கண்டேன் என் ஜீவாமிர்தம்✔

By Vaishu1986

217K 9.9K 3K

பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நா... More

💟 ஜீவாமிர்தம் 1
💟 ஜீவாமிர்தம் 2
💟 ஜீவாமிர்தம் 3
💟 ஜீவாமிர்தம் 4
💟 ஜீவாமிர்தம் 5
💟 ஜீவாமிர்தம் 6
💟 ஜீவாமிர்தம் 7
💟 ஜீவாமிர்தம் 8
💟 ஜீவாமிர்தம் 9
💟 ஜீவாமிர்தம் 10
💟 ஜீவாமிர்தம் 11
💟 ஜீவாமிர்தம் 12
💟 ஜீவாமிர்தம் 13
💟 ஜீவாமிர்தம் 14
💟 ஜீவாமிர்தம் 15
💟 ஜீவாமிர்தம் 16
💟 ஜீவாமிர்தம் 17
💟 ஜீவாமிர்தம் 18
💟 ஜீவாமிர்தம் 19
💟 ஜீவாமிர்தம் 20
💟 ஜீவாமிர்தம் 21
💟 ஜீவாமிர்தம் 22
💟 ஜீவாமிர்தம் 23
💟 ஜீவாமிர்தம் 24
💟 ஜீவாமிர்தம் 25
💟 ஜீவாமிர்தம் 26
💟 ஜீவாமிர்தம் 27
💟 ஜீவாமிர்தம் 28
💟 ஜீவாமிர்தம் 29
💟 ஜீவாமிர்தம் 30
💟 ஜீவாமிர்தம் 31
💟 ஜீவாமிர்தம் 32
💟 ஜீவாமிர்தம் 33
💟 ஜீவாமிர்தம் 34
💟 ஜீவாமிர்தம் 35
💟 ஜீவாமிர்தம் 36
💟 ஜீவாமிர்தம் 37
💟 ஜீவாமிர்தம் 38
💟 ஜீவாமிர்தம் 39
💟 ஜீவாமிர்தம் 40
💟 ஜீவாமிர்தம் 41
💟 ஜீவாமிர்தம் 42
💟 ஜீவாமிர்தம் 43
💟 ஜீவாமிர்தம் 44
💟 ஜீவாமிர்தம் 45
💟 ஜீவாமிர்தம் 46
💟 ஜீவாமிர்தம் 47
💟 ஜீவாமிர்தம் 48
💟 ஜீவாமிர்தம் 49
💟 ஜீவாமிர்தம் 50
💟 ஜீவாமிர்தம் 51
💟 ஜீவாமிர்தம் 52
💟 ஜீவாமிர்தம் 53
💟 ஜீவாமிர்தம் 54
💟 ஜீவாமிர்தம் 55
💟 ஜீவாமிர்தம் 56
💟 ஜீவாமிர்தம் 57
💟 ஜீவாமிர்தம் 58
💟 ஜீவாமிர்தம் 59
💟 ஜீவாமிர்தம் 60
💟 ஜீவாமிர்தம் 61
💟 ஜீவாமிர்தம் 62
💟 ஜீவாமிர்தம் 63
💟 ஜீவாமிர்தம் 65
💟 ஜீவாமிர்தம் 66
💟 ஜீவாமிர்தம் 67
💟 ஜீவாமிர்தம் 68
💟 ஜீவாமிர்தம் 69
💟 ஜீவாமிர்தம் 70
💟 ஜீவாமிர்தம் 71
💟 ஜீவாமிர்தம் 72
💟 ஜீவாமிர்தம் 73
💟 ஜீவாமிர்தம் 74
💟 ஜீவாமிர்தம் 75

💟 ஜீவாமிர்தம் 64

2.3K 128 26
By Vaishu1986

"டேய் எருமை மாடு காலங்கார்த்தால வந்து ஏன்டா என்கிட்ட இம்சை  பண்ணிட்டு இருக்க..... இது உங்கம்மா எனக்கு போட்டு விட்ட செயின்.... இதுவரைக்கும் ரெண்டே ரெண்டு தடவ தான் இதை கழுத்துல இருந்து கழட்டியிருக்கேன். அதுவும் வேற யாரு கையிலயும் குடுக்காம நானே அத சரி பண்ணிக்கறதுக்கு தான்; இப்போ  இந்த செயின் எதுக்கு உனக்கு வேணும்னு கேட்டு என் உயிரை வாங்கிட்டு இருக்க?" என்று தன் மகனிடம் எரிச்சலுடன் கேட்டுக் கொண்டிருந்தார் பலராம்.

"ஏன் எதுக்குன்னு விளக்கமெல்லாம் அப்புறமா சொல்றேன். உனக்கு அம்மா போட்ட செயினை நாளைக்கு இல்லல்ல இன்னிக்கு நைட் பத்திரமா உன் கையில குடுத்துடுவேன். இப்போ அத எங்கிட்ட குடுப்பா!" என்று கேட்டான் ராகவ்.

"எதுக்கு உன் செயினை கேக்குறான்னு தெரியல. ஓவரா பண்ணாம புள்ள கிட்ட செயினை குடேன் ராம்!" என்று தன் மகனுக்கு பரிந்து கொண்டு வந்த தன் மனைவியை முறைத்தார் பலராம்.

"ஓகே ஓகே கூல் அப்பா நீ செயினை இப்பவே தர வேண்டாம். ஈவ்னிங் பங்ஷன்க்கு ஹாஃப் அன் ஹவர் முன்னாடி என் கிட்ட தந்தா போதும். எப்படியும் பங்ஷன்க்கு வர்றவங்க எல்லாம் காஸிப்பிங்க்கு ரெடியா விதவிதமான கதையோட வருவாங்கல்ல; ஸோ அவங்க வாயை ஆஃப் பண்ணி வைக்குறதுக்கு ஏதாவது வேலை குடுக்கணுமே..... வர்றவங்க எல்லாரும் உன்னோட காணாம போன செயினை தேடப் போறாங்களாம். ஆனா உன்னோட செயின் பத்திரமா என் பாக்கெட்ல தான் இருக்கப் போகுது. உன் செயினை கண்டுபிடிச்சு தர்றவங்களுக்கு 5 லட்சம் ரூபாய் கிப்ட் வேற அனௌன்ஸ் பண்ணப் போறாரு நம்ம மச்சி!" என்று சொன்ன தன் மகனிடம்,

"உங்க விளையாட்டுக்கு இன்னிக்கு என் செயின் தான் கிடைச்சதாடா..... அத நானே நீ சொல்லும் போது கழட்டி என் கிட்டயே பத்திரமா வச்சுக்குறேன். நீ ஜீவாட்ட போய் சொல்லிடு! சரி நேத்து பங்ஷன்ல அவனும் உன் அக்காவும், ஒரு மாதிரி டல்லா இருந்துச்சுங்க. என்னாச்சு.... மறுபடியும் எதுவும் சண்டை போட்டுச்சுங்களா? உனக்கு எதுவும் தெரியுமாடா?" என்று கேட்ட தன் தந்தையை யோசனையாக பார்த்த ராகவ்,

"கொஞ்ச நேரம் வாக் பண்ணிட்டு வரலாமாப்பா?" என்று கேட்டான். கீதா அவர்கள் இருவரின் அருகில் கோபத்துடன் வந்து நின்று,

"டேய் நான் உன் அம்மா, உன் ஊமை குசும்பையெல்லாம் என் கிட்ட காட்டாத! அதென்ன என்னை கழட்டி விட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் தனியா போய் பேசறது...... கவிம்மா ஜீவாகுட்டி லைஃப்ல எனக்கு அக்கறை இல்லையா..... மரியாதையா இங்கயே எல்லா விஷயத்தையும் சொல்ற!" என்று கேட்க ராகவ் ஒரு பெருமூச்சுடன் கவிப்ரியாவின் தற்போதைய மனநிலையை தன் தாய் தந்தையிடம் உரைத்து விட்டு கைகளை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

"கீதுப்பாப்பா உம் பையன் கவிம்மாவை அங்க தள்ளிட்டு போயிட்டா அவனுக்கு துணைக்கு ஒரு ஆள் கிடைச்சிடுச்சு..... அவள பார்க்காம ஜெய் மச்சான், அஜுவால எல்லாம் இருக்க முடியாது. ஸோ அப்பப்போ எல்லாரும் அங்க போயிட்டு வந்துடுவோம். இவனுக்கு தனியா இருந்து வேலை பார்க்குற கஷ்டமும் இருக்காதுன்னு மொத்தமா எல்லாத்தையும் யோசிச்சு இப்படி ஒரு முடிவு எடுத்துட்டான்னு நினைக்கிறேன்!  ஏன்டா இப்படி வில்லத்தனம் பண்ற?" என்று திட்டிய தன் தந்தையை ஒரு பார்வை பார்த்தவன்,

"வில்லத்தனம் பண்றது நானா இல்ல உங்க பொண்ணா மிஸ்டர் பலராம்? அவளா ஆசைப்பட்டு மச்சிய கல்யாணம் பண்ணிக்குவாளாம். அப்புறம் அய்யய்யோ ஜீவா முகத்தை பார்த்தா என் குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுங்குதுன்னு சொல்வாளாம், கல்யாணம் ஆகி ஒரு வாரம் ஆகுறதுக்குள்ள புருஷனுக்கு டாட்டா காட்டிட்டு பொட்டிய தூக்கிட்டு கிளம்பிடுவாளாம். நல்ல வேளை அவ எனக்கு அக்காவா போயிட்டா, தங்கச்சியா மட்டும் பொறந்திருந்தா..... பாகிய மாதிரி நானும் ரெண்டு அறை விட்டுருப்பேன். இப்பவும் சொல்றேன். அவ அழறத பார்த்தா எனக்கு கஷ்டமா இருக்கு. ஆனா எனக்கு துணைக்கு ஆள் வேணும்னு எல்லாம் நான் அவள என் கூட கூட்டிட்டு போகணும்னு நினைக்கல. எல்லாரும் சேர்ந்து பேசி முடிவெடுத்தாலும் சரி, இல்ல நீங்க மட்டும் ஏதாவது முடிவெடுத்தாலும் சரி..... கவிம்மா ஜீவா மச்சி கூட இருக்கற மாதிரி ஏதாவது வழியை பண்ணுங்க. அவள ஹாப்பியா வச்சிருக்கிறத மச்சி பார்த்துப்பாரு. புரிஞ்சதா? ப்ரேக் பாஸ்ட் டைம்ல மீட் பண்ணுவோம். பைமா பைடாட்!" என்று சொல்லி விட்டு வந்த வேலை முடிந்த திருப்தியுடன் கிளம்பி சென்று விட்டான் ராகவ்.

"நம்ம ஜெனரேஷன்ல எல்லாம் பசங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்குறதுக்கு தான் பிரச்சனையா இருந்தது. இந்த புள்ளைங்க என்னடான்னா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமா பிரச்சனை பண்ணிட்டு வாழுற வாழ்க்கையை இப்படி காம்ப்ளிகேட் பண்ணிக்குதுங்களே பலாமரம்.... இதெல்லாம் நல்லதுக்கு தானா? உனக்குள்ள தூங்கிட்டு இருக்கற இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட தட்டி எழுப்பி இந்த ப்ராப்ளமுக்கு ஒரு சொல்யூஷன் கண்டுபிடி பார்ப்போம்!" என்று சொல்லி தன் கன்னத்தில் முத்தமிட்ட தன் மனைவியை அணைத்துக் கொண்ட பலராம்,

"ஷ்யூர் க்யூட்டி.....! ரெண்டு பேரும் மனசு நிறைய லவ்வை வச்சுட்டு இந்த பாடுபடுதுக..... அத நினைச்சா தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு. கவிம்மா தான் கொஞ்சம் சொல்ற விஷயத்தை எல்லாம் புரிஞ்சுக்கணும். டோண்ட் வொர்ரி டியர், நம்ம பிள்ளைங்க நம்மள பார்த்து பார்த்து வளர்ந்தவங்க, நிச்சயமா அவங்களுக்கு காதல்ல வாழ்க்கைல என்ன பிரச்சனை வந்தாலும் பின்னால இருந்து ஸப்போர்ட் பண்ணி நாங்க தாங்கி பிடிச்சுடுவோம். எப்படியோ போகட்டும்னு எல்லாம் விட்டுட மாட்டோம். நீ ரிலாக்ஸ்டா இரு. அஜு அண்ணிட்ட எல்லாம் இதைப் பத்தி எதுவும் பேசாத, வருத்தப்படுவாங்க!" என்று சொன்ன தன் கணவனிடம் சிரிப்புடன் தலையசைத்த கீதா

"டைமாச்சு இன்னும் நீ உன் க்ரஞ்ச்சிங்கை பண்ண ஆரம்பிக்கலையா ராம் கண்ணா? சீக்கிரம் செஞ்சு முடி. நான் போய் உன் ஜுஸ் எடுத்துட்டு வர்றேன்!" என்று சொல்லி விட்டு வெளியே சென்றார்.

கவிப்ரியா காலையில் எழுந்ததும் முதல் வேலையாக அவள் பெற்றோரின் அறைக்கதவை தட்டியபடி நின்று கொண்டு இருந்தாள்.

கதவை திறந்த அர்ஜுன், "குட்மார்னிங் பேபி.... என்னடா இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் எழுந்திரிச்சுட்ட போலிருக்கு. உள்ள வாடா!" என்று சொல்லி விட்டு நகரப் போனவரை அணைத்துக் கொண்டவள்,

"அப்பா நைட் பூரா நான் சரியா தூங்கவே இல்லப்பா. அம்மா மடியில படுத்துக்கணும் போலிருக்கு. அவங்க என் கிட்ட பேசவே மாட்டேங்குறாங்க. ப்ளீஸ் அம்மாவை என் கூட பேசச் சொல்லுங்க டாடி!" என்று கெஞ்சிக் கொண்டிருந்த தன் மகளை சிறிதும் சட்டை செய்து கொள்ளாமல் கண்ணாடியில் தன்னை பார்த்து மிதமான ஒப்பனை செய்து தயாராகிக் கொண்டிருந்தார் மீரா.

"மீரா..... கவி உங்கிட்ட தான் ஏதோ பேசணும்ன்னு நினைக்கிறா போலிருக்குமா, நீ அவள கண்டுக்காம நீ பாட்டுக்கு உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம்?" என்று கேட்ட அர்ஜுனிடம்,

"என் கிட்ட உங்க பெண்ணுக்கு என்ன பேசணுமாம் மிஸ்டர் அர்ஜுன்? மிஸஸ். ஜீவா ரொம்ப பெரிய மனுஷி ஆகிட்டாங்க; எந்த விஷயம்னாலும் யார் ஒப்பீனியனும் தேவையில்லை, அவங்களே எல்லா முடிவுகளையும் எடுத்துக்குவாங்க. அது சரியா தப்பா? அத செயல்படுத்தலாமா வேண்டாமா? அப்படியெல்லாம் எதுவும் யோசிக்க மாட்டாங்க. இல்ல தெரியாம தான் கேக்குறேன். எங்க அண்ணன் பையன யார்ட்டயும் ஒரு வார்த்தை கூட சொல்லாம அவசர அவசரமா கல்யாணம் பண்ணிக்கிட்டாளே...... அவளோட மாமா, அத்தை, அப்பா, அம்மால்லாம் என்ன நினைப்பாங்கன்னு ஏதாவது யோசிச்சாளா? நாளைக்கு எங்க அண்ணா முகத்த பார்த்து நீங்களும் நானும் எப்படி பேசுவோம்னு ஏதாவது யோசிச்சாளா? இவ்வளவு நாள் இவளுக்கு நான் என்ன தான் சொல்லிக் குடுத்து வளர்த்தேன்னு என்னைய நானே கேள்வி கேட்டுக்கணும் போலிருக்கு. எப்போ பாரு நான் சொல்றதை தான் எல்லாரும் கேட்டுக்கணும்ங்குற டாமினேட்டிங் ஆட்டிடியூட் எப்படிடீ வந்தது உனக்கு? ஜெய் மாமாவுக்காக உன்னை சும்மா விடுறேன்..... ஜீவாக் குட்டிய ஏதாவது ஹர்ட் பண்ணி அவன கண்கலங்க வச்சேன்னு தெரிஞ்சது என் பொண்ணுன்னெல்லாம் பார்க்க மாட்டேன். உன்னை கொன்னே போட்டுடுவேன் பார்த்துக்க!" என்று அழுத்தம் நிறைந்த குரலில் தன் கணவனிடமும், மகளிடமும் மீரா கேட்ட கேள்விகளுக்கு இருவரிடம் இருந்தும் எந்த பதிலும் வரவில்லை. அப்பா மகள் இருவரும் தலையை கவிழ்ந்து கொண்டு நின்று கொண்டு இருந்தனர்.

"செல்லம் அம்மா சொல்றத எல்லாம் பெரிசா.......!" என்று சொல்லி தேற்ற வந்த தன் தந்தையை "இட்ஸ் ஓகேப்பா பெரிசா சொல்ற விஷயத்தை சீரியஸா தானே எடுத்துக்கணும்..... தப்பு என் மேல தான்ப்பா. ஸாரி ஃபார் டிஸ்டர்பிங்க் யூ போத்.....!" என்று சொல்லி விட்டு விரைந்து வெளியே சென்ற தன் மகளைப் பாவமாக பார்த்து விட்டு அர்ஜுன் மீராவிடம்,

"ரமி நீ செஞ்சது தப்பும்மா..... கவி வருத்தப்பட்டு போறா பாரு. ஏன் திடீர்னு அவ மேல இவ்வளவு கோபப்பட்ட?" என்று கேட்டார். மீராவின் முகத்தில் ஒரு விரக்தியான புன்னகை மலர்ந்தது.

"இதை முதல்லயே செய்யாம இவ்வளவு நாள் கழிச்சு ஏன்  செய்யறேன்னு நான் வருத்தப்பட்டுட்டு இருக்கேன் டீப்! உங்க மகளுக்கும், ஜீவாக்குட்டிக்கும் நடுவுல எதுவும் சரியா இருக்கிற மாதிரியே எனக்கு தோணல. அளவுக்கு அதிகமா செல்லம் குடுத்து நம்ம கவிம்மாவ நம்ம பாழாக்கிட்டோம் டீப்...... இன்னும் கொஞ்ச நாளைக்கு அவள வழிக்கு கொண்டு வர்ற வரைக்கும் இப்படி தான் கஷ்டமா இருக்கப் போகுது. பிள்ளைங்க ரெண்டு பேரும் ஒரு க்வாலிட்டி லைஃப் வாழறதுக்கு நாம அவள கொஞ்சம் விரட்டித் தான் ஆகணும். இப்போ அவள பத்தி விட்ட கடுப்புல ஜீவா ரூம்ல தான் நேராப் போய் நிப்பா. மத்த விஷயத்தை
ஜீவாக்குட்டி பார்த்துப்பான். நீங்க போய் குளிச்சு கிளம்பி வாங்க!" என்று சொன்ன மீராவிடம் ஒரு பெருமூச்சுடன் தலையசைத்து விட்டு சென்றார் அர்ஜுன்.

"டேய் மலைமாடு..... பெரிய ராஜா இவரு! இவரை பார்க்கணும்ன்னா எட்டு செக்யூரிட்டி லாக்கை தாண்டி தான் வரணும். கதவைத் திறந்து விடுடா. ஐ'ம்  வெயிட்டிங் அவுட்ஸைட். நான் உங்கிட்ட பேசணும்!" என்று ஜீவாவை அலைபேசியில் திட்டிக் கொண்டு இருந்தாள் கவிப்ரியா.

"பேசத் தானே செய்யணும்..... ரூமுக்கெல்லாம் வர வேண்டாம். அப்படியே பேசு. ஐ'ம் லிஸனிங்....." என்று தூக்கக்குரலில் பேசியவன் ஒரு கொட்டாவியை வேறு வெளியேற்றவும் கவிப்ரியா எரிச்சலின் உச்சத்திற்கு சென்றாள்.

"இப்போ நீ எழுந்திரிச்சு வந்து கதவை திறந்து விடல, போய் டார்லிங்கை கூட்டிட்டு வந்து...... ஐயோம்மா!" என்று அலறி கதவை திறந்து நின்ற தன் கணவனைப் பார்த்து வேக வேகமாக கண்களை மூடிக்கொண்டவளை கைகளைப் பிடித்து தன் அறைக்குள் இழுத்து சென்றான் ஜீவானந்தன்.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Continue Reading

You'll Also Like

93.7K 4.5K 55
அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல...
170K 1.6K 13
அந்த ஒற்றை இரவில் மகிழ்ச்சியான தனது திருமண வாழ்க்கை தலைகீழாக மாறி, ஒரு கெட்ட சொப்பனமாக மாறக் கூடும் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அவன் அவ...
89.8K 5.2K 54
வாழ்க்கை எப்படி எப்போது மாறும் என்று யாருக்கும் தெரியாது. அது போகும் போக்கில் செல்ல பழகிவிட்டால் பல ஆச்சரியங்களை அது நமக்கு பரிசளிக்கிறது. அப்படிப்பட...