கண்டேன் என் ஜீவாமிர்தம்✔

By Vaishu1986

214K 9.9K 3K

பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நா... More

💟 ஜீவாமிர்தம் 1
💟 ஜீவாமிர்தம் 2
💟 ஜீவாமிர்தம் 3
💟 ஜீவாமிர்தம் 4
💟 ஜீவாமிர்தம் 5
💟 ஜீவாமிர்தம் 6
💟 ஜீவாமிர்தம் 7
💟 ஜீவாமிர்தம் 8
💟 ஜீவாமிர்தம் 9
💟 ஜீவாமிர்தம் 10
💟 ஜீவாமிர்தம் 11
💟 ஜீவாமிர்தம் 12
💟 ஜீவாமிர்தம் 13
💟 ஜீவாமிர்தம் 14
💟 ஜீவாமிர்தம் 15
💟 ஜீவாமிர்தம் 16
💟 ஜீவாமிர்தம் 17
💟 ஜீவாமிர்தம் 18
💟 ஜீவாமிர்தம் 19
💟 ஜீவாமிர்தம் 20
💟 ஜீவாமிர்தம் 21
💟 ஜீவாமிர்தம் 22
💟 ஜீவாமிர்தம் 23
💟 ஜீவாமிர்தம் 24
💟 ஜீவாமிர்தம் 25
💟 ஜீவாமிர்தம் 26
💟 ஜீவாமிர்தம் 27
💟 ஜீவாமிர்தம் 28
💟 ஜீவாமிர்தம் 29
💟 ஜீவாமிர்தம் 30
💟 ஜீவாமிர்தம் 31
💟 ஜீவாமிர்தம் 32
💟 ஜீவாமிர்தம் 33
💟 ஜீவாமிர்தம் 34
💟 ஜீவாமிர்தம் 35
💟 ஜீவாமிர்தம் 36
💟 ஜீவாமிர்தம் 37
💟 ஜீவாமிர்தம் 38
💟 ஜீவாமிர்தம் 39
💟 ஜீவாமிர்தம் 40
💟 ஜீவாமிர்தம் 41
💟 ஜீவாமிர்தம் 42
💟 ஜீவாமிர்தம் 43
💟 ஜீவாமிர்தம் 44
💟 ஜீவாமிர்தம் 45
💟 ஜீவாமிர்தம் 46
💟 ஜீவாமிர்தம் 47
💟 ஜீவாமிர்தம் 49
💟 ஜீவாமிர்தம் 50
💟 ஜீவாமிர்தம் 51
💟 ஜீவாமிர்தம் 52
💟 ஜீவாமிர்தம் 53
💟 ஜீவாமிர்தம் 54
💟 ஜீவாமிர்தம் 55
💟 ஜீவாமிர்தம் 56
💟 ஜீவாமிர்தம் 57
💟 ஜீவாமிர்தம் 58
💟 ஜீவாமிர்தம் 59
💟 ஜீவாமிர்தம் 60
💟 ஜீவாமிர்தம் 61
💟 ஜீவாமிர்தம் 62
💟 ஜீவாமிர்தம் 63
💟 ஜீவாமிர்தம் 64
💟 ஜீவாமிர்தம் 65
💟 ஜீவாமிர்தம் 66
💟 ஜீவாமிர்தம் 67
💟 ஜீவாமிர்தம் 68
💟 ஜீவாமிர்தம் 69
💟 ஜீவாமிர்தம் 70
💟 ஜீவாமிர்தம் 71
💟 ஜீவாமிர்தம் 72
💟 ஜீவாமிர்தம் 73
💟 ஜீவாமிர்தம் 74
💟 ஜீவாமிர்தம் 75

💟 ஜீவாமிர்தம் 48

2.5K 148 55
By Vaishu1986

திருமண மண்டபத்தில் அனைவருக்கும் விருந்து நடைபெற்று கொண்டிருந்தது. "ராஜா ராஜா ராஜனுக்கு ராஜன் தான் உலகத்தில் பொறந்திருப்பான்... போட்டி போட்டு முந்திகிட்டு ஓடுடா.... உன்னை இங்க எவன் தடுப்பான்; ஜா ஜா எனக்கு ராஜா அட நான் தான் தெரியுமா?" என்று உற்சாகமாக பாடியவாறே பார்கவ் ஒரு கிண்ணத்தில் பாஸந்தியை தான் சாப்பிடுவதற்காக உணவறையில் இருந்து எடுத்துக் கொண்டு வந்த போது ஜீவானந்தன் அவனை வழிமறித்து கிண்ணத்துடன் பாஸந்தியை பறித்துக் கொண்டான்.

"அடடே வாங்க ஜீவானந்தன், நல்லா இருக்கீங்களா... என்ன கண்ணும் கண்ணும் நோக்கியா, ஜப்பான் கேப்பிட்டல் டோக்கியான்னு காலையில இருந்து ஒரே சைட்டிங் போயிட்டு இருக்கு போலிருக்கு. சீக்கிரமா கல்யாணம் பண்ணுங்க மாப்பி, எத்தன நாளைக்கு தான் பாத்து பாத்து உன்னைப் பாத்துன்னு என் தங்கச்சி கிட்ட இருந்து எட்டடி கேப்பு விட்டே நின்னுட்டு இருக்கப் போறீங்க....? இதோ நம்ம லட்டுவுக்கு, எனக்கெல்லாம் ஆல்ரெடி கல்யாணம் ஆகிடுச்சு. ரூபிக்கும் இன்னும் மூணு நாள் கழிச்சு கல்யாணம், நீங்களும் கவிப்ரியாவும் எப்போ அந்த லவ்லாக்ல சிக்கிக்கப் போறீங்க? லவ் தியரில்ல ஆல் இஸ் ரைட், ஸோ பண்ணையார், எங்க பெரியப்பாவை பத்தி எல்லாம் கவலைப்படாதீங்க. ஜஸ்ட் பாலோ யுவர் ஹார்ட் சேயிங்!" என்று சற்று அவசரக்குரலில் பேசிய பார்கவை பார்த்து சிரித்த ஜீவா,

"இனியா, ஷைலு மேரேஜ்க்காக தனியாளா ஒருத்தன் எல்லா வேலையையும் செஞ்சுட்டு இருக்கானே.... முடிஞ்சா அவனுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணுவம்னு தோணுச்சாடா உனக்கு? ஒரு சின்ன கேப் கிடைச்சா போதும், பாயாஸம் குடிக்கிறேன், பாஸந்தி சாப்பிடுறேன்னு அப்போலேர்ந்து புட் ஸர்விங் ஏரியாவுக்குள்ளயே சுத்திட்டு இருந்துட்டு வண்டி வண்டியா ஃப்ரீ அட்வைஸ் வேற குடுக்குறியா? சாப்பிடறது தான் சாப்பிடுற, எல்லாரையும் கவனிச்சு யாருக்கு என்ன வேணும்னு கேட்டு வாங்கி குடுத்துட்டு அப்புறம் நீ சாப்பிட வேண்டியதுதான..... என் பொண்டாட்டிய நான் நின்னுட்டு ரசிப்பேன். படுத்துட்டு ரசிப்பேன், எப்படி வேணும்னாலும் பாப்பேன். உனக்கு எங்கடா எரியுது? அவளை நான் கல்யாணம் பண்ணிக்க நீ ஒண்ணும் எனக்கு அட்வைஸ் சொல்ல வேண்டியதில்ல. தேவையில்லாம ஏதாவது லூஸ் டாக் விட்டுட்டு இருந்த...... மவனே செத்தடா!" என்று கூறி பார்கவின் வலது கையை பிடித்து பின்புறமாக திருப்பி முதுகில் வைத்து அழுத்தம் கொடுத்தான் ஜீவானந்தன்.

