அது இதுவோ?? 💞Episode 10💞

3.3K 116 5
                                    


அபி கேக்கை வெட்டி எல்லோருக்கும் ஊட்டி விட,

தினேஷின் டேனும் வந்தது. பயந்த படி முன்னோக்கி சென்றாள் அபி. ஏதும் ஏசிவிடுவானோ என்ற பல கற்பனைகளுடன் செல்ல, அவ்வளவு நேரமும் அவளை கண்ணால் விழுங்கி கொண்டிருந்தவன், அவள் அருகில் போனதும் ஃபோனை எடுத்து நோண்டி கொண்டு இருந்தான்.

"தினேஷ்" என்று அவள் அழைக்க, அவளை நோக்க, அவளும் அவனை நோக்கி இருந்தாள்.
இரு கண்களுக்கும் மின்னல் பாய்ச்ச, அவளை பார்த்தபடி, தினேஷ் கேக்கை பெற இதழை விரித்தான்.

இதுவரை அவள் சக ஆண் மாணவர்களுக்கு கையிலே கேக்கை வெட்டி கொடுத்தாலும் இவனது செயற்பாடு அவளை திக்கு முக்காட செய்தது. இவனுக்கு ஊட்டி விடாவிட்டால் ஏதும் அவமானப்படுத்துவானே என்று அவனது வாயருகில் கொண்டு போனாள்.

அவனும் கண் இமைக்காது அவளது தைரியத்தை கண்டு மனம் குளிர்ந்தான். கேக்கை ஊட்டி விட வந்த வெந்நிற அழகிய கை விரல்களை மெதுவாக வேண்டுமென்றே கடித்து விட்டான் தினேஷ்.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத அபி வலியால் துடித்து போனாள். ஆனால் அவளாள் அங்கே அலர முடியவில்லை. சுற்றி வர சக மாணவர்கள் இருந்தனர்களே. அவள் வலியை பொறுத்து கொண்ட விதம், அவனை முறைத்து விட்டு சென்ற விதம் தினேஷின் கண்ணுள் படம் பிடித்தது.
ஆனாலும் அப்போது அந்நேரம் கடிபட்ட இடத்திற்கு முத்த மாத்திரை வழங்க அவனோ துடித்தான் அதாவது நம்ம காதல் மன்னன்.

"டேய், என்னடா செய்தாய்? அவள் உன்னை இப்படி முறைத்து கொண்டு போகின்ற அளவிற்கு?" என்று நண்பர்கள் கேட்க,

"ஒன்றுமில்லையே" என்று நண்பர்களிடம் அவன் சமாளித்தும் அவர்கள் விட்ட பாடில்லை. பிறகு
"அவள் கை விரலை கடித்து விட்டேன்" என்று அவன் வெட்கப்பட்டு கூற,
"உனக்கு லூசாடா? இப்படி பண்ணினால் அவளுக்கு உன் மேல் கோவம் தான் வரும். லவ் வராதுடா. " என்று அவனது உற்ற நண்பன் கூற,

" பிலீம்ல வருகிற மாதிரி என் அபியை நான் லவ் பண்ண கூடாது. மாறாக அவளை வெறுப்பு ஏற்றி மற்றவர்களை விட நான் டிபரென்ட் என்று காட்டவேண்டும். அன்பால் மட்டும் லவ்வை காட்ட கூடாது. வெறுப்பு ஏற்றியும் அவளை எவ்வளவு நேசிக்கிறேன் என்று காட்டுவேன். அவள் செய்கின்ற ரியெக்ஷன் ஒவ்வொன்றையும் நான் அணு அணுவாக ரசிக்கிறேன்டா. நீங்கள் சொல்றதுபோல் என் மேல் அவள் வைத்து இருக்கின்ற வெறுப்பு ஒரு நாள் காதலாக மாறும். எனக்கு நம்பிக்கை இருக்கின்றது" என்று கூறி அவ்விடத்திலிருந்து கிளம்பினான் தினேஷ்.
நண்பர்களும் அவனது காதலை நினைத்து வியந்தனