கண்டேன் என் ஜீவாமிர்தம்✔

Від Vaishu1986

214K 9.9K 3K

பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நா... Більше

💟 ஜீவாமிர்தம் 1
💟 ஜீவாமிர்தம் 2
💟 ஜீவாமிர்தம் 3
💟 ஜீவாமிர்தம் 4
💟 ஜீவாமிர்தம் 5
💟 ஜீவாமிர்தம் 6
💟 ஜீவாமிர்தம் 7
💟 ஜீவாமிர்தம் 8
💟 ஜீவாமிர்தம் 9
💟 ஜீவாமிர்தம் 10
💟 ஜீவாமிர்தம் 11
💟 ஜீவாமிர்தம் 12
💟 ஜீவாமிர்தம் 13
💟 ஜீவாமிர்தம் 14
💟 ஜீவாமிர்தம் 15
💟 ஜீவாமிர்தம் 16
💟 ஜீவாமிர்தம் 17
💟 ஜீவாமிர்தம் 18
💟 ஜீவாமிர்தம் 19
💟 ஜீவாமிர்தம் 20
💟 ஜீவாமிர்தம் 21
💟 ஜீவாமிர்தம் 22
💟 ஜீவாமிர்தம் 23
💟 ஜீவாமிர்தம் 24
💟 ஜீவாமிர்தம் 25
💟 ஜீவாமிர்தம் 26
💟 ஜீவாமிர்தம் 27
💟 ஜீவாமிர்தம் 28
💟 ஜீவாமிர்தம் 29
💟 ஜீவாமிர்தம் 30
💟 ஜீவாமிர்தம் 31
💟 ஜீவாமிர்தம் 32
💟 ஜீவாமிர்தம் 33
💟 ஜீவாமிர்தம் 34
💟 ஜீவாமிர்தம் 35
💟 ஜீவாமிர்தம் 36
💟 ஜீவாமிர்தம் 37
💟 ஜீவாமிர்தம் 38
💟 ஜீவாமிர்தம் 39
💟 ஜீவாமிர்தம் 40
💟 ஜீவாமிர்தம் 42
💟 ஜீவாமிர்தம் 43
💟 ஜீவாமிர்தம் 44
💟 ஜீவாமிர்தம் 45
💟 ஜீவாமிர்தம் 46
💟 ஜீவாமிர்தம் 47
💟 ஜீவாமிர்தம் 48
💟 ஜீவாமிர்தம் 49
💟 ஜீவாமிர்தம் 50
💟 ஜீவாமிர்தம் 51
💟 ஜீவாமிர்தம் 52
💟 ஜீவாமிர்தம் 53
💟 ஜீவாமிர்தம் 54
💟 ஜீவாமிர்தம் 55
💟 ஜீவாமிர்தம் 56
💟 ஜீவாமிர்தம் 57
💟 ஜீவாமிர்தம் 58
💟 ஜீவாமிர்தம் 59
💟 ஜீவாமிர்தம் 60
💟 ஜீவாமிர்தம் 61
💟 ஜீவாமிர்தம் 62
💟 ஜீவாமிர்தம் 63
💟 ஜீவாமிர்தம் 64
💟 ஜீவாமிர்தம் 65
💟 ஜீவாமிர்தம் 66
💟 ஜீவாமிர்தம் 67
💟 ஜீவாமிர்தம் 68
💟 ஜீவாமிர்தம் 69
💟 ஜீவாமிர்தம் 70
💟 ஜீவாமிர்தம் 71
💟 ஜீவாமிர்தம் 72
💟 ஜீவாமிர்தம் 73
💟 ஜீவாமிர்தம் 74
💟 ஜீவாமிர்தம் 75

💟 ஜீவாமிர்தம் 41

2.3K 138 51
Від Vaishu1986

"அண்ணா பெல் அடிச்சுட்டு நீ வீட்டுக்குள்ள வரலாம், பெல் அங்க இருக்கு!" என்று தோட்டத்தில் ஓர் ஓரமாக ஊன்றியிருந்த ஒரு கம்பத்தை அவனிடம் காட்டினாள் கவிப்ரியா.

