கண்டேன் என் ஜீவாமிர்தம்✔

By Vaishu1986

214K 9.9K 3K

பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நா... More

💟 ஜீவாமிர்தம் 1
💟 ஜீவாமிர்தம் 2
💟 ஜீவாமிர்தம் 3
💟 ஜீவாமிர்தம் 4
💟 ஜீவாமிர்தம் 5
💟 ஜீவாமிர்தம் 6
💟 ஜீவாமிர்தம் 7
💟 ஜீவாமிர்தம் 8
💟 ஜீவாமிர்தம் 9
💟 ஜீவாமிர்தம் 10
💟 ஜீவாமிர்தம் 11
💟 ஜீவாமிர்தம் 12
💟 ஜீவாமிர்தம் 13
💟 ஜீவாமிர்தம் 14
💟 ஜீவாமிர்தம் 15
💟 ஜீவாமிர்தம் 16
💟 ஜீவாமிர்தம் 17
💟 ஜீவாமிர்தம் 18
💟 ஜீவாமிர்தம் 19
💟 ஜீவாமிர்தம் 20
💟 ஜீவாமிர்தம் 21
💟 ஜீவாமிர்தம் 22
💟 ஜீவாமிர்தம் 23
💟 ஜீவாமிர்தம் 24
💟 ஜீவாமிர்தம் 25
💟 ஜீவாமிர்தம் 26
💟 ஜீவாமிர்தம் 27
💟 ஜீவாமிர்தம் 28
💟 ஜீவாமிர்தம் 29
💟 ஜீவாமிர்தம் 30
💟 ஜீவாமிர்தம் 31
💟 ஜீவாமிர்தம் 32
💟 ஜீவாமிர்தம் 33
💟 ஜீவாமிர்தம் 34
💟 ஜீவாமிர்தம் 35
💟 ஜீவாமிர்தம் 36
💟 ஜீவாமிர்தம் 37
💟 ஜீவாமிர்தம் 38
💟 ஜீவாமிர்தம் 39
💟 ஜீவாமிர்தம் 40
💟 ஜீவாமிர்தம் 41
💟 ஜீவாமிர்தம் 42
💟 ஜீவாமிர்தம் 43
💟 ஜீவாமிர்தம் 44
💟 ஜீவாமிர்தம் 45
💟 ஜீவாமிர்தம் 46
💟 ஜீவாமிர்தம் 47
💟 ஜீவாமிர்தம் 48
💟 ஜீவாமிர்தம் 49
💟 ஜீவாமிர்தம் 50
💟 ஜீவாமிர்தம் 51
💟 ஜீவாமிர்தம் 52
💟 ஜீவாமிர்தம் 53
💟 ஜீவாமிர்தம் 54
💟 ஜீவாமிர்தம் 55
💟 ஜீவாமிர்தம் 56
💟 ஜீவாமிர்தம் 57
💟 ஜீவாமிர்தம் 58
💟 ஜீவாமிர்தம் 59
💟 ஜீவாமிர்தம் 60
💟 ஜீவாமிர்தம் 61
💟 ஜீவாமிர்தம் 62
💟 ஜீவாமிர்தம் 63
💟 ஜீவாமிர்தம் 64
💟 ஜீவாமிர்தம் 65
💟 ஜீவாமிர்தம் 66
💟 ஜீவாமிர்தம் 67
💟 ஜீவாமிர்தம் 68
💟 ஜீவாமிர்தம் 70
💟 ஜீவாமிர்தம் 71
💟 ஜீவாமிர்தம் 72
💟 ஜீவாமிர்தம் 73
💟 ஜீவாமிர்தம் 74
💟 ஜீவாமிர்தம் 75