"ஆ........ அம்மா, வாணி, ராகவ்..... இந்த லூசுப்பய கிட்ட இருந்து என்னைய யாராவது காப்பாத்துங்களேன்!" என்று பார்கவ் வலியில் கத்திக் கொண்டிருக்க அர்ஜுன் அவர்கள் இருவரின் அருகில் சென்று அவர்கள் சண்டையை முடித்து பார்கவை மீட்டார்.

"காட் தேங்க்ஸ் பெரியப்பா..... என்னைய காப்பாத்த நல்ல நேரத்துல வந்த; இந்த பையனுக்கு நிறைய லெக்சர் எடு, சொன்ன பேச்சை கேக்கவே மாட்டேங்குறான், பேட் பாய்!" என்று சொல்லியவாறு தன் கைகளை மடக்கி நீட்டிக் கொண்டு இருந்தவனிடம்,

"அபி அப்போலேர்ந்து உன்னை தேடிட்டு இருக்கா பாரு; இனியாவையும் மாப்பிள்ளையையும் கூட்டிட்டு போய் சாப்பிட வைங்க, சரஸ் கூட உட்கார்ந்து லன்ச் சாப்பிட சொல்லி கவிட்ட சொல்லிட்டு போ. அவ கூட இருந்தா கரெக்டா சாப்பிட்டு முடிச்சுடுவாங்க. ஜீவா நீ என் கூட வா, உன் கிட்ட பேசணும்!" என்று சொல்லி விட்டு சென்றார் அர்ஜுன். பார்கவ் அவரிடம் தலையாட்டி விட்டு மணமேடையில் பரிசுப் பொருட்கள் நாலைந்தை மொத்தமாக தூக்கிக் கொண்டு இருந்த அவன் மனைவியின் அருகில் ஓடி வந்தான். "வாணிம்மா கைய இவ்வளவு ஸ்ட்ரெயின் பண்ணி கிப்ட்ஸை தூக்காத; கை வலிக்கலையா......?" என்று அபியிடம் கேட்டான். "ஒரு கிப்ட்ட தூக்குறதுல கை வலிச்சுட போகுதா... வலி தான் சரியாகிடுச்சே! டென்ஷன் ஆகாதீங்க ஆடிட்டர் ஸார்!" என்று சொல்லி அபிநயா தன் கணவனை சமாதானம் செய்து கொண்டிருக்க  அவர்களது அந்நோன்யத்தை ரசித்தவாறு மேடையின் அருகில் சென்றான் ஜீவானந்தன்.

தன் தங்கை மற்றும் மாப்பிள்ளையிடம் கைகுலுக்கி திருமண வாழ்த்து தெரிவித்து விட்டு அவனது கார் சாவியை ராசுவிடம் பரிசாக கொடுத்தவனிடம் ராசு, "எலேய் என்னவே பண்ற..... காரெல்லாமா கல்யாணத்துக்கு கிப்ட் குடுப்பாங்க, உந்தங்கச்சி காருல போகமுண்ணு ஆசைப்பட்டான்னா அப்போ காரு வாங்கிக்கிடுறேன்டா ஜீவா!" என்று சொல்லிய ராசுவைப் பார்த்து சிரித்த ஜீவா,

"எங்கப்பா, சித்தப்பா, மாமா, தாத்தா எல்லாம் உங்க கல்யாணத்துக்கு சீர் தந்தாங்கல்ல, அப்போ அண்ணனா இனியாவுக்கு நான் ஏதாவது தரணும்ல்ல, அதுனால தான் கார் தர்றேன், அன்னிக்கு நீ நம்ம கார்ல ட்ராவல் பண்றப்ப பிடிச்சிருக்குன்னு சொன்னியேடா, என்ன தான் உன் புல்லட் ஸ்டைல் ஐகானா இருந்தாலும், டூ வீலர் ட்ரைவ், அதுவும் லாங் ட்ராவல் எல்லாம் ஸேப் இல்லடா, ஸோ வாங்குன மூணுல இனியா, ரூபிக்கு, அப்புறம் கவிக்குன்னு காரை தந்துடலாம்ன்னு டிஸைட் பண்ணிட்டேன், பண்ணைல, எஸ்ஜேஎன்ல வேலை பார்க்குறவங்க எல்லாம் பஸ்ல இருந்து ட்ராவல் பண்ணி வர்றப்ப இந்த மாதிரி லக்சூரியஸ் கார் எல்லாம் எனக்கு தேவையில்ல, சென்னைக்குப் போகணும்னா அப்பா வண்டியை யூஸ் பண்ணிக்குவேன். அடுத்து காருக்கு எல்லாம் பட்ஜெட் கிடையாது, நம்ம அண்ணாங்களுக்கு வேன் பஸ் தான்......!" என்று சொல்லி புன்னகைத்தவனிடம் இனியா,

"அண்ணா ரூபி அடிக்கடி என்கிட்ட நீங்க எல்லா பொருளுக்கும் ரொம்ப காஸ்ட்லியா பணத்தை ஸ்பெண்ட் பண்றீங்க, நீங்க டவுன் டூ த எர்த் பர்சென் இல்லன்னு சொல்லிக்கிட்டே இருப்பா! இனிமே அப்படி பேசினான்னா நான் அவகிட்ட ஜீவாண்ணா பெரியப்பா மாதிரியே திங்க் பண்ண ஆரம்பிச்சுட்டாங்கன்னு சொல்றேன் அண்ணா, ஆனா இவ்வளவு காஸ்ட்லியா கார் எல்லாம் எங்களுக்கு கிப்டா......!" என்று இழுத்து எப்படி அண்ணனின் பரிசு என்று தந்த காரை வேண்டாம் என்று சொல்வது என்று இனியா யோசித்துக் கொண்டிருந்த போது,

"உங்கண்ணன் குடுத்ததுட்டீ.... வேணாம்னு சொல்லாம வாங்கிக்க, இல்லன்னா வருத்தப்படுவான், அவன் கல்யாணத்துக்கு தங்கச்சி முறையில வந்து நீ சீர் குடு, அப்போ வேண்டாம்ன்னு சொல்ல மாட்டான்! சொல்ல மாட்டேல்லடே மக்கா?" என்று கேட்ட தன் நண்பனிடம், "சொல்லவே மாட்டேன் பிக்பாய், அஜு மாமா கூப்பிட்டாரு, போயிட்டு வரட்டுமா...... பாகி கூட போய் சாப்பிடுங்க!" என்று சொல்லி விட்டு தன் மாமனை தேடிச் சென்றான் ஜீவானந்தன்.

"எதுக்கு அஜு கூப்பிட்ட? ஏதாவது முக்கியமான விஷயமா?" என்று கேட்ட படி தன் மாமனின் அருகில் வந்து அமர்ந்து கொண்ட ஜீவானந்தனிடம்,

"கவிக்கும், உனக்கும் மறுபடியும் சண்டையா?" என்று கேட்டார் அர்ஜுன்.

"இல்லையே...... பாகி கல்யாணத்துக்கு ஏன் வரலைன்னு சண்டை போட்டா, விஷயம் தெரிஞ்சதுக்கப்புறம் காம்ப்ரமைஸ் ஆகிட்டாளே, அதுக்கப்புறம் இப்போ வரைக்கும் எந்த சண்டையும் வரல, ஸ்மூத்தா தான் போயிட்டு இருக்கு.....!" என்று சொல்லி நெட்டி முறித்தான் ஜீவா. அர்ஜுன் அவனிடம் எரிச்சலுடன்,

"அப்புறம் ஏன்டா அவள அவாய்ட் பண்ணிட்டு சுத்திட்டு இருக்க..... எல்லாரும் ஜோடியா நிக்கும் போது கவியும் உன் கூட நிக்கணும்னு நினைக்க மாட்டாளா, எப்போ பார்த்தாலும் கும்பல்ல சென்டரா உட்கார்ந்துக்குற, அப்புறம் எப்படி அவ உங்கிட்ட வந்து பேசுவா? உன்னை மிஸ் பண்ற ஃபீல் வராது அவளுக்கு?" என்று கேட்ட தன் மாமனிடம் புன்சிரிப்புடன்,

"அப்படி எல்லாம் அந்த மூக்கி ஃபீல் பண்ண மாட்டாளான்னு தான் நானும் ஏங்கிட்டு இருக்கேன் அஜு, எங்க அந்த மாதிரி எல்லாம் ஒரு அறிகுறியும் தெரிய மாட்டேங்குது, எனக்கு உங்க எல்லார் கூடயும் லைவ்லியா இருக்கணும், இப்படியே ஒரு 30 ம்ஹும்... 50 வருஷம் சந்தோஷமா வாழணும், இனிமே என் லைஃப்ல உங்க எல்லாரையும் பிரிஞ்சு வருத்தப்பட்டு தனியா உட்கார்ந்துட்டு கலங்குற சந்தர்ப்பம் மட்டும் வரவே கூடாது. நீ என்ன சொன்ன என் அம்முலுவை நான் அவாய்ட் பண்றேனா.... அத நீ பார்த்தியாக்கும்; என்னை துடிப்போட வச்சுக்க அவ சிரிப்பு சத்தம் கூட போதும், அவ தான் முழுசா என் பக்கத்துல வேணும்னு அவசியமே இல்ல, நான் உன் மகள தூரமா இருந்தே பார்த்து பார்த்து லவ் பண்ணிட்டேனா மாமு, அதே பழக்கம் இப்பவும் ஃபாலோயிங்!" என்று சொல்லி சிரித்தவனிடம் உச்சுக் கொட்டினார் அர்ஜுன்.

"என்ன மாமா சலிச்சுக்குற?" என்று அவரிடம் கேட்டான் ஜீவானந்தன்.

"இப்போ விருந்து சாப்பிட்டுட்டு எல்லாம் கொஞ்ச நேரம் வேற வேலை எதுவும் இல்லாம ரெஸ்ட் எடுத்துட்டு இருப்போம், ஈவ்னிங் கோவிலுக்கு போயிட்டு வரணும்னு தாத்தா சொன்னாரு. நம்ம வீட்ல, ராசு வீட்ல எல்லாரையும் மொத்தமா அசெம்பிள் பண்ணி அங்க போயிட்டு வர்றதுக்கு எப்படியும் ஏழு எட்டு மணியாகிடும். ஸோ நீ என்ன பண்ற? கவிம்மாவை கூட்டிட்டு இப்பவே வீட்டுக்கு கிளம்புற, சும்மா சும்மா அவளுக்கு கோபம் வராத மாதிரி, உன்னைப் பத்தி எங்ககிட்ட எதுவும் கம்ப்ளையிண்ட் பண்ணாத மாதிரி நீ தான் அவள மாத்தணும் ஜீவாக்குட்டி!" என்று சொன்ன தன் மாமனை முறைப்புடன் நோக்கியவன்,

"ஆமா உன் பொண்ணு ரெண்டாயிரம் ரூபாய் நோட்டு, கடையில குடுத்து நாலு ஐநூறு ரூபாயா மாத்துறேன்.... போய்யா யோவ்; அவ மேல தப்பே இருந்தாலும் ஸாரி கேக்கட்டுமா ஜீவான்னு சும்மா ஒப்புக்கு ஒரு வார்த்தை கேப்பாளே தவிர மூக்கி ஸாரியெல்லாம் கேக்க மாட்டா; ஏன் தெரியுமா நீ, இந்த பாகி எரும, பண்ணையாரெல்லாம் அவளுக்கு குடுக்குற இடம்! இந்த லட்சணத்துல நான் அவள மாத்தணுமா? அவளுக்காக நான் தான் எப்பவுமே ப்ளெக்சி பாலா மாறிக்கணும், அது எனக்கு ஈஸியா வர்ற விஷயம் தான், அதை விடு; கூட்டத்தில நாங்க ரெண்டு பேரு மட்டும் மிஸ் ஆனா பண்ணையாருக்கு தெரிஞ்சுடாது? அவர் என்னை ஏதாவது தப்பா நினைச்சுக்க போறாரு அஜு!" என்று சற்று யோசித்த மருமகனிடம் சிரிப்புக்குரலில்,

"நாங்க யூத்தா இருக்கிறப்போ இப்படி கூட்டமா இருந்தா உங்கம்மாவை மட்டும் கூட்டிட்டு தனியா முத ஆளா மிஸ் ஆகுறதே உங்கப்பன் தான்! இந்த விஷயத்துல நீ ஜெய்யை மாதிரி இல்லடா ஜீவா, ரொம்ப பொறுப்பு பிள்ளையா இருக்க.... கவிய கூட்டிட்டு கிளம்பு, இங்க எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கறோம்!" என்று சொன்ன அர்ஜுனின் கன்னத்தில் முத்தமிட்டு,

"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அஜு, நீ சமாளிச்சுக்கோ, அந்த மூக்கிய இன்னிக்கு...... பை!" என்று சொல்லி உற்சாகமாக கிளம்பினான் ஜீவானந்தன்.

"டேய் கல்யாண வீடுன்னு சொல்லி ஸ்கூலுக்கு லீவ் போட்டுட்டு ஓடியாந்துட்டியா நீ? ஒழுங்கா படிக்கணும் ராம்!" என்று ராகவிடம் சொல்லிய சரஸ்வதியை பார்த்து முறைத்த ராகவ்,

"ஆமா சரஸ்..... நா பதிமூனாவது க்ளாஸ் பதிமூணு வருஷமா படிக்கிறேன், அதனால ஸ்கூலுக்கு கட் அடிச்சுட்டு ஓடி வந்துட்டேன், ஒரு தடவையாவது என்னைய திட்டும் போது என் பேர் சொல்லி கூப்பிட்டு திட்டு க்ரானி, அந்தோ கவிப்ரியா உன்னை கூப்பிடுறா பாரு போவோமா...." என்று தன் பாட்டியிடம்  சொல்லி  விட்டு சரஸ்வதியை கவிப்ரியாவிடம் அழைத்து சென்றான் ராகவ்.

"அப்பா லட்டு அவ ஹப்பி கூடவே பேசிட்டு இருக்காப்பா, பத்து நிமிஷத்துல என் கூட வந்து டைம் ஸ்பெண்ட் பண்றேன்னு சொன்னாப்பா. சொல்லி அரை மணி நேரம் ஆச்சு, இன்னும் மேடைல இருந்து கீழே இறங்கி வராம அவர் கூட சிரிச்சுட்டு நின்னுட்டு இருக்காப்பா!" என்று இனியாவைப் பற்றி ஜெய்நந்தனிடம் புகார் படித்து இருந்தாள் ஷைலஜா.

"அய்யய்யோ என் பொண்ணு கண்ணுல இருந்து டேமை திறந்து விட்டுட்டாளே? இப்போ என்ன செய்றது!
டேய் யாராவது வந்து காப்பாத்துங்களேன், நிலாம்மா எங்கடீ போன?" என்று மனதிற்குள் புலம்பியவாறு தன் மடியில் சாய்ந்திருந்த அழகு ரூபினியிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருந்தார் ஜெய் நந்தன்.

பார்கவ் அச்சமயம் அவர்கள் முன் வந்து கைகளைக் கட்டிக் கொண்டு, "யேய் ரூபி என்னடீ பிரச்சனை உனக்கு? அவனவன் இருக்குற வேலையெல்லாம் அப்படியே கிடக்கட்டும்னு விட்டுட்டு ஒரு வாரம் கல்யாண வீட்டு ரகளைய செமையா என்ஜாய் பண்ணுவம்னு இங்க வந்தா நல்ல நாள் அதுவுமா மாமா மடியில படுத்து அழுதுகிட்டு உசுரை வாங்குற..... இப்போ மரியாதையா எழுந்திரிச்சு கண்ணை துடைச்சுட்டு உட்காரலனா உனக்கு என் கையால அறை விழும்!" என்று பார்கவ் சொன்னவுடன் ஷைலுவின் விம்மல் சற்று அதிகமானது.

"மாமா அவ அழுதுட்டே இருக்கா, நீங்களும் பார்த்துட்டே இருக்கீங்க; அழாதன்னு சொல்லி அவள அடக்க மாட்டீங்களா, சொல்லிட்டே இருக்கேன், குட்டிப் பிசாசே வாயை மூடுறியா இல்லையாடீ?" என்று கைகளை உயர்த்திக் கொண்ட பார்கவை பார்த்து விட்டு கண்களை மூடிக் கொண்டாள் ஷைலஜா.

"பாகி அமைதியா இரேன்டா நீ வேற இம்சை பண்ற!" என்று ஜெய் நந்தன் சொல்லிக் கொண்டு இருக்கையில் பவின் அவனது அருகே வந்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டான்.

"வாங்க பவின்! உங்க பியான்ஸியோட பெஸ்ட்டீக்கு கல்யாணம் ஆகிடுச்சாம், அதுனால இவங்க கண்ணீர் கடல்ல மூழ்கி இருக்காங்களாம். அவளுக்கு என்ன வேணும்னு கேட்டு சால்வ் பண்ணிக் குடுங்க, நீ வா மாமா நாம சாப்பிட போகலாம்!" என்று சொல்லி விட்டு பார்கவ் ஜெய் நந்தனின் கையைப் பிடித்து இழுக்க அவர் சற்று யோசிக்கவும் பவின் புன்னகையுடன் அவரிடம், "ஷைலுவை நான் பார்த்துக்குறேன் அங்கிள், நீங்களும் பார்கவும் கிளம்புங்க!" என்று சொல்லி விட்டு அவர் அமர்ந்து இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.

பவினைப் பார்த்ததும் ஷைலஜா சற்று தயங்கி எழுந்து தன் இருக்கையில் அமர்ந்து கொள்ளவும் பவின் அவளிடம்,
"எனக்கெல்லாம் டிப்ரஸன் வரும் போது படுத்துக்க ஒரு மடி கிடைச்சா அவ்வளவு சீக்கிரம் எழுந்திரிக்கவே மாட்டேன். இஃப் யூ ஆர் கம்பர்டபிள், நீ என் மடியில கூட படுத்து அழலாம். எனக்கு ஒரு அப்ஜெக்ஷனும் இல்லப்பா! பட் கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறமா நான் உன்னை டேட்டிங் கூட்டிட்டு போகலாம்ன்னு நினைச்சேன். இது நம்ம பர்ஸ்ட் டேட்டிங், ஸோ நீ என்ன ஆசைப்பட்டாலும் ஓகே..... வாங்கி தரலாம்னு பார்த்தேன், இட்ஸ் ஆல்ரைட். கன்டினியூ யுவர் க்ரையிங்!" என்று சொன்னவனை ஏற இறங்க பார்த்த ஷைலஜா,

"மிஸ்டர் வினு நான் என்ன ஸ்கூல் படிக்கிற பாப்பாவா..... ஃபீல் பண்ணி அழுதுட்டு இருக்கிறப்ப டாட்டா கூட்டிட்டு போறேன்னு கூப்பிடுறீங்க, எனிவேஸ் வாங்க வெளிய போகலாம்! நான் ட்ரைவ் பண்ணுட்டுமா வினு?" என்று கேட்டவளிடம் ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா என்று கேட்டு விட்டு அவளை தன்னுடன் அழைத்து சென்றான் பவின்.

பத்மா தன் இரு மகள்களுடன் அமர்ந்து இனியாவிற்கும், ஷைலுவிற்கும் மீரா கீதாவின் திருமணத்தின் போது கொடுத்ததை போல் அனைத்து பொருட்களும் இரண்டு இரண்டாக இருக்கிறதா என்று சரிபார்த்து கொண்டு இருந்தார். என் தம்பி மகளும் என் மகள் தான் என்று ஜெய் நந்தனும், என் அன்னையின் வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும் அவள் என் தங்கை தான் என்று ஜீவானந்தனும் இனியாவிற்கு கொடுத்திருந்த பொருட்களின் மூலம் அன்பை வெளிப்படுத்தி இருந்ததை கவனித்தார் பத்மா.

மீரா கீதாவின் அருகில் நிர்மலா வந்து அமரவும் தன் அண்ணியை பார்த்ததும் மீரா வேகமாக தன் கைகளில் வைத்திருந்த ஒரு பெரிய நோட்டை வேகமாக மூடுவதை பார்த்து விட்டு,

"மீரு என்ன விஷயத்தை என் கிட்ட இருந்து மறைக்க ட்ரை பண்ற?" என்று கேட்டார் நிர்மலா.  

"அது வந்து அண்ணி....." என்று மீரா சிறு புன்னகையுடன் நிறுத்தவும் கீதா நிர்மலாவின் கைகளைப் பற்றிக் கொண்டு,

"அண்ணி ஃபுரொபஸர் ஸாரை இவ முத முதல்ல கோவில்ல வச்சு மீட் பண்ணி 25 வருஷம் ஆச்சாம். அத செலிபரேட் பண்றதுக்கு தான் இவ அஜு மாமாவுக்கு ஒரு ஸர்ப்ரைஸ் பென்சில் ட்ராயிங் ரெடி பண்ணியிருக்கா, அண்ணிட்ட காட்டு மீரு!" என்று கீதா மீராவிடம் சொல்ல மீரா அந்த பென்சில் ஓவியத்தை நிர்மலாவிடம் காட்டினார்.

மீரா ஒரு ராணியை போல் உடையணிந்து கண்ணாடியில் முகம் பார்த்து கொண்டு இருக்க, அதன் பிம்பத்தில் அவள் தெரியாமல் அர்ஜுன் அர்ஜீனனைப் போல் கைகளில் காண்டீபம் ஏந்தி நின்று கொண்டு இருந்தார்.

"வாவ்...... செம டீடையில்ங் மீரா! ரொம்ப அழகா இருக்கு, அஜு அண்ணாவுக்கு ஸர்ப்ரைஸா குடு, நான் அவங்க கிட்ட சொல்ல மாட்டேன்!" என்று சொன்னவரிடம் சிரிப்புடன்,  "தேங்க்ஸ் அண்ணி!" என்று சொல்லி அவரை அணைத்துக் கொண்டார் மீரா.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Continue Reading

You'll Also Like

33.4K 2.6K 64
இது என் ஐந்தாவது கதை.... பிழை புரியா பேதை அவள்... மனம் புரியா பாவை அவள்... விட்டால் போதுமென ஓடும் முயல் அவள்... காத்திருக்க தெரியாதவள்... பலரை ஆவலோடு...
110K 4.8K 37
இது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.
213K 6.3K 43
அளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு
84.2K 3.2K 15
மறந்து வாழ துடிப்பவளை நெருங்கும் நேசம்..❤❤