கண்டேன் என் ஜீவாமிர்தம்✔

By Vaishu1986

214K 9.9K 3K

பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நா... More

💟 ஜீவாமிர்தம் 1
💟 ஜீவாமிர்தம் 2
💟 ஜீவாமிர்தம் 3
💟 ஜீவாமிர்தம் 4
💟 ஜீவாமிர்தம் 5
💟 ஜீவாமிர்தம் 6
💟 ஜீவாமிர்தம் 7
💟 ஜீவாமிர்தம் 8
💟 ஜீவாமிர்தம் 9
💟 ஜீவாமிர்தம் 10
💟 ஜீவாமிர்தம் 11
💟 ஜீவாமிர்தம் 12
💟 ஜீவாமிர்தம் 13
💟 ஜீவாமிர்தம் 14
💟 ஜீவாமிர்தம் 15
💟 ஜீவாமிர்தம் 16
💟 ஜீவாமிர்தம் 17
💟 ஜீவாமிர்தம் 18
💟 ஜீவாமிர்தம் 19
💟 ஜீவாமிர்தம் 20
💟 ஜீவாமிர்தம் 21
💟 ஜீவாமிர்தம் 22
💟 ஜீவாமிர்தம் 23
💟 ஜீவாமிர்தம் 24
💟 ஜீவாமிர்தம் 25
💟 ஜீவாமிர்தம் 26
💟 ஜீவாமிர்தம் 27
💟 ஜீவாமிர்தம் 28
💟 ஜீவாமிர்தம் 29
💟 ஜீவாமிர்தம் 30
💟 ஜீவாமிர்தம் 31
💟 ஜீவாமிர்தம் 33
💟 ஜீவாமிர்தம் 34
💟 ஜீவாமிர்தம் 35
💟 ஜீவாமிர்தம் 36
💟 ஜீவாமிர்தம் 37
💟 ஜீவாமிர்தம் 38
💟 ஜீவாமிர்தம் 39
💟 ஜீவாமிர்தம் 40
💟 ஜீவாமிர்தம் 41
💟 ஜீவாமிர்தம் 42
💟 ஜீவாமிர்தம் 43
💟 ஜீவாமிர்தம் 44
💟 ஜீவாமிர்தம் 45
💟 ஜீவாமிர்தம் 46
💟 ஜீவாமிர்தம் 47
💟 ஜீவாமிர்தம் 48
💟 ஜீவாமிர்தம் 49
💟 ஜீவாமிர்தம் 50
💟 ஜீவாமிர்தம் 51
💟 ஜீவாமிர்தம் 52
💟 ஜீவாமிர்தம் 53
💟 ஜீவாமிர்தம் 54
💟 ஜீவாமிர்தம் 55
💟 ஜீவாமிர்தம் 56
💟 ஜீவாமிர்தம் 57
💟 ஜீவாமிர்தம் 58
💟 ஜீவாமிர்தம் 59
💟 ஜீவாமிர்தம் 60
💟 ஜீவாமிர்தம் 61
💟 ஜீவாமிர்தம் 62
💟 ஜீவாமிர்தம் 63
💟 ஜீவாமிர்தம் 64
💟 ஜீவாமிர்தம் 65
💟 ஜீவாமிர்தம் 66
💟 ஜீவாமிர்தம் 67
💟 ஜீவாமிர்தம் 68
💟 ஜீவாமிர்தம் 69
💟 ஜீவாமிர்தம் 70
💟 ஜீவாமிர்தம் 71
💟 ஜீவாமிர்தம் 72
💟 ஜீவாமிர்தம் 73
💟 ஜீவாமிர்தம் 74
💟 ஜீவாமிர்தம் 75

💟 ஜீவாமிர்தம் 32

2.2K 137 19
By Vaishu1986

வெளியே சென்ற தன் மகனையும் மருமகளையும் காணவில்லை என்று பதறிய ஜெய் நந்தனை நிர்மலா சிரிப்புடன் அமைதிப்படுத்திக் கொண்டு இருந்தார்.

