கண்டேன் என் ஜீவாமிர்தம்✔

By Vaishu1986

214K 9.9K 3K

பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நா... More

💟 ஜீவாமிர்தம் 1
💟 ஜீவாமிர்தம் 2
💟 ஜீவாமிர்தம் 3
💟 ஜீவாமிர்தம் 4
💟 ஜீவாமிர்தம் 5
💟 ஜீவாமிர்தம் 6
💟 ஜீவாமிர்தம் 7
💟 ஜீவாமிர்தம் 8
💟 ஜீவாமிர்தம் 9
💟 ஜீவாமிர்தம் 10
💟 ஜீவாமிர்தம் 11
💟 ஜீவாமிர்தம் 12
💟 ஜீவாமிர்தம் 13
💟 ஜீவாமிர்தம் 14
💟 ஜீவாமிர்தம் 15
💟 ஜீவாமிர்தம் 16
💟 ஜீவாமிர்தம் 17
💟 ஜீவாமிர்தம் 18
💟 ஜீவாமிர்தம் 19
💟 ஜீவாமிர்தம் 20
💟 ஜீவாமிர்தம் 21
💟 ஜீவாமிர்தம் 22
💟 ஜீவாமிர்தம் 23
💟 ஜீவாமிர்தம் 24
💟 ஜீவாமிர்தம் 25
💟 ஜீவாமிர்தம் 26
💟 ஜீவாமிர்தம் 27
💟 ஜீவாமிர்தம் 28
💟 ஜீவாமிர்தம் 29
💟 ஜீவாமிர்தம் 30
💟 ஜீவாமிர்தம் 31
💟 ஜீவாமிர்தம் 32
💟 ஜீவாமிர்தம் 33
💟 ஜீவாமிர்தம் 34
💟 ஜீவாமிர்தம் 35
💟 ஜீவாமிர்தம் 36
💟 ஜீவாமிர்தம் 37
💟 ஜீவாமிர்தம் 38
💟 ஜீவாமிர்தம் 39
💟 ஜீவாமிர்தம் 40
💟 ஜீவாமிர்தம் 41
💟 ஜீவாமிர்தம் 42
💟 ஜீவாமிர்தம் 43
💟 ஜீவாமிர்தம் 44
💟 ஜீவாமிர்தம் 45
💟 ஜீவாமிர்தம் 46
💟 ஜீவாமிர்தம் 47
💟 ஜீவாமிர்தம் 48
💟 ஜீவாமிர்தம் 49
💟 ஜீவாமிர்தம் 50
💟 ஜீவாமிர்தம் 51
💟 ஜீவாமிர்தம் 52
💟 ஜீவாமிர்தம் 53
💟 ஜீவாமிர்தம் 54
💟 ஜீவாமிர்தம் 55
💟 ஜீவாமிர்தம் 56
💟 ஜீவாமிர்தம் 57
💟 ஜீவாமிர்தம் 59
💟 ஜீவாமிர்தம் 60
💟 ஜீவாமிர்தம் 61
💟 ஜீவாமிர்தம் 62
💟 ஜீவாமிர்தம் 63
💟 ஜீவாமிர்தம் 64
💟 ஜீவாமிர்தம் 65
💟 ஜீவாமிர்தம் 66
💟 ஜீவாமிர்தம் 67
💟 ஜீவாமிர்தம் 68
💟 ஜீவாமிர்தம் 69
💟 ஜீவாமிர்தம் 70
💟 ஜீவாமிர்தம் 71
💟 ஜீவாமிர்தம் 72
💟 ஜீவாமிர்தம் 73
💟 ஜீவாமிர்தம் 74
💟 ஜீவாமிர்தம் 75

💟 ஜீவாமிர்தம் 58

1.8K 99 13
By Vaishu1986

பவின் ஷைலுவின் திருமணம் மிகவும் தடபுடலாக முடிந்ததில் பெரியவர்கள் அனைவர் முகத்திலும் மனநிறைவும், மகிழ்ச்சியும் தெரிந்தது. மணமக்களை ஆசிர்வாதம் செய்யும் போது நிர்மலாவின் கண்கள் கலங்கியதை பார்த்து அர்ஜுனுக்கு தன் தங்கை அவளது மகனின் திருமணத்தை இப்படி ஆனந்தக் கண்ணீருடன் பார்க்க கொடுத்து வைக்கவில்லையே என்று வருத்தமாக இருந்தது. பின்னே அவருக்கும் தானே அவர் மகளின் திருமணத்தை காணும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது, அந்த வருத்தம் வீட்டின் அனைத்து பெரியவர்களின் மனதிலும் ஓர் ஓரத்தில் இருக்கத்தான் செய்தது. 

நிர்மலாவின் மாமா சபரீசன் குடும்பத்தினர், ஜெய் நந்தனின் தாத்தா பரமேஸ்வரன் குடும்பத்தினர், கௌதமனின் தந்தை வழி உறவுகள் அனைவரும் வெகு நாட்களுக்கு பிறகு ஷைலஜாவின் திருமணத்திற்கு வந்திருந்தனர். அவர்களை ஜீவாவும், விவேக்கும் கவனித்துக் கொண்டு திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் மணமக்களுக்கு ஆசி வழங்க மணமேடைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

அர்ஜுன் நிர்மலாவின் அருகில் இருந்தத ஒரு சேரில் வந்தமர்ந்தார். அவரைப் பார்த்து புன்னகைத்த நிர்மலா, "சாப்டீங்களா அண்ணா?" என்று கேட்டார்.

"கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறேன்மா! இது நம்ம வீட்ல நடக்கிற கல்யாணம் மாதிரியே தெரியல நிர்மலா. எல்லாரோட முகத்திலயும் ஏதோ ஒரு விஷயம் மிஸ்ஸிங். கோபத்தை உள்ளுக்குள்ள வச்சுட்டு வெளியில அமைதியா இருக்கற மாதிரி தெரியுறாங்கன்னு தோணுது. மீரால்லாம் ஒரு மாதிரி எரிச்சலோட தான் என் கிட்ட கூட பேசுறா. உனக்கு ஜீவா மேலயும், கவி மேலயும் கோபம் வரலையாம்மா?" என்று கேட்ட தன் அண்ணனிடம் புன்னகையுடன்,

"நந்து மேல கோபப்பட எனக்கு என்ன தகுதி இருக்குண்ணா? எட்டு வருஷமா என் பையன் தனியா புழுங்கிட்டு இருந்தப்போ அவன் அம்மாவா நான் என்னத்த செஞ்சேன்..... அங்கயும் இங்கயும் என்ன நடக்குதுன்னு வேடிக்கை மட்டும் தானே பார்த்துட்டு இருந்தேன்;  இப்போ அவனோட லைஃப்ல நம்ம யார்ட்டயுமே கலந்துக்காம ஒரு முடிவு எடுத்தப்போ மட்டும் என் புள்ளயாடா நீன்னு கேட்டு அவன ரெண்டு அறை அறைஞ்சேன்னா என் மனசாட்சி கேட்குற கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாதுண்ணா! ஒரு அம்மாவா அவனை நம்பி வந்த கவிம்மாவை சந்தோஷமா வச்சுக்க சொல்லி சொன்னேன், அது கூட என்னோட மனதிருப்திக்காக தான்..... மத்தபடி எல்லாரும் இப்படி முகத்தை தூக்கி வச்சுட்டு இருக்கறதுனால நடந்த எதுவும் மாறிடப் போறதில்ல! மேடையிலிருந்து நந்து கூப்பிடுறான். நான் அங்க போறேண்ணா!" என்று சொல்லி விட்டு போன தன் தங்கையின் பேச்சை கேட்டு பெருமூச்சு விட்டார் அர்ஜுன்.

