கண்டேன் என் ஜீவாமிர்தம்✔

By Vaishu1986

214K 9.9K 3K

பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நா... More

💟 ஜீவாமிர்தம் 1
💟 ஜீவாமிர்தம் 2
💟 ஜீவாமிர்தம் 3
💟 ஜீவாமிர்தம் 4
💟 ஜீவாமிர்தம் 5
💟 ஜீவாமிர்தம் 6
💟 ஜீவாமிர்தம் 7
💟 ஜீவாமிர்தம் 8
💟 ஜீவாமிர்தம் 9
💟 ஜீவாமிர்தம் 10
💟 ஜீவாமிர்தம் 11
💟 ஜீவாமிர்தம் 12
💟 ஜீவாமிர்தம் 13
💟 ஜீவாமிர்தம் 14
💟 ஜீவாமிர்தம் 15
💟 ஜீவாமிர்தம் 16
💟 ஜீவாமிர்தம் 17
💟 ஜீவாமிர்தம் 18
💟 ஜீவாமிர்தம் 19
💟 ஜீவாமிர்தம் 20
💟 ஜீவாமிர்தம் 21
💟 ஜீவாமிர்தம் 22
💟 ஜீவாமிர்தம் 23
💟 ஜீவாமிர்தம் 24
💟 ஜீவாமிர்தம் 25
💟 ஜீவாமிர்தம் 26
💟 ஜீவாமிர்தம் 27
💟 ஜீவாமிர்தம் 28
💟 ஜீவாமிர்தம் 29
💟 ஜீவாமிர்தம் 30
💟 ஜீவாமிர்தம் 31
💟 ஜீவாமிர்தம் 32
💟 ஜீவாமிர்தம் 33
💟 ஜீவாமிர்தம் 34
💟 ஜீவாமிர்தம் 35
💟 ஜீவாமிர்தம் 36
💟 ஜீவாமிர்தம் 37
💟 ஜீவாமிர்தம் 38
💟 ஜீவாமிர்தம் 39
💟 ஜீவாமிர்தம் 40
💟 ஜீவாமிர்தம் 41
💟 ஜீவாமிர்தம் 43
💟 ஜீவாமிர்தம் 44
💟 ஜீவாமிர்தம் 45
💟 ஜீவாமிர்தம் 46
💟 ஜீவாமிர்தம் 47
💟 ஜீவாமிர்தம் 48
💟 ஜீவாமிர்தம் 49
💟 ஜீவாமிர்தம் 50
💟 ஜீவாமிர்தம் 51
💟 ஜீவாமிர்தம் 52
💟 ஜீவாமிர்தம் 53
💟 ஜீவாமிர்தம் 54
💟 ஜீவாமிர்தம் 55
💟 ஜீவாமிர்தம் 56
💟 ஜீவாமிர்தம் 57
💟 ஜீவாமிர்தம் 58
💟 ஜீவாமிர்தம் 59
💟 ஜீவாமிர்தம் 60
💟 ஜீவாமிர்தம் 61
💟 ஜீவாமிர்தம் 62
💟 ஜீவாமிர்தம் 63
💟 ஜீவாமிர்தம் 64
💟 ஜீவாமிர்தம் 65
💟 ஜீவாமிர்தம் 66
💟 ஜீவாமிர்தம் 67
💟 ஜீவாமிர்தம் 68
💟 ஜீவாமிர்தம் 69
💟 ஜீவாமிர்தம் 70
💟 ஜீவாமிர்தம் 71
💟 ஜீவாமிர்தம் 72
💟 ஜீவாமிர்தம் 73
💟 ஜீவாமிர்தம் 74
💟 ஜீவாமிர்தம் 75

💟 ஜீவாமிர்தம் 42

2.3K 137 55
By Vaishu1986

அதிகாலை நான்கு மணியளவில்  படுக்கையறைக்குள் தன் கொலுசுகள் சத்தமிடாமல் மெதுவாக நுழைந்து முகம் கழுவி தன்னை சுத்தம் செய்து கொண்டு வந்து மல்ட்டிப்பிள் இண்டகெரலுடன் மண்டையை உடைத்துக் கொண்டு இருந்தாள் அபிநயசரஸ்வதி. நேற்றிரவு ம்ஹூம் இன்று அதிகாலை இரண்டு மணிக்கு தான் வேறு அறையில் கவிப்ரியா மற்றும் ஷைலஜாவுடன் சற்று கண்ணயர்ந்து விட்டு இரண்டு மணி நேரத்திற்குள் அவசரமாக எழுந்தும் விட்டாள். போன வாரம் முழுவதும் ஹாஸ்பிட்டல், கல்யாண ஷாப்பிங், என்று வேலைகளில் நேரம் ஓடி விட்டது. க்ளாஸ் எடுக்க பாடத்திட்டத்தை தூக்கி ரிவைஸ் செய்து குறிப்பு எடுக்கும் வேலையை செய்யவேயில்லை. இன்று கண்டிப்பாக வேலைக்கு சென்று விட வேண்டும். பின்புறம் திரும்பி அவனைப் பார்ப்பதற்கு அவளுக்கு மிகவும் பயமாக இருந்தது. இரவு உணவிற்கு பின் பெரியவர்கள் பார்கவ் அபிநயாவை ஆசிர்வதித்து விட்டு செல்ல அவர்களின் அறைக்குள் நுழைந்த அபிநயாவை பார்கவ் அறைக்கு வருவதற்குள் ஷைலுவும் கவியும் சேர்ந்து கடத்திக் கொண்டு சென்று விட்டனர்.

முதலில் ஆட்டம், பாடல் என்று சென்று கொண்டிருந்த கச்சேரி பின் மோனோ ஆக்டிங், வெரைட்டி ஆக்டிங், டம்ப் சீக் என்று களைகட்டியது.

"அண்ணி ரூபி கொஞ்சம் சவுண்டை மட்டும் கம்மி பண்ணிக்குவோம். இல்லன்னா பெரியவங்க யாராவது வந்துடப் போறாங்க!" என்று கவி சொல்லிக் கொண்டு இருந்த வேளையில் அறைக்கதவு தட்டப்பட்டது.

"என்ன பண்ணிட்டு இருக்கீங்க?  தூங்குங்க எருமைகளா! நீ வா அபி நம்ம ரூமுக்கு போவோம்.....!" என்று அழைத்தவனிடம் தயக்கத்துடன் மெலிதான புன்னகை சிந்தி,

"ரொம்ப ஜாலியா இருக்குங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடட்டுமா?" என்று கேட்ட தன் மனைவியின் மேல் அனல் பார்வை வீசி விட்டு சென்றான் பார்கவ்.

"அம்மாடியோவ் அண்ணாத்தை பார்வையாலயே சுட்டுருவார் போலிருக்கே..... யாரும் பார்த்துடாம சீக்கிரம் உள்ள வாங்க அண்ணி!" என்று கூறி விட்டு அபியை மறுபடியும் அறைக்குள் இழுத்து கொண்டாள் கவிப்ரியா.

"குட்மார்னிங் அபிநயசரஸ்வதி மேடம்; நைட் ஆட்டம் பாட்டுன்னு ஒரே ஜாலியா இருந்தீங்க போலிருக்கு. ஏன் அதுக்குள்ள கிளம்பி இங்க வந்துட்டீங்க.....விடியறதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கே; உங்க க்ளாஸஸ்க்கு ப்ரிப்பரேஷன் போய்ட்டு இருக்கா?" என்று கேட்ட படி அவள் புக்கை பார்த்து விட்டு இரண்டடி தூரத்தில் நின்று பேசிக் கொண்டு இருந்தான் பார்கவ்.

"கு....குட்மார்னிங் கவி ஸாரி; உங்கள காக்க வைச்சது தப்பு தான், ஆனா கவிப்ரியா, ஷைலு கூட சேர்ந்து இருந்தது எவ்வளவு நல்லா இருந்தது தெரியுமா....நான் இந்த மாதிரி சுபா, மோகனா கூட எல்லாம் விளையாண்டதே இல்ல; சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துடுச்சு. அவ்வளவு ஜாலியா இருந்ததுப்பா!" என்று சொல்லி அவன் அருகே சென்று அவனை அணைத்துக் கொள்ள சென்றவளை "அங்கயே நில்லு கட்டிப் பிடிக்க வந்த கொன்னுடுவேன்!" என்று சொல்லி எட்டி நிற்குமாறு பணித்தான்  பார்கவ்.

"ம்ப்ச்....என்ன கவி!" என்று சலித்துக் கொண்டவளிடம்,

"நீயும் அந்த குரங்குகளும் குதிச்சு விளையாட என் கல்யாண நாள் ராத்திரி தான் கிடைச்சதா உங்களுக்கு?  பாவிகளா மொத்தமா மண்ணை அள்ளிப் போட்டீங்களேடீ, நீ பெரிசா தலைய ஆட்டும் போதே எனக்கு தெரியும், ஏதோ வில்லங்கம் வரப்போகுதுன்னு...... மரியாதையா நான் லாஸ் பண்ணின ப்ரீசியஸ் மொமண்ட்ஸை காம்பன்சேட் பண்ணு. இல்லன்னா கிட்ட வராத, அப்படியே ஓடிடு!" என்று சொன்னவனிடம்,

"இப்போ எப்படி போன டைமை காம்பன்சேட் பண்ண முடியும் கவி?" என்று உச்சுக் கொட்டினாள் அபிநயா.

"ஒண்ணும் பிரச்சனை இல்ல. இப்போ மணி நாலு தானே ஆகுது.....காலேஜ் 9 மணிக்கு தானே போகணும்? இன்னும் 5 மணி நேரம் இருக்கே.....அதுக்குள்ள இன்னும் என்னன்னமோ பண்ணலாம்! 8 வருஷ டெப்த்தை காட்ட முடியுமான்னு தெரியல. ஆனா பாட்டுப் பாடிடலாம்!" என்று சொல்லி அவள் கைப்பற்றி தன் மார்பில் அவளை தாங்கிக் கொண்டவனிடம் சிறு சிரிப்புடன்,

"ப்ளீஸ் கவி...... நாலரை மணி நேரம் நீங்க எடுத்துக்கோங்க, எனக்கு காலேஜ்க்கு ரெடியாக ஒரு அரைமணி நேரம் வேணும், ஆமா உங்கள டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு தானே சத்தம் கூட போடாம மெதுவா உள்ள வந்தேன், நீங்க நைட் பூராவும் தூங்கவே இல்லையா?" என்று கேட்ட அபிநயாவின் கன்னத்தில் முத்தமிட்டு,

"எப்படிடீ தூக்கம் வரும்...... பூ, பழம், பால், ரூம் ஸ்ப்ரேன்னு எல்லாம் கலந்து ஏதோ வித்தியாசமா ஒரு ஸ்மெல் வந்தது. புரண்டு புரண்டு தூக்கமே வரல. டெய்லி நீ தான் 5 மணிக்கு முழிச்சுடுவல்ல..... ஸோ அங்கயிருந்து  உன்னை கூடைக்குள்ள போட்டு கவுத்தி ரூமுக்கு தூக்கிட்டு வந்துடலாம்ன்னு நினைச்சு எல்லாத்தையும் வேஸ்ட் பண்ணாம கிச்சனுக்குள்ள கொண்டு போய் ஆர்கனைஸ் பண்ணி வச்சுட்டு வந்துட்டேன். இப்போ தான் அரை மணி நேரம் முன்னாடி வேலைய முடிச்சு வந்து படுத்தேன். கரெக்டா அம்மணி திருட்டுத்தனமா உள்ள நுழையுறீங்க.
நல்ல வேளை மல்ட்டிப்பிள் இண்டகெரல் புண்ணியம் கட்டிக்கிச்சு. கணக்கை கண்டுபிடிச்ச இன்வென்டர் ரொம்ப நல்லாயிருக்கணும்!" என்று தலைக்கு மேல் ஒரு கும்பிடு போட்டு விட்டு தன் மனைவியை தூக்கி கட்டிலில் கிடத்தி அவளிடம் தான் தொலைத்த நிமிடங்களுக்கும் சேர்த்து அணைப்பையும், முத்தங்களையும் இன்னும் பல இதர விஷயங்களையும்  மொத்தமாக கொடுக்கலும் வாங்கலுமாக பண்டமாற்று செய்து கொண்டு இருந்தான் பார்கவ். உங்கள் இனிய பரிமாற்றங்களுக்கு இடையில் நாங்கள் வரவில்லை என்று சொல்லி சமையலறையிலேயே ஒதுங்கி கொண்டு விட்டன இனிப்புகளும் பால் பழம் போன்ற சம்பிரதாய பொருட்களும்!