"ஏய் பஞ்சு மூட்டை..... மணி பன்னிரண்டு ஆக பத்து நிமிஷம்டீ; அப்போலேர்ந்து நானும் கேட்டுட்டு இருக்கேன். நீ கைய கைய காட்டுற! ஆனந்த் எங்க தான் போயிருக்கான்?" என்று சற்று கோபத்துடன் கேட்டவரிடம்,

"அவன் தான் உங்களை மாதிரியே என் பியான்சியோட நான் ஊர் சுத்துவேன்னு சொல்லிட்டு போயிட்டான்ல ஸ்ரீ; அர்ஜுன் அண்ணாவே அதை காஷுவலா எடுத்துட்டு படுக்க போய்ட்டாங்க, நீங்க ஏன் இப்படி உருட்டிக்கிட்டு இருக்கீங்க.... தூக்கம் வரலைன்னா ஒண்ணு செய்றீங்களா?" என்று கேட்ட தன் மனைவியிடம்,

"செய்யலாமே.... என்னடா செல்லம் செய்யலாம்? நீ குட்டி சக்தி முத்து வந்ததுலேர்ந்து என் பக்கத்துலயே வர மாட்டேங்குற; இன்னிக்கு வேணும்னா பேபீஸ வெளிய விட்டுட்டு வந்துரட்டுமா?" என்று கேட்டவரிடம்,

"அது உங்க பாடு மிஸ்டர் நந்தன்.... கொஞ்ச நாளா அதாவது மிஸ்டர் ஜீவானந்தன் இங்க வந்ததுலேர்ந்து நீங்க மிஸ் ஷைலஜாவை சரியா கண்டுக்கறதில்லையாம். அந்த மேடம் எங்கிட்ட கம்ப்ளையிண்ட் பண்ணியிருக்காங்க. ஸோ போய் அவளுக்கு சோப் போடுங்க. இதோ விவேக் வந்துட்டாங்க பாருங்க!" என்று சொன்னார் தன் கண்களை கசக்கி கொண்டு.

மருத்துவமனையில் இருந்து வந்தவுடன் தன் அண்ணன் அண்ணியிடம் மாணிக்கத்தின்  நிலைமையை தெரிவித்த விவேக், மாணிக்கத்திற்கு இப்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், இன்னும் இரண்டு வாரங்களுக்கு அவரை மருத்துவரின் கண்காணிப்பில் வைத்து இருக்க சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்லி விட்டு இனியாவின் அருகே சென்று நின்றார்.

ராசுவிடம், "நீ இன்னும் கிளம்பலையா?" என்று அவர் கேட்க ஜெய் நந்தன் விவேக்கிடம்,

"என்னடா விவேக்...... மாப்பிள்ளையோட மாலையும் கழுத்துமா நிக்குற நம்ம லட்டுவுக்கு அதை நீ பார்க்கணும்ன்னு ஆசையா இருக்காதா? சீக்கிரமே நீ வந்துருவன்னு எதிர்பார்த்தேன். நீ வர லேட் ஆனதால மாப்பிள்ளைய நான் தான் காலையில கிளம்பிக்கலாம்ன்னு சொல்லி நிறுத்தி வச்சேன்!" என்றார் சற்று வருத்தத்துடன்.

விவேக் தன் அண்ணனின் அருகில் சென்று, " மாணிக்கம் அண்ணா வீட்ல இருந்து யாராவது வந்துட்டா கொஞ்சம் பயமில்லாம கிளம்பி வரலாம்னு நினைச்சேன்ண்ணா; ஆனா யாரும் வரவேயில்லை. போன் பண்ணினதுக்கப்புறமும் அவர் வீட்ல இருக்கிறவங்க அவருக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, நாங்க எதுக்கும் அங்க வர மாட்டோம். எது நடந்தாலும் நீங்களே பார்த்துக்கோங்கன்னு சொன்னாங்க. எனக்கு கோபம் வந்துடுச்சு. நல்லா திட்டிட்டு போனை வச்சுட்டேன்! இனுக்குட்டிக்கு நீங்க எல்லாம் இருக்கீங்கல்லண்ணா.... அவ சந்தோஷமா தான் இருப்பா!" என்று சொல்லியவரிடம் கோபத்துடன்,

"யோவ் விவேக்கு மாமா...... நாங்க எல்லாம் இருந்தாப்ல எப்படிய்யா உம் புள்ள சந்தோஷமா இருப்பா.... உனக்கு ரொம்ப தெரியுமோ? ஒரு பொருட்காட்சிக்கு கூட்டிட்டு போனா  ஒரு வளவி வாங்கி குடுடான்னு  எங்கிட்ட கேக்குறதுக்கு கூட அம்புட்டு யோசிக்கிறாய்யா..... ரெண்டு நாள் தேன் அவள கூட்டிட்டு சுத்தினேன். அப்பா இப்படி எல்லாம் எங்கூட வரமாட்டாக; அவுகளுக்கு இதுக்கு எல்லாம் நேரமே இருக்காது, ஷைலு புள்ள பெரியப்பா, பெரியம்மா என்ன பார்த்துக்கற மாதிரியே நீயும் பார்த்துக்குற மாமாங்குது...... அம்பது ரூபா வளவிக்கே இம்புட்டு சந்தோஷப்படுறான்னா உன் நேரத்தை அவளுக்காக குடுத்தீன்னா எம்புட்டு சந்தோஷப்படுவா? புள்ள இங்க இருக்கிற வரைக்கும் அவளை நல்லா பார்த்துக்க மாமா. நாளப்பின்ன கல்யாணம் ஆனவுடனே என் மக கூட கொஞ்சம் நேரம் கூட பேசிக்கிட்டு இருக்கலியேன்னு விசனப்பட்டீன்னா அப்போ எம் பொஞ்சாதியை உங்கிட்ட அனுப்பி வக்க மாட்டேன் பார்த்துக்க!" என்று சொல்லி தன் மாமனை முறைத்தான் இசக்கி ராசு.

"ச்சூ.... சும்மாயிருங்க!" என்று வாயில் விரல் வைத்து அவனை மிரட்டியவளிடம்,

"ஏட்டீ உனக்காக தானட்டீ பேசிக்கிட்டு இருக்கேன். அப்படித்தான் பேசுவேன்!" என்றான் சட்டைக் காலரை பிடித்து சட்டையை பின்னால் தள்ளி விட்டவாறு.

"விவேக் இங்க வாங்க. பிள்ளைங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க!" என்று அவர் கையில் குங்குமச் சிமிழை நீட்டிய தன் அண்ணியிடம் இருந்து அதைப் பெற்றுக் கொண்டவர்,  இனியாவும் ராசுவும் அவர் கால்களில் பணிந்ததும் சற்று கலங்கி விட்டார்.

"இப்ப எதுக்கு இந்த முழி முழிச்சிட்டு நிக்குற... நல்லா இருங்கன்னு சொல்றதுக்கு கூட நல்ல நேரம் பார்த்துட்டு நிப்பியா?" என்று எரிச்சல் பட்டவனிடம்,

