கண்டேன் என் ஜீவாமிர்தம்✔

By Vaishu1986

214K 9.9K 3K

பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நா... More

💟 ஜீவாமிர்தம் 1
💟 ஜீவாமிர்தம் 2
💟 ஜீவாமிர்தம் 3
💟 ஜீவாமிர்தம் 4
💟 ஜீவாமிர்தம் 5
💟 ஜீவாமிர்தம் 6
💟 ஜீவாமிர்தம் 7
💟 ஜீவாமிர்தம் 8
💟 ஜீவாமிர்தம் 9
💟 ஜீவாமிர்தம் 10
💟 ஜீவாமிர்தம் 11
💟 ஜீவாமிர்தம் 12
💟 ஜீவாமிர்தம் 13
💟 ஜீவாமிர்தம் 14
💟 ஜீவாமிர்தம் 15
💟 ஜீவாமிர்தம் 16
💟 ஜீவாமிர்தம் 17
💟 ஜீவாமிர்தம் 18
💟 ஜீவாமிர்தம் 19
💟 ஜீவாமிர்தம் 20
💟 ஜீவாமிர்தம் 21
💟 ஜீவாமிர்தம் 22
💟 ஜீவாமிர்தம் 23
💟 ஜீவாமிர்தம் 24
💟 ஜீவாமிர்தம் 25
💟 ஜீவாமிர்தம் 26
💟 ஜீவாமிர்தம் 27
💟 ஜீவாமிர்தம் 28
💟 ஜீவாமிர்தம் 29
💟 ஜீவாமிர்தம் 30
💟 ஜீவாமிர்தம் 31
💟 ஜீவாமிர்தம் 32
💟 ஜீவாமிர்தம் 33
💟 ஜீவாமிர்தம் 34
💟 ஜீவாமிர்தம் 35
💟 ஜீவாமிர்தம் 36
💟 ஜீவாமிர்தம் 37
💟 ஜீவாமிர்தம் 38
💟 ஜீவாமிர்தம் 39
💟 ஜீவாமிர்தம் 40
💟 ஜீவாமிர்தம் 41
💟 ஜீவாமிர்தம் 42
💟 ஜீவாமிர்தம் 43
💟 ஜீவாமிர்தம் 44
💟 ஜீவாமிர்தம் 45
💟 ஜீவாமிர்தம் 46
💟 ஜீவாமிர்தம் 47
💟 ஜீவாமிர்தம் 48
💟 ஜீவாமிர்தம் 49
💟 ஜீவாமிர்தம் 50
💟 ஜீவாமிர்தம் 51
💟 ஜீவாமிர்தம் 52
💟 ஜீவாமிர்தம் 53
💟 ஜீவாமிர்தம் 54
💟 ஜீவாமிர்தம் 55
💟 ஜீவாமிர்தம் 57
💟 ஜீவாமிர்தம் 58
💟 ஜீவாமிர்தம் 59
💟 ஜீவாமிர்தம் 60
💟 ஜீவாமிர்தம் 61
💟 ஜீவாமிர்தம் 62
💟 ஜீவாமிர்தம் 63
💟 ஜீவாமிர்தம் 64
💟 ஜீவாமிர்தம் 65
💟 ஜீவாமிர்தம் 66
💟 ஜீவாமிர்தம் 67
💟 ஜீவாமிர்தம் 68
💟 ஜீவாமிர்தம் 69
💟 ஜீவாமிர்தம் 70
💟 ஜீவாமிர்தம் 71
💟 ஜீவாமிர்தம் 72
💟 ஜீவாமிர்தம் 73
💟 ஜீவாமிர்தம் 74
💟 ஜீவாமிர்தம் 75

💟 ஜீவாமிர்தம் 56

2.4K 118 28
By Vaishu1986

"ம்மா என் மேல உங்களுக்கு என்னம்மா கோபம்..... ஷைலு மேரேஜ்க்கு எல்லாம் ஓடி ஓடி ப்ளான் பண்ணிட்டு நான் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்னு சொன்னதும் அப்செட் ஆகி தனியா வந்து உட்கார்ந்துட்டீங்க? நீங்க ரிலாக்ஸ் ஆகறதுக்கு நான் என்னம்மா பண்ணனும்?" என்று கேட்டபடி தோளில் சாய்ந்து கொண்ட தன் மகனின் சிகையை வருடிக் கொண்டு ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தார் நிர்மலா.

"ம்ம்ம்மா......" என்று சிணுங்கி எரிச்சல் பட்டவனை பார்த்து புன்னகைத்தவர், "உனக்கும் கவிக்கும் கல்யாணம் ஆனது எனக்கு ரொம்ப சந்தோஷம் நந்து, ஆனா இப்படி திடீர்னு ஒண்ணுமே ஏற்பாடு செய்யாம நடந்தது தான் கொஞ்சம் கவலையா இருக்கு. நம்ம வீட்ல உங்க கேங் பசங்க எல்லாரையுமே நீங்க நினைச்சா அடுத்த நிமிஷமே அந்த பொருள் உங்க கையில இருக்கிற மாதிரி சூழ்நிலையை குடுத்து தான் வளர்த்துருக்கோம். கவி உன் வொய்பா எந்த நிலைமையிலயும் நந்துவை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு ஒரு நிமிஷம் கூட ஃபீல் பண்ணிடக் கூடாது. உன் ஸாகரி க்ரானி அடிக்கடி அப்பாட்ட ஒரு வார்த்தை சொல்லுவாங்க அவளையும் கஷ்டப்படுத்திடாம நீயும் கஷ்டப்படாம இருன்னு.... அதே தான் நானும் உனக்கு சொல்றேன்!" என்று சொன்ன தன் தாயிடம் சிரிப்புடன்,

"அவ ஏம்மா கஷ்டப்பட போறா? மூக்கி.... அந்த இளவரசிய தாங்குறதுக்கு தான் அஜு, ராம், பாகி, ராகவ், பண்ணயாரு போதாக்குறைக்கு அவ புருஷன் ஜீவானந்தன் இத்தன பேரு இருக்கமே...... எவ்வளவு லவ்வை உள்ளுக்குள்ளயே வச்சுட்டு எங்கிட்ட காட்டாம நடிச்சுட்டு இருந்துருக்கா தெரியுமாம்மா......   என்னைய அளவுக்கு அதிகமா கஷ்டப்படுத்தறவளும் அவ தான், அளவேயில்லாம என்னைய காதலிக்குறதும் அவ தான்! காலேஜ் படிக்கிறப்போ எல்லாம் அவ என்னை ஒரு பார்வை பார்த்தாலே அன்னிக்கு பூராவும் ஜாலியா இருக்கும்மா..... எப்படா மறுபடியும் எல்லார் கூடவும் ஒண்ணா சேருவோம்னு நினைச்சு, நம்ம வீட்டுக்கும் வந்த பிறகு திடீர்னு என்னை கல்யாணம் பண்ணிக்குறியா ஜீவான்னு அவ கேட்டது ஏதோ ஒரு ஃபேண்டஸி வேர்ல்டுல இருந்த மாதிரி  ஒரு உணர்வும்மா; ஓகே திஸ் இஸ் த ரைட் மொமண்ட்ன்னு தோணுச்சு,  செய்றது தப்புன்னு தெளிவா தெரியுது, இருந்தாலும் கவிப்ரியாவா நம்ம கிட்ட என்ன கல்யாணம் பண்ணிக்கோன்னு கேக்குறான்னு நினைச்சு அப்படி ஒரு சந்தோஷம்...... அத எப்படி உங்க கிட்ட எக்ஸ்ப்ளைன் பண்றது? ரோலர் கோஸ்டர்ல போறப்போ திடீர்னு நம்ம உட்கார்ந்து இருக்குற கம்பார்ட்மெண்ட் மட்டும் அப்படியே வானத்துல பறக்க ஆரம்பிச்சுட்டா எப்படி இருக்கும், அந்த மாதிரி இருந்ததுமா!" என்று சொன்ன தன் மகனிடம் புன்னகையுடன்,

"உன்னை இப்படி சந்தோஷமா பார்க்குறது அம்மாவுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு நந்தும்மா, ஆனா மருமகளோட அவள் சென்னையிலருந்து மலைக்கு ஷிப்ட் ஆகணும், அப்பா, சித்தப்பா வொர்க்கை எல்லாம் நீ கொஞ்சம் ஷேர் பண்ணிக்கணும், பேமிலியையும் பார்த்துட்டு, பிஸினஸையும் கவனிச்சுக்கணும், இதெல்லாம் மறந்துட கூடாது கண்ணா!" என்று அழுத்தி சொன்ன தன் தாயிடம், 

"பிஸினஸை கவனிச்சுக்கறதுக்கு இப்போ என்னம்மா அவசரம்? அதுக்கு தான் விவேக் சித்தப்பாவும், நீங்க அப்பால்லாம் இருக்கீங்களே.... எனக்கு கொஞ்ச நாள் அம்முலு கூட ஜாலியா லைஃப் என்ஜாய் பண்ணணும், இவ்வளவு நாள் லைஃப் ரொம்ப அமைதியா போயிட்டு இருந்தது, இப்போ தான் சும்மா செமையா போயிட்டு இருக்கு, நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்மா, இன்னும் ஒரு டூ த்ரி மன்த்ஸ் இதே மாதிரி ஜாலியா இருந்துட்டு அதுக்கப்புறம் எய்ட் டூ சிக்ஸ் வேலை பார்க்குறேனேம்மா? உள்ள ஷைலு வினு ரிஷப்ஸனோடவே எங்களுக்கும் ரிஷப்ஸன் வச்சுடலாம்னு பண்ணையார் சொல்லிட்டு இருக்காரு. அஜுவும், ராமும் அவங்க பொண்ணு கல்யாணத்துக்கு போட்டுட்டு இருக்கிற ப்ளானை கேட்டா எனக்கு தலை சுத்துது, அவரோட ப்ரைடல் ஜ்வல்லரி  டிஸைன்ஸை எல்லாம் எல்லாரும் போடுறாங்க, ஆனா எம் பொண்டாட்டி போட்டுக்கல.... ஸோ அதுல ஒரு பார்சல்,  இதுல ஒரு பார்சல்ன்னு கிலோ கணக்குல தங்கத்தை நம்ம கிட்ட தள்ளி விடுறதுக்கு யோசிச்சுட்டு இருக்காரு. நல்ல வேளை இந்த மாதிரி எந்த எக்ஸாஸரேஷனும் இல்லாம மனநிறைவோட ஸிம்பிளா மேரேஜ் முடிஞ்சிடுச்சுன்னு ஒரு வகையில சந்தோஷமா தான் இருக்கு, இனிமே  அப்பாவோட பிஸினஸை மேனேஜ் பண்ணி, இனியா ஷைலுவுக்கு வேண்டியதை செஞ்சு, ராசு, பவின் வொர்க்ஸ்ல ஒரு பார்வை வச்சுட்டு, மாசம் ஒரு தடவ சென்னைக்கு போய்   நம்ம பாகி, அஜு ராம் கூட மாப்பிள்ளை விருந்து சாப்பிட்டுட்டு, அப்படியே அரவிந்த் என்ன பண்ணிட்டு இருக்கான்னு பார்த்து அவனுக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமான்னு கேட்டுட்டு வரிசையா இனியா, ஷைலு, பாகி, அப்புறம் நம்ம கவிப்ரியாவுக்கும் பொறக்க போற கிட்ஸுக்கு எல்லாம் நிறைய சம்பாதிச்சு குட் வேல்யூஸ் கத்துக் குடுத்து வளர்த்து........ஷப்பா வரிசையா எத்தன கமிட்மெண்ட் வெயிட் பண்ணிட்டு இருக்கு, பட் இதையெல்லாம் கவனிச்சுக்குறது தான் ஜீவானந்தனோட ரியல் சந்தோஷம்........ உங்களுக்கு பேரன் வேணுமா? பேத்தியாம்மா?" என்று புன்சிரிப்புடன் கேட்டு நின்ற தன் மகனிடம் மனம் நிறைந்த சிரிப்புடன் அவன் முகத்தை தடவி சொடுக்கிட்டு

"இதே சந்தோஷத்தோட நீ எப்பவும் உன் காதலை பத்திரமா பார்த்துக்கணும் நந்தும்மா...... கவிம்மா உன் கூட இருக்கறதால தான் உன் கிட்ட இவ்வளவு சந்தோஷமும் உற்சாகமும் இருக்குன்னு நினைக்கிறேன். இதை அப்படியே பிடிச்சுக்கோ! இனிமே உன் பொண்டாட்டி கிட்ட சின்னப்பையன் மாதிரி சண்டை போடக் கூடாது. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுல்ல, ஸோ உங்க பர்சனல் லைஃபோட ரெஸ்பான்ஸிபிளிட்டியை நீ தான் கையில எடுத்துக்கணும்!" என்று சொன்ன தன் தாயிடம் பெரிதாக தலையை ஆட்டியவன்,

"ரெண்டு நாளுக்குள்ள கோபமா இருக்குற எல்லாரையும் சரி பண்ணினா தான்மா கல்யாணம் பண்றதுக்கு பண்ணையார் பெர்மிஷன் தருவாரு, ஸோ நீங்க கொஞ்சம் பெரிய மனசு பண்ணி உங்க கோபத்தை விட்டுடுங்களேன்!" என்று கெஞ்சிய தன் மகனிடம் புன்னகையுடன்,

"ஜீவாக்குட்டி இவ்வளவு கான்பிடென்டோட இருக்கும் போது எந்த பிரச்சனை வர்றதுக்கும் வாய்ப்பில்ல. சப்போஸ் உங்க ரெண்டு பேருக்குள்ள ஏதாவது குழப்பம் வந்தா நீ அப்பா மாதிரி கோபப்பட்டு வார்த்தைகளால கவிம்மாவை காயப்படுத்திடக்கூடாது நந்து, ஏன்னா உங்க ரெண்டு பேரோட சந்தோஷத்துலயும் இந்த குடும்பம் மொத்தமும் சந்தோஷமா இருக்க முடியும்!" என்று சற்று பதட்டத்துடன் பேசிய நிர்மலாவிடம், "புரியுதும்மா.....டோண்ட் வொர்ரி!" என்று சொல்லி விட்டு தன் அன்னையை வீட்டிற்குள் அழைத்து சென்றான் ஜீவானந்தன்.

நிர்மலாவை ஜீவானந்தன் சமாதானம் செய்து அழைத்து வந்ததும் அனைவரும் சற்று நிம்மதி அடைந்து ஷைலஜா பவின் திருமணத்திற்கு இன்னும் என்னென்ன வேலைகள் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளன என்று கேட்டு விட்டு அதை முடிக்கும் பொருட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை கையில் எடுத்துக் கொண்டனர்.

இரவு பத்து மணி அளவில் கவிப்ரியா தன் அறைக்குள் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டு இருந்தாள். "இவளோட மூச்சுக் காத்து கூட எனக்கு சொந்தம்" என்ற ஜீவாவின் வார்த்தைகள் மறுபடியும் மறுபடியும் அவளது நியாபகத்தில் வந்து நின்றது. "இந்த ஹல்க் ஏன் அப்படி சொன்னான்? இது டாமினேஷன் இல்லையா...... பட் அந்த வார்த்தை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கே? எதையாவது சொல்லிட்டு அவன் பாட்டுக்கு போயிடுறான்........ இவனை நினைச்சுகிட்டு நான் தான் தூக்கம் வராம புலம்பிட்டு இருக்க வேண்டியதிருக்கு!" என்று முணங்கிக் கொண்டவள் அவளிடம் அவன் கொடுத்து வைத்திருந்த அவனது ஹாண்டிகேமை எடுத்து ஒவ்வொரு வீடியோவாக பார்த்து கொண்டு இருந்தாள்.

ஜீவானந்தனும், இசக்கிராசுவும் பேசிக் கொண்ட வீடியோவை பார்த்து விட்டு சற்று நேரம் அமைதியாக உட்கார்ந்து விட்டாள். அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஜீவானந்தனுக்கு அழைத்தவளிடம்,

"என்னடா செல்லம்...... மச்சான பார்க்காம, குரலையாவது கேப்பமேன்னு நினைச்சு கூப்பிட்டியா! உன்னைத் தான்டீ யோசிச்சுட்டு படுத்து இருந்தேன். ஷைலு மேரேஜ்க்கு என்ன கலர்ல புடவை கட்டப் போற?" என்று கேட்ட ஜீவாவிடம்,

"ஜீவா...... உன் கிட்ட கொஞ்சம் பேசணும். யாரோட டிஸ்டர்பென்ஸும் இல்லாம, நீ இப்போ ஃப்ரீ தானே......?" என்று கேட்ட கவிப்ரியாவிடம்,

"நீ கூப்பிட்டா நான் எப்பவுமே ஃப்ரீ தான் கேப்ஸி.... என்ன விஷயம்மா, ஏதாவது ப்ராப்ளமா....? நம்ம ரூமுக்கு வா. பேசலாம்!" என்றான் ஜீவானந்தன் சற்று அவசரக்குரலில்.

சற்று நேரத்தில் அவளது இரவு உடையை மாற்றி விட்டு அவனது ஹாண்டிகேமை அவள் கையில் எடுத்துக் கொண்டு ஜீவானந்தனின் அறைக்கு சென்றாள் கவிப்ரியா.

"என்ன டாலி..... போன்ல உன் வாய்ஸ் ஒரு மாதிரி இருந்ததே? ஏதாவது மூடு அவுட்டா?" என்று கேட்ட ஜீவாவிடம் அவனும் இசக்கிராசுவும் பேசிக் கொண்ட வீடியோவை காண்பித்தாள் கவிப்ரியா.

"நம்ம பர்சனல் மேட்டரை எல்லாம் இசக்கி ராசுட்ட நீ எதுக்கு ஷேர் பண்ணின..... இவ்வளவு நாளா உனக்கும் எனக்கும் நடுவுல நடந்த பர்சனல் விஷயம் எதையுமே நான் அப்பா அம்மாட்ட கூட ஷேர் பண்ணிக்கிட்டதில்ல தெரியுமா?" என்று கேட்டவளது குரலில் கோபம் நன்றாகவே தெரிந்தது ஜீவாவிற்கு.

அவள் கோபத்தை சற்று சரிப்படுத்தி விடும் நோக்கில் அவளைப் பார்த்து புன்னகைத்தவன், "பசங்க நாங்கெல்லாம் எங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தா முதல்ல ப்ரெண்ட்ஸ் கிட்ட தான்மா அட்வைஸ் கேப்போம், பாகிய மாதிரி தான் எனக்கு ராசுவும்..... உன் விஷயத்துல உன் அண்ணன் கிட்ட எப்படி அட்வைஸ் வாங்குறதுன்னு நினைச்சு தான் நான் ராசுட்ட நம்மள பத்தி கேஷுவலா பேசிட்டு இருந்தேன், அவன் உனக்கு தானே ஸப்போர்ட் பண்ணி பேசியிருக்கான்...... அதுக்கு எதுக்கு இவ்வளவு டென்ஷன்? லவ்வே பண்ணலன்னு பொய் சொல்லிட்டு அவ்வளவு கிப்ட்ஸை எனக்காக வாங்கி வச்சிருந்த நீ தான் கில்டினெஸ்ல அஜு மீராட்ட சொல்லாம உன் காதலை ஒளிச்சு வச்சுருக்கணும். நான் ராசுட்ட பேசினதெல்லாம் ஷேர் பண்ணிக்கிற மாதிரியான விஷயம் தான்! இதுல எனக்கு ஒண்ணும் பெரிசா தப்பா தெரியல!" என்று சொன்னவனிடம்,

"எவனோ ஒருத்தன் சொல்லி தான் என் மேல நீ வச்சுருக்கிற காதல் உனக்கு தெரியுதுன்னா...... அதுவரைக்கும் என்னோட காதலை உன்னால உணர முடியலைன்னா என்னோட காதலை உனக்கு சரியா உணர்த்தாத தப்பு என் மேல தான் ஜீவா; நீ என்கேஜ்மெண்ட் பண்ணிக்கலாமான்னு கேட்ட, ஓகே பண்ணிக்கலாம்னு செஞ்சுகிட்டோம், நான் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு  கேட்டேன், அதுக்கும் ஓகே சொல்லி கல்யாணமும் செஞ்சிகிட்டோம்...... மனசுக்குள்ள எம்மேல இருந்த காதலையே உணராம உன்னை எவன்டா என்னை கட்டிப் பிடிச்சுக்கிட்டு முத்தமெல்லாம் குடுக்கச் சொன்னது...... எனக்கு இப்போ தான் நான் ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரி ஒரு பயம் வருது! நீ நிஜமாவே இசக்கிராசு சொன்ன மாதிரி என்னைய உன் பேமிலியோட சேர்றதுக்காக யூஸ் பண்ணிக்க தான் செஞ்சுட்ட ஜீவானந்தன்!" என்று சொல்லி விட்டு கட்டிலில் அமர்ந்து கொண்டு முகத்தை மூடிக் கொண்டு குலுங்கியவளை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் ஜீவானந்தன் தலை கோதியவாறு முதன் முறையாக வார்த்தைகளை தேடிக் கொண்டிருந்தான்.

"அம்முலு இப்போ எதுக்கு காரணமே இல்லாம அழுதுட்டு......?" என்று கேட்ட தன் கணவனை ஒரு கோபப் பார்வை பார்த்தவள்,

"என்ன சொன்ன? காரணமே இல்லாம அழுதுட்டு இருக்கேனா...... ஏன்டா சொல்ல மாட்ட! சின்ன வயசுல இருந்து உன்னை நினைச்சாலே என் மனசுல முதல்ல உள்ள வந்து நிக்குற விஷயம் குற்ற உணர்வு தான்...... தப்பல்லாம் செஞ்சது நான் தான், நான் தான்னு எப்போ பார்த்தாலும் என் முன்னாடி வந்து என்னை மறைச்சுட்டு நின்னு ஐயோ நம்மளால தான் இவன் திட்டு வாங்குனான், வீட்டை விட்டுட்டு வந்து தனியா இருக்கான்,  ரிலேஷன்ஸை மிஸ் பண்றான்னு எப்போ பார்த்தாலும் எனக்கு ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது தான் நீ இவ்வளவு நாளா செஞ்சிருக்கிற சாதனை!" என்று சொல்லியவள் முன் வந்து தன் இருபுற பாக்கெட்டில் கைகளை நுழைத்துக் கொண்டு நின்றவன்,

"ஸோ நீ என்ன காதலிச்சதுக்கும், கல்யாணம் பண்ணினதுக்கும் இந்த குற்ற உணர்வு தான் காரணம், உண்மையான காதல் காரணம் இல்ல அப்படித்தானே சொல்ல வர்ற கவிப்ரியா..... நீ சொன்னியே இன்னிக்கு இல்லன்னா நம்ம கல்யாணம் இனிமே எப்பவுமே இல்லன்னு...... கரெக்ட் தான்; இந்த வார்த்தையெல்லாம் நீ முதல்லயே என்னைய பார்த்து சொல்லியிருந்தா சத்தியமா உன்னைய நான் கல்யாணம் பண்ணி இருக்க மாட்டேன்! ஒரு வார்த்தையில என் இத்தனை வருஷ காதலை கொன்னுட்டியேடீ! உன்னைய பயன்படுத்திக்கிட்டு என் குடும்பத்தோட சேர்ந்துகிட்டேன்ங்கிற உன் நினைப்பை நான் எப்படி துடைக்கப்போறேன்னு எனக்கு தெரியல. ஆனா உன்னை பொறுத்தவரைக்கும் இந்த ஜீவானந்தன் ஒரு பென்னிலெஸ் பெக்கர், அவனுக்கு நீ உன் குற்ற உணர்வால வாழ்க்கையை பிச்சையா போட்டிருக்க....  அதானே நீ சொல்ல வந்த விஷயம்? எனக்கு முழுசா புரிஞ்சுடுச்சு! தேங்க்யூ சோ மச்!" என்று சொல்லி விட்டு கதவை திறந்து வெளிப்புறம் கை காட்டியவனிடம்,

"நான் சொல்றதை கொஞ்சம் கேளு ஜீவா!" என்று கவிப்ரியா ஏதோ சொல்ல முயன்று கொண்டிருந்த போது அவன் கையமர்த்தி,

"இதுக்கு மேல உன் வார்த்தைகளை தாங்குறதுக்கு மனசுல சக்தி இல்லம்மா.... ப்ளீஸ் லீவ் மீ அலோன்!" என்று தன் மனைவியிடம் சொல்லி விட்டு அறைக் கதவை கூட பூட்டாமல் உள்ளே சென்று விட்டான் ஜீவானந்தன்.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

 

Continue Reading

You'll Also Like

28.7K 1.4K 76
நான் விரும்பிடாத இன்பம் நீ ... உனை விரும்பும் துன்பம் நான்...!
42.3K 1.2K 45
காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r
95.4K 2.9K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...
205K 5.4K 132
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...