"ஏய் பக்கி அதுல பலூன் தானே இருக்கு, பத்தடியில வேற இருக்கு. ஏறிடலாம்னு பார்த்தா கம்பு ஸ்ட்ராங்கா இல்லையே!" என்று கண்களால் அந்த கம்பின் உறுதித்தன்மையை அளந்து கொண்டிருந்தான் பார்கவ்.

"மிஸ்டர் அண்ட் மிஸஸ் பார்கவ் இந்த டாஸ்க்கை ஒருத்தரால கம்ப்ளீட் பண்ண முடியாது. இது உங்க ரெண்டு பேருக்கான டாஸ்க். முதல்ல அந்த பலூனை உடைக்கணும், அந்த பலூன்க்குள்ள ஒரு பேக் இருக்கு. அதுல ஒரு பெல் இருக்கு. யாரை யார் லிப்ட் பண்ணப் போறீங்கன்னு நீங்க தான் டிஸைட் பண்ணிக்கணும். அப்பா, அம்மா அஜு மாமா,மீரா அத்தை, பலராம் மாமா, கீதா அத்தை, தாத்தா பாட்டி திஸ் இஸ் எக்ஸ்க்ளுசிவ் ஃபார் யங்ஸ்டர்ஸ் ஸோ நீங்க கொஞ்சம் உள்ள போயிடுறீங்களா?" என்று கேட்ட ஷைலஜாவிடம் புன்னகையுடன் மூன்று தம்பதியரும் "நாங்கல்லாம் இன்னும் யங்ஸ்டர்ஸ் தான். சீக்கிரம் உள்ள வாங்க!" என்று சொல்லி விட்டு ஜெயந்தன் பத்மா சரஸ்வதியை அழைத்து சென்றனர்.

"ஜஸ்ட் ஹோ அஹெட் கப்பிள், ஆல் தி பெஸ்ட்!" என்று சொல்லி விட்டு கவியுடன் சென்று நின்று கொண்டாள் ஷைலஜா.

"அபி வா என் ஷோல்டர்ல ஏறு!" என்று சிரிப்புடன் அழைத்தவனை பார்த்து பயந்த குரலில், "ஷோ....ஷோல்டர்லயா என்னங்க எனக்கு பயமாயிருக்கு. நான் வரல!" என்று மறுத்த அபிநயாவிடம்,

"நீ என் ஷோல்டர்ல ஏறுனா தான் அபி நான் உன்னை மேல கொண்டு போக முடியும், வீ மஸ்ட் பினிஷ் தி டாஸ்க்! இல்லன்னா வீட்டுக்குள்ள விட மாட்டாளுங்க ராட்சசிக!" என்று சொன்னவனை பார்த்து தயக்கத்துடன் அவனருகில் வந்தாள் அபிநயா.

சிறிது நேரத்தில் பாலன்ஸ் செய்து இருவரும் நின்று விட அபிநயா பலுனை உடைத்து பேகை பற்றிக் கொண்டதும் பல வண்ணப்பொடிகள் அவர்களின் மேல் கொட்டியது.

"ச்சை இது வேறயா.....கலர் பொடியில குளிக்க வச்சுட்டாளுக பாரு.....என் காஸ்ட்லி வெட்டிங் சூட் பாழாகிடுச்சு!" என்று தன் தலையில் விழுந்த பொடிகளை தலையை ஆட்டி உதறியவன் தன் தோளில் நின்று கொண்டு இருந்த மனைவியை தன் அசைவு பாதிக்கும் என்று மறந்து விட்டான்.

"கவி பயமாயிருக்கு எதை ஹோல்ட் பண்ண.....ஆ ஆ நான் விழப்போறேன் கவி!" என்று பதறிய அபிநயா அவன் "வாணிம்மா கேர்புல்!" என்று சொல்வதற்குள் கால்களை மடக்கியிருந்தாள். புடவையோடு விழுந்து வைத்தால் தன் மனைவி அனைவர் முன்பும் மனம் குன்றி விடுவாள் என்று நினைத்து பார்கவ் அவளை இடப்புறம் தாவி அணைத்துக் கொண்டு தான் உருண்டான். தன்னை இறுகப் பிடித்துக் கொண்டவன் மார்பில் விழுந்து கிடந்தாள் அபிநயா.

"சூப்பர் திஸ் இஸ் வாட் வி எக்ஸ்பெக்ட், மிஸஸ் அண்ட் மிஸ்டர் பார்கவ்!" என்று கை தட்டிய கவிப்ரியா, ஷைலஜாவிடம் ராகவ், "ஏய் என்ன இந்த மாதிரி விளையாட்டு எல்லாம் ..... ரெண்டு பேருக்கும் ஏதாவது அடிபட்டுருந்தா என்ன பண்றது?" என்று கவியையும், ஷைலுவையும் திட்டிக் கொண்டு இருந்தவனிடம்,

"கொஞ்சம் அங்க பாரு தம்பி!" என்று சொல்லி அவன் முகவாயில் கை வைத்து திருப்பினாள் கவிப்ரியா. பார்கவும் அபிநயாவும் ஒருவரில் ஒருவர் மூழ்கி உலகை மறந்திருந்தனர்.

"பெல் அடிச்சா உள்ள வரணும்னு சொல்லி கஷ்டப்பட்டு பெல் எடுத்துட்டு அத கையில வச்சுட்டு ரெண்டும் நம்மள மறந்தே போயிருச்சுங்க போல.....வாங்க நம்ம உள்ள போகலாம்!" என்று சிரித்தவளிடம் ஷைலஜா "கவி அக்கா உன் ப்ளான் சூப்பர்!" என்று அவளை கட்டியணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

ஒத்தையில போகும்
ஒத்தையடி பாதை
உச்சந்தல வகிடாச்சே!
உச்சி மல ஏறும் வண்டித்தடம்
போல ரெட்ட ஜட விழுதாச்சே!
தண்ணீர் ஆடும் கரகாட்டம்
இவ நெஞ்சு மேல மழை மூட்டம்
கட்டிப் போட்ட புயலாட்டம்
இவ கிட்ட போனா பயங்காட்டும்
தந்தனானா தந்தனானா தந்தனானா
தந்தனானா தானேனான தந்தனானா
என்று பாட்டு பாடிய படி நள்ளிரவு பதினொன்றரை மணியளவில் உப்புமாவை கிளறிக் கொண்டு இருந்தான் இசக்கி ராசு.

மாணிக்கத்தின் அடக்கம் முடிந்து சிறு சிறு சடங்குகளை செய்து விட்டு விஷயம் அறிந்து துக்கத்தில் பங்கெடுக்க வந்திருந்த அனைவருக்கும் விடை கூறி வழியனுப்பி விட்டு இனியாவும் மற்ற உதவியாட்களும் எட்டரை மணியளவில் அனைவருக்கும் உணவு பரிமாறி சமையல் அறையை சுத்தம் செய்து விட்டு அப்பத்தாவையும் அழைத்துக் கொண்டு கெஸ்ட் ரூமில் போய் படுத்து விட்டாள். அப்பத்தாவுக்கும் ஜீவா மற்றும் இனியாவை நிறைய ஆறுதல் படுத்தும் வேலை இருந்ததால் அவரும் மாத்திரைகளை போட்டுக்கொண்டு படுத்தவுடன் உறங்கி விட்டார்.

மனைவி கஷ்டப்படுவாள் என்று ரெண்டு தோசைகளுடன் கால் வயிறாக எழுந்து விட்ட ராசுவுக்கு சற்று நேரத்தில் அவனது வயிறு என்னைக் கவனி என்று கூப்பிட்டு எழுப்பி அமர்த்தியே வைத்து விட்டது.

இரு பெண்களையும் எழுப்ப மனம் வராமல் கரண்டியை கையில் பிடித்துக் கொண்டு உப்புமாவை தயார் செய்ய ஆரம்பித்து விட்டான்.

சக்கரம் சுழல்வது போல் வந்த ஒரு ஒலியில் "யப்பே!" என்று பயந்தடித்து திகைத்து திரும்பி பார்த்தால் பின்னால் ஒன்றையும் காணவில்லை. கண்களில் பயத்துடன் தயாரான உப்புமாவை இருபுறமும் பிடித்து இறக்கிக் கொண்டு இருந்த போது மறுபடியும் சத்தம். மறுபடியும் அமைதி, தட்டில் எடுத்து வைத்து சாப்பிட அமர்ந்த போது மறுபடியும் சத்தம் மறுபடியும் அமைதி. அவன் முடிவெடுத்து விட்டான்.

விட்டத்தை பார்த்து, "இனியா புள்ளைக்கு தாத்தா முறைன்னா நீங்க எனக்கு அப்பச்சி முறை வேணும், உங்க விசுவாசம்லாம் சரித்தேன்.....ஆனாக்க இன்னும் இங்கனயே சுத்திகிட்டு கிடக்குறது நல்லதில்லலா...... எரும கணக்கா இருந்தாலும் இன்னமும் கன்னி கழியாத பையன் நானு..... எசவா இருக்குன்னு என் மேல கண்டா ஏறி உட்கார்ந்துகிடாதீக அப்பச்சி!" என்று கைகூப்பியவனை பார்த்து சிரிப்புடன் சமையலறை வாசலில் நின்று கொண்டு,

"இவ்வளவு மரியாதைல்லாம் எனக்கு வேண்டாம்டா மாப்பிள்ளை...... நீ பிசாசு மாதிரி கிச்சனுக்குள்ள உலாத்திட்டு மாணிக்கம் தாத்தாவை எதுக்குடா பேச்சுவார்த்தைக்கு கூப்பிடுற...... அவரால ஆறு பேருக்கு ஆர்கன்ஸ் கிடைக்கப் போகுது, இது வரைக்கும் அவர் சம்பள பணத்தில சேர்த்து வச்ச அமௌண்ட்டை எல்லாம் அப்படியே சஹாயனுக்கு டொனேட் பண்ணியிருக்காரு. பத்து வருஷ எஸ்.ஜே.என், ருசி அக்கவுண்ட்ஸை அழகா பைல் பண்ணி ரொம்ப ஈஸியா அக்செஸ் பண்ற மாதிரி ஹாண்ட் ரிட்டர்ன் காப்பி குடுத்துட்டு போயிருக்கார். வாழும் போது மட்டுமில்ல, போகும் போது கூட அடுத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு போறவர் எதுக்குடா ஆவியா அலையப் போறாரு? அவரை மாதிரி ஒரு ஆர்கனைஸ்டு லிவிங் எல்லாம் சான்ஸ்லெஸ்!" என்று சொன்னவனிடம்

"நம்மட்ட வேலை பார்க்குறவங்களும் மனுஷங்கதேன்...... நம்பள மாதிரி அவுங்களும் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறதாலதேன் மாமா இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்துருக்காருலே.....அந்த சத்தம் நீ தேன் குடுத்தியா? அது என்ன சத்தம்லே?" என்று கேட்டவனிடம் தன் ரிமோட் கண்ட்ரோல் ஹம்மர் காரை நீட்டினான் ஜீவானந்தன்.

"டேய் மச்சி குழந்தைங்க விளையாடுற சாமானை வச்சுட்டு என்னடா விளையாண்டுட்டு இருக்க கூறுகெட்டவனே......" என்று அவனை திட்டினான் இசக்கிராசு.

"மாணிக்கம் தாத்தா இஸ் நோமோர். பட் இப்ப எனக்கு ஸேட் ஃபீல் குடுக்கலடா ராசு, அவரோட முடிவு நிறைய பேர் வாழ்க்கைக்கு ஒரு தொடக்கமா இருக்கப்போகுது. தனியா ரூம்ல டீவி பார்த்து போர் அடிச்சது, அதான் ஹம்மரை எடுத்துட்டு கொஞ்ச நேரம் விளையாடலாம்னு வந்தேன். கிச்சனை க்ராஸ் பண்ணும் போது ஒரு கேவலமான குரல் கேட்டுச்சு, அதான் விளையாட்டை உங்கூட கொஞ்சம் விளையாடலாம்னு தோணுச்சு. ராசு இஃப் யூ டோண்ட் மைண்ட் நானும் கொஞ்சம் உப்புமாவை ஷேர் பண்ணிக்கலாமா?" என்று கேட்டவனிடம் சிரிப்புடன் "வாடா மச்சி பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவம்!" என்று சொல்லி அவனை உள்ளே கூப்பிட்டு சுவரருகில் ஓடிய எறும்புகளுக்கும் சிறு உணவை தூவினான் ராசு.

