தாராவுடன் பேசிவிட்டு தொலைபேசியைத் துண்டித்தான் தருண்.

"என்ன சொல்லறா உன் தொங்கச்சி?" என்று நக்கலாக கேட்டான் அர்ஜுன்.

"அவளுக்கும் டூர் வரனும்னு ஆசையா இருக்குதாமா. அப்புறம், இன்னைக்கு ஹாஸ்பிடல்ல எந்த வேலையும் இல்லையாம். சும்மா தான் போயிருக்காலாம். இதை உன்கிட்ட சொல்லவேண்டாம்னு சொன்னா... சோ, இப்ப நான் உன்கிட்ட சொன்னதை எல்லாம் மறந்திடு." என்று சிரித்தான் தருண்.

"ஹோ! அப்போ வா தரு. நம்ம தாராவப் போயி கூப்பிட்டு வரலாம்." என்று தருணை அழைத்தான்.

"டேய்! என்னடா ஆச்சு உனக்கு? மண்டைல ஏதாவது அடிப்பட்டுவிட்டதா? ஒரு அஞ்சு மணி நேரம் கூட அவளை பிரிந்து இருக்க முடியாதா? திடீர்னு தாரா மேல ரொம்ப பாசத்த பொழியற?"

"நீ எப்படி வேணா நெனச்சுக்கோ. நான் போயி அவளை கூப்பிட்டு வறேன்." என்று கிளம்பினான்.

"டேய்! சொன்னாக்கேளு. நீ அங்க போனா பிரச்சனை ஆகும். சொல்லிட்டேன்."
என்று தருண் கூறுவதை காதில் வாங்காமல் ஓடினான் அர்ஜுன்.

தன் காரை எடுத்துக் கொண்டு நேராக தாரா வேலை செய்யும் மருத்துவமனைக்குள் நுழைந்தவன், ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம்..."தாராவை விரைவாக பார்க்க வேண்டும். கொஞ்சம் அர்ஜென்ட்" என்று கூறினான்.

"சார், நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்று ரிசப்ஷனில் அமர்ந்திருந்த இளம்பெண் கேட்க...

"நான் அர்ஜுன். அவளோட ஹஸ்பண்ட்."

"ஒகே சார்." என்றவள், ஒரு நர்ஸை அழைத்து விஷயத்தை சொன்னாள்.

உடனே அங்க இருந்த நர்ஸ் ஒருவர்
தாராவின் அறைக்கு சென்று... "உங்களைப்பார்க்க ஒருத்தர் வந்திருக்காரு. கேட்டா உங்க  கணவர் என்று சொன்னாரு..." எனக் கூறினாள்.

இதைக் கேட்டதும் தாராவிற்கு பற்றிக்கொண்டு வந்தது... "நான் பிஸி. இப்போ பார்க்க முடியாதுன்னு சொல்லிருங்க மா." என்று இவள் கூற...
அதை அர்ஜுனிடன் கூறினாள் நர்ஸ்.

காதலும் கடந்து போகும்💘Tahanan ng mga kuwento. Tumuklas ngayon