💟 ஜீவாமிர்தம் 69

2.2K 120 14
By Vaishu1986

அனைவரும் ஆனந்த ஸாகரத்தில் இருந்து புறப்பட்டு அவரவர்கள் வாழ்க்கையில் பொருந்தி மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. ஜெய் நந்தன், நிர்மலா, விவேக் மூவரின் தனிமை உணர்வும் ஜீவானந்தன், கவிப்ரியாவால் வலுவாக அடித்து விரட்டப்பட்டது. தன் டார்லிங்கின் எஸ்ஜேஎன்னை கையில் எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லி வீட்டில் அனைவரது விருப்பத்திற்கும் கட்டுப்பட்ட கவிப்ரியா ஒரு நாளில் சுமார் பதினைந்து மணி நேரத்தை எஸ்ஜேஎன்னில் கழித்து இரண்டே மாதங்களில் விவேக்கையே அசர வைத்து விட்டாள், ஆனால் இவர்களின் விளையாட்டில் பெரும்பாடு பட்டுப் போன ஒரு பரிதாபகரமான ஜீவன் கவியின் கணவன் தான்...... இரவில் அவன் அரை உறக்கத்திற்கு செல்லும் வேளையில் தான் அவர்களின் அறைக்குள் கவிப்ரியா உள்ளே நுழைவாள். காலையில் அரை உறக்கத்தில் புரண்டு கொண்டு இருக்கையில் குட்மார்னிங் நந்து என்று சொல்லி அவசரமாக அவன் நெற்றியில் முத்தமிட்டு விட்டு பணிக்கு கிளம்பி இருப்பாள். நிர்மலா இப்போது பண்ணை மற்றும் ருசியின் பொறுப்புகளில் இருந்து ஒதுங்கி கொண்டதால் தனது மகனையும், மருமகளையும் மூன்று வேளை வயிறார உண்ண வைப்பது தான் அவரது தலையாய கடமையாக இருந்தது.

பண்ணையில் இசக்கி ராசுவின் ஆலோசனைகள் விவேக்கினால் நிறை குறை ஆராயப்பட்டு, ஜெய்நந்தனால் அங்கீகரிக்கப்பட்டு, ஜெயந்தன் பத்மாவினால் அனுமதிக்கப்பட்டு செயல் வடிவம் பெற்று அதன் பணிகள் நிறைவடைந்திருந்தன. நிர்மலா வரும் முன்பு பூக்காடாக இருந்து, பின்னர் நிர்மலாவின் கைவண்ணத்தில் காய்கறிப் பண்ணையாக உருமாற்றம் அடைந்து, அடுத்த வளர்ச்சியாக பசுக்களும் வளர்க்க ஆரம்பித்து, இப்போது அந்த பசுக்களை கொண்டு மண்புழு உரம் தயாரிக்கும் பணியும் மேற்கொள்வதை நினைத்து பார்த்த ஜெய்நந்தன் ஒவ்வொரு தருணத்திலும் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்று உணர்ந்து கொண்டார். அடுத்ததாக வந்த பெரிய பிரச்சனை ஜீவானந்தனது உடை விஷயத்தில்....... வீட்டில் அன்னை, மனைவி, சகோதரிகள் முன் எப்போதும் ஷார்ட்ஸில் உலவி பழகியவன் பண்ணையில் வேலை செய்யும் பெண்களின் முன் அந்த மாதிரியான உடையுடன் சென்று நிற்பதற்கு விரும்பவில்லை. கவிப்ரியாவின் ஆலோசனையின் பேரில் ஸ்லிம் ஸுட், கர்லி, ஃபிட்டட் ஜீன்ஸ், ட்ராக் ஷுட் என முயற்சித்து விட்டு,

"அம்முலு இதெல்லாம் எனக்கு செட் ஆகல, இரிடேட்டிங்கா இருக்குடீ....." என்று சொன்னவனிடம்,

"ஜீன்ஸ சரியா வரலைன்னா ஷைலு மேரேஜ்ல கட்டியிருந்த மாதிரி நீ வேட்டி தான் கட்டிக்கணும் நந்து. பட் அந்த காஸ்ட்யூம்ல நீ ரொம்ப மேன்லியா இருந்த!" என்று சொன்ன தன் மனைவியின் பாராட்டை வேதவாக்காக எடுத்துக் கொண்டு வேட்டியை தன் ப்ரிய உடையாக்கி கொண்டான் ஜீவானந்தன்.

பண்ணையின் லாபத்தை உயர்த்த வேண்டும் என்ற கொள்கையை வைத்திருந்தாலும் ஜீவா கவிப்ரியாவை போல் உணவு, தண்ணீர் மறந்தெல்லாம் வேலை என்று கிடக்கவில்லை. காலையில் ஏழு மணியளவில் தனது பெற்றோரிடம் அரட்டை கச்சேரிக்கு வந்தான் என்றால் டீயுடன் எட்டரை மணி வரையில் கூட அமர்ந்து மூவரும் எதையாவது சிரிப்புடன் பேசிக் கொண்டு இருப்பார்கள். சில நேரங்களில் விவேக்கும் அவர்களுடைய அரட்டையில் கலந்து கொள்வதுண்டு. அதன் பின் அவன் குளித்து வேலைக்கு தயாராகி வருவதற்குள் நிர்மலா காலை உணவை ஜெய் நந்தன், விவேக், கவிப்ரியாவிற்கு அனுப்பி வைத்து விட்டு ஜீவாவிற்காக காத்துக் கொண்டிருப்பார். தன் மருமகளின் ஆர்வம் புரிந்து கணினி தொழில்நுட்ப விஷயங்களை ஜெய் நந்தனும், தனது வேலைகளை பகிர்ந்து கொள்ள தன்னை விட திறமையான ஒரு பெண் கிடைத்து விட்டாள் என்று நினைத்து நிர்வாகப் பொறுப்புகளை விவேக்கும் கவிப்ரியாவிற்கு அடி முதல் நுனி வரை கற்றுக் கொடுத்ததில் கவிப்ரியா எஸ்ஜேஎன்னில் ப்ராஜெக்ட்டை தனியாக ஏற்கும் வகையில் தயாராகி இருந்தாள். 

ஜீவானந்தன் கவிப்ரியாவின் இடையில் மற்றொரு சிக்கலும் வந்தது. எப்போதாவது வெகு அபூர்வமாக ஜீவா இரவில் வெகு நேரம் விழித்திருக்கும் போது கவிப்ரியா பார்த்து விட்டால், "உன்னை கல்யாணம் பண்ணி ஒரு வொய்ப் ஆ நடந்துக்காம சும்மா போயிட்டு வந்துட்டு இருந்து உன்னை கஷ்டப்படுத்துறேன்ல நந்து..... ஐ'ம் ஸாரிப்பா!" என்று ஆரம்பித்து விடுவாள்.

"கடவுளே இந்த கவிப்ரியாவுக்கு கவலைப்படுறதுக்கு எங்கிருந்து தான் விஷயம் கிடைச்சிட்டே இருக்குமோ தெரியலயே..... இங்க பாருடா கேப்ஸி முன்னாடியெல்லாம் தனியா ஃப்ளாட்ல இருக்கும் போது எனக்கு ஸ்லீப்பிங் டிஸ்ஆர்டர் இருந்தது. பாகிக்கு மட்டும் தான் இது தெரியும். டாக்டர் அட்வைஸ் கேட்டப்போ இது சைக்கலாஜிக்கல் ப்ராப்ளம் தான், சீக்கிரம் சரியாகிடும்னு சொல்லி டேப்லெட் ப்ரிஸ்க்ரைப் பண்ணினாங்க. இப்போ நம்ம வீட்டுக்கு வந்ததுல இருந்து எனக்கு எந்த ப்ராப்ளமும் வரல. பட் ரொம்ப ரேரா எப்பயாவது சின்ன டிஸ்டர்பென்ஸ் இருக்கும். உன்னை தூரத்தில இருந்தே ரசிச்சு பழகிட்ட எனக்கு உடனே உன் மேல பாய்ஞ்சு என்  ரைட்ஸ எடுத்துக்கறதெல்லாம் சத்தியமா இப்போதைக்கு முடியவே முடியாது. லெட்ஸ் டேக் சம் டைம் டூ மிங்கிள் வித் ஈச் அதர். அந்த கொஞ்ச நாளைக்கு  பெட்ரூம்ல மட்டும் நீ என் ஃப்ரெண்டா இரு. இப்போ ரொம்ப குழப்பிக்காம படுத்து தூங்கு.....!" என்று சொல்லி அந்த விஷயத்தை முடித்து விட்டான்.

இன்று இனி.......

அன்று காலையில் தோட்டத்தில் நின்று  உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தவனை பார்த்து விட்டு சக்தியும், முத்துவும் அவனிடம் ஓடி வந்தன. "அண்ணா வொர்க் அவுட் பண்ணிட்டு இருக்கேன்னு உங்க ரெண்டு பேருக்கும் தெரியுதா இல்லையா..... ஜெய் ஸார் ஒருத்தர் சொன்னா மட்டும் தான் கமாண்ட்ஸ் எல்லாத்தையும் அப்படியே கேக்குறது,  எங்களையெல்லாம் மனுஷங்களாவே மதிக்கறதில்ல. திஸ் இஸ் டூ பேட். கெட் டவுன் முத்து.....!" என்று அவைகளை அதட்டிக் கொண்டு இருந்தவனின் பேச்சை இரண்டும் அவனது முட்டிக்கும் சற்று மேலே அவைகளது முன்னங்காலை தூக்கி அவன் மேல் போட்டு நின்று கொண்டு இருந்தன. சிறிது நேரம் அவைகளிடம் விளையாடி விட்டு அமர்ந்தான் ஜீவானந்தன். அவன் சொல்வதை போல் சக்தியும் முத்துவும் வார்த்தைக்கு கீழ்படியும் என்றால் அது ஜெய்நந்தன் ஒருவரிடம் மட்டும் தான். மற்றபடி ஜீவானந்தனை பார்த்தால் செல்லம் கொஞ்சும் வேலை தான் நடக்கும்.

"குட்மார்னிங் நந்து, நீ இங்க இருக்கியா..... அண்ணாவும், அண்ணியும் உன்னை காணுமே, நீ இன்னும் எழுந்திரிக்கலையோன்னு கேட்டுட்டு இருந்தாங்க. நீ சொன்ன மாதிரி பஜார் ரோடுல டேனிஷ் டிஸ்ப்ளே பக்கத்துல கவிக்கு ஒரு கம்பர்டபிளான இடத்தை அவளோட பொட்டீக் வைக்க ரெடி பண்ணியாச்சு நந்து, நீ சொன்ன மாதிரி ரென்ட்டுக்கு தான் பேசலாம்னு நினைச்சேன். பட் மார்க்கெட் வேல்யூ நல்லா இருக்குன்னு  அண்ணா அந்த இடத்தை வாங்கவே சொல்லிட்டாங்க. அப்புறம் சென்னையில நீ சொன்ன ஆர்யமாலாங்கிற பொண்ணுட்ட பேசி அவங்களும் அவங்க பேமிலியும் இங்க வந்து செட்டில் ஆகுறதுக்கும் ஏற்பாடு செஞ்சாச்சு. கொஞ்சம் யோசிச்சாங்க. அவங்க ஹஸ்பெண்ட்டுக்கு உன்னதம்ல ஒரு போஸ்டிங், அவங்க குழந்தைக்கு ஸ்டாண்டர்டு எஜுகேஷன் எல்லாம் பேசினவுடனே நிம்மதியாகி ஓகே சொல்லிட்டாங்க. அவங்களே கவிக்கு ஹெல்ப்பரா வரப் போறதுனால கவி ஒரு நாளைக்கு ரெண்டு மூணு மணி நேரம் மட்டும் அங்க போய் வொர்க் பார்த்துக்கிட்டா போதும். சரி உன் வொய்ப் ட்ரீமுக்காக இவ்வளவு வேலையெல்லாம் சைலண்டா செஞ்சு வச்சுருக்கியே? வாட் அபௌட் யுவர் ட்ரீம்?" என்று கேட்ட தன் சித்தப்பாவிடம்,

"என் ட்ரீமா, இப்பவே நான் ஏதோ ட்ரீம் வேர்ல்டுல இருக்குற மாதிரி தான் ரொம்ப சந்தோஷமா லைஃப் போயிட்டு  இருக்கு சித்தப்பா. பட் கவிக்கு நான் லாயரா ப்ராக்டீஸ் பண்ணனும்னு ஆசை சித்தப்பா. எப்பவாவது இதைப் பத்தி பேசும் போதும் அவ கொஞ்சம் ஃபீல் பண்ற மாதிரி எனக்கு தெரியுது. முதல்ல பண்ணைப் பொறுப்பை சரியா செஞ்சு லாபத்துல கொண்டு வந்துட்டு அப்புறம் கேஸ் ஹாண்டில் பண்றத பத்தி யோசிக்கணும். முழுசா நானே செய்ய முடியுமான்னு தெரியல, ஆனா என்னையும் எங்க அப்பா மாதிரியே குடும்ப தொழில், படிச்ச தொழில்னு ரெண்டு பின்னாலயும் ஓட விட்டுடுவாங்களோன்னு பயமா இருக்கு சித்தப்பா....!" என்று சொன்னவனிடம் சிரித்த படி,

"உன் வொர்க்கிங் ஸ்டைல் ரொம்ப ரொம்ப கூலா இருக்காமேப்பா.... பண்ணையில எல்லாரும் உன்னை கேஜேன்னு தான் கூப்பிடுறாங்களாம், மதிய சாப்பாடு வீட்ல இருந்து வர்றதுக்குள்ள உனக்கு லன்ச் குடுத்து முடிச்சிடுறாங்களாமே? எஸ்ஜேஎன் காம்ப் சொல்யூஷன் ஜிஎம் எல்லாம் அப்படி கிடையாதுப்பா! அவங்க வாசல்ல என்ட்ரி குடுக்கும் போதே எல்லாருக்கும் கால் கடகடன்னு ஆடுது. எனக்கும் தான், ஆனா நாலஞ்சு வருஷத்துக்கு அப்புறம் இப்போ எல்லாம் கவியால ராத்திரி கொஞ்சம் சீக்கிரமா தூங்க முடியுது. சச் அ டேலண்டட் கேர்ள்....... பொட்டீக் ஆரம்பிச்ச பிறகும் இங்க அவ பொறுப்பை விட்டுடாம பார்த்துக்கப்பா;
ஆனா என்ன உன்னை மாதிரி, அண்ணா மாதிரி கிடையாது. ரகுநாதர் ஐயா மாதிரி ஷூட் அட் சைட் தான்!" என்று சொன்ன தன் சித்தப்பாவிடம் புன்னகைத்த படி,

"பண்ணையில இருக்கிறவங்க எல்லாருக்கும் என்னை விட அஞ்சாறு வயசு அதிகமா இருக்கும்ல சித்தப்பா, எல்லாரும் என்னை முதலாளின்னு கூப்பிடுவோம்னு சொன்னாங்க, எனக்கு சிரிப்பு வந்துடுச்சு. பேர் சொல்லி கூப்பிட சொன்னா மாட்டோம்னு சொல்றாங்க. அதான் கவிப்ரியா ஜீவானந்தனை சுருக்கி கேஜேன்னு ஈஸியா ஒரு பேர் கண்டுபிடிச்சாச்சு. வொர்க்கிங் ப்ளேஸ ஜாலியா வச்சுகிட்டா தான் வேலையும் ஈஸியா முடியும். ஏன்னா எல்லாமே மேனுவல் வொர்க் பாருங்க..... ஒரு எம்ப்ளாயி ஓபி அடிக்குற மாதிரி தெரியுதா, என்ன சிஸ்டர் உங்க பேமிலியில எல்லாரும் நல்லா இருக்காங்களான்னு அவங்க கஷ்டத்தை ரெண்டு நிமிஷம் கேட்டு அவங்க கூட ஒரு டீ குடிச்சா போதும். அடுத்த நாள் நம்ம எக்ஸ்பெக்ட் பண்றதுக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடியே வேலைய முடிச்சிருப்பாங்க. ஆனா நம்ம மேடம்க்கு இந்த வொர்க்கிங் ஸ்டைல் செட் ஆகாது. ஆனா அவ அப்படி கெத்தோட இருக்கிறது தான் சித்தப்பா அவளோட அழகே; ரெண்டு வொர்க் பார்க்குறதெல்லாம் அவளைப் பொறுத்தவரைக்கும் கஷ்டமாவே இருக்காதுன்னு நினைக்கிறேன். சித்தப்பா எங்க ரெண்டு பேருக்கும் நாலு நாள் லீவ் தர்றீங்களா.....?" என்று கண்கள் சுருக்கி கேட்டவனிடம்,