"நல்லா இருடா கோட்டிக்கார பயபுள்ள...... நான் என் புள்ளைய நல்லா பார்த்துக்கலன்னு என்னைய ஏசத் தெரியுதுல்ல; அந்த மாதிரி உன் புள்ள வந்து எங்கம்மாவை நீ ஏன் நல்லா பார்த்துக்கலன்னு கேள்வி கேக்க விட்டுடாத! இனுக்குட்டி எதையும் கேட்டு வாங்கிக்குற பொண்ணு கிடையாது, நாம தான் பார்த்து பார்த்து செய்யணும். நீ சொன்ன மாதிரி நான் அவளுக்காக எதுவும் செஞ்சதில்ல தான்..... ஆனா என்னை விட நல்லா பார்த்துப்பாங்கன்னு தெரிஞ்சு தான் எங்கண்ணா கிட்ட  ஒப்படைச்சுட்டேன், இப்போ அவங்க உன் கிட்ட அவளை குடுத்துருக்காங்க. ஏன்டா நம்ம இனியா வாழ்க்கையில தேவையில்லாம இவன் நுழைஞ்சான்னு யாரும் ஒருநாளும் கேள்வி கேக்காத மாதிரி பார்த்துக்க, அர்ஜுன் ஸார், ராம் ஸார் எல்லாரும் நாளைக்கு காலையில தான் கிளம்புறாங்க. நீயும் அப்போ கிளம்பு, இன்னிக்கு எங்கூட படுத்துக்க!" என்று சொல்லி விட்டு தன் அண்ணன் அண்ணியிடம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தார் விவேக். நல்ல பிள்ளையாக தலையை ஆட்டி விட்டு இனியாவின் கையைப் பிடித்து கொண்டு வெளியே சென்று விட்டான் ராசு.

"ச்சை.... கிரகம்; ஏட்டி சிட்டு இவர் கூட படுக்கறதுக்கா நான் மூச்சை புடிச்சிக்கிட்டு இம்புட்டு கதை பேசினேன்...... சீக்கிரம் உங்க வீட்டுக்கு போவோம் வாடி! உங்க அப்பா வர்றதுக்குள்ள ரெண்டு மூணு முத்தாவாச்சு குடுடீ!" என்று தன் உதட்டை தன் கைகளால் பிடித்து இனியாவை போல் ஆட்டியவனிடம்,

"மிஸ்டர் மொக்கை ரெண்டும் மூணும் அஞ்சு..... அத்தனை வேணுமா உங்களுக்கு?" என்று கேட்ட படி அவனுடன் நடந்தவள் கைகளைப் பிடித்து அவளிடம் காட்டி,

"அய் வூட்டுக்காரி கூட்டினா நாங்க பெருக்குவோம்லா.... இங்க பாரு சிட்டுக்குருவி உன் ஒரு விரல்ல நடுவால ரெண்டு கோடு இருக்கா; அப்போ ஒரு விரலுக்கு மூணு; மொத்தத்தில பதினைஞ்சு!" என்று கண்சிமிட்டி தன் மீசையை விரல்களால் நீவியவனிடம்,

"ம்ஹூம்; இது சீட்டிங்.....நீ எங்கப்பா கிட்ட அடி வாங்க போற; ஐயோ விடுடா மாமா!" என்று கெஞ்சிக் கொண்டிருந்த தன் மனைவியை அவள் அறைக்குள் நகர்த்தி சென்றிருந்தான் இசக்கி ராசு.

மறு நாள் காலையில் தன் புல்லட்டில் ஏறி அமர்ந்து கொண்டு "ஏட்டி கிளம்பட்டுமா?" என்று கேட்ட தன் கணவனை பரிதவிப்புடன் பார்த்து கொண்டு நின்று கை அசைத்துக் கொண்டு இருந்தாள் இனியா.

"போக மனசேயில்லடி....இங்கயே உங்க பெரியப்பா தோட்டத்துல ஆள் காரனா நீ படிச்சு முடிக்கிற வரைக்கும் உட்கார்ந்துடலாமான்னு பாக்கேன். ஆனா அப்பத்தா என்னைய நோங்கும்! அதான் ஒரே யோசனையா இருக்கு!" என்று சொன்னவனும் முகத்தில் கவலையை காட்டி கொண்டு இருந்தான்.

"பரவாயில்லைடா மச்சான்! இன்னும் ஒரு மாசத்துல ஏதாவது காரணம் சொல்லிட்டு வந்துட்டு போ!" என்றான் ஜீவானந்தன். கவிப்ரியாவை கூட்டிக் கொண்டு அரைமணி நேரம் முன்னால் தான் வந்திருந்தான். ஏதோ கோபமாக பேச வாய் திறந்த அர்ஜுனிடம்,

"மாமு திட்டிக்கிட்டு நின்னுட்டு இருந்தேன்னா இன்னும் லேட் ஆகும், ஹாப் அ டே ல காலேஜ் போக முடியாது. ஊருக்கு போயிட்டு மொத்தமா திட்டு, எல்லாத்தையும் நானே வாங்கிக்குறேன்!" என்றான் ஜீவானந்தன்.

"லட்டு காலேஜ்க்கு கிளம்பி வர்ற ஐடியா இருக்கா இல்லையா..... ஃபிப்டீன் மினிட்ஸ்ல கிளம்பணும்!" என்று சொல்லி கைக் கடிகாரத்தில் கண்பதித்த ஷைலஜாவிடம்,

"இன்னும் ஃபைவ் மினிட்ஸ் பேசிட்டு இருக்கட்டுமே ஷைலு; நீ போய் அத்தை கிட்ட பாகி அத்தானுக்கு ப்ரேக் பாஸ்ட் பாக் பண்ணிட்டாங்களான்னு கேட்டு எடுத்துட்டு ஓடிவா பார்ப்போம்!" என்று சொல்லி விட்டு தன் அன்னை தந்தை பெரியம்மா, பெரியப்பா, அனைவரையும் காரிலேற்றி ஜீவா கவி, ராசு இனியா இரு ஜோடிகளுக்கும் தன்னால் முடிந்த தனிமையை கொடுத்து புறப்பட தயாராகிக் கொண்டிருந்தான் பார்கவ்.

"போயிட்டு வரட்டுமா மச்சான்?" என்று கேட்ட கவிப்ரியாவிடம்,

"பை அம்முலு! நீ KPR சொன்னதுல இருந்து மச்சான் ஹாப்பியோ ஹாப்பி; நீ ஐ லவ் யூ சொல்லி இருந்தா கூட இவ்வளவு சந்தோஷமா இருந்திருக்குமான்னு தெரியல. டென் டேஸ்ல ஏதாவது வேலையை ரெடி பண்ணிட்டு சென்னைக்கு வர்றேன். பை டீ!" என்று சொல்லி விட்டு தன் அத்தை மாமாக்களை கொஞ்ச ஓடி விட்டான் ஜீவானந்தன்.

ஜெயந்தனிடம் சென்று சாவியை திருப்பிக் கொடுத்தவனிடம், "பிரச்சனைய முடிச்சிட்டியாடா?" என்று கேட்டார் ஜெயந்தன்.

"இதுவரைக்கும் வந்த பிரச்சனை முடிஞ்சிடுச்சு தாத்தா. பட் இனிமே கூட எந்த பிரச்சனையும் வராம இருக்கணும்!" என்று தலைக்கு மேல் கை கூப்பியவனிடம்,

"உங்கம்மா, அத்தைங்க மாதிரி கவிம்மாவும், ரூபியும் இல்லடா, ரெண்டு பேருக்கும் நிறைய கோபம் வருது. அவங்களை கொஞ்சம் கண்டுக்கலைன்னா கூட எரிச்சல் படுறாங்க. நீயும் ஷைலுவுக்கு வரப் போற மாப்பிள்ளையும் பாவம்டா!" என்று சொன்னவரிடம் மறுப்பாக தலையை ஆட்டியவன்,

"எல்லா விஷயத்துலயும் ரெண்டு சைட் இருக்கு தாத்தா; கவிம்மாவுக்கு எதாவது ஆகியிருந்தான்னு பயந்து கோபத்துல நான் அவளை அடிச்சேன். என்னை பத்திரமா பார்த்துக்க வேண்டிய ஜீவா என்னைய அடிச்சுட்டான்னு அவ கோபப்பட்டா. அப்பா கிட்ட நான் பேசல அப்போ நாங்களும் அண்ணா கூட பேச மாட்டோம்னு ரெண்டும் சுத்துச்சுங்க. என்னை தனியா விட்டுட்டு அம்மா தங்கச்சிங்க கூட என்னைய பார்க்க வரலன்னு நான் கோபப்பட்டேன். அவரவர் வ்யூல இருந்து அவரவர் ஆர்க்யூமெண்ட் கரெக்ட் தான்; ஆனா ஆர்க்யூ பண்ணிக்கிட்டே இருக்கிறது தான் தப்பு! ஸாரி தப்பு என் பக்கத்துல தான்னு சொல்லிட்டா முடிஞ்சது...... என் தங்கச்சி கிட்டயும், என் பொண்டாட்டி கிட்டயும் சண்டை போட்டுட்டு அதுல ஜெயிச்சு நான் என்ன பண்ணப் போறேன் தாத்தா? டைமாச்சு, எல்லாரும் கிளம்புறாங்க. வாங்க தாத்தா!" என்று சொல்லி அவரை அழைத்து சென்று அனைவரையும் சிரிப்புடன் கையசைத்து வழியனுப்பி வைத்தான் ஜீவானந்தன்.

"இனியா ஷைலு நீங்க இன்னும் காலேஜ்க்கு போகலையாடா? வண்டியில ஏறுங்க அண்ணா ட்ராப் பண்றேன்!" என்று சொன்ன ஜீவானந்தனிடம் ஜெய்நந்தன்,

"ஆனந்த் இன்னிக்கு லட்டுவையும், ரூபினியையும் நான் ட்ராப் பண்ணிடுறேனே....... உந்தங்கச்சி என் மேல கொஞ்சம் கோபமா இருக்காங்களாம். மேலிடத்தில் இருந்து தகவல் வந்தது!" என்று சொல்லி விட்டு முகத்தை பரிதாபமாக வைத்து கொண்டு நின்றவரிடம் சென்று,

"அப்பா அம்மா தப்பா சொல்லிட்டாங்க. நான் உங்க மேல கொஞ்சம் கோபமா இல்ல, கொலைவெறியில இருக்கேன். உங்க மகனும், மருமகளும், புதுசா ஒரு மாப்பிள்ளையும் வந்துட்டா என்னை கண்டுக்க மாட்டீங்கல்ல நீங்க.... போங்க உங்க தங்கச்சி மருமக கூடவே போய் கொஞ்சுங்க, டேய் அண்ணா வாடா காலேஜ்க்கு டைமாச்சு!" என்று சொல்லி கோபத்துடன் நடந்தவளைப் பார்த்து ஜீவானந்தன் தலையில் கைவைத்து கொள்ள இனியாவும், ஜெய் நந்தனும் "ரூபி நில்லுடீ என் அழகு ரூபினி நில்லுடா தங்கம்!" என்று கெஞ்சிக் கொண்டு அவள் பின் ஓடிக் கொண்டிருந்தனர்.

சென்னையில் அதே நேரத்தில் ராகினி கௌதமனிடம் ஒருவன் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்து சண்டை போட்டுக் கொண்டு இருந்தான்.

"வினு ப்ளீஸ் லிஸன் டூ மீ...... அந்தப் பொண்ணை உனக்காக பார்த்தது, அவ கூட கல்யாணம் வரைக்கும் போனது எல்லாமே என் தப்பு தான்டா; அவளுக்கு உன்னை விட வேற எதுவோ முக்கியம்ன்னு தோணுச்சு. போயிட்டா; அதுக்காக நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றதுல என்ன கண்ணா லாஜிக் இருக்கு? அங்கிள், ஆன்ட்டி, ஜீவா, ஷைலு எல்லார் கிட்டயும் இந்த விஷயத்தை சொல்லியாச்சுடா, அவங்க யாருமே இந்த விஷயத்தை பெரிசா எடுத்துக்கல. நல்ல பொண்ணு, நல்ல பேமிலி.... இதுல எந்த தப்பும் நடக்காது. அம்மாவை நம்பி இந்த ஒரு தடவை என் கூட வா வினு....." என்று சொன்ன ராகினியிடம்,

"மாம் உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்குறது.... தட் கேர்ள் ஷைலு ஒரு ஹ்யூமன் ரோபோ மாதிரி இருந்தா. ஒரு வேலையை செய்ன்னு அவங்க அப்பா சொன்னாங்க, செஞ்சா. தட்ஸ் இட்! இப்பவும் என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு அவங்க அப்பா சொல்லி இருப்பாரு, தலையை ஆட்டிட்டு போய் உட்கார்ந்து இருப்பா. எனக்கு வரப் போற பொண்டாட்டி என் கூட சண்டை பிடிக்கணும், ரெஸ்பான்ஸிபிளிட்டீஸ் எடுத்துக்கணும். பேமிலியில அட்டாச்டா இருக்கணும். புது புது கமிட்மெண்ட் வச்சுக்கணும், அதெல்லாம் இல்லாம தலையாட்டுற ஒரு ஷோரூம் பொம்மை எனக்கு வேண்டவே வேண்டாம்!" என்று சொல்லி விட்டு ஸோஃபாவில் பெரிய மூச்சுடன் அமர்ந்தவனிடம் கௌதமன்,

"பவின் என் பையன் வாழ்க்கையில எங்களால ஒரு தப்பு நடந்துடுச்சுன்னு ஜெய் கிட்ட ஃபீல் பண்ணினேன். கொஞ்ச நேரம் அவன் ஒண்ணுமே பேசல. போனை வச்சுட்டான். ஆனா பத்தாவது நிமிஷம் மறுபடியும் கூப்பிட்டு உனக்கு ஆட்சபணை இல்லன்னா என் பொண்ணை உங்க வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு போடா கௌன்னு சொன்னான். நீ பிறந்தவுடனே ஒண்ணும் லேப் டெக்னீஷியன் ஆகிடலையே? அதுக்கு முன்னாடி எத்தனை படிச்சு எவ்வளவு கத்துக்கிட்டு வந்த...... அதே மாதிரி ஷைலுவும் எல்லாத்தையும் கத்துக்குவா. எங்க மேல உனக்கு  மரியாதை இருந்தா...... இருக்கும்னு நினைக்கிறேன் ஒரு தடவை கொடைக்கானல் வந்துட்டு உன் ஒப்பீனியன் சொல்லு!" என்று சொன்ன கௌதமனிடம் ஒரு முறைப்பை தந்தவன்,

"போய்த் தொலைவோம்!" என்று சொல்லி கையில் வைத்திருந்த மேகஸினை டீப்பாயில் வீசி விட்டு அவன் அறைக்கு சென்றான்.

"கௌதம் எல்லாம் சரியா தான் போயிட்டு இருக்குதாப்பா?" என்று கேட்ட தன் மனைவியை அணைத்துக் கொண்டவர், "டோண்ட் வொர்ரி ராகி மாவு, உனக்கு ஷைலு தான் மருமக; இங்க வந்த பிறகு எப்படியாவது அவளுக்கு ஃபில்டர் காஃபி போட கத்து குடுத்துடு செல்லம், எல்லாம் ஓகே ஆகிடும்!" என்று சொன்ன தன் கணவனிடம் புன்னகைத்தார் ராகினி.

ஜீவாமிர்தம் சுரக்கும்!


Continue Reading

You'll Also Like

33.4K 2.6K 64
இது என் ஐந்தாவது கதை.... பிழை புரியா பேதை அவள்... மனம் புரியா பாவை அவள்... விட்டால் போதுமென ஓடும் முயல் அவள்... காத்திருக்க தெரியாதவள்... பலரை ஆவலோடு...
45.7K 2.9K 100
மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னாளில் யாரை படாத பாடு படுத்தினாளோ, அவனால்...
12.9K 678 52
காதல் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாத போது மலர்ந்த காதலானது காலப்போக்கில் காதலை இரு மனமும் அர்த்தம் தெரிந்து கொண்டாலும் விதியின் விளையாட்டில் ஜெயிப்...
214K 6.3K 43
அளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு