கண்டேன் என் ஜீவாமிர்தம்✔

By Vaishu1986

214K 9.9K 3K

பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நா... More

💟 ஜீவாமிர்தம் 1
💟 ஜீவாமிர்தம் 2
💟 ஜீவாமிர்தம் 3
💟 ஜீவாமிர்தம் 4
💟 ஜீவாமிர்தம் 5
💟 ஜீவாமிர்தம் 6
💟 ஜீவாமிர்தம் 7
💟 ஜீவாமிர்தம் 8
💟 ஜீவாமிர்தம் 9
💟 ஜீவாமிர்தம் 11
💟 ஜீவாமிர்தம் 12
💟 ஜீவாமிர்தம் 13
💟 ஜீவாமிர்தம் 14
💟 ஜீவாமிர்தம் 15
💟 ஜீவாமிர்தம் 16
💟 ஜீவாமிர்தம் 17
💟 ஜீவாமிர்தம் 18
💟 ஜீவாமிர்தம் 19
💟 ஜீவாமிர்தம் 20
💟 ஜீவாமிர்தம் 21
💟 ஜீவாமிர்தம் 22
💟 ஜீவாமிர்தம் 23
💟 ஜீவாமிர்தம் 24
💟 ஜீவாமிர்தம் 25
💟 ஜீவாமிர்தம் 26
💟 ஜீவாமிர்தம் 27
💟 ஜீவாமிர்தம் 28
💟 ஜீவாமிர்தம் 29
💟 ஜீவாமிர்தம் 30
💟 ஜீவாமிர்தம் 31
💟 ஜீவாமிர்தம் 32
💟 ஜீவாமிர்தம் 33
💟 ஜீவாமிர்தம் 34
💟 ஜீவாமிர்தம் 35
💟 ஜீவாமிர்தம் 36
💟 ஜீவாமிர்தம் 37
💟 ஜீவாமிர்தம் 38
💟 ஜீவாமிர்தம் 39
💟 ஜீவாமிர்தம் 40
💟 ஜீவாமிர்தம் 41
💟 ஜீவாமிர்தம் 42
💟 ஜீவாமிர்தம் 43
💟 ஜீவாமிர்தம் 44
💟 ஜீவாமிர்தம் 45
💟 ஜீவாமிர்தம் 46
💟 ஜீவாமிர்தம் 47
💟 ஜீவாமிர்தம் 48
💟 ஜீவாமிர்தம் 49
💟 ஜீவாமிர்தம் 50
💟 ஜீவாமிர்தம் 51
💟 ஜீவாமிர்தம் 52
💟 ஜீவாமிர்தம் 53
💟 ஜீவாமிர்தம் 54
💟 ஜீவாமிர்தம் 55
💟 ஜீவாமிர்தம் 56
💟 ஜீவாமிர்தம் 57
💟 ஜீவாமிர்தம் 58
💟 ஜீவாமிர்தம் 59
💟 ஜீவாமிர்தம் 60
💟 ஜீவாமிர்தம் 61
💟 ஜீவாமிர்தம் 62
💟 ஜீவாமிர்தம் 63
💟 ஜீவாமிர்தம் 64
💟 ஜீவாமிர்தம் 65
💟 ஜீவாமிர்தம் 66
💟 ஜீவாமிர்தம் 67
💟 ஜீவாமிர்தம் 68
💟 ஜீவாமிர்தம் 69
💟 ஜீவாமிர்தம் 70
💟 ஜீவாமிர்தம் 71
💟 ஜீவாமிர்தம் 72
💟 ஜீவாமிர்தம் 73
💟 ஜீவாமிர்தம் 74
💟 ஜீவாமிர்தம் 75

💟 ஜீவாமிர்தம் 10

3.4K 132 56
By Vaishu1986

ஜீவாவும், கவிப்ரியாவும் கீழே சிறுபிள்ளைத்தனமாக உரிமை போராட்டம் செய்து கொண்டிருந்த போது மாடியில் அர்ஜுன் மீராவிடம் தன் மகளையும், மருமகனையும் குறித்து கவலையுடன் பேசிக் கொண்டிருந்தார்.

"என்னடா ரமி; ஜீவாவுக்கும், கவிக்கும் கல்யாணம் செஞ்சு வச்சா அவங்களுக்குள்ள செட் ஆகுமான்னு தெரியலையேம்மா! நம்ம பொண்ணு எடுத்ததுக்கெல்லாம் அடாவடித்தனம் பண்ணிட்டு இருக்குறா. உன் ஜீவாக்குட்டி இதெல்லாம் தாங்குவான்ங்கிற?......" என்று கேட்ட தன் கணவனை இடுப்பில் கை வைத்து முறைத்த மீரா,

"மிஸ்டர் காண்டீபன், உங்க மகளுக்கு அத்தன பேரும் செல்லம் குடுத்து கொஞ்சிட்டு இருந்தா, அவ நம்ம தலை மேல தான் ஏறி உட்கார்ந்துகிட்டு இருப்பா. ஆனா கவிம்மா சொன்னா கேட்டுக்குற டைப் தான், அதிலயும் ஜீவா சொன்னா அவன் ஒரு தடவை சொல்றதை நாலு தடவை யோசிப்பா. ஒரு கல்யாணத்துல..... அது எந்த விதமான கல்யாணமா இருந்தாலும் சரி, எடுத்தவுடனே இரண்டு பேருக்குள்ள புரிதல் வரணும்னு நினைக்கிறது அபத்தமான விஷயம். அது மெல்ல மெல்லத் தான் நடக்கும். ஆனா கடைசியில ரெண்டு பேருக்குமான ஒரு அழகான பாண்டிங் கண்டிப்பா வந்துடும். அதனால நீங்க டென்ஷன் ஆகாம ஜீவா, கவி கல்யாணத்தை பத்தி அண்ணா கிட்ட பேசி முடிவெடுங்க. நம்ம வீட்ல இன்னும் ரெண்டு பசங்க, ரெண்டு பொண்ணுங்கன்னு அடுத்தடுத்து கல்யாண வயசுல பிள்ளைங்க ரெடியா இருக்காங்க! இல்ல உங்க பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பார்க்குற மாதிரி எதுவும் ஐடியா வச்சிருக்கீங்களா?" என்று கேட்டார் மீரா.

ஏம்மா..... உனக்கு என் மேல கோபம் ஏதாவது இருந்தா நீயே என்னைய ரெண்டு அடி அடிச்சிடு, சந்தோஷமா வாங்கிக்கறேன். அத விட்டுட்டு இப்படி இன்னொரு பையனை கவிம்மாக்கு மாப்பிள்ளையா பார்க்க சொல்லி உங்கண்ணன் கிட்டயும், அந்த லூசுப்பய கிட்டயும் என்னை மாட்டி விடாத. உங்கண்ணனாச்சும் கோபப்பட்டா ரெண்டு அடி தான் அடிப்பான். ஆனா இந்த ஜீவா பையன்...... எந்த நேரத்தில எப்படி இருப்பான்னே தெரியாது. ஸோ இந்த விளையாட்டு எல்லாம் வேண்டாம். நம்ம ஷைலு, இனியா, பாகி, ராகவ் எல்லாம் சின்னப் புள்ளைங்கடீ..... அதுங்களுக்கு போய் கல்யாணம்னு பேசுறியே... டென்ஷன் ஆகப் போகுதுங்க!" என்று சொன்ன தன் கணவரிடம்,

"21 வயசு முடிஞ்சதுனா சின்னப் புள்ளையா டீப்? சொல்லவேயில்லையே..... அப்போ நீங்க கூட ஒரு சின்னப் புள்ளைய தான் கல்யாணம் பண்ணி இருக்கீங்க..... இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!" என்று சொல்லி சிரித்த மனைவியை பின் புறமிருந்து அர்ஜீன் இழுக்கவும் அவர் பின்னால் இருந்த அர்ஜுனின் மேல் சாய்ந்து பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.

"அது..... உன்னை எல்லாம் சின்னப்பொண்ணுன்னு நினைச்சுட்டு என்னால பொறுமையா இருக்க முடியல...... சரி, இவ்வளவு வாய் பேசுறியே;
உனக்கு என்ன தான்டீ தெரியும்? 46 வயசாகிடுச்சு.... இன்னும் ஒழுங்கா லவ் மேக்கிங் பண்ண தெரியல. ஒத்தப் பொண்ணை பெத்துட்டு போதும்னு சொல்லி  நிறுத்திக்கிட்டோமே..... இப்ப அவ கல்யாணம் பண்ணி போய்ட்டான்னா புருஷங்காரன் ஒரு புள்ளை இல்லன்னு ஃபீல் பண்ணுவானேன்னு யோசிக்க தெரியல. எத்தனை தடவை பையன் வேணும்னு கேட்டேன். கன்சிடர் பண்ணியா? இப்போ பாரு. கவிம்மா போனவுடனே ஒரு வேக்யூம் ஸ்பேஸ் வந்துடும். அதை நீ எப்படி ஃபேஸ் பண்றன்னு நானும் பார்க்குறேன்! ரமி இப்ப கொஞ்சம் பைங்கனி இதழில் பழரசம்....." என்று இழுத்த தன் கணவனின் முதுகில் ஒரு அடி வைத்து,

"அடச்சீ....என்ன டீப் நீங்க? பழரசம்; பழைய ரசம்ன்னுட்டு.... சும்மா இருங்க!" என்று அடக்கியவர்,

"ஒரு நாளைக்கு ரெண்டு தடவ பெரியம்மா, பெரியம்மான்னு நம்ம பாகி தேடி வந்துடுறான். பத்து நாளைக்கு ஒரு தடவை பகல்ல வேலையை எல்லாம் ஒதுக்கி வச்சுட்டு என் கிட்ட லைவ் சாட்டிங்க்கு வர்றீங்களா பெரியம்மான்னு ராகவ் வந்துடுறான். இது போதாதுன்னு ஜீவாக்குட்டி வேற..... அவனுக்கு எத்தன வயசாகிடுச்சுன்னு கூட மறந்து போய் பப்பு பூவா ஊட்டி விடு மீராத்தைன்னு கன்னுக்குட்டி மாதிரி உரசிட்டு வந்து நிக்கிறான். இந்த பசங்களை, உங்களை எல்லாம் கவனிச்சுக்கறது போகவா என் லைஃப்ல வேக்யூம் ஸ்பேஸ் வரப் போகுது? ம்ஹூம்! வாய்ப்பே இல்ல. அப்படியே இருந்தாலும் சரி, இன்னும் ஒரு வருஷம்.... மிஞ்சி போனா ஒன்றரை வருஷத்துல ஒரு குட்டிப் பாப்பாவோ, பையனோ நம்ம வீட்டுக்கு வந்துடுவாங்க......!" என்று சிரிப்புடன் சொன்னவளிடம் கன்னத்தில் முத்த மழை பொழிந்து,

"அப்படி சொல்லுடீ என் செல்லக்குட்டி...... பட் இப்போ போய் நம்ம பேபி பெத்துக்க நினைச்சா எல்லாரும் சிரிக்க மாட்டாங்களா டார்லிங்?" என்று கேட்டு தன் மனைவியை அணைத்துக் கொண்டவரிடம்,

"அப்பப்போ உங்களுக்கு ஒரு விஷயத்தை நியாபகப்படுத்திட்டே இருக்க வேண்டியதிருக்கு மிஸ்டர் காண்டீபன்..... நீங்க கிழவன்...... உங்களுக்கு பேரன், பேத்தி எடுக்கிற வயசு ஆகிடுச்சுன்னு.....! இப்ப கீழே போனா ஜீவாம்மா கத்துறானோ.... என்னவோ; லன்ஞ்ச்சுக்கு ஏதாவது ஆர்டர் பண்ணிடுங்க!" என்று சொன்ன தன் மனைவியிடம்,

"என்னை கிழவன்னு சொல்லிட்டல்லடீ, எனக்கு இன்னிக்கு பசிக்காது போ! என்னத்தையாவது ஆர்டர் பண்ணி நீயே உன் மருமகனுக்கு ஊட்டி விடு. பிசாசு, எப்பவாவது தான் பகல் நேர ரொமான்ஸுக்கு டைம் கிடைக்குது. அதிலயும் மண்ணை அள்ளி போட்டுட்டு காலை ஆட்டிட்டு உட்கார்ந்து இருக்கா........ பிரம்மராட்சஸி!" என்று தன் மனைவியை திட்டிக் கொண்டு கட்டிலில் குப்புற கவிழ்ந்து கிடந்தார் அர்ஜுன்.

அன்று மாலை அர்ஜுனின் வீட்டில் அனைவரும் அமர்ந்திருந்தனர். ஒரே நாளில் ஷைலு இனியாவை இழுத்துக் கொண்டு பத்து, இருபது கடைகளுக்கு மேல் ஏறி இறங்கியதில், "கால் வலிக்குதுடீ எருமை மாடு!" என்று சொல்லி வீட்டுக்கு வந்ததும் ஷைலுவின் மடியில் சாய்ந்து விட்டாள் இனியா.

"என்னடீ லட்டு, அதுக்குள்ள டையர்டு ஆகிட்டா எப்படி? வா.....நம்ம ரூமுக்கு போகலாம்! அங்க போய் உனக்கு கால் அமர்த்தி விடுறேன்......!" என்று சொல்லி விட்டு அவளை கூட்டிச் சென்று அறையில் விட்டு, சற்று நேரம் கால்களை இதமாக பிடித்து கொண்டு இருந்தாள் ஷைலஜா.

"ரூபி தூக்கம் வருதுடீ...... பெரியப்பா கொஞ்ச நேரத்துல கிளம்பணும்னு சொன்னாங்களே.....! தூங்கினா எழுந்துரிச்சு கிளம்ப கஷ்டமாகிடும்டீ....!" என்று கண்களை திறக்க முடியாமல் அரை குறை உறக்கத்தில் பேசிய இனியாவிடம்,

"உங்க பெரியப்பா தானே.... அவர் தங்கச்சிங்களை கொஞ்சுற படலத்தை இன்னும் அவர் ஆரம்பிக்கவேயில்லை. இப்போ ஆரம்பிச்சா எப்படியும் முடிக்க விடியற்காலை ஆகிடும். பிறகு தான் கிளம்புவோம். நாளைக்கும் ஸ்கூட் தான். ச்சை..... இங்க வந்தாலே மூணு நாள் எப்படியும் லீவ் எடுக்க வேண்டியதாகிடுது. நீ தூங்கு லட்டு. நான் கொஞ்ச நேரம் கழிச்சு டின்னர் சாப்பிட உன்னை எழுப்புறேன்......!" என்று சொல்லி தன் தோழிக்கு ஒரு அணைப்பை தந்து விட்டு வெளியே வந்தாள் ஷைலஜா.

ஜெய் நந்தனின் கல்லூரி நண்பன் கௌதமன் அவனது மனைவி ராகினி, மகன் பவினுடன் அவனது திருமணத்திற்கு அழைப்பு விடுக்க அர்ஜுன் வீட்டுக்கு வந்திருந்தனர். அறிமுகப் படலங்கள், முகமன்கள் அனைத்தும் முடிந்ததும் யாரும் அறியாமல் தனியாக கழண்டு கொள்ள பார்த்த ஜீவாவை அவனது முதுகுப்புறம் சட்டைக்குள் கையை நுழைத்து தன் கைகளில் பற்றியிருந்தாள் கவிப்ரியா.

"கையை எடுடீ!" என்று பல்லைக் கடித்தவனிடம், ஒரு இன்ஸ்டன்ட் சிரிப்பை உதிர்த்தவள் மறுப்பாக தலையசைத்து விட்டு அவனருகில் அமர்ந்து கொண்டாள்.

தன் தந்தையின் கண்ணசைவை புரிந்து கொண்டு ராகினியிடம்
"ஆன்ட்டி ஹாட் ஆர் கோல்ட்!" என்று கேட்ட ஷைலஜாவின் கன்னத்தில் தட்டி,

"நிர்மலா பொண்ணா நீ? இவ்வளவு பெரிசா வளர்ந்துட்ட..... பார்த்து ரொம்ப நாளாச்சு. ஹவ் ஆர் யூ பேபி?" என்று கேட்ட ராகினியிடம்

"ஃபைன் ஆன்ட்டி! தேங்க்ஸ், நிர்மலாவுக்கு மட்டுமில்ல. நான் ஜெய்நந்தனுக்கும் தான் பொண்ணு. ஆனா ப்ளீஸ் உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லிடுங்க ஆன்ட்டி, எப்பவும் இதெல்லாம் எங்க இனியா தான் செய்வா. இன்னிக்கு உங்களை ரீசிவ் பண்ணி வெல்கம் ட்ரிங்க்ஸ் குடுக்குறது என்னோட வேலை ஆகிடுச்சு. என்ன வேணும்னு சொல்றீங்களா?" என்று சிரிப்புடன் கேட்டவளிடம்,

"பரவாயில்லை ஷைலு, உனக்கு எது கம்பர்டபிளா இருக்கோ, அதை கொண்டு வாம்மா!" என்றார் கௌதமன்.

"அப்பாடா..... தப்பிச்சுக்கோ ஷைலு; ஓடிடு!" என்று நினைத்துக் கொண்டு சமையல் அறையை நோக்கி சென்றவளை, "மிஸ். ஷைலஜா ஹோல்ட் ஆன் அ மினிட்!" என்று சொல்லி நிறுத்தினான் பவின்.

"சொல்லுங்க மிஸ்டர் பவி!" என்று சொல்லி விட்டு சிரித்து விட்டாள் ஷைலு. அவன் அவளருகில் வந்து, "என் பேரு பவின், ப்ரெண்ட்லியா கூப்பிடணும்னா பவின்னு கூப்பிடக் கூடாது; வினு இல்ல வினோன்னு கூப்பிடுங்க. அண்ட் இவ்வளவு ஆசையா நீங்க எங்கள வெல்கம் பண்ண நினைக்கும் போது உரிமையா உங்க கிட்ட கேக்கலாம். கேன் ஐ ஹாவ் அ கப் ஆஃப் ஸ்ட்ராங் பில்டர் காஃபி?" என்று கேட்டவனை பரிதாபமாக பார்த்த வண்ணம்,

"மிஸ்டர் என்ன கேட்டீங்க பில்டர் காஃபியா.....?" என்று அழுத்திக் கேட்டாள் ஷைலஜா.

"ஷைலுமா! நான் வேணும்னா போடட்டுமா?" என்று கேட்டு எழுந்த மீராவிடம், "நீ இரு மீரா, ரூபி செய்வா!" என்று ஜெய் நந்தன் சொல்லி விட அனைவரும் அரட்டையை துவங்கி விட்டனர்.

"மிஸ்டர் பவின்....நான் பில்டர் காஃபி போட்டா நல்லாயிருக்காது. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி இன்ஸ்டன்ட் காஃபி குடிக்கிறீங்களா?" என்று கேட்ட ஷைலஜாவிடம் புன்சிரிப்புடன்,

"இவ்வளவு தானா உங்க ஹாஸ்பிட்டாலிட்டி எல்லாம்? ஏமாத்தீட்டீங்க....போங்க மிஸ். ஷைலஜா!" என்று உச்சுக் கொட்டினான் பவின்.

"ஆல்ரைட்...... நான் எனக்கு தெரிஞ்ச மாதிரி ஏதோ ஒண்ணு போட்டு எடுத்துட்டு வர்றேன். அதை குடிக்கிறது..... இட்ஸ் யுவர் ஃபேட்! என்ன பண்றது?" என்று தோளைக் குலுக்கி விட்டு கொண்டு சென்றாள் ஷைலஜா.

"அம்முலு..... அந்த பையன் பாவம்டீ.... என் பாசமலர் ஒரு மார்க்கமா முழிச்சுட்டு போகுது! நீ போய் ஹெல்ப் பண்ணு..... ப்ளீஸ்!" என்று கேட்ட ஜீவாவிடம்

"அது தான் எங்கம்மா போறேன்னு சொன்னாங்கல்லடா! மாமு தானே வேண்டாம்னு சொல்லுச்சு......கஎன்னை எல்லாம் கூப்பிடாத, ஐ'ம் நாட் கம்மிங்!" என்று சொன்னவளை முறைத்தவன்,

"என்னையாவது விட்டுத் தொலையேன்.....
வந்தவங்களுக்கு நல்ல ரெப்ஃரெஷ்மெண்ட் ட்ரிங்க் குடுக்கணும். உங்க வீட்டுக்கு தான் வந்திருக்காங்க!" என்று சொன்னவன் சட்டையை விடுவித்து விட்டு பெரியவர்கள் அரட்டையை வாய் பார்த்து கொண்டு இருந்தாள் கவிப்ரியா.

மடமடவென்று கிச்சனுக்குள் சென்று தன் தங்கையை தோள் பற்றி ஒரு இருக்கையில் அமர வைத்த ஜீவா, பத்து நிமிடங்களில் ஓர் அழகிய சர்விங் ட்ரேயில் காஃபி, பில்டர் காஃபி, ஜீஸ், ஸ்நாக்குகளை எடுத்து வைத்து, "கொண்டு போய் குடுத்துட்டு வா! ரெண்டு ப்ளேட்ஸ் இருக்கு....." என்றான்.

"தேங்க்ஸ்டா ஜீவா!" என்றவளிடம், "அப்பப்போ கிச்சனுக்குள்ள நுழைஞ்சு வாஸ்து படி எல்லாம் கரெக்டா வச்சிருக்காங்களான்னு பார்க்கவாவது செய்ங்க இளவரசி! நீங்க கல்யாணம் ஆகி போகும் போது உங்க கூட ஒரு மாஸ்டர் ஷெஃப்ஐயும் அனுப்ப முடியாது. சரிங்களா?" என்று கேட்ட தன் அண்ணனிடம் சிரிப்புடன்,

"அதை நான் கல்யாணம் பண்ணி போகும் போது யோசிச்சுக்கலாம். சீக்கிரம் அப்பா கூடவும் பழம் விட்டுடுங்க அண்ணா! அப்பா பாவம் தெரியுமா?" என்று கேட்ட ஷைலஜாவிடம் நெஞ்சை பிடித்து கொண்டு,

"ஷைலு அண்ணனுக்கு இப்படி இன்ப அதிர்ச்சி எல்லாம் குடுக்காதடீ. ஆல் இஸ் வெல் சொல்ல வேண்டியதிருக்கு..... பாரு, ஒண்ணுமில்லடா ஜீவா! எக்ஸைட்டிங்ல ஷைலு வாய் தவறி அண்ணான்னு கூப்பிட்டுட்டா!" என்று சொல்லி விட்டு  சிரிப்புடன் நின்றவனிடம் சலித்துக் கொண்டு,

"நல்லா பேச்சை மாத்தி சிரிச்சுடு. உனக்கா சமாளிக்க சொல்லி தரணும்? போடா!" என்று சொல்லி விட்டு ட்ரேயுடன் நகர்ந்தாள் ஷைலஜா.

"என் புள்ளை ஒன் ஆஃப் த லீடிங் க்ரிமினல் லாயர்ஸ்.... தெரியுமாடா கௌ?" என்று பெருமையாக கௌதமனிடம் ஜெய் நந்தன் சொல்லி கொண்டு இருக்க பார்கவ் தலையில் தட்டிக் கொண்டான். சாப்பிட்ட உணவு புரையேறி விட்டது அவனுக்கு.

நிர்மலாவை தொடையில் சுரண்டியவன், "ஏன் அத்தை, ஜீவாவே மாம்ஸ்க்கு காசு குடுத்து இப்படியெல்லாம் டயலாக் எழுதி தந்திருப்பானோ? உன் பையன் ஒரு நாள் ஆஃபிஸ் க்கு போனான்னா ஒன்பது நாளைக்கு லீவ் விட்டுடுறான். மேய்க்குறது எருமை, இதுல என்ன பெருமை வேண்டிக் கிடக்கு? லீடிங் லாயராம்.... அங்க தான் இந்த காமெடியில ஹைலைட்டே.... அம்மே; எவன்டா அவன் தலைச்சன் புள்ளைய தலையில அடிக்கிறவன்!" என்று கேட்ட படி தலையை தடவிக் கொடுத்தபடி பின்புறம் திரும்பி இருந்தான் பார்கவ்.

"நாந்தான் தம்பி உன் மச்சான்!" என்று சொல்லி விட்டு அவன் பக்கத்தில் வந்தமர்ந்தான் ஜீவா.

"ஹாய் மிஸ்டர் பவின், என் பக்கத்துல வாங்க! இங்க நிறைய இடம் இருக்கு!" என்று அழைத்த பார்கவிடம்,

"இல்ல உங்க ரெண்டு பேருக்கும் ஏதோ கொடுக்கல், வாங்கல் நடக்கிறது மாதிரி தெரியுது. கேரி ஆன்!" என்று சொல்லி விட்டு அவன் கழண்டு கொள்ள,

"டேய் மச்சி எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். தீர்த்துட்டு பேசணும்னு சொல்லாதடா என் செல்லம்.....அச்சு வெல்லம்!" என்று ஜீவாவை கொஞ்சி கொண்டு இருந்தான் பார்கவ்.

"பக்கத்தில நின்னா அச்சு வெல்லம், தூரமா இருந்தா எருமை மேய்க்குறவனா? என்ன திமிருடா உனக்கு? எங்க சீனியர் கிட்ட போய் கேட்டு பாருடா.... ரெண்டு வருஷம் அவர் கிட்ட வொர்க் பண்ணினப்ப நான் லீட் பண்ணின கேஸ் எதுலயாவது தோத்திருக்குமா நாங்க? நாம திறமையானவங்கன்னு இந்த உலகத்துக்கு ப்ரூவ் பண்ணணும்னு நினைக்கிறது கரெக்ட் தான்டா..... ஆனா நம்ம மொத்த திறமையும் கூறு போட்டு விக்கணும்னு நினைக்கிறது தான் தப்புன்னு சொல்றேன்! பெரிய பணக்காரனா அவன் கிட்ட ஃபீஸ் வாங்கிக்க, அன்றாட பொழப்புல தான் அவன் வாழ்க்கை ஓடுதா அவன்ட்ட பணம் வாங்காம உன்னால முடிஞ்ச லா பாயிண்ட்ஸால நியாயம் வாங்கி தர முயற்சி செய், இதுக்கிடையில உன் குடும்பத்தையும் பார்க்கணும். குடும்ப தொழிலையும் பார்க்கணும். க்வாலிட்டி லைஃப் வாழணும் டா..... அதுக்காக கொஞ்சம் நேரம், பணம் எல்லாம் செலவழிக்கலாம். தப்பில்ல!" என்று சொன்னவனை அனைவரும் பாராட்டினர்.

"ஷப்பா......ஆ ஊ ன்னா பயபுள்ள நாலஞ்சு டயலாக்கை பேசி நம்மள ஆஃப் பண்ணிட்டு அப்ளாஸ் வாங்கிக்குது. ஹும்....எல்லாம் நேரம்!" என்று சலித்துக் கொண்டான் பார்கவ்.

கௌதமன் இரவு விருந்து முடித்து விட்டு கிளம்பும் போது பவின் ஷைலுவின் அருகில் வந்தான்.

"ஹாஸ்பிட்டாலிட்டி பத்தி அவ்வளவு பேசிட்டு உங்க அண்ணா குடுத்த காஃபியை குடுத்து ஏமாத்தீட்டீங்கல்ல ஷைலு; நான் என் மேரேஜ் முடிஞ்சவுடனே என் வொய்ப கூட்டிட்டு ஒரு தடவை உங்க வீட்டுக்கு வருவேன். அப்போ நீங்க தான் என்னையும், என் வொய்பையும் கவனிச்சுக்கணும்!" என்றவனிடம்,

"சரி தான் போடா.....கவனிக்கணுமாம் ல்ல..... மூஞ்சியை பாரு..... சரியான துரியன்!" என்று மனதில் நினைத்துக் கொண்டு முகத்தில் அனைத்து பற்களையும் காட்டிக் கொண்டு நின்றாள் ஷைலஜா.

விருந்தோம்பல் பற்றி பாடல்

ஜீவாமிர்தம் சுரக்கும்!

Continue Reading

You'll Also Like

80.8K 2.5K 46
திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...
213K 6.3K 43
அளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு
18.2K 1.6K 42
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத...
12.8K 678 52
காதல் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாத போது மலர்ந்த காதலானது காலப்போக்கில் காதலை இரு மனமும் அர்த்தம் தெரிந்து கொண்டாலும் விதியின் விளையாட்டில் ஜெயிப்...