"ஏற்கனவே நாலு நாள் ராஜஸ்தான் போயிட்டு வந்தாச்சு, அடுத்து என்ன லண்டனுக்கு டூரா..... ஆனா நிஜமாவே உனக்கு லண்டன் போயிட்டு வர நாலு நாள் போதுமா நந்து?" என்று கேட்ட விவேக்கிடம்,

"அட ஏன் சித்தப்பா எரிச்சலை கிளப்புறீங்க? ஒட்டகத்தை மேய்ச்சுட்டு வந்ததுக்கு நாலு நாள் போதும். அந்த டைமிங் எப்படி லண்டனுக்கு பத்தும்? அதுக்கு எல்லாம் ஒரு மாசம் வேணும். ஆனா அது எங்க பர்ஸ்ட் ஆனிவர்சரிக்கு தான் போயிட்டு வருவோம்னு நினைக்கிறேன்.
அது வரைக்கும் ரெண்டு பேரும் ரொம்ப பிஸி..... நாலு நாள் சென்னைக்கு போய் அஜு கூட இருந்துட்டு சரஸ் பாட்டியை பார்த்துட்டு வரலாம்னு நினைச்சேன். அவங்க ஆப்பரேஷன் நடந்து முடிஞ்சு ஒரு மாசம் ஆச்சு. இந்த வீம்பு பிடிச்சவ இன்னும் அவங்களை போய் பார்க்கல, அதான் கையை காலை கட்டி தூக்கி கொண்டு போயிட்டு வரலாமான்னு பார்க்குறேன்!" என்று அவன் அவரிடம் சொல்லிக் கொண்டு இருந்த போது அங்கு ஜெய் நந்தன் வந்தார்.

"என்ன பண்ணையாரய்யா இங்க எங்க விஜயம் பண்ணி இருக்கீங்க?" என்று கேட்ட தன் மகனிடம்,

"பேபீஸ ஷெட்ல காணும் ஆனந்த்..... அதான் இந்தப் பக்கம் வந்ததுங்களான்னு பார்க்கலாம்னு வந்தேன்" என்று சொன்னவரிடம்,

"உங்க பேபீஸ் தான.... இங்கிருந்தே கூப்பிடுங்க! வரும்ங்க!" என்றான் ஜீவானந்தன்.

ஜெய் நந்தன் சக்தி முத்துவின் பெயர்களை அழைத்து ஒரு விசில் சத்தம் கொடுத்ததும் இரண்டும் அடித்து புரண்டு ஓடி வந்து வாலை ஆட்டிக் கொண்டு ஜெய் நந்தனின் காலருகே வந்து நின்றன.  

"என்னடா தம்பி உங்க சித்தப்பாட்ட லீவுக்கு கெஞ்சிட்டு இருக்கியா..... நானாவது பரவாயில்லை. என் பொண்டாட்டிய இவன் முன்னாடி நிறுத்தி இவன்ட்ட லீவ் வாங்கிட்டு ஓடிடுவேன். உன்னைய பொறுத்தவரைக்கும் அதுவும் முடியாது போலிருக்கே? என் மருமகளா பொறந்துட்டு ஏஞ்சல் எப்படித் தான் இவ்வளவு வொர்க் மேனியாக்கா இருக்காளோ தெரியல, அப்புறம் ஏஞ்சலோட பொட்டீக்குக்கு ஒரு புது பேரு செலக்ட் பண்ணி வச்சிருக்கேன். "ஜஸ்ட் ஃபார் மை லேடி!" நல்லா இருக்கா..... இங்க கொஞ்சம் அதர் கன்ட்ரி டூரிஸ்ட்ஸ் அதிகமாக வர்றதுனால "அவள்" வேண்டாம்னு தோணுச்சு!" என்று சொன்ன தன் தந்தையை முறைத்துக் கொண்டு இருந்தான் ஜீவானந்தன்.

