கண்டேன் என் ஜீவாமிர்தம்✔

By Vaishu1986

214K 9.9K 3K

பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நா... More

💟 ஜீவாமிர்தம் 1
💟 ஜீவாமிர்தம் 2
💟 ஜீவாமிர்தம் 3
💟 ஜீவாமிர்தம் 4
💟 ஜீவாமிர்தம் 5
💟 ஜீவாமிர்தம் 6
💟 ஜீவாமிர்தம் 7
💟 ஜீவாமிர்தம் 8
💟 ஜீவாமிர்தம் 9
💟 ஜீவாமிர்தம் 10
💟 ஜீவாமிர்தம் 11
💟 ஜீவாமிர்தம் 12
💟 ஜீவாமிர்தம் 13
💟 ஜீவாமிர்தம் 15
💟 ஜீவாமிர்தம் 16
💟 ஜீவாமிர்தம் 17
💟 ஜீவாமிர்தம் 18
💟 ஜீவாமிர்தம் 19
💟 ஜீவாமிர்தம் 20
💟 ஜீவாமிர்தம் 21
💟 ஜீவாமிர்தம் 22
💟 ஜீவாமிர்தம் 23
💟 ஜீவாமிர்தம் 24
💟 ஜீவாமிர்தம் 25
💟 ஜீவாமிர்தம் 26
💟 ஜீவாமிர்தம் 27
💟 ஜீவாமிர்தம் 28
💟 ஜீவாமிர்தம் 29
💟 ஜீவாமிர்தம் 30
💟 ஜீவாமிர்தம் 31
💟 ஜீவாமிர்தம் 32
💟 ஜீவாமிர்தம் 33
💟 ஜீவாமிர்தம் 34
💟 ஜீவாமிர்தம் 35
💟 ஜீவாமிர்தம் 36
💟 ஜீவாமிர்தம் 37
💟 ஜீவாமிர்தம் 38
💟 ஜீவாமிர்தம் 39
💟 ஜீவாமிர்தம் 40
💟 ஜீவாமிர்தம் 41
💟 ஜீவாமிர்தம் 42
💟 ஜீவாமிர்தம் 43
💟 ஜீவாமிர்தம் 44
💟 ஜீவாமிர்தம் 45
💟 ஜீவாமிர்தம் 46
💟 ஜீவாமிர்தம் 47
💟 ஜீவாமிர்தம் 48
💟 ஜீவாமிர்தம் 49
💟 ஜீவாமிர்தம் 50
💟 ஜீவாமிர்தம் 51
💟 ஜீவாமிர்தம் 52
💟 ஜீவாமிர்தம் 53
💟 ஜீவாமிர்தம் 54
💟 ஜீவாமிர்தம் 55
💟 ஜீவாமிர்தம் 56
💟 ஜீவாமிர்தம் 57
💟 ஜீவாமிர்தம் 58
💟 ஜீவாமிர்தம் 59
💟 ஜீவாமிர்தம் 60
💟 ஜீவாமிர்தம் 61
💟 ஜீவாமிர்தம் 62
💟 ஜீவாமிர்தம் 63
💟 ஜீவாமிர்தம் 64
💟 ஜீவாமிர்தம் 65
💟 ஜீவாமிர்தம் 66
💟 ஜீவாமிர்தம் 67
💟 ஜீவாமிர்தம் 68
💟 ஜீவாமிர்தம் 69
💟 ஜீவாமிர்தம் 70
💟 ஜீவாமிர்தம் 71
💟 ஜீவாமிர்தம் 72
💟 ஜீவாமிர்தம் 73
💟 ஜீவாமிர்தம் 74
💟 ஜீவாமிர்தம் 75

💟 ஜீவாமிர்தம் 14

2.9K 134 54
By Vaishu1986

ஜீவாவின் வருகையை அறிந்து பண்ணை வேலையாட்கள், சஹாயன் ஊழியர்கள், பூம்பாறையின் பெரிய தலைகள் அனைவரும் வந்து அவனைப் பார்த்து உரையாடினர்.

தனக்கு தெரிகிறதோ, தெரியவில்லையோ அத்தனை பேரிடமும் ஒரு முறுவலுடன் ஜீவா பேசிக் கொண்டிருந்தான். தன்னையும், தன் குடும்பத்தையும் மதித்து தனக்கு வரவேற்பு தர வந்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் முகம் வாடாமல் அவர்களின் அனுமதி கேட்டு இரு நிமிடம் மட்டும் வீட்டிற்குள் வந்து தன் தாத்தா, பாட்டி படத்தின் முன் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தவன், அதற்கு பிறகும் வெளியே சென்று பொறுமையாக நின்று அனைவருடனும் பேசிக் கொண்டிருந்த பிறகு தான் அவர்களிடம் விடைபெற்று வீட்டுக்குள் வந்து அமர்ந்தான்.

ஜெயந்தன் ஜெய்யை அவருடன் வெளியே அழைத்து சென்று, "இந்த வருஷம் பெரியவங்களுக்கு சாமி கும்பிடறதை ஒட்டி தான் பூம்பாறையில ஊர்திருவிழாவும் வருது. இந்த தடவை திருவிழாவுல முதல் மரியாதையை நீ ஏத்துக்கணும் நந்தா!" என்று சொன்னவரிடம்,

"இல்ல சித்தப்பா, என்னால முடியாது. ஒண்ணு நீங்க ஏத்துக்குங்க..... இல்லன்னா சின்னவருக்கு குடுங்க!" என்ற ஜெய்யிடம் யோசனையுடன்,

"என்னய்யா நீ இருக்கும் போது எப்படி நம்ம ஜீவாம்மாவுக்கு.......!" என்று தயங்கிய தன் சித்தப்பாவிடம்,

"ஒண்ணும் யோசிக்காதீங்க சித்தப்பா, எல்லாம் நல்ல படியா நடக்கும். இங்க பாருங்க....... எங்க ரகு தாத்தா எப்படி உங்க ஊர் நல்லது, கெட்டதெல்லாம் பார்த்துக்கிட்டாங்களோ, அதே அளவுக்கு இப்போ எங்க சித்தப்பா பார்த்துக்குறாங்க. இங்கயே வந்துட சொன்னாலும் தாத்தா பாட்டி இருந்த ஊரை விட்டு வர மாட்டோம்ன்னு சொல்லி பூம்பாறையிலயே இருக்காங்க. அவங்களை நீங்க ஏத்துக்க முடியும். ஆனா என் பையனுக்கு முதல் மரியாதை தரணும்னு எங்க சித்தப்பா நினைக்கிறாங்க. அதுக்கு உங்க ஊர்ல எல்லாருக்கும் சம்மதமான்னு எனக்கு தெரியணும். ஏன்னா என் தாத்தா எங்கிட்ட விட்டுட்டு போன எல்லாப் பொறுப்புகளையெல்லாம் நான் என் பையனுக்கு தான் குடுக்கப் போறேன்!" என்று ஜெய் நந்தன் உறுதியாக சொல்லி விட அனைத்து பெரியவர்களும் தங்களுக்குள் சிறிது நேரம் பேசி விட்டு ஜெய் நந்தனிடம் சம்மதம் தெரிவித்தனர்.

முக மலர்ச்சியுடன் அவர்களுக்கு நன்றியுரைத்த ஜெய்நந்தன், "எல்லாரையும் சாப்பிட வச்சுட்டு அனுப்புங்க சித்தப்பா!" என்று சொல்லி விட்டு அவர்களிடம் தலையசைத்து விட்டு உள்ளே சென்றார்.

நிர்மலா தன் மகனிடம்,
"நந்து கண்ணா, ஏதாவது சாப்பிடுறியாம்மா?" என்று கேட்க அவன் தன் தாயிடம் "இங்க வாங்க....கொஞ்ச நேரம் உட்காருங்க. சாப்பிடுறதெல்லாம் அப்புறம் செய்யலாம். முதல்ல கொஞ்ச நேரம் உங்க மடியில இடம் வேணும்!" என்று தன் தாயை கீழே அமர வைத்து தனது வீட்டின் தரையில் படுத்து விட்டான் ஜீவானந்தன்.

"ஷப்பா......எவ்வளவு சுகமா இருக்கு தெரியுமாம்மா......எல்லாமே சரியாய்ட்ட ஒரு ஃபீல்; ரொம்ப நல்லாயிருக்கு! கொஞ்ச நேரம் அப்படியே படுத்துக்கட்டுமாம்மா? உங்களுக்கு கால் வலிக்கலையே......!" என்று முகம் திருப்பி தன் தாயின் முகத்தை பார்த்து கேட்ட ஜீவாவின் நெற்றியில் முத்தமிட்டு,

"எனக்கு ஒரு வலியும் இல்ல நந்தும்மா...... நீ படுத்துக்கோ!" என்று நிர்மலா சொல்லிக் கொண்டு இருக்க ஜெய் நந்தன் மனைவியின் அருகில் வந்தமர்ந்தார்.

ஸோஃபாவில் அமர்ந்திருந்த தன் நண்பனை நோக்கி "டேய் அஜு; சும்மா தானே நிக்குற? சக்தி, முத்துவை உள்ள தூக்கிட்டு வாடா! மூணு வாலுங்களும் வெளியே நின்னுட்டு ஆடிக்கிட்டு இருக்குதுங்க. அதுங்களையும் உள்ள வரச் சொல்லு!" என்று தன் நண்பனுக்கு கட்டளையிட்டார் ஜெய் நந்தன்.

"ம்ப்ச்! ஏன்டா இப்படி என் உசுரை வாங்குற......சக்தி, முத்துன்னு பேரை கேட்டாலே சிங்கம், புலி மாதிரி பாய்ஞ்சு, பாய்ஞ்சு கழுத்துல காலைத் தூக்கி வப்பானுங்களே...... அது தான்டா நியாபகம் வருது. ஏதோ கொஞ்ச வருஷமா அதுங்க இம்சை இல்லாம நான் சந்தோஷமா இருந்தேன். அது உன் பையனுக்கு பொறுக்கலையா...... எங்கிருந்துடா என் எனர்ஜி லெவலை கம்மி பண்ண கிளம்பி வர்றீங்க...... உன் மருமகளையும், மகள்களையும் நீயே போய் கூப்பிடு. மீரா கொஞ்சூண்டு டீ கிடைக்குமா செல்லம்?" என்று கேட்ட படி தன் மனைவியின் அருகே சென்று அமர்ந்து கொண்டார்.

"டென்ஷன் ஆகாத பெரியப்பா......
உனக்கென்ன பெரியம்மா கூட டைம் ஸ்பெண்ட் பண்ணணும். அவ்வளவு தானே......... ஆனாலும் நம்ம வீட்ல இத்தன லவ் ஜோடி இருக்க கூடாது; ச்சை.......
பத்மாச்சி உன் மருமகனுக்கு டீ வேணுமாம், போட்டு கொண்டு வந்து வாயில ஊத்து, இந்த ராமும், கீதாவும் எங்க எஸ்கேப் ஆகிடுச்சுங்கன்னு தெரியல....... நான் போய் பேபீஸை உள்ளே எடுத்துட்டு வர்றேன்!" என்று சொல்லி விட்டு வெளியே சென்றான் பார்கவ்.

இரண்டு குட்டிகளுடன் இரண்டு இளம்பெண்கள் ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்தனர். இனியா தன் தகப்பனுடன் அமர்ந்து சிரிப்புடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

அவளருகில் சென்றவன் விவேக்கை பார்த்து புன்னகைத்தான். "சாரி அங்கிள், உங்களுக்கும், லட்டுவுக்கும் ப்ரைவேட் ஸ்பேஸ் குடுக்கவே மாட்டேங்குறோம்ல்ல...... நாங்க; எப்போ பார்த்தாலும் அவளை உங்க கூட விடாம அவளோட டைமை ஆக்குபை பண்ணிக்கிறோம். ஜெய் மாமா உங்ககிட்ட ரெஸ்பான்ஸிபிளிட்டியை குடுத்துட்டு அடிக்கடி எங்கேயாவது கிளம்பிடுறாரு. உங்களுக்கு லட்டுவை சரியா கவனிச்சுக்கலைன்னு வருத்தமா இருக்கா அங்கிள்!" என்று அக்கறையுடன் கேட்டவனிடம் புன்னகையுடன்,

"அப்படி எல்லாம் இல்லப்பா...... இனுக்குட்டி என் கூட இருக்கிறதை விட உங்க கூட இருக்கும் போது தான் சந்தோஷமா இருக்கா. நான் என்ன இவளை கவனிச்சுக்கணும்...... எங்க எல்லாரையும் தான் கவனிச்சுக்க அண்ணா இருக்காங்களே; தேவையில்லாம ரொம்ப யோசிக்காத பார்கவ்!" என்று அவனிடம் சொல்லி விட்டு எஸ்ஜேஎன் வேலைகளை கவனிக்க வேண்டும் என்று இனியாவிடம் சொல்லி விட்டு சென்றார் விவேக்.

"பார்கவ் அத்தான்..... ஸ்நாக்
ஏதாவது எடுத்துட்டு வரட்டுமா?" என்று அவனிடம் கேட்ட இனியாவிடம்,

"ஷ்ஷ்ஷ்...... சத்தமா கேட்காத லட்டு..... அப்புறம் வாயாடிங்க ரெண்டு பேரும் சோத்துமூட்டைன்னு என்னை கிண்டல் பண்ண ஓடி வரப் போறாளுக..... உன்னை மாதிரியே மத்த ரெண்டும் அமைதியா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்......!" என்று பெருமூச்சு விட்டவனை சிரிப்புடன் பார்த்து கொண்டு நகர்ந்தாள் இனியா.

"யேய் எருமைகளா..... உள்ள போகலாம் வாங்கடீ!" என்று பார்கவ் கூப்பிட முத்து, சக்தியை கைகளில் வைத்திருந்த கவிப்ரியாவும், ஷைலஜாவும் முறைக்க அவர்கள் கைகளில் அகப்பட்டு கொள்ளாமல் ஓடி விட்டான் பார்கவ்.

அன்றிரவு தோட்டத்தில் கவிப்ரியாவை மடக்கிப் பிடித்து தன் கை அணைப்பில் நிறுத்திய ஜீவா, "எங்கடீ ஈவ்னிங்ல இருந்து ஓடிட்டே இருக்க..... பேசணும்னு சொல்றேன்! கண்டுக்காம சுத்திக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்?" என்று கேட்டவனின் கண்களை கோபத்துடன் நோக்கி,

"உன் கூட பேச எனக்கு விருப்பம் இல்லன்னு அர்த்தம்!" என்றாள் கவிப்ரியா. எரிச்சலுடன் முகம் சுளித்தவன் அந்த நேரத்திலும் தன் கைப்பிடியை தளர்த்தவில்லை.

"என்னடீ உன் பிரச்சனை? எனக்கு கொஞ்சம் டைம் வேணும்னு நா உன் கிட்ட ஆல்ரெடி கேட்டுருந்தேன்!" என்று அவள் முகத்தை நிமிர்த்த முயற்சி செய்து கொண்டிருந்தவன் கைகளை தடுத்தவாறு,

"இன்னும் எத்தன வருஷம் வேணும் உனக்கு..... மாமா சாகறதுக்கு இன்னும் எத்தன வருஷம் இருக்குனு உனக்கு தெரியுமாடா......?" என்று கேட்டவள் அவனின் பலத்த அறையால் கீழே விழுந்து கன்னத்தை கைகளால் தாங்கிக் கொண்டு இருந்தாள்.

"வலிக்குதா...... என் வார்த்தை ரொம்ப வலிக்குதோ...... அப்பான்னு கூப்பிட உனக்கு வாய் வரமாட்டேங்குது. எனக்கு யாரும் அன்பை தரல. என்னை யாரும் புரிஞ்சுக்கலன்னு மறுபடியும் உன் பல்லவியை ஆரம்பிச்ச..... சங்கை நெறிச்சுடுவேன். இங்க நீ வந்ததும் எல்லார் முகத்தையும் பார்த்த தானே....... அந்த கண்கள் எல்லாத்துலயும் தெரிஞ்ச அன்பை உணரலையா நீ? ஏதோ ரெண்டு நாய்க் குட்டிகளை வாங்கிட்டு வந்து தந்திருக்கேன்னு.... அந்தாளு என்னமோ உன் கிட்ட......!" என்று பேசிக் கொண்டிருந்தவளை நிறுத்தினான் ஜீவா. 

"வாயை உடைச்சுடுவேன்டீ....
இதோட நிறுத்திக்க; எங்கப்பாவை மரியாதை இல்லாம பேசுன; கொலைவெறில இருக்கேன்! என்ன பண்ணுவேன்னு தெரியாது!" என்று சிவந்த கண்களில் கோபம் தெறிக்க அவள் குரல்வளையை பற்றியிருந்தவன் கைகளை உதறிய கவிப்ரியா,

"நான் பேசத் தான்டா செய்வேன்..... இல்லாத ஒண்ணை எத்தனை நாளைக்கு தான் அவரும் எதிர்பார்த்து காத்திருப்பார்..... உனக்கு உங்கப்பா மேல பாசமே இல்ல. மொத்தமா வறண்டு போச்சு. ஊரை ஏமாத்துறதுக்கு தான் சும்மா நடிச்சுட்டு இருக்க. உன்னையும், அவரையும் எப்படியாவது சேர்த்து வச்சிடணும். என்
இத்தனை வருஷ குற்ற உணர்வை எப்படியாவது
சரிப்படுத்திடணும்ன்னு உங்கூட போராடிட்டு இருக்கேன் பாரு.....நான் ஒரு பைத்தியம்!" என்று அவன் மார்பில் சாய்ந்து கண்ணீர் வடித்தவளின் கன்னத்தை வருடியவன், தன் உடலில் இருந்த மொத்த சக்தியும் வடிந்தது போல் உணர்ந்து, அவளையும் அணைத்து சென்று கல் மேடையில் அமர்ந்து கொண்டான்.

சிறிது நேரம் அவன் மார்பில் சாய்ந்து
விம்மிக் கொண்டு இருந்தவள், கண்களை துடைத்துக் கொண்டு அவன் அணைப்பில் இருந்து விடுபட்டாள்.

"அம்முலு.....மை ஸ்வீட் லிட்டில் டால்; ஐ'ம் எக்ஸ்ட்ரீம்லி.......!" என்று சொல்லிக் கொண்டு இருந்தவன் வாயை தன் கைகளால் மூடியவள்,

"சின்ன வயசுல ஒருக்கா என்னை இப்படித் தான் அடிச்ச....... அப்போ மாமா உன் கிட்ட சண்டை போட்டாங்க. இன்னிக்கும் என்னை அடிச்சுட்ட...... பட் இப்போ நீ மாமா கூட பேசிடு நந்து...... ப்ளீஸ் நந்து! ஒருத்தரை ஃபோர்ஸ் பண்ணி எந்த விஷயத்தையும் செய்ய வைக்கக் கூடாதுன்னு அப்பா சொல்லிக் குடுத்திருக்காரு! பட் ஐ ஃபெக் யூ நந்து!" என்று சொல்லி தன் கைகளை நீட்டியவளின் கையைப் பற்றி இழுத்து அணைத்துக் கொண்டு நின்றான் ஜீவானந்தன்.

"பாட்டா, பாட்டி, க்ரானிக்கு சாமி கும்பிடுற பங்ஷன் அன்னிக்கு நான் அப்பா கிட்ட பேசிடுறேன் அம்முலு! இட்ஸ் அ ப்ராமிஸ்" என்று அவள் கைகளைப் பற்றிக் கொண்டான் ஜீவானந்தன்.

"தேங்க்யூ நந்து......தேங்க் யூ சோ மச் !" என்று தன் அணைப்பை இறுக்கியவளை பாவமாக பார்த்தவன்,

"கைத்தடம் பதிஞ்சுடுச்சு அம்முலு!" என்றான் தலை கவிழ்ந்தபடி.

"அது யூஸ்யுவல் தானே ஜீவாம்மா...... விடு ஃபீல் பண்ணாத!" என்று கவி அசால்டாக சொல்லவும் தான் ஜீவானந்தன் உண்மையில் அவளுக்காக நிறைய வருத்தப்பட்டான்.

வெகு சிரத்தையாக ரகுநாதர், ஜானகி தேவி, ஸாகரிக்கு ஆனந்த ஸாகரத்தில் பித்ரு தர்ப்பணங்கள் கொடுக்கப்பட்டது. ஏழைகள், முதியவர்களுக்கு, பணியாளர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது. அனைவரும் ஒன்றாக கூடிய போது அங்கிருந்து விலக நினைத்த ஜீவா, கவியின் முறைப்பில் அடங்கி வேறு வழியில்லாமல் நின்று கொண்டு இருந்தான்.

ஷைலஜாவும், இனியாவும் விளையாடிக் கொண்டே எல்லா வேலைகளையும் செய்து இருந்தனர். வீடெங்கும் தூபம் காட்டிக் கொண்டு இருந்த போது நெருப்பு கங்கு இனியாவின் கைகளில் தெறித்து கீழே விழ இனியா கைகளை உதறிக் கொண்டாள்.  "ஐயோ லட்டு எரியுதாடீ?" என்று கேட்ட ஷைலுவின் பயக்குரலை இனியா அடக்கினாள்.

"ச்சூ...... சும்மா இரு ரூபி......ஒண்ணுமில்ல. ஆடிட்டே இருக்காம சும்மா வாடின்னு சொன்னா கேக்குறியா........ காயம் பட்டுடுச்சுன்னு தெரிஞ்சா
எல்லார் கிட்டயும் திட்டு வாங்கணும்! கொஞ்ச நேரம் தண்ணில காட்டுனா  சரி ஆகிடும். டென்ஷன் ஆகாத. விடு" என்று சொல்லிக் கொண்டு இருந்தவள் அருகே வந்த ஜீவானந்தன் இருவரையும் ஒரு மார்க்கமாக பார்த்து விட்டு இனியாவிடம் கையை நீட்டினான் ஜீவா.

"இருக்கட்டும் ஜீவாண்ணா....
பரவாயில்லை!" என்று தயங்கியவளிடம்,

"உங்க பெரியப்பா கிட்ட நான் இன்னிக்கு பேசப் போறேன் மேடம்.... இனிமேலாவது என் கூட பழம் விடுவீங்களா......." என்று கேட்ட ஜீவாவின் கழுத்தில் கைகளைப் பற்றிக் குரங்கு போல ஷைலு தொற்றிக் கொள்ள இனியா முகம் கொள்ளாத பூரிப்புடன் அவன் கைகளில் தன் கைகளை நீட்டினாள். அவள் காயத்தில் மருந்திட்டு தன் இரு தங்கைகளையும் அழைத்துக் கொண்டு ஜெய் நந்தனிடம் சென்றான் ஜீவா.

பண்ணை வேலையாட்களுக்கு புதிய ஆடைகளை வழங்கி விட்டு, வீட்டினர் அனைவருக்கும் அவரவர் விரும்பிய பொருள் ஏற்கனவே கேட்டு வைத்ததை பரிசாக அளித்து கொண்டு இருந்த ஜெய் நந்தன் தன் மகனிடம் சற்று தயங்கி நின்றார்.

"ஆனந்த்......எல்லாரும்; எல்லாருக்கும் கேட்டதை குடுத்துட்டேன். நீ உனக்கு என்ன வேணும்னு சொன்னா தர முயற்சி..... ம்ஹீம் தர்றேன்ப்பா! என்ன வேணும்னு கேளு ஆனந்த்!" என்று சொன்னவரிடம்,

"எனக்கு எங்கப்பா வேணும். அவரோட அன்பு வேணும். அவர் பக்கத்தில எப்பவும் நான் இருக்கணும். அவரோட நம்பிக்கை வேணும்...... கிடைக்குமா அப்பா?" என்று கேட்ட தன் மகனிடம்,

"டேய் லூசுப் பயலே...... இல்லாதது எதையாவது கேளுடான்னு சொன்னா எப்பவும் இருக்கிறத கேக்குறியேடா.... அன்பு வேணும், நம்பிக்கை வேணும்னுட்டு..... உன் மேல அதெல்லாம் இல்லன்னு எப்படிடா நினைச்ச.... முட்டாப்பய மவனே!" என்று அவர் அவனை திட்ட மனம் நிறைந்த சிரிப்புடன் அவர் காலில் விழுந்து ஆசி பெற்று அவரை தழுவிக் கொண்டான் நந்தனின் மைந்தன்.

"டார்லிங் நானும்....."என்று அவர்கள் இருவரின் மேல் பாய்ந்த கவிப்ரியாவை, "அப்போ நானும்.....!" என்று ஷைலுவும் பாய, பாசத்தின் சுமைகளை இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் சுமக்கலாம் என்று நினைத்து சிரித்தபடி நின்று கொண்டு இருந்தார் ஜெய் நந்தன்.

"ஆ ஊ ன்னா கூட்டம் சேர்ந்துட வேண்டியது..... படம் காட்டுனது போதும். நான் எல்லாம் பாசத்தை காட்ட ஆரம்பிச்சா உங்களை எல்லாம் சட்னி மாதிரி வழிச்சு தான் எடுக்கணும். எழுந்துரிச்சு வீட்டுக்கு கிளம்புங்க. படம் முடிஞ்சுடுச்சுல்ல......... மாமா உனக்கொன்னும் பிரச்சனை இல்லல்ல....." என்று அனைவரையும் நகர்த்தியவனிடம்,

"எனக்கென்னடா ஆகப் போகுது...... என் பையன் என் கிட்ட பேசிட்டான். இன்னும் 50 வருஷம் கல்லை முழுங்கினாலும் செறிச்சு வாழுவேன்டா..... பாகி அப்படியே எல்லாரையும் கவர் பண்ணி ஒரு போட்டோ எடுடா!" என்று சொன்ன ஜெய் நந்தனிடம் மூக்கை உறிஞ்சி,

"அடப்பாவி மாமா, எல்லாருக்கும் என்ன வேணும்னு கேட்டு கேட்டு குடுத்தியே..... பாகியை டீல்ல விட்டுட்ட பார்த்தியா?" என்று சொல்லி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டவனிடம், பரிவுடன் அருகில் சென்று அவன் தலையை வருடிய ஜெய் நந்தன்,

"என்னடா வேணும் உனக்கு.......கண்டிப்பா தர்றேன். கேளு!" என்றார் ஜெய் நந்தன்.

"யெஸ்!" என்று கைகளை மடக்கிக் கொண்டவன், "இல்ல..... ரகு பாட்டா படையலுக்கு வாங்கி வச்ச சுருட்டு சும்மா தானே இருக்கு.....அவரா வந்து எடுத்துக்க போறாரு. அதனால அதை நான் யூஸ் பண்ணி எப்படி இருக்கும்னு பார்க்கலாம்னு  தோணுச்சு!" என்று சொல்லி விட்டு பின் புறமாக நகர்ந்து கொண்டிருந்தவனிடம்,

"டேய் புலிக்குட்டி.....உன் பையன அப்படியே மிதிக்கட்டுமா? இல்ல கொஞ்ச நேரம் ஓட விட்டுட்டு மிதிக்கட்டுமா?" என்று கேட்ட ஜெய் நந்தனிடம் புன்னகையுடன், "உங்க இஷ்டம் தான் அண்ணா!" என்றார் கீதா.

"அப்பா....அப்பா! நான் போறேனே" என்று ஜெய்யிடம் சொல்லி விட்டு, "சுருட்டு வேணுமா தம்பி உனக்கு.....பிடிச்சு சுருட்டிட்டா போச்சு. இங்க வா. ஓடுனாப்புல உன்னைய விட்டுடுவேனா.....நில்லுடா கூறு கெட்டவனே!" என்ற வசவுடன் பார்கவை துரத்தி கொண்டிருந்தான் ஜீவானந்தன்.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Continue Reading

You'll Also Like

42.4K 1.2K 45
காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r
151K 6.6K 63
எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.
110K 4.8K 37
இது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.
81.1K 2.5K 46
திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...