சாப்பிட்டு கொண்டே இருவரும் பொதுவாக பேசிக் கொண்டிருந்த போது ஜீவா தயக்கத்துடன் அவனிடம்,
"டேய் மாப்பிள்ளை உன் கிட்ட ஒண்ணு கேக்கட்டுமா? இனியாவுக்கு முதல்ல உன்னை பிடிக்கவேயில்ல, பட் இப்போ அவ கிட்ட நிறைய சேன்சஜ் தெரியுதே.... அவளை லவ் பண்ண வைக்க நீ என்ன மேஜிக் பண்ணின?" என்று கொஞ்சம் ஆர்வமாக கேட்டவனிடம்,

"ஒரு மந்திரமும் பண்ணலடா, நான் நானா இருந்தேன். அவ்வளவுதேன்; ஆனா இனியா புள்ள இருக்காலே..... இங்க இருக்கும் போது பேசுற சத்தம் கூட வெளிய வரமாட்டேங்கு, அம்பைக்கு போயிட்டா ஒடம்புல தனி பவரு வந்து என்னைய...... இந்த மொக்கை ராச கைநீட்டி அறையுறாடா; நானும் வெக்கமே இல்லாம பொஞ்சாதி தானே அடிக்குறான்னு அதை வாங்கிக்க வேண்டியதிருக்கு. ஆனா கல்யாணம் பண்ணினதுக்குப்புறம் அவளுக்காவே வாழ்ற வாழ்க்கை ரொம்ப சொகமாயிருக்குடா மச்சி!" என்று சொன்னவனை குழப்பமாக நோக்கி,

"உன் லைஃப்ல பர்ஸ்ட் ப்ரியாரிட்டி இனியாவுக்கு தானா...... நான் உன்ன மாதிரி இல்ல. கவியை விட முக்கியமானவங்களுக்கு தான் ப்ரியாரிட்டி லைக் அம்மா, அப்பா, தங்கச்சிங்க, தாத்தா பாட்டி, பாகி, விவேக் சித்தப்பா, நம்ம வொர்க்கர்ஸ், தீராஸ் ப்ரெண்ட்ஸ், அபி, நீ, பவின், அதுக்கப்புறம் தான் அவ......" என்று சொன்னவனை ஒரு விநோதமான பார்வை பார்த்து விட்டு,

"சக்தி முத்துவ விட்டுட்டடா ஜீவா..... அதுகளையும் சொல்லிட்டு அப்புறமா தங்கச்சி பேரை சொல்லு!" என்றான் கிண்டல் குரலில். ஜீவானந்தன் "ஆமால்ல ஸாரிடா குட்டீஸ் ரெண்டு பேரும் கோபிச்சுக்க போறாங்க!" என்று சொல்லி விட்டு சிரித்தான்.

ராசு ஒரு பெருமூச்சுடன் தன் கைக்கடிகாரத்தை பார்த்து விட்டு, "வர்றியா தோட்டத்துல கொஞ்ச நேரம் நடந்துட்டு வரலாம், உனக்கு தூக்கம் வரலயே....." என்று கேட்டான்.

"யாராவது ஜாலியா பேச கம்பெனி குடுத்தா நான் ரொம்ப ப்ரிஸ்கா இருப்பேன்டா மாப்பிள்ளை; வா இன்னிக்கு நிறைய பேசிட்டு இருக்கலாம்!" என்று சொல்லி விட்டு மகிழ்ச்சியுடன் ராசுவை உள்ளே அழைத்து சென்றான்.

இருவரும் ஜெர்கின்ஸ் சகிதமாக சில பல நொறுக்கு தீனிகள், பிஸ்கெட், குளிர் பானங்கள், ப்ளாஸ்க்கில் பால், ஜீவாவின் ஹாண்டிகேம் என்று தயாராக்கிக் கொண்டு வெளியே வந்த நேரத்தில் ஜீவானந்தனின் சுயசரிதையை அவனே சொல்லி அது ராசுவுக்கு தெரிய வந்திருந்தது.