"ஏன் ஆனந்த்..... பேர் பிடிக்கலயா?" என்று கேட்ட தன் தந்தையிடம் ஆமோதிப்பாக தலையசைத்து,

"இது நீங்க உங்க மருமகளுக்கு நீங்க குடுக்க போற கிப்ட் தான.... எஸ்ஜேஎன்ல வொர்க் பண்ணிட்டு இருந்தாலும் அவளோட க்ரியேட்டியையும், பேஷனையும் விட்டுடக் கூடாதுன்னு தானே "அவள்" மாதிரி இங்க ஒரு ஷாப் ஓப்பன் பண்ணி தரணும்னு நான் என் ஐடியாவ சொன்னவுடனே வேகமா தலையாட்டுனீங்க. ஆனா இது நான் கவிக்காக என் தனி சம்பாத்யத்துல குடுக்க நினைச்ச கிப்ட்! இதுக்கு எப்படி நீங்க "ஜஸ்ட் ஃபார் மை லேடி" ன்னு பேர் வைக்கலாம்.....? கவிப்ரியா இஸ் மை லேடி..... டூ யூ நோ தட்?" என்று கேட்ட தன் மகனின் குரலில் தெரிந்த உரிமை உணர்வை ரசித்த ஜெய் நந்தன் தன் மகனின் சிகையை வருடிக் கொடுத்து சிரிப்புடன் அவனை அணைத்துக் கொண்டார்.

"மிஸ்டர் ஆனந்த்...... உன்னதம் ப்ராடெக்ஸோட சென்னை டிஸ்ட்ரிபியூஷன் வொர்க்கை இவ்வளவு வருஷமா பார்த்துகிட்டது நீங்க தான..... அதுக்கு உங்க அப்பன் சட்டையை புடிச்சு ஏதாவது சம்பளம் வாங்குனீங்களா,  இல்ல மூணு மாசம் நீங்களும் உங்க மனைவி மிஸஸ் கவிப்ரியா ஜீவானந்தனும் ஹார்டு வொர்க் பண்ணுனீங்களே அதுக்காவது ஏதாவது சம்பளம் கேட்டீங்களா.....? நீ என் பையன்டா நீ என்ன ஃபீல் பண்ணுவன்னு கூட புரிஞ்சுக்க முடியாத மடையனா நானு? ஜஸ்ட் ஃபார் மை லேடி ஷாப்பும், உங்க கவி மேடம் உங்க கிட்ட ஆசைப்பட்டு கேட்டாங்களே க்ளாஸ் ஹவுஸ் பூம்பாறையில அந்த குட்டி கண்ணாடி வீடும் உங்களோட சம்பள பணத்துல இருந்து தான் ரெடி ஆகியிருக்கு. நீங்க உங்க வொய்ப்க்கு குடுக்க போற கிப்ட்க்கு ஜஸ்ட் ஃபார் மை லேடின்னு பேரு வைக்கலாம் இல்லைங்களா? நீ தான் ஏஞ்சலோட ஷாப் ஓப்பனிங் செரிமனிக்கு சீஃப் கெஸ்ட், அன்னிக்கு ஒருக்கா தனியா இன்வைட் பண்ண மாட்டேன். இதையே இன்விடேஷனா நினைச்சுக்கோ, ஷாப் பெயரை வேணும்னா மாத்திடலாமா?" என்று கேட்ட தன் தந்தையை இறுக்கமாக தழுவிக் கொண்ட ஜீவானந்தன்,

"ஐ லவ் யூ அப்பா..... என்னடா நாம பாட்டுக்கு அவளுக்கு இவ்வளவு ப்ராமிஸ் பண்ணி குடுத்துட்டோம். ஆனா எப்படி என்னன்னு ரொம்ப யோசிச்சுட்டு இருந்தேன்பா! பட் நம்ம பண்ணையார் இருக்கறப்ப இவ்வளவெல்லாம் யோசிச்சுருக்கவே தேவையில்லைன்னு இப்போ தான் தோணுது. ஷாப்போட நேம் ரொம்ப ஆப்ட் ஆ இருக்கு. இதையே பிக்ஸ் பண்ணிக்கலாம்ப்பா!" என்று அவர் கழுத்தை கட்டிக் கொண்டு நின்று கொண்டு இருந்த ஜீவானந்தனிடம் எட்டு வருடங்களுக்கு முன்னர் தந்தையாக அவர்  தொலைத்து விட்ட அவரது அன்பும், நம்பிக்கையும், மரியாதையும் திரும்ப கிடைத்து விட்டதை உணர்ந்து மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போய் நின்றார் ஜெய் நந்தன்.

"கண்ல தூசி பட்டுடுச்சா டாடி.... உங்க கண்ணு கலங்குது பாருங்க!" என்று கேட்டவனிடம் சிரிப்புடன்,

"அது ஒண்ணுமில்ல ஆனந்த். நீ ஆசைப்படுறதெல்லாம் அது கார்,  பைக், மொபைல் இல்ல வேற ஏதாவது கேஜெட்ஸ் ஆகட்டும் இது எல்லாத்தையும் வாங்கி குடுக்கணும்ன்னு எனக்கு ஆசை. ஆனா நம்ம பாகி தான் உன் சம்பளம்னு நான் போடச் சொல்ற அமௌண்ட் பூரா நீ வாங்குற பொருளுக்கு செலவாகிடுச்சுன்னு உன் கிட்ட சொல்ல சொன்னான். அப்போ தான் நீ செலவு செய்யுற பணத்துக்கு ஒரு அக்கவுண்டபிளிட்டி இருக்கும். அதனால உனக்கு அத்தியாவசியமான தேவை வந்தா மட்டும் தான் அந்த பணத்தை தருவேன், இல்லன்னா பணம் காலின்னு சொல்லிடுங்க, அந்தப் பையன் அதுக்கு மேல நோண்டவும் மாட்டான்னு சொன்னான். அத மாதிரியே நீயும் ஒரு வார்த்தை கூட கேக்கல. நம்ம பணத்தையே அப்பா நமக்கு சம்பளம்னு தர்றாருன்னு எதுவும் யோசிச்சியாப்பா?" என்று கேட்ட தன் தந்தையிடம்,

"அப்படியில்லப்பா உங்க கிட்ட கேக்குறதுக்கு கொஞ்சம் தயக்கமா இருந்தது அவ்வளவு தான். ஆனா எங்கிட்டயே கேம் ஆடியிருக்கான் பாத்தீங்களாப்பா, வரட்டும் அந்த நெருப்புக்கோழி...... கழுத்தை பிடிச்சு அழுத்தி தண்ணிக்குள்ள ஊற வைக்கிறேன்! நாலு நாள் நான் கவிய கூட்டிட்டு சென்னைக்கு போய்ட்டு வரட்டுமாப்பா?" என்று கேட்ட தன் மகனிடம்,

"இன்னும் மூணு நாள் கழிச்சு ஷாப் ஓப்பனிங் செரிமனிக்கு மண்டைவீங்கி உட்பட எல்லாருமே இங்க வர்றாங்க ஆனந்த்..... நீயே அதுக்கு முன்னாடி ஏஞ்சல்ட்ட விஷயத்தை சொல்லிடு. அப்புறம் எதுக்குடா சஸ்பெண்ஸ் வச்சன்னு அதுக்கும் உன்னை திட்டப் போறா...... உள்ள போகலாமா? ஏஞ்சல் எழுந்திரிக்குற டைம் ஆச்சு!" என்று சொல்லியபடி கடிகாரத்தை பார்த்து விட்டு சக்தி முத்துவை அழைத்துக் கொண்டு தன் மகனுடன் வீட்டிற்கு நடந்தார்.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Continue Reading

You'll Also Like

24.1K 1.1K 63
ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்த...
110K 4.8K 37
இது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.
205K 5.4K 132
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...
12.9K 678 52
காதல் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாத போது மலர்ந்த காதலானது காலப்போக்கில் காதலை இரு மனமும் அர்த்தம் தெரிந்து கொண்டாலும் விதியின் விளையாட்டில் ஜெயிப்...