் இடக்கையால் இடையைப் பற்றி அவளை தன் அணைப்பிற்குள் கொண்டு வந்து விட்டு,

"முடிஞ்சா வாங்கி தர முடியுமாவா...... ஏன்டீ இப்படி மாமன பங்கம் பண்ணுற..... இன்னிக்கு சாயந்தரம் கோயிலுக்கு போயிட்டு வந்துட்டு அல்வாவ சட்டியோட கடையிலருந்து தட்டி தூக்குறோம். நீ நம்மட்ட அல்வா கேக்குறதே விசேஷமான விசேஷமா இருக்கு. ஆமா என்னடீ விசேஷம்......?" என்று கேட்ட தன் கணவனிடம் தோளைக் குலுக்கி விட்டு,

"உங்க கூட சேர்ந்து வெளியே போய் ரொம்ப நாளாச்சு மாமா..... அதான் அப்படியே சும்மா!" என்று சொல்லிக் கொண்டிருந்தவள் பின்னந்தலையை அழுத்தி அவள் இதழ்களை தன் இதழ்களுக்கு விருந்தாக்கினான் இசக்கி ராசு.

சில நிமிடங்கள் கழித்து அவனை ஒரு மார்க்கமாக பார்த்த இனியாவிடம், "உனக்கு முத்தா குடுத்து ரொம்ப நேரமாச்சு, அதான் அப்படியே சும்மா.... எனக்கு போதும். ஒனக்கு சோறு ஊட்டி விடவா, நீயே சாப்பிட்டுக்குறியா?" என்று கேட்டவனிடம் வாயை சிறிதாக திறந்து காண்பித்தாள் இனியா.

"கொஞ்சம் பெரிசா தான் வாயப் பொளக்கறது, என் விரலு உன் வாய்க்குள்ளார போக வேண்டாமா?" என்று கேட்டவனின் விரல்களை அவனுக்கு வலிக்காதவாறு மெதுவாக ஒரு கடி கடித்தாள் இனியா.

"ம்க்கூம்..... உன் கடியெல்லாம் எனக்கு வலிக்கவேயில்லட்டீ, அன்னிக்கு காலேஜ்ல எனக்கு ஒரு பொண்ணு முத்தா குடுக்குறேன்னு சொல்லி கடிச்சு வச்சுச்சு பாரு, எட்டு நாளைக்கு கன்னம் வலிச்சுட்டு கிடந்துச்சு. அந்த மாதிரியெல்லாம் உனக்கு கடிக்க தெரியலடீ!" என்று சொல்லி விட்டு ஓரக் கண்ணால் தன் மனைவியின் முகத்தை ஆராய்ந்தவனிடம்,

"உங்க மீசையையும், டெரர் லுக்கையும் பார்த்து உங்க க்ளாஸுக்கு வர்றதுக்கே பொண்ணுங்க சலிச்சுக்குறாங்களாம்; கேள்விப்பட்டேன். கேர்ள்ஸ பொறுத்தவரைக்கும் நீங்க எல்லாம் மார்க்கெட்ல சோல்டு அவுட் பீஸ் இன் அதர் வேர்ட் கிழம்ஸ், இதுல உங்களுக்கு ஒரு பொண்ணு முத்தம் வேற குடுத்தாளாக்கும். அந்த பொண்ணுக்கு கண்ணு தெரியாதா மாமா?" என்று கேட்டவளிடம் சிறு சலிப்புடன் உச்சுக் கொட்டி விட்டு,

"இப்படி ஏதாவது பிட்டை போட்டாவாச்சும் ஊருக்கு கிளம்பாம எங்கூடவே இருப்பன்னு நினைச்சேன்டீ; எந்த பொண்ணு நம்மள என்ன நெனச்சா நமக்கு என்ன வந்துச்சு, என் பொஞ்சாதி நம்ம மீசையையும் மொறப்பையும் பாத்து பயப்படலப்பா, நமக்கு அது போதும். சரி, கண்டிப்பா மலைக்கு போயே ஆகணுமா........?" என்று கேட்ட தன் கணவனிடம்,

"ம்ப்ச்! என்ன இப்படி கேக்குறீங்க..... கண்டிப்பா போகணும். பங்ஷன்க்கு ரூபியும் வர்றா, நான் நாலு நாள் அங்க இருந்துட்டு தான் வருவேன். கல்யாணம் ஆகி இங்க கூட்டிட்டு வரும் போது மாசம் ஒரு தடவ மலைக்கும், ரூபியை பார்க்கவும் கூட்டிட்டு போறேன்னு சொன்னீங்க; போறோம் போறோம் இன்னும் போயிட்டு இருக்கோம். நீங்க பிஸினா ஒரு நாள்ல பங்ஷன் முடிச்சிட்டு அங்க இருந்து கிளம்பிடுங்க. நான் வரும் போது அப்பாவையும் இங்க கூட்டிட்டு வர்றேன்! நான் வர்ற வரைக்கும் நீங்க தான் அப்பத்தாவ பத்திரமா பார்த்துக்கணும். ஓகே தானே?" என்று கேட்ட தன் மனைவியிடம்

"போனோமா உடனே வந்தமான்னு வந்து சேரு, நீ இல்லாம வீடு விரீர்னு இருக்கும். ஒரு எட்டு வயலுக்கு போயிட்டு வந்து உன்னைய கோயிலுக்கு கூட்டிட்டு போறேன். கிளம்பி இரு. வரவா?" என்று கேட்ட தன் கணவனுக்கு கையசைத்து விடை கொடுத்தாள் இனியா.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Continue Reading

You'll Also Like

384K 12.9K 85
நாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒ...
12.8K 678 52
காதல் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாத போது மலர்ந்த காதலானது காலப்போக்கில் காதலை இரு மனமும் அர்த்தம் தெரிந்து கொண்டாலும் விதியின் விளையாட்டில் ஜெயிப்...
80.8K 2.5K 46
திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...
8.2K 1.1K 40
அதிகாரம் + அமைதி = அன்பு