"டேய் பிக் பாய் இந்த கான்வர்ஷேஸனை நான் ரெக்காட் பண்ண போறேன், என்னல்லாம் உளறி இருக்கோம்ன்னு காலையில கேட்டா சிரிப்பா இருக்கும்!" என்று சொல்லிக் கொண்டே ஜீவானந்தன் ஹேண்டிகாமை இருவரும் தெரியுமாறு ஓர் டேபிளில் வைத்த பிறகும் இசக்கிராசு யோசனையுடன் தான் அமர்ந்து இருந்தான்.

"ஏய் என்னடா ஒரே யோசனையில உட்கார்ந்து இருக்க?" என்று கேட்டு சிரித்தவனை முறைத்தவன்,

"ஜீவா உங்கிட்ட சிலபல கேள்வி கேக்கணும், அதுக்கு உண்மையான பதிலைச் சொல்லுவியாடா? ஏதாவது கோணக்களி பண்ணின பிச்சுப்புடுவேன் பிச்சு!" என்று தெரிவித்து சற்று விரைப்பாக அமர்ந்திருந்தவனிடம் "கேளுடா நிறைய பேசுவோம்!" என்று தலையாட்டினான் ஜீவா.

"நீ உண்மையிலேயே கவிப்ரியாவை லவ் பண்றியா? இல்ல உன் கூட விளையாட மாமன் மக வேணும்னு கட்டிக்கப் போறியா?" என்றான்.

ஜீவா ராசுவிடம், "எதுக்குடா இப்படி ஒரு கேள்வி? நான் கவிக்கு என்ன செய்யலன்ற? நாங்க ரெண்டு பேரும் எவ்வளவு அண்டர்ஸ்டாண்டிங் தெரியுமா?" என்று கேட்டவனிடம்

"லேய் அந்த புள்ள பொறந்ததுல இருந்து உன் கூடத்தேன் சுத்திட்டு இருக்கு. இதுல அது நினைக்கிற மாதிரி நீ நினைக்குறதும் கண் காது மூக்க தொட்டு கலர கண்டுபிடிக்குறதும் ஒரு விஷயமா? இதுதேன் உங்களுக்கு இருக்கிற அண்டர்ஸ்டாண்டிங்கா? வேற ஏதாவது சொல்லு!" என்றான் சற்று எரிச்சலுடன்.

ஜீவா கார் என்று வாயை திறக்கும் முன்னரே ராசு கொதித்துப் போய் விட்டான்.

"நீ அந்தப் புள்ள கிட்ட ஸீன் போட்டுருக்க கூவ; இல்லாதவன் கண்ணாடியை போட்டுகிட்டு ஸீன் போடுவாய்ங்க, நீ இருக்கப்பட்டவன் காரை காமிச்சு ஸீன் போட்டுருக்க..... இல்ல நான் கேக்கேன். மூணு கார் வாங்குனியே..... உங்க எஸ்டேட்ல வரிசையா கார்தேன் அஞ்சாறு நிக்குதுல்ல; உண்மையில அந்த பொண்ணுக்காகதே வண்டியை வாங்கினேன்னு சொன்னீன்னா அவுகட்ட ஏதாவது ஒரு காரை குடுத்துருக்க வேண்டியதுதேன, ஏன் குடுக்கல, அவுக உன் கிட்ட பேச ஆரம்பிச்ச உடனே நாலாவதா ஏன் இன்னொரு கார் வாங்கல?" என்று கேட்ட ராசுவிடம்,

"வாங்கணும்னு தோணலடா ராசு, கல்யாணத்துக்கு தான் கவிக்கு கிப்ட் பண்றேன்னு சொன்னேன்!" என்றான் ஜீவா.

"ஏன் வாங்கணும்னு தோணல.... பொண்ணுதேன் மடிஞ்சிடுச்சுல்லன்னு விட்டுட்ட அப்படித்தேன் நினைச்சியோ!" என்று கேட்டவனிடம் "அப்படில்லாம் நினைக்கலடா" என்று மறுத்தான் ஜீவா.

"சரி விடு ரெண்டு பேரும் ரொம்ப வருஷமா பேசிக்காம இருந்து அதுக்கப்புறம் சேர்ந்தீங்களே...... அப்போ நீ என்ன சொன்ன? எல்லாரும் சேர்ந்து எனக்கு தண்டனை குடுக்காதீங்கன்னுதேன் சொல்லி அந்த பொண்ணை சமாதானம் பண்ணியிருக்க. நாளைக்கே கவிப்ரியா உங்கிட்ட வந்து நீ உன் குடும்பத்துல சேர்றதுக்காக என்னைய பின்னாடியே துரத்திட்டு வந்தியான்னு கேட்டா நீ ஆமாடீ
அதுக்குதேன் வந்தேன்னு சொல்லுவியா....... அந்த புள்ள உன்னைய கழட்டிட்டு அடிக்கும்!" என்று ராசு சொல்ல ஜீவா அமைதியாக இருந்தான்.

"அந்த புள்ள தயாரிச்ச சேலைய வாங்கி பத்திரமா பார்த்துக்குட்டு இருந்தேன்னு சொன்னியே..... அது கூட ஒரு உரிமை உணர்ச்சி தான்டா.... காதல் இல்லல்லா!" என்று சொன்னவனிடம் ஒன்றும் பேசாமல் தலையை கோதிக் கொண்டான் ஜீவானந்தன்.

"நீ ராசா வீட்டு கன்னுக்குட்டிலே.... உனக்கென்னய்யா காதல் பண்றதுக்கு பிரச்சனை? பொண்ணு பின்னடியே போய் இல்ல தூரத்துல நின்னுகிட்டு மூச்சு விட்டெல்லாம் அவங்க மனசுல இடம் பிடிக்க முடியாது. நீ தப்பு செஞ்சியா ஆமால்ல செஞ்சேன்னு சொல்லு. தப்பு செய்யலையா நெஞ்சை நிமுத்தி நான் செய்யலன்னு சொல்லிட்டு போ, சும்மா தியாகம் பண்றேன், எல்லாரையும் மிஸ் பண்றேன். ஏக்கமா இருக்கேன் தூக்கமா இருக்கேன்னு பேசக் கூடாது பார்த்துக்க. உங்க அப்பா, மாமனுக எல்லார்ட்டயும் போய் கேட்டுப் பாரு, உங்க வாழ்க்கையில யாரு உங்களுக்கு ரொம்ப முக்கியம்ன்னு.... நூல் பிடிச்சாப்ல எல்லாரும் என் பொஞ்சாதிதேன் முக்கியம்னு சொல்வாக; காட்டுல ஜீவாமிர்தக் கரைசல் தயாரிப்போமே... அத சரியான விகிதத்தில மண்ணுக்கு குடுத்தா ஒண்ணுமே விளையாத பூமி கூட பொன் விளையற பூமியா மாறிடும். அந்த மாதிரி தாமுலே ஒரு மனுஷனுக்கு கிடைக்குற பொண்டாட்டியும்! அப்பா, அம்மா சொந்தக்காரய்ங்க எல்லாம் முக்கியம் தான்.... இல்லைன்னு சொல்லல. ஆனா நீ சொன்னியே ப்ரியாரிட்டி அதை கவிப்ரியாவுக்கு குடு. அவதேன் உனக்கு கிடைச்ச பொக்கிஷம்னு நினைச்சுக்க, இவ்வளவு நாள் மாதிரி இல்லாம உன் ஆசை மொத்தத்தையும் அவளுக்கு புரிய வை, பொறவு இந்த புலம்பல், அழுகாச்சிக்கெல்லாம் இடமே இருக்காது. அந்தப் புள்ள உன் கிட்ட ஒருக்கா கூட இப்படி அர்த்தம் வர்ற மாதிரி பேசினதில்லையா? இல்ல அது பேசி உனக்கு புரியலையா?" என்று கேட்டவனிடம்,

"ம்ம்ம் அப்பப்போ சொல்லியிருக்காடா. அவளோட லவ்ல அவ கரெக்டா தான் இருந்துருக்கா இல்ல, என்னை அப்பா கூட பேச வச்சு, சக்தி முத்து நான் குடுத்ததா சொல்லி, என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணாம என்ன பண்றன்னு அவ அடம் பிடிக்குறதும் என்னை ரொம்ப மிஸ் பண்றதுனால தானோ? பேச ஆரம்பிச்ச புதுசுல ஆர்வக்கோளாறுல கொஞ்ச நாள் அவ கூட ஜாலியா ஒட்டிட்டே சுத்தினேன், எனக்கும் அது ரொம்ப பிடிச்சிருந்தது, பட் மறுபடியும் எங்களுக்குள்ள ஒரு கேப் விழுந்துடுச்சு போல...... எனக்கே தெரியலயேடா நீ எப்படி கண்டுபிடிச்ச?" என்று கேட்டவனிடம்

"உன் மொகரகட்டைய பார்த்தா தான் தெரியுதே..... ஆர்வக்கோளாறுல கூட ஒட்டிட்டு சுத்தினியா.... தங்கச்சி மட்டும் இத கேக்கணும், உனக்கு சங்குதேன்! அடுத்த தடவ வரும் போது பாப்பேன், நீ இப்ப இருக்குற மாதிரி என்னத்துக்கு வாழுறோம்னு சோக மியூசிக் போட்டுட்டு இருந்த கவிப்ரியா அவுக அப்பாட்ட நானே இவே அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான், உங்க மவளுக்கு வேற மாப்பிள்ளை பாரு சித்தப்புன்னு சொல்லுவேன், ஆமா நீ வயசுக்கு வந்துட்டியா? இல்லையாடா?" என்று கேட்ட ராசுவிடம் புன்னகையுடன்,

"என்னைய விட ஓவரா பேசாத ..... உந்தங்கச்சிய எக்ஸ்ப்ரிமெண்ட் பண்ணிட்டு அப்புறம் உங்கிட்ட பேசுறேன். சில நேரத்துல நம்ப செய்யுற தப்பு நமக்கு தெரியாம இது தான் சரின்னு நினைச்சுட்டு இருந்துர்றோம். இந்த ஜீவாவோட ஜீவாமிர்தம் கவிப்ரியா தான்; அவ என் கூட இருந்தா தான் நான் உயிரோட்டத்தோட இருப்பேன். உங்கிட்ட நிறைய விஷயம் ஷேர் பண்ணிகிட்டதுனால தான் என் தப்பு என்னன்னு எனக்கு தெரிஞ்சது. எல்லாத்துக்கும் தேங்க்ஸ் டா பிக் பாய்...... இனிமே பாரு ஜீவாவோட லவ்ஸை! என் பொண்டாட்டிக்கு தான் இனிமே என் மனசுல பர்ஸ்ட் ப்ரியாரிட்டி! இதை சொல்றதுக்கு எனக்கு கொஞ்சம் கூட தயக்கமில்ல. அம்முலு கெட் ரெடி யுவர் லவ்லி அத்தான் இஸ் கமிங் பார் யூ!" என்று கண்சிமிட்டி தன் மொபைல் ஸ்க்ரீன் ஸேவரில் கவியின் படத்தை முத்தமிட்டவனிடம்,

"அப்படிப் போடு அருவாள...... மச்சி போற போக்க பார்த்தா நாளைக்கே கல்யாணம் பண்ணிக்குவ போலிருக்கேடா.....!" என்று கேட்ட ராசுவிடம் ஒரு யோசனைப் பார்வையை செலுத்தியவன்,

"பண்ணிட்டா போச்சுடா பிக் பாய்..... அவளை எவ்வளவு லவ் பண்றேன்னு முதல்ல நான் தெரிஞ்சுட்டு ஒரு பின்ச் கூட குறையாம அந்த லவ்வை அப்படியே அவளுக்கும் குடுக்குறேன்டா! மணி ரெண்டு ஆச்சுடா. படுக்கப் போகலாம் என் ரூமுக்கு வா!" என்று கூப்பிட்டவனிடத்தில்

"நீ போடா எனக்கு தூக்கம் வரல, இந்த கூதக்காத்து உடம்புக்கு சுகமாயிருக்கு. இங்கண இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு வாரேன்!" என்றவனிடம் சிரிப்புடன்

"உடம்புக்கு வந்துடப்போகுது, சீக்கிரம் கதவை சாத்திட்டு உள்ள வா!" என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான் ஜீவானந்தன்.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Продовжити читання

Вам також сподобається

42.4K 1.2K 45
காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r
85.8K 4.5K 55
அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல...
12.9K 347 35
இது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்
95.5K 2.9K 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியா...