கண்டேன் என் ஜீவாமிர்தம்✔

By Vaishu1986

217K 9.9K 3K

பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நா... More

💟 ஜீவாமிர்தம் 1
💟 ஜீவாமிர்தம் 2
💟 ஜீவாமிர்தம் 3
💟 ஜீவாமிர்தம் 4
💟 ஜீவாமிர்தம் 5
💟 ஜீவாமிர்தம் 6
💟 ஜீவாமிர்தம் 7
💟 ஜீவாமிர்தம் 8
💟 ஜீவாமிர்தம் 9
💟 ஜீவாமிர்தம் 10
💟 ஜீவாமிர்தம் 12
💟 ஜீவாமிர்தம் 13
💟 ஜீவாமிர்தம் 14
💟 ஜீவாமிர்தம் 15
💟 ஜீவாமிர்தம் 16
💟 ஜீவாமிர்தம் 17
💟 ஜீவாமிர்தம் 18
💟 ஜீவாமிர்தம் 19
💟 ஜீவாமிர்தம் 20
💟 ஜீவாமிர்தம் 21
💟 ஜீவாமிர்தம் 22
💟 ஜீவாமிர்தம் 23
💟 ஜீவாமிர்தம் 24
💟 ஜீவாமிர்தம் 25
💟 ஜீவாமிர்தம் 26
💟 ஜீவாமிர்தம் 27
💟 ஜீவாமிர்தம் 28
💟 ஜீவாமிர்தம் 29
💟 ஜீவாமிர்தம் 30
💟 ஜீவாமிர்தம் 31
💟 ஜீவாமிர்தம் 32
💟 ஜீவாமிர்தம் 33
💟 ஜீவாமிர்தம் 34
💟 ஜீவாமிர்தம் 35
💟 ஜீவாமிர்தம் 36
💟 ஜீவாமிர்தம் 37
💟 ஜீவாமிர்தம் 38
💟 ஜீவாமிர்தம் 39
💟 ஜீவாமிர்தம் 40
💟 ஜீவாமிர்தம் 41
💟 ஜீவாமிர்தம் 42
💟 ஜீவாமிர்தம் 43
💟 ஜீவாமிர்தம் 44
💟 ஜீவாமிர்தம் 45
💟 ஜீவாமிர்தம் 46
💟 ஜீவாமிர்தம் 47
💟 ஜீவாமிர்தம் 48
💟 ஜீவாமிர்தம் 49
💟 ஜீவாமிர்தம் 50
💟 ஜீவாமிர்தம் 51
💟 ஜீவாமிர்தம் 52
💟 ஜீவாமிர்தம் 53
💟 ஜீவாமிர்தம் 54
💟 ஜீவாமிர்தம் 55
💟 ஜீவாமிர்தம் 56
💟 ஜீவாமிர்தம் 57
💟 ஜீவாமிர்தம் 58
💟 ஜீவாமிர்தம் 59
💟 ஜீவாமிர்தம் 60
💟 ஜீவாமிர்தம் 61
💟 ஜீவாமிர்தம் 62
💟 ஜீவாமிர்தம் 63
💟 ஜீவாமிர்தம் 64
💟 ஜீவாமிர்தம் 65
💟 ஜீவாமிர்தம் 66
💟 ஜீவாமிர்தம் 67
💟 ஜீவாமிர்தம் 68
💟 ஜீவாமிர்தம் 69
💟 ஜீவாமிர்தம் 70
💟 ஜீவாமிர்தம் 71
💟 ஜீவாமிர்தம் 72
💟 ஜீவாமிர்தம் 73
💟 ஜீவாமிர்தம் 74
💟 ஜீவாமிர்தம் 75

💟 ஜீவாமிர்தம் 11

2.9K 140 54
By Vaishu1986

நள்ளிரவு நேரத்தில் மாடியில் நின்று கொண்டு இருந்தாள் ஷைலஜா. பார்கவ் அவளுக்கு இரண்டடி தள்ளி நின்று கொண்டு அவளை முறைத்தவாறு நின்றிருந்தான்.

"என்ன அத்தான், பேசணும்னு உன்னைய இங்க கூட்டிட்டு வந்தா, என்னைப் பார்த்து இப்படி முறைச்சுட்டு இருக்க..... பயமாயிருக்குல்ல!" என்று சொன்னவளிடம் ஆச்சரிய பாவத்துடன்,

"அப்பப்பா.... நீ ரொம்ப பயப்படுறவ தான்; இந்தா உனக்கும், இனியாவுக்கும் இந்த மாச பாக்கெட் மணி; ஷாப்பிங்க்கும் சேர்த்து இவ்வளவு தான்! குடுக்கறதுக்கு அதிகமா தானம் பண்ணிட்டு அப்புறம் உன் செலவுக்காக பணம் இல்லைன்னு பாகி அத்தான்னு கூப்பிட்டு போன்ல பல்லை காட்டின..... தோலை உரிச்சுடுவேன்; பிடி!" என்று சொல்லி விட்டு ஐநூறு  ரூபாய் தாளை அவள் முன்பு நீட்டினான் பார்கவ்.

ஜெய் நந்தனும், நிர்மலாவும் தங்கள்  பெண்களுக்கு  தேவையான அளவு சுதந்திரத்தை தான் எப்போதும் தருவர். கேட்பதை வாங்கிக் கொடுத்தாலும் அதிக அளவில் பணம் புழங்குவதை தந்தை, தாய் இருவருமே ஆதரித்ததில்லை. என்ன வேண்டும் என்றாலும் எங்களிடம் கேள்; நாங்கள் வாங்கி தருகிறோம் என்று தான் சொல்லி விடுவார்கள். ஆனால் ஜீவானந்தன் தான் பார்கவிடம் பேசி தன்  தங்கைகள் இருவருக்கும் ஓர் அவசரத் தேவைக்காவது இருநூறு, முந்நூறு ரூபாயாவது கையில் இருக்கட்டும், நம் கவி, ஷைலு, இனியா மூவரும் பணத்தை அவர்கள் தவறாக செலவு செய்து விட மாட்டார்கள் என்று நண்பனிடம் பரிந்துரை செய்திருந்தான்.

"பிடிடீ, பணத்தை கையில வச்சுட்டு எவ்வளவு நேரம் நிக்கறது?" என்று எரிச்சலுடன் கேட்டவனிடம், "நான் இப்ப உன்னைய பணம் கேக்குறதுக்காக ஒண்ணும் கூட்டிட்டு வரல. உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்!" என்று கைகளை பிசைந்து கொண்டு இருந்தவளிடம் ஓர் மர்ம புன்னகையுடன்,

"என்னடா ரூபி காலேஜ்ல எவனாவது பிரச்சனை பண்றானா...... நீ தான் உயிர்; நீ இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்ல..... இப்படி ஏதாவது உளறிட்டு இருக்கானுங்களா.....?" என்று கேட்டவனிடம் மௌனமாக நின்று கொண்டு தலையை மட்டும் இல்லை என்று அசைத்தாள் ஷைலஜா.

"உனக்கு என்னடா ஆச்சு? ஒரு மாதிரி முகமெல்லாம் டென்ஷனா இருக்கு? தைரியமா சொல்லு. என்ன ப்ராப்ளம்ன்னாலும் சரி பண்ணிக்கலாம்!" என்று சொன்னவனிடம் தயக்கத்துடன்,

"எக்ஸாம் முடிஞ்சதும் க....கல்யாணம் பண்ணிக்குறியா அத்தான்?" என்று திணறியவளை ஓர் ஆழ்ந்த பார்வை பார்த்துவிட்டு,

"யாரு யாரை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு கேக்குற ஷைலஜா?" என்றான். அவன் குரலில் இருந்த அழுத்தம் ஷைலஜாவின் உடலில் நடுக்கத்தை வரவழைத்தது.

"என்னை தான் அத்தான்........! வந்து......!" என்று இழுத்தவளை

"போதும் நிறுத்து!" என்றான் பார்கவ் கையை உயர்த்தி.

பக்கவாட்டு சுவரில் கைகளை ஊன்றி தலையை கைகளில் தாங்கி நின்றான். ஐந்து  நிமிடங்களில் நெற்றியில் வியர்வை அரும்பியது. புருவ இடைவெளி விண்விண்ணென்று தெறிக்க ஆரம்பித்து இருந்தது. மூன்று பேரையும் ஒரே மாதிரி தானே நடத்தினோம்.....? தன் மேல் எந்த இடத்தில் தவறு நேர்ந்தது என்று யோசித்து கொண்டிருந்தவனிடம்,

"எனக்கு பைனல் இயர் முடிஞ்சதும் கல்யாணம் செஞ்சு வச்சுடுவாங்க. கவிம்மா அங்கே வந்து இருக்க போற மாதிரி எனக்கும் இங்க வர்றதா இருந்தா கம்பர்டபிளா இருக்கும். நீயும் என்னை நல்லா பார்த்துப்ப; ஆனா உனக்கு ஓகேவா அத்தான்?" என்று கேட்ட ஷைலஜாவிடம்

"உன்னை நல்லா பாத்துக்கணும்னா அதை எந்நேரமும் நான் செய்வேன் ஷைலு, ஆனா கல்யாணம்..... கவி அங்க போற மாதிரி நான் இங்கன்னு உளறுற பாரு! இதெல்லாம் தயவுசெய்து நிறுத்திக்க. அப்படி எல்லாம் யோசிக்கவே எனக்கு..... ப்ளீஸ்! வேண்டாம் விட்டுடு; எனக்கு கவிம்மா மாதிரி தான் நீயும், இனியாவும்; நான் எந்த இடத்தில உன்னை கல்யாணம் வரைக்கும் யோசிக்க வைச்சு தப்பு பண்ணிட்டேன்னு எனக்கு தெரியல. என்னையறியாம வார்த்தைகள்லயோ, என் செயல்களயோ உனக்கு அப்படி ஒரு எண்ணத்தை நான் குடுத்திருந்தா என்னை மன்னிச்சுடு ஷைலு; பட் இனிமே இப்படி என்னை எம்பாரெஸ் பண்ணாதடா!" என்று சொன்ன படி தலைகவிழ்ந்து  நின்றிருந்தவனிடம்,

"ஜீவாண்ணா, கவியும் கல்யாணம் பண்ணிக்க போறாங்கல்ல, அதை மாதிரி நாமளும் பண்ணிக்கிட்டா என்ன தப்பு?" என்று ஷைலஜா அவனிடம் கேட்க பார்கவ் ஆத்திரத்துடன்,

"இப்போ வாயை மூடல.... செவுளு பேந்துரும்; சொல்லிட்டே இருக்கேன். புரிஞ்சுக்க மாட்டியாடீ நீ? உன்னை என் பொண்டாட்டின்னு நினைச்சு பார்த்தா எனக்கு அருவருப்பா இருக்குடீ! ஜீவாவும், கவிப்ரியாவும் முதல்ல இருந்து முட்டிக்கிட்டு இருந்தாலும், ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க. அவங்களோட இத்தன வருஷப் பிரிவு கூட அவங்க பாண்டிங்கை இன்னும் ஸ்ட்ராங் ஆக்கிடுச்சு. பட் நம்ம அப்படி இல்லம்மா..... நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து கூடவே இருந்த மூணு பொண்ணுல ஒருத்தி வந்து கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேக்குறதே ரொம்ப வலிக்குது..... அழாத ஷைலு; உனக்கான ஆப்ஷன் நான் இல்ல செல்லம்..... பெஸ்ட்டா ஒருத்தன் வருவான். அவனை கல்யாணம் பண்ணி பெஸ்ட் லைஃப் வாழுவ. அப்பவும் அத்தான் உனக்காக எப்பவும் ஸப்போர்ட்டா கூட நிப்பேன். ஆனா உன் பாதுகாப்பா நிக்கறது வேற; பக்கத்தில நிக்கறது வேற! காலையில சீக்கிரம் கிளம்பிடுவீங்க. லேட்டாகிடுச்சு. போய் படும்மா!" என்று சொன்னவனிடம் கம்மலான குரலில்,

"நீ கீழே போ அத்தான், நான் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்!" என்றாள் ஷைலு.

"பன்னிரண்டு மணிக்கு மேல ஆச்சே ஷைலு.....!" என்று தயங்கியவனிடம்,

"பரவாயில்லை போ! என்னை கல்யாணம் பண்ணிக்கறதை யோசிக்கிறது அருவருப்பா இருக்குன்னு சொல்லிட்டல்ல...... அதெல்லாம் நினைச்சு ஃபீல் பண்ணி  அழுதுட்டு வர்றேன். உன்னை நான் ஏதாவது டிஸ்டர்ப் பண்ணி இருந்தா ஸாரி அத்தான்!" என்று சொல்லி விட்டு மறுபடி கண்ணீர் வடித்தவளிடம்,

"ஏய் ரூபி இவனெல்லாம் ஒரு ஆளுன்னு மதிச்சு ப்ரப்போஸ் பண்ணி, இவன் ஓகே பண்ணலன்னு அழுதுட்டு இருக்கியே..... உன்னையெல்லாம் என்னடா சொல்றது?" என்று கேட்டபடி புன்னகையுடன் நின்றிருந்த ஜீவானந்தனை பார்த்து இருவரும் சற்று மிரண்டு போய் நின்றனர்.

தன் அண்ணனுக்கு விஷயம் தெரிந்து விட்டது என்ற பயத்தில் ஷைலஜாவும், "இந்த பையன் சும்மாவே சாமி ஆடுவான், இப்போ இவ கண்ணீர் வடிச்சு கொட்டி முழக்குறா..... ரைட்டு பார்கவா நாளைக்கு நீ உயிரோட இருந்தா உங்கப்பா அம்மாவுக்கு, இல்லைன்னா சாமிக்கு!" என்று நினைத்துக் கொண்டு, "டேய் மச்சி அது வந்து.....!" என்று தயங்கியவனிடம்,

"கிளம்பு. நான் ஷைலுவை கீழ கூட்டிட்டு வர்றேன்!" என்றான் ஜீவா கொந்தளிப்புடன்.

"இல்லடா நான் ஒண்ணுமே தப்பு பண்ணலடா....!" என்று விளக்கம் அளிக்க முன்வந்தவனை பெருமூச்சுடன் தடுத்தவன்,

"உன்னை கிளம்புன்னு சொன்னேன். என் தங்கச்சியை சமாதானப் படுத்தற வேலையை நான் பார்த்துக்கறேன். நீ கிளம்பு!" என்றான் ஜீவா கண்டிப்பான குரலில். பார்கவ் ஷைலுவை திரும்பி திரும்பி பார்த்து விட்டு கீழே இறங்கி சென்று விட்டான்.

"ஷைலும்மா!" என்று அழைத்த தன் அண்ணனிடம் கோபக்குரலில்,

"நீ எனக்கு ஒண்ணும் ஆறுதல் சொல்ல வேண்டாம். கீழே இறங்கி போடா!" என்று சொன்ன படி விம்மிக் கொண்டிருந்தவளை கைப்பிடித்து இருக்கையில் அமர்த்தி தன் மடியில் சாய்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஜீவானந்தன்.

தன் அண்ணனை புரியாத பார்வை பார்த்தவளிடம் புன்னகைத்து, "கம்பர்டபிளா உட்கார்ந்துட்டு, மடியில படுத்துக்கிட்டே அழலாமேன்னு தான்..... நீ கன்டினியூ பண்ணுடா செல்லம்!" என்று சொன்ன தன் அண்ணனை பலம் கொண்ட மட்டும் குத்தி விட்டு கை வலிக்கவும் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் ஷைலஜா.

ஜீவானந்தன் தனது தங்கையின் அருகாமையை பல வருடங்களுக்கு பிறகு அனுபவித்து கொண்டிருந்தான். அவளது மனக்கசப்பால் தான் தனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று அவன் மனம் குரூரமாக யோசித்தது.

"என் தங்கச்சி பிரச்சனையை எல்லாம் நிமிஷத்துல சரி பண்ணிடலாம். ஆனா அவளோட ஹக் கிடைச்சிருக்கு. இத மிஸ் பண்ணக் கூடாது!" என்று நினைத்த மனதை அடக்கியவன்,

"ஷைலு..... இந்த பாகி எருமை இருக்கான்ல..... 11 ஆம் க்ளாஸ்ல இருக்கும் போதே ஒரு பொண்ணை லுக் விட்டு, கரெக்ட் பண்ணி, லவ் பண்ணி அப்புறம் ஏதோ பிரச்சனையால அவங்க ரெண்டு பேருக்குள்ள செட் ஆகாம ப்ரேக் அப் ஆகிடுச்சு. நீ தேடி தேடி லவ் பண்ண இவன் தானா கிடைச்சான் உனக்கு?" என்று கேட்ட தன் அண்ணனை நம்பாத பார்வையுடன் வாய் பிளந்து பார்த்து கொண்டு இருந்தவள்,

"ஹாங்..... நம்ம பாகி அத்தானாடா இப்படி.....என்னை கன்வின்ஸ் பண்றதுக்காக பொய் சொல்றியாடா அண்ணா?" என்று கேட்டவளிடம் மறுப்பாக தலையசைத்து விட்டு,

"ப்ராமிஸ்டா ரூபி!" என்றான் ஜீவானந்தன் அமைதியான குரலில்.
தன் அண்ணனின் வாயில் இருந்து சத்தியம் என்ற வார்த்தை வருவது அத்தி பூப்பது போல் என்று தெரிந்திருந்தால் ஷைலஜா அமைதியாகி விட்டாள்.

"கன்வீனியன்ஸுக்காக எல்லாம் மேரேஜ் பண்ணிக்க கூடாதுடா ரூபி.... அதிலயும் என் தங்கச்சி.... ம்ஹூம்! உன் லைஃப் பார்டனரா வரப் போறவர் கூட உனக்கு நல்ல அண்டர்ஸ்டாண்டிங், ப்ரெண்ட்ஷிப், அவனுக்காக என்ன வேணும்னா பண்ணலாம் அப்படிங்கிற ஒரு தாட் எல்லாமே இருக்கணும். இப்பவும் பாகியை தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு தோணுச்சுன்னா அண்ணா கிட்ட சொல்லு..... அவன் கையை காலை கட்டி உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்!" என்று கேட்ட தன் அண்ணனிடம் சிரிப்புடன்,

"சூப்பர்டா அண்ணா.... அத்தான் கையை, காலை கட்டி வச்சிருந்தன்னா அவருக்கு நான் தாலி கட்ட முடியுமா? இருக்கிற ஒரு லைஃபை சந்தோஷமா வாழ வேண்டாமாடா? எங்களை எல்லாம் தரையை பார்த்து நடக்க சொல்லிட்டு பசங்க எல்லாம் ஆளாளுக்கு ஒருத்தியை கரெக்ட் பண்ணியிருக்கீங்க..... நீங்களே இப்படி இருந்தா ராகவ் வரும் போது பொண்டாட்டி, குழந்தையோட தான் வருவான்னு நினைக்கிறேன். முதல்ல போய் பாகி அத்தானுக்கு ஸாரி சொல்லணும் அண்ணா..... எவ்வளவு ஹர்ட் ஆகியிருப்பாங்க. இதெல்லாம் என் கிட்ட சொன்னதுக்கு உனக்கு தேங்க்யூ சோ மச் டா அண்ணா ..... என் செல்லம்!" என்று தன் அண்ணனை முத்தமிட்டவளை ஏதும் பேசாமல் அணைத்து கொண்டான் ஜீவானந்தன். உண்மையில் பேச வார்த்தைகள் வரவில்லை அவனுக்கு. தொண்டை அடைத்து கண்கள் கலங்க ஒரு விதமான மயக்க நிலையில் நின்று கொண்டு இருந்தான்.

"அடேய்..... அண்ணன் என்பவனே.....தூங்கிட்டியாடா?" என்று தங்கையின்  உலுக்கலில் புன்னகைத்து,

"நீ, அம்மா, இனியா எல்லாரும் ரொம்ப தூரமாகிட்ட மாதிரி ஒரு ஃபீல் இருந்ததுடா ரூபி; இப்போ ஃபர்பெக்ட்! ஜீவா ஹாப்பி செல்லம்.... கீழே போகலாமா?" என்று கேட்டவனை பரிதாபமாக பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"இன்னும் என்னடீ வேணும்?" என்று எரிச்சலுடன் கேட்டவனிடம்,

"லைட்டா வயிறு பசிக்குதுடா!" என்று சொன்னாள் ஷைலஜா. 

"எட்டு மணிக்கு தூங்குற பார்ட்டிங்கல்ல நீ, லட்டு எல்லாம்...... இந்நேரத்தில என்ன பண்றது..... சரி கீழே வா, போய் கிச்சனுக்குள்ள பெருச்சாளிங்க கூட சேர்ந்து நம்மளும் டின்னர் ஷேர் பண்ணிக்கலாம்!" என்று சொன்ன ஜீவாவை பின்தொடர்ந்து கீழே சென்றாள் ஷைலஜா.

"ஷைலும்மா..... ப்ரெட் ஆம்லெட் ஓகேவா?" என்று கேட்ட தன் அண்ணனிடம் சிரிப்புடன் தலையாட்டினாள் ஷைலஜா.

"ஹாய் பிரதர் & சிஸ்டர் ஹாவிங் ஃபன் ஆ? தம்பி அப்படியே நம்ம ப்ளேட்டுக்கும் ஒரு ப்ரெட் ஆம்லெட் பார்சல்ப்பா!" என்று கேட்ட படி வந்த கவிப்ரியாவிடம்,

"நீயும் இன்னும் தூங்கலையா மூக்கி...... முன்னால எல்லாம் சாப்பாடு ஸ்மெல்ல வாசம் பிடிச்சு வருவ; இப்ப டெவலப் ஆகி பேசும் போதே சாப்பிட ரெடி ஆகிடுற! ஏன் கண்ணெல்லாம் சிவப்பா இருக்கு....?" என்று கேட்ட ஜீவாவிடம்,

"பெரிசுங்க எல்லாம் தூங்காம கதை பேசிட்டு உயிரை வாங்குதுங்க, அதான் நான் கொஞ்ச நேரம் டிஸைன் பண்ணலாம்ன்னு ஸ்கெட்ச் பண்ணிட்டு இருந்தேன்! நெக்ஸ்ட் மன்த் ஒரு பேஷன் பரேட் இருக்கு டா! அதுக்கு நிறைய டிஸைன் நம்ம தான் செஞ்சு குடுக்குறோம். தண்ணி குடிக்க வந்தேனா..... சரி மச்சான் ஆசையா தோசை சுடப்போறான்..... நமக்கும் தருவான்னு வெயிட்டிங்!" என்று கேட்டவளிடம்,

"ஆளாளுக்கு அர்த்த ராத்திரியில ஆர்டர் பண்ணுங்கடீ, எருமைகளா...... ச்சே, இந்த பண்ணையாருக்கு மகனா பொறந்ததுக்கு பதிலா அவர் வீட்டு மாடாவாவது பொறந்திருக்கலாம்!" என்று சலித்துக் கொண்டவனிடம்,

"டேய் அடங்குடா.....தங்கச்சியை பேச வச்சுட்டேன்னு இந்நேரம் உள்ளுக்குள்ள ட்விஸ்ட் டான்ஸ் ஆடிட்டு இருப்பியே......எங்களுக்கு தெரியாது ன்னு நினைச்சியாக்கும். ரூபி வாடி நம்ம ஹாலுக்கு போகலாம். மிஸ்டர் ஜீவானந்தன் எனக்கு ஒரு ஆனியன் ஊத்தப்பமும்;ஆம்லெட்டும்..... ------ சார் சொல்லியிருப்பார்ல; அந்த மாதிரி நல்லா ரெட்டு கலர்ல முறுகலா தோசை பண்ணணும்! ரூபிக்கும், எனக்கும் ரொம்ப பசிக்குது! மேக் யுவர் டிஷ்ஷஸ் பாஸ்டர்!" என்று சொல்லி கண்சிமிட்டி விட்டு சென்றாள் கவிப்ரியா.

கொஞ்சம் கூட முகத்தில் சலிப்பை காட்டாமல் புன்னகையுடன் உணவை தயார் செய்து கொண்டிருந்த ஜீவாவை ஒரு குற்ற உணர்வுடன் பார்த்து கொண்டு இருந்தார் ஜெய் நந்தன்.

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Continue Reading

You'll Also Like

93.7K 4.5K 55
அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல...
2.4K 234 20
#4 ஆஸிமா அவள் கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக்கொண்டு பவனி வருவதாகக் கற்பனை செய்து கனவு காணத் தொடங்கினார் ----- ----- ஆலியாவோ அதே ஸ்டெதஸ்கோப்பைத் தன்...
49.5K 1.3K 45
காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r