அது இதுவோ?? 💞Episode 15💞

2.9K 98 0
                                    


நாட்கள் நகர, அபியும் மலரும் சங்கம் டியூஷன் இல் சேர்ந்து கொண்டனர். வார இறுதி இரு நாட்களும் விடுமுறை தினங்களிலும் வகுப்புகள் நடைபெற்றன. அவ் வகுப்புகள் பிரசித்தி பெற்ற ஆசிரியர் குழாமால் நடத்தப்பட்டு பல வெற்றிகளையும் பறை சாற்றி கொண்டிருந்தது.

அன்று அவர்கள் இருவரும் காலை 8 மணிக்கு வகுப்பு முதலாவது நாள் என்பதால் ஏலியாக வந்து சேர்ந்து சென்றனர்.
உள்ளே நுழைந்ததும், பெரிய வகுப்பு, ஆனால் ஒரு வரியில் 6, 7 பேர். மொத்தமாக 500 க்கும் மேற்பட்ட பிள்ளைகள்.
கேட்கும் பிள்ளைகள் எல்லாம் 10A மற்றும் நல்ல பெறுபேறுகள்.

ஒருவாறு இரண்டாவது வரிசையில் போய் அமர்ந்தனர். மலரின் கண்களோ யாரையோ தேடின. "மலர், என்னடி வந்ததில் இருந்து மும்முரமாக யாரையோ தேடுகிறாய் ?? சொல்லு நானும் உன் பங்குக்கு தேடலாமே. " என்று அபி வினவ,
"அது வந்து... டி தினேஷை தான்" என்று மலர் கூற,
அபிக்கு இடி விழுந்தது போல் ஏனோ அவளது மனம் வலித்தது.

"உன்னிடம் சொல்லதான் இருந்தேன். அவன் நீ நினைக்கிற மாதிரி மோசமான பொடியன் இல்லை. டைலி எனக்கு மெசேஜ் பண்ணுவான். அவன் தூங்கும் வரை நான் மெசேஜ் பண்ணி கொண்டு இருப்பேன். நேற்று சொன்னானே இன்றைக்கு கிளாஸ் வருவதாக. ஆனா இன்னும் காணவில்லை. மிஸ் மை பெஸ்ட் ப்ரெண்ட்" என்றும் அவன் சிரிக்க வைத்த பல சந்தர்ப்பங்களையும் மலர் கூற,

"அவன் என்னுடைய எதிரி தான். ஆனாலும் அவன் இவளோடு ஏன் பேசுவது எனக்கு வலிக்கிறது? அவன் ஏசுவதாக இருந்தாலும் பேசுவதாக இருந்தாலும் என்னோடு மட்டுமாக இருக்க வேண்டும் " என்று அவளது மனது அவனது அன்புக்காக முதன் முறையாக ஏங்கியது.

" ம்ம்ம் " என்று பதிலளித்து அபி மலரின் பேச்சை கேட்டு கொண்டிருந்தாள். ஆசிரியர் வரவும் இருவரும் பாடத்தை கவனிக்க தொடங்கினர்.

வீட்டுக்கு போய் " ஹாய், குட் ஈவ்னிங் " என்று தினேஷிற்கு மெசேஜ் செய்தாள் அபி.

" ஹாய். என்ன அதிசயம். உங்களுக்கு எங்களை நினைவு வந்திருக்கிறது" என்று கிண்டலுடன் பதில் வந்தது.

"அதெல்லாம் வரும். ஏன் இன்னறக்கு க்ளாஸ் வரவில்லை?? உங்களை ஒருத்தி ரொம்ப மிஸ் பண்ணி கொண்டு இருந்தாள்" என்று கோபத்தை காட்ட,

" அதுவா.. ஹிஹி சும்மா போர் அடிச்சது அதுதான் வரவில்லை . யாரு என்னை மிஸ் பண்ணினது?? நீ யா?? " என்று ஆவலுடன் வினவினான்.

" நான் ஏன் உங்களை மிஸ் பண்ணவேண்டும்??" என்று அபி தட்ட,

"அப்போ யாரு.. 🤔" என்று வினவ,

" உங்க நிவ் க்ளோஸ் ப்ரென்ட் மலர் தான் " என்று அபி கூற,

தினேஷிற்கு பெரிய ஆச்சரியம். ஓஹோ மேடமிற்கு பொறாமை வந்து போல. இதுவும் நல்ல சந்தர்ப்பம் தான் என்று அவளை வீண் வம்புக்கு இழுக்க,

"ஐயோ. என்னை மிஸ் பண்ணுவதற்கு அப்படியாவது ஒருத்தி இருக்கிறாளே. அதுக்கு நீயும் இருக்கிறீரியே. நான் என் பெஸ்ட்டிக்கு மெசேஜ் ஒன்னு போட்டு விடுகிறேன். தேங்க்ஸ் ஃபோ கெயாரிங் ஹ." என்று சிரித்தபடியே டைப் செய்தான் தினேஷ்.

பதிலை பார்த்து கடும் கோபமடைந்தாள் அபி.
"ஆஆஆ ஓகே. சாரி ஃபோ த டிஸ்டபன்ஸ். யு கரி ஒன்" என்று அனுப்பி விட்டு தன் வேலையை கவனிக்க தொடங்கினாள்.

"என்னடி, உனக்கு இவ்வளவு கோபம் வருகிறது? தென் யு ஹேவ் இன்ட்ரெஸ்டட் இன் மீ. வாவ்வ்வ்" என்று தினேஷின் மனம் கூறியது.

அடுத்த கிழமை class ஆரம்பித்து 10 நிமிடத்தில் "எக்யூஸ் மீ சேர்" என்று கம்பீரமான ஒரு ஆண் குரல் கேட்டது.

அருகே அமர்ந்து இருக்கும் மலரின் முகம் பிரகாசமாக ஒளிர்ந்தது, ஈஈஈ என்று இளித்து கொண்டிருக்க அபியும் அந்த உருவத்தை நோக்கினாள். ஸ்டைல் ஆக நின்று கொண்டிருந்த உருவத்தின் கண்கள் தன்னை கூர்மையாக நோக்கின.

தொடரும்...

அது இதுவோ??(completed) Όπου ζουν οι ιστορίες. Ανακάλυψε τώρα