பார்கவ் மேடையில் மணமக்களை வாழ்த்த வந்து விட்டு எரிச்சலுடன் நின்று கொண்டு இருந்தான். "என்னைய பார்த்தாலே உன் மூஞ்சி கோணிக்குமா பாகி அத்தான்..... எங்கள விஷ் பண்றதுக்கு தான மேல வந்த..... இப்ப எதுக்கு பல்ல கடிச்சுட்டு நின்னுட்டு இருக்க?" என்று கேட்ட ஷைலுவிடம் ஒன்றும் சொல்லாமல் தன் மனைவியின் காதில் ஏதோ ரகசியம் பேசினான் பார்கவ்.

அபிநயா அவன் பேச்சை கேட்டு விட்டு சற்று தர்மசங்கடத்துடன் நெளிந்த படி ஷைலுவின் அருகில் வந்து அவள் தோள்பட்டையில் சற்று நெகிழ்ந்து வெளிப்புறம் தெரிந்த உடையை உள்ளே தள்ளி சரி செய்து விட்டாள். இதற்காக தான் முறைத்தானா என்று எண்ணிய ஷைலுவிற்கு தன் மாமன் மகனை நினைத்து முகம் கன்றியது.

"ஸாரி அத்தான்..... நான் கவனிக்கல!" என்று மன்னிப்பு கேட்டவளை கண்டுகொள்ளாமல்,

"பாருங்க வினு.... அவ ட்ரெஸ் விஷயத்த கூட இன்னும் நம்ம தான் பார்த்து கரெக்ட் பண்ண வேண்டியதிருக்கு. எனக்கு கவி, லட்டு பத்தியெல்லாம் கவலையே இல்ல, ஆனா இவள நினைச்சு தான் ரொம்ப டென்ஷன் ஆகும், எங்கேயாவது ஒரிடத்தில ட்ராப் பண்ணிட்டு போனா நம்ம திரும்பி போய் கூட்டிட்டு வர்ற வரைக்கும் அங்கேயே தான் நிப்பாளே தவிர அவளா கிளம்பி வருவோம்னு நினைக்க மாட்டா; கொஞ்சம் சைல்டிஷா, கொஞ்சம் அடமெண்டா, நிறைய விஷயத்துல ஆர்க்யூ பண்ணிட்டு இருந்தாலும் ரூபி எனக்கு கவிய விட ரொம்ப ஸ்பெஷல்! அவள கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோங்க!" என்று பார்கவ் சொல்லிக் கொண்டிருந்த போது ஜீவா அவன் அருகில் வர, "வந்துட்டியா..... உன் தங்கச்சிய நான் ஒண்ணுமே சொல்லல! ஜஸ்ட் விஷ் பண்றதுக்கு தான் வந்தேன். என் தங்கச்சிய என்ன செஞ்சன்னு கேட்டு குதிக்காத!" என்றான் பார்கவ்.

ஜீவானந்தன் புன்னகையுடன், "நான் இப்போ உன் கிட்ட ஒண்ணுமே சொல்லலயே..... பவின் ஷைலுவ சாப்பிட கூப்பிடலாம்னு வந்தேன்! அவ்வளவு தான்......" என்று சொல்லி விட்டு தன் தங்கைக்கும் மாப்பிள்ளைக்கும் சற்று ஓய்வுபெற்ற தரும் வகையில் வாழ்த்து சொல்ல வந்தவர்கள் பத்து இருபது பேரிடம் பேசிக் கொண்டே அவர்களுக்கு  பழச்சாறு கொடுத்து சாமர்த்தியமாக இருக்கையில் அமர வைத்து விட்டும்  சென்று விட்டான்.

"விஷ் யூ ஹாப்பி மேரீட் லைஃப்!" என்று சொல்லி விட்டு பவினிடம் கைகுலுக்கிய பார்கவின் கையை விட்டு விடாமல்,

"ஜீவா மாதிரியே நீங்களும் ஷைலு மேல ஒரு ஸாப்ட் கார்னரோட இருக்கீங்கன்னு எனக்கு புரிஞ்சது பார்கவ். உங்க மாமா பொண்ண நான் பத்திரமா பார்த்துக்கறேன். அவ எனக்கு கிடைச்ச ஒரு நல்ல பார்ட்னர், அவ வந்த பிறகு தான் என் லைஃப்ல  நிறைய இன்ட்ரஸ்டிங் இன்ஸிடென்ட்ஸ் நடக்குது! தேங்க்யூ ஃபார் யுவர் விஷஷ், சிஸ்டர் உங்களுக்கும் தேங்க்ஸ்!" என்று சொன்னவனிடம் கைகுலுக்கி விட்டு பார்கவும் அபிநயாவும் கீழே வந்தார்கள்.

இசக்கி ராசு காலையில் இருந்து உணவுக் கூடத்தில் ஓடி ஓடி அனைவரையும் கவனித்து கொண்டு இருந்தான். முஹூர்த்தத்தின் போது இரண்டு நிமிடங்கள் வந்து மணமக்களை எட்டிப் பார்த்ததோடு சரி, மறுபடியும் பந்தியை கவனிக்க தன் மாமனுடன் சென்று நின்று விட்டான்.

"எலேய்..... புள்ள உன்னைய தேடும், உள்ளார போலே!" என்று சொன்ன தன் மாமனாரின் பேச்சை அவன் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை.

ஜெய் நந்தனின் கூட சென்று சபரீசன், ஸ்ரீமதி, நவீன் குடும்பத்தினருக்கு தேவையான உபசரணைகளை கவனித்து விட்டு அவரிடம் சென்ற இனியா, "என்ன பெரியப்பா இன்னிக்கு ரொம்ப டல்லா இருக்குற மாதிரி தெரியுறீங்க, ரூபிக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சுன்னு வருத்தப்படுறீங்களா?" என்று கேட்டாள்.

ஜெய் நந்தன் தன் மகள் தலையை இதமாக வருடி விட்டு, "ஷைலு பவின் முகத்தில தெரியற சந்தோஷத்தை பார்த்து ரொம்ப திருப்தியா இருக்குடா லட்டு, ஆனா உங்க அண்ணனையும், அண்ணியையும் பாரு, இவன் ஒரு இடத்தில நிக்குறான். அவ ஒரு ஓரமா நம்ம ராகவ் பையன் கூட பாவமா உட்கார்ந்து இருக்கா, அவங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ சரியில்ல! அதான் விஷயம் என்னவா இருக்கும்னு தெரியாம மனசு கிடந்து அடிச்சுக்குது. உன் பெரியம்மாவும் நாலஞ்சு நாளா என் கிட்ட சரியாவே பேச மாட்டேங்குறா. இப்போதைக்கு நம்ம ரூபி பவின் பக்கத்தில் சிரிச்சுட்டு நிக்கறது தான் ஒரே ஆறுதலான விஷயம்!" என்று சொன்னவரின் கைகளைப் பற்றி சமாதானம் செய்து விட்டு சென்றாள் இனியா.

கெளதமனின் அப்பாவும், அம்மாவும் தன் மகனும் மருமகளும்  தங்கள் வீட்டிற்கு வந்து அழைத்து விட்டார்களே என்ற கடமைக்காக மூன்றாவது நபர் போல் தன் பேரன் திருமணத்திற்கு வந்து கலந்து கொண்டு அரை மணி நேரம் இருந்து விட்டு கிளம்பி கொண்டிருந்தனர்.

"வினு உன் தாத்தா கிளம்புறார் போல... அவங்க நம்மள இன்னும் ஃப்ளெஸ் பண்ணவேயில்லையே?" என்று கேட்ட தன் மனைவியை பார்த்து சிரித்த பவின்,

"ஃபங்ஷனுக்கு வந்ததே பெரிசுன்னு நினைச்சுக்க வேண்டியது தான் ஷை; உங்க வீட்ல மாதிரி நானெல்லாம் தாத்தா பாட்டின்னு யார் கூடவும் பழகினதில்ல, ஸோ அது ஒண்ணும் எனக்கு பெரிய விஷயமா தெரியல. பிரச்சனை இல்லாம பெரியவங்க கிளம்பட்டும் விடு!" என்று சொன்னவனை முறைத்தவள்,

"இப்படி வந்துட்டு போறதுக்கு அவங்க கல்யாணத்துக்கு வராமலேயே இருந்துருக்கலாமே.... எங்க மாமனாரை  எப்படி அந்த பெரிசு தப்பா பேசிட்டு போகலாம்? கௌதம் அங்கிள் எங்கிட்ட எல்லா கதையையும் சொல்லியிருக்காரு, இந்தா வர்றேன் இரு!" என்று சொல்லி விட்டு மாலையை கழற்றி அமர்ந்திருந்த சேரில் வைத்தவளை வேகமாக நிறுத்திய பவின்,

"ஏய் ஆர்வக்கோளாறு.... தயவு செஞ்சு இப்போ போய் அவங்கட்ட ஏதாவது சண்டை போட்டுடாத ப்ளீஸ்!" என்று சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தான்.

"ம்ஹூம்..... ஷைலு சண்டை போடுற மூடுக்கு வந்தாச்சு, நீ தள்ளு!" என்று தன் கணவனிடம் சொல்லி விட்டு மேடையில் இருந்து கீழே இறங்கி "மிஸ்டர் பச்சைமுத்து ஹோல்ட் ஆன்!" என்று உரக்க அழைத்த படி அவரருகில் வந்து நின்றாள்.

"என் பேரு ஷைலஜா பவின்..... உங்க பேரனோட பொண்டாட்டி! எங்க கல்யாணத்துக்கு வந்துட்டு எங்கள விஷ் பண்ணாம, விருந்து சாப்பிடாம போறீங்க.... வீட்டுக்கு வந்தவங்கள சாப்பிடாம அனுப்பினா என் ஹஸ்பெண்டுக்கு பிடிக்காது ஸார்! அப்புறம் வந்தவங்கள நீ தான் ஒழுங்கா கவனிச்சுக்கலன்னு என்னை திட்டுவாரு, ப்ளீஸ் வாங்க உள்ள போகலாம்!" என்று சொன்ன தன் பேரன் மனைவியை மேலும் கீழும் பார்த்தவர்,

"அம்மணி உங்க மாமனாரும், மாமியாரும் வீட்டுக்கு வந்து கூப்பிடாகளேங்கிற மரியாதைக்கு தான் உங்க கல்யாணத்துக்கு நாங்க வந்தோம்! உன் மாமன்காரன் எனக்கு தேடிக் குடுத்த அவமானமெல்லாம் உனக்கு தெரியாது கண்ணு!" என்று சொன்னவரிடம் புன்னகையுடன்,

"ஏன் தெரியாது? நல்லா தெரியுமே.... நீங்க பார்த்து வச்சிருந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்காம கல்யாண மண்டபத்தில உங்க கஸ்டெடியில இருந்து தப்பிச்சு போய் அவர் ஆசைப்பட்ட பொண்ணை கல்யாணம் பண்ணி இன்னிக்கு வரைக்கும் ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்காங்க. இதுல என்ன ஸார் தப்பு இருக்கு? உங்க பேச்சை கேட்டு அவர் விரும்பின பொண்ணை விட்டுட்டு நீங்க சொன்ன பொண்ணை கல்யாணம் பண்ணியிருந்தா அது தான் தப்பு. ஜாதி மதம், அந்தஸ்து பேதம், குடும்ப கௌரவம்னு இன்னும் எத்தன நாளைக்கு அடிச்சுகிட்டு லவ் பண்றவங்கள பிரிச்சு வச்சுட்டு இருக்கப் போறீங்க ஸார்? உங்க பேரு பச்சைமுத்து தான, உங்க வொய்ப் பேரு விண்ணரசி தான? எங்க மாமியார் அதான் உங்க மருமக உங்க ரெண்டு பேர் பேரையும் தான் உங்க பேரனோட பேரா வச்சிருக்காங்க. அவர்ட்ட கேளுங்க, அவருக்கு அவரோட பேரு அவ்வளவா பிடிக்காது. ஆனாலும் அவங்க அப்பா அம்மா வார்த்தைக்கு மரியாதை குடுத்து இது வரைக்கும் என் பேரு எனக்கு பிடிக்கலன்னு ஒரு வார்த்தை கூட சொன்னதில்ல. என் மாமனார், மாமியார், என் புருஷன் மூணு பேரும் ரொம்ப நல்லவங்க. அவங்க என் ரிலேஷனா கிடைச்சிருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்பவாவது எங்கள ஃப்ளெஸ் பண்ணணும்னு உங்களுக்கு தோணுச்சுனா சொல்லுங்க, நாங்க உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்குறோம், இல்லன்னா கல்யாணத்துக்கு வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம், போயிட்டு வாங்க!" என்று கைகூப்பியவளின் கைகளைப் பற்றிக் கொண்டு ஷைலுவின் கன்னத்தில் முத்தமிட்ட விண்ணரசி,

"என் ராசாத்தி, எம்பேரனை கூப்பிடு, இந்த மனுஷன் அத்தாம்பெரிய வூட்ல போய் சாய்வு நாற்காலியில உட்கார்ந்து ஆடிக்கிட்டே கிடக்கட்டும்.... நான் எம்புள்ள வீட்ல பத்து நாள் இருந்துட்டு தான் ஊருக்கு போவேனாக்கும்!" என்று சொன்னார்.

மலர்ந்த புன்னகையுடன், "தாங்க்ஸ் பாட்டி, வினு இங்க வா, உங்க பாட்டி கன்வின்ஸ் ஆகிட்டாங்க. கௌதம் அங்கிள், ராகினி ஆன்ட்டி இங்க வாங்க!" என்று கூப்பாடு போட்ட ஷைலுவின் குரலில் கௌதமன், ராகினி, பவின் அனைவரும் அவள் அருகில் வந்து நின்றனர். "அரசி என்னைய நம்ம பேத்தி ஸார்ன்னு கூப்பிடாம அப்பச்சின்னு கூப்பிட்டுச்சுன்னா நானும் உன் மகன் வீட்ல வந்து தங்குவேனாக்கும்!" என்று பரமசிவம் முணங்க கௌதமனும் ராகினியும் தன் மருமகளை அணைத்துக் கொண்டு, "தேங்க்யூ வெரி மச் ஷைலு கண்ணா!" என்று அவளுக்கு நன்றி சொல்ல பவின் தன் மனைவியை பார்த்து உதடு குவித்து காட்டினான்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பச்சைமுத்துவும், விண்ணரசியும் தனது மகனையும், பேரனையும் அவரவர் மனைவியருடன் ஆசிர்வாதம் செய்து பேரனுக்கு திருமணப் பரிசும் தந்து விட்டு அமர்ந்தனர்.

"என்னதான் சொல்லுடா ஜீவா.... பொண்ணுன்னா நம்ம ரூபி மாதிரி இருக்கணும். பத்து நிமிஷத்துல அந்த பெரிசு சட்டையை பிடிச்சு நிறுத்தி குடும்பத்தோட சேர்த்துட்டா பார்த்தியா, சில ஜென்மங்க தான் ஏன் போடுறோம், எதுக்கு போடுறோம்னு தெரியாம சண்டை போட்டு அடுத்தவங்க மனச காயப்படுத்திட்டு அதுங்க என்னமோ சோகமா இருக்கிற மாதிரி   ட்ராமா வேற போட்டுட்டு திரியுதுங்க!" என்று சொன்ன பார்கவை "இப்ப உன் வாய மூடறதுக்கு நீ என்ன கேக்குற?" என்று கேட்டு கவிப்ரியாவை ஒரு பார்வை பார்த்து விட்டு தன் நண்பனை தன்னுடன் இழுத்து சென்றான் ஜீவானந்தன்.

ஜீவாமிர்தம் சுரக்கும்!
 

Continue Reading

You'll Also Like

12.9K 678 52
காதல் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாத போது மலர்ந்த காதலானது காலப்போக்கில் காதலை இரு மனமும் அர்த்தம் தெரிந்து கொண்டாலும் விதியின் விளையாட்டில் ஜெயிப்...
81.1K 2.5K 46
திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...
42.4K 1.2K 45
காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r
151K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.