நிர்மலா தன் முகத்தில் பட்ட வெளிச்சத்தில் கண்களை சுருக்கி சைட் டேபிளில் இருந்த கடிகாரத்தில் கண்பதித்தார். எட்டரை மணி என்று காட்டிய கடிகாரம் உணர்த்திய நேரம் மூளைக்குள் பதிவாக பதறி எழ முயற்சி செய்தார். ஆனால் எழ வேண்டும் என்ற அவரது முயற்சி அவரருகில் படுத்துக் கொண்டு அவர் தோளை அணைத்துக் கொண்டிருந்த ஜெய் நந்தனால் தடைபட்டது.

"ஸ்ரீ ரொம்ப ரொம்ப டைமாச்சு, தயவுசெய்து எழுந்திரிச்சு உட்காருங்களேன்!" என்று கேட்ட தன் மனைவியின் உலுப்பல்களுக்கு சற்று செவிமடுத்து அரைக்கண்ணை திறந்தவர், "குட்மார்னிங் பஞ்சு மூட்டை; இப்போ கொஞ்சம் கனமாயிட்டடீ; முன்ன மாதிரி நினைச்ச நேரம் எல்லாம் என்னால உன்னை தூக்க முடியல!" என்றார் கவலையகன்ற குரலில்.

"ரொம்ப முக்கியம்......தூங்க விடாம இம்சை பண்ணிட்டு ராகினி அக்கா பத்து மணிக்கு வர்றேன்னு சொன்னாங்க. இருங்க குளிச்சுட்டு வந்து உங்களை பேசிக்குறேன்!" என்று அவசர அவசரமாக குளியலறைக்குள் ஓடினார் நிர்மலா.

"சென்னைக்கு வந்தா தான் சுகமா கட்டில்ல உருளக் கூட டைம் கிடைக்குதுப்பா.... இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே!" என்று பாடிய படி தலையணைக்குள் முகம் புதைத்து கொண்டார் ஜெய் நந்தன். 

நேற்றிரவு கன்னத்தில் கைகளை சாய்மானம் கொடுத்து அமர்ந்திருந்த தன் கணவரை வலுக்கட்டாயமாக வாயைத் திறக்க வைத்து அனைத்து விஷயங்களையும் வாங்கி கொண்டார் நிர்மலா.

"நம்ம இல்லாம ஜீவாக்குட்டி கல்யாணம் நடக்கப் போறது தான் விதியா இருந்தா அப்படியே நடக்கட்டும் ஸ்ரீ! இதுக்கு நம்ம என்ன பண்ண முடியும்? ஆனா மாணிக்கம் அண்ணா விஷயத்தை எல்லார்ட்டயும் நீங்க சொல்லியிருக்கணும்!" என்றார் சற்று வருத்தத்துடன்.

"சொல்லி......என்ன பண்றது நிலாம்மா?ஆனந்த் தான் யார் கிட்டயும் வாயவே திறக்க கூடாதுன்னு ஆர்டர் போட்டான். என்னோட இடத்துல இருந்து எல்லா கடமைகளையும் ஒழுங்கா நிறைவேத்தி முடிச்சிருக்கான்டீ; ரொம்ப நிறைவா இருந்தது.... நம்ம இல்லாம அவன் கல்யாணம்னு கேக்குறதுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது, ஆனா அப்படித் தான் நடக்கும்னா அதுக்கும் தயாராகி அவன் நம்ம கிட்ட சொல்லும் போது ப்ளஸ் பண்ணிட வேண்டியது தான்....இன்னொரு விஷயம் ஆனா அதை நான் சொல்ல மாட்டேன். அப்புறம் நீ என்னைய அடிப்ப!" என்று சொல்லி விட்டு விவேக்கை தன் அறைக்குள் அழைத்தார் ஜெய் நந்தன்.

"என்னண்ணா...... கூப்டிங்களா?" என்று கேட்ட படி வந்து நின்றவரிடம்,

"டேய் அன்னிக்கு என் கிட்ட ஒரு விஷயம் சொன்னியே அத உங்க அண்ணி கிட்ட சொல்லு.... என்ன முறைக்கிற? எல்லா தொல்லையையும் என் காதுக்குள்ள போட்டுட்டு என்னைய புலம்ப விட்டுட்டு எல்லாரும் ஓடிர்றது! மரியாதையா இப்போ இவ கிட்ட சொல்லு!" என்றார் ஜெய் நந்தன்.

"அண்ணி நம்ம ஜீவாக்குட்டி பப்புக்கு போய் பியர் வாங்குனதா நமக்கு தெரிஞ்ச பார்ட்டி ஒருத்தர் எங்கிட்ட சொன்னார். நம்ம ஜீவா வளர்ப்பை பத்தி ஏதாவது குறை சொல்ல முடியுமா அண்ணி.....இவர்ட்ட சொன்னா எதுக்கு அங்க போனான்? எதுக்கு அதை வாங்குனான்னு நான் சொன்ன நாள்ல இருந்து என்னைய இம்சை பண்ணிகிட்டு இருக்காரு அண்ணி!" என்று சொல்லி தலையில் கைவைத்து கொண்ட விவேக்கிடம் புன்னகையுடன்,

"உங்க அண்ணாட்ட நான் பேசிக்குறேன்! நீங்க இனியா கிட்ட பேசுனீங்களா? மாணிக்கம் அண்ணா விஷயம் உங்களுக்கு......!" என்று இழுத்த நிர்மலாவிடம்,

"தெரியும் அண்ணி இனுக்குட்டி என்ன செய்யன்னு கேட்டு அழுதா. அந்த தறுதலைய உதவிக்கு கூப்பிட்டுக்கோன்னு சொன்னேன், மலையில தான் இருக்கானாம்!" என்று சொன்னவரிடம் விவேக் என்று கம்பீரமான குரலில் வந்த அதட்டல் ஜெய் நந்தனுக்கு ஒரு நிமிடம் ஸாகரியை நினைவுபடுத்தியது.

"தேவை தான் இவனுக்கு..... நல்லா ஆப்பு வாங்கு!" என்று மனதிற்குள் நினைத்த படி ஜெய் புன்னகையுடன் கையை கட்டிக் கொண்டார்.

"நம்ம பொண்ணை கட்டிக்கப் போறவர். அவர மரியாதை குறையற மாதிரி எந்த சந்தர்ப்பத்திலயும் ஒரு வார்த்தை பேசிடக் கூடாது விவேக்!" என்று நிர்மலா சொல்ல விவேக் நிர்மலாவிடம், "மன்னிச்சுடுங்க அண்ணி; இனிமே மாப்பிள்ளைய மரியாதை இல்லாம கூப்பிட மாட்டேன்!" என்று சொல்லி விட்டு சென்றார்.

"என்ன ஜெய் ஸார்......உங்க
பையன் எதுக்கு அந்த பியரை வாங்கினாருன்னு அவர்ட்டயே போன் பண்ணி கேக்கலாமா?" என்று அவரைப் பார்த்து கண்சிமிட்டிய நிர்மலாவிடம் கைகூப்பி,

"அம்மா தாயே ஏதோ மண்டைக்குள்ள ஒரு புழு குடைஞ்சுச்சு, மனசு ஆத்த மாட்டாம கேள்வியை கேட்டுட்டேன்.
அவன் மேல நம்பிக்கை இருக்குன்னு சொல்லிட்டு இந்த கேள்வியை அவன்ட்ட கேட்டா என்னையவா சந்தேகப்பட்டீங்கன்னு கேட்டு மறுபடியும் ஓடிட போறான். உனக்கு புண்ணியமா போகும், போற போக்குல எதையும் கொளுத்தி போட்டுடாத செல்லக்குட்டி!" என்று ஜெய் நிர்மலாவின் தாடையைப் பற்றி கெஞ்சிக் கொண்டிருந்தார்.

"இங்க வாங்க!" என்று அவரைக்  கூப்பிட்டு படுக்கையில் அமர வைத்து கொண்டவர், "யாராவது ஏதாவது சொன்னாங்கன்னு நம்ம பையன் மேல வச்ச நம்பிக்கைய விட்டுக் குடுக்க முடியாது ஸ்ரீ! ஏதோ ஆர்வக்கோளாறுன்னு அவன் வாங்கியிருந்தா கூட கண்டிப்பா அதை குடிச்சிருக்க மாட்டான். அப்பச்சி வளர்ப்பு தப்பா இருக்க வாய்ப்பேயில்ல; நிம்மதியா தூங்குங்க. எனக்கு அப்போலேர்ந்து கண்ணை கட்டுது....... மலையிலன்னா 9 மணிக்காவது படுக்கலாம், சென்னைக்கு வந்தா 12 ஆகிடுது!" என்று சொல்லி கொட்டாவி விட்டவரிடம்,

"பாவம் நிலாக்குட்டி நீங்க..... இன்னிக்கு உங்க புருஷனை ஜெய் ஸார்ன்னு சொல்லி கடுப்பேத்தினதுக்கு பனிஷ்மெண்டா நீங்க தூங்க ரெண்டோ, மூணோ எத்தன மணி ஆகப் போகுதோ...... தெரியல! பாதியில தூங்கி வழிஞ்சு தகராறு பண்ணின; உதை வாங்குவ! டீ வேணும்னா போட்டு குடிச்சுட்டு வா! ஆனா எப்படிறீ எல்லா விஷயத்தையும் இவ்வளவு கூலா ஹாண்டில் ஆஆ...... ஏன்டீ கடிச்ச?" என்று கன்னத்தில் தேய்த்துக் கொண்டு முகம் சுருக்கியவரிடம்,

"எல்லா விஷயத்துலயும் மிஸஸ் நந்தன் கூலா இருக்க மாட்டாங்க ஜெய் ஸார்..... கவிம்மாவுக்கு என் நிக் நேமை சொன்னீங்கல்ல அதுக்கு தான் பனிஷ்மெண்ட்!" என்று சொன்ன தன் மனைவியின் கண்களில் தெரிந்த சிரிப்பை முத்தமிட்டு ரசித்து கொண்டிருந்தார் ஜெய் நந்தன்.

"ம்ப்ச்...... காலேஜ்க்கு போற புள்ள என்னட்டீ சாப்பிடுற; மூணு இட்டிலி எந்த மூலைக்கு காணும்...... பாரு கன்னமெல்லாம் உள்ள ஒட்டிப் போய் எலும்பு துருத்திக்கிட்டு நிக்கு, இன்னும் ரெண்டு சாப்பிடலைன்னா பொறவு காலேஜ்க்கு போக விட மாட்டேன் பார்த்துக்க!" என்று சொன்ன தன் கணவனை முறைத்தவள்,

"உங்க வேலைய மட்டும் பாருங்க, நைட்டு தண்ணியடிச்சீங்களா? நான் பார்த்தப்ப வாசல்ல போய் படுத்து கிடந்தீங்க; பிஸ்கட், சிப்ஸ், முறுக்குன்னு சைட் டிஸ் வேற, இருங்க அண்ணா வரட்டும், உங்கள சொல்லி குடுக்குறேன்!" என்று மெல்லிய குரலில் அவனை அதட்டிக் கொண்டு இருந்தவளிடம்,

"நீ யோசிக்கறதெல்லாம் சரித்தேன்..... நம்ப ஊர்ல எல்லா துக்க வீடுன்னா நாலு பேரு தண்ணியடிச்சு சலம்பி, ரெண்டு பேரு கறிச்  சோத்துக்கு சண்டை போட்டு அலப்பறைய கூட்ற மாதிரி இருக்கும். இங்க அது ஒண்ணையும் காணுமா.... அதுக்குத்தேன் நானும் உங்கண்ணனும் சேர்ந்து ஊத்தி குடிச்சோம்!" என்று சொன்னவனிடம் மிகுந்த கோபத்தில் கைகளை நீட்டிக் கொண்டு அவனை அடிக்க வந்தாள் இனியா.

அடிக்கும் முன் அவள் கையைப் பற்றி தடுத்தவன், "வெறும் கலர்தேன் குடிச்சோம். கண்ணு சிவந்தா தண்ணியடிச்சுதேன் செவக்கணுமா...... தூங்காம இருந்தா கூட செவக்கும். பண்ணின சத்தியம் பண்ணினதுதேன்.  இனிமே அதெல்லாம் தொட மாட்டேன். என்னைய நம்புடீ!" என்றான் ராசு.

"நானும் ஜீவா அண்ணாவும் இன்னிக்கு சாயந்தரம் சென்னைக்கு போகப் போறோம். நீங்களும் சென்னைக்கு வந்துட்டு அம்பைக்கு போறீங்களா? அப்பத்தாவுக்கு கஷ்டமா இருந்தா அவங்க வேணும்னா அண்ணா கார்ல வரட்டும்!" என்று சொல்லி தலை கவிழ்ந்து கொண்டவளிடம் கேலிச் சிரிப்புடன்,

"புல்லட்ல உம் பின்னால உட்கார்ந்து வர ஆசையா இருக்கு மாமான்னு சொன்னா குறைஞ்சா போயிடுவ..... கள்ளச்சி மனசுக்குள்ள ஆசைய வச்சுட்டு யாரோ மூணா மனுஷி மாதிரி பேசுறத பாரு!" என்று முணங்கியவன்

"கொஞ்ச நேரம் தான்டீ சென்னையில இருக்க முடியும். நீ கூப்பிட்டதும் போட்டது போட்ட படி அப்படியே ஓடியாந்துட்டேன். ப்ரொபஸர் வரச் சொல்லி இருக்காரு. தீஸிஸ் வேலையெல்லாம் அப்படியே கிடக்குல்லா! ஒழுங்கா இறுக்கிக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு உட்காரு!" என்று சொல்லி அவளை கல்லூரியில் விடச் சென்றான்.

ஜீவானந்தன் இன்றும் நாளையும் மட்டும் பணியாளர்களை அவரவர் வேலைகளுக்கு சரியாக அமர்த்தி விட்டு இனியா ராசு, அப்பத்தாவுடன் சென்னைக்கு பயணம் மேற்கொண்டான்.

"ஏன்டா லேய் உன் வண்டிக்கு இந்த நேரத்தில கிளம்ப என்ன கொள்ள போச்சு?" என்று கேட்ட தன் அப்பாத்தாவிடம்,

"அதுக்கு சளி கிளி பிடிச்சுக்குச்சோ என்னவோ அப்பத்தா....எலேய் மச்சான் உன் காரு சவாரி செமையா இருக்குலே....." என்று சொல்லி இனியாவிடம் முன்னால் அமர்ந்து இருந்த இருவருக்கும் தெரியாமல் சில சில்மிஷங்களை செய்து கொண்டு இருந்தான் இசக்கி ராசு.

"ப்ளீஸ்.... ராசு அமைதியா வாங்க!" என்று தவிப்பு குரலில் சொன்னவளிடம்,

"மாமா சும்மாயிருன்னு சொல்லு..... பொறவு சேட்டை பண்ண மாட்டேன்!" என்றான் ராசு அவளிடம் கண்சிமிட்டி.

"போடா சொல்ல மாட்டேன்!" என்று சொல்லி விட்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளை இடித்துக் கொண்டு நகர்ந்து அமர்ந்தவன்,

"அப்போ வண்டி நிக்குத வரையில நானும் சும்மா வரமாட்டேன்!" என்று சொல்லி விட்டு தன் வேலையை காட்ட தொடங்கி விட்டான்.

ஜீவாமிர்தம் சுரக்கும்!
 

Continue Reading

You'll Also Like

92.8K 3.5K 49
அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில்...
205K 5.4K 132
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வ...
110K 4.8K 37
இது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.
80.8K 5K 54
வாழ்க்கை எப்படி எப்போது மாறும் என்று யாருக்கும் தெரியாது. அது போகும் போக்கில் செல்ல பழகிவிட்டால் பல ஆச்சரியங்களை அது நமக்கு பரிசளிக்கிறது. அப்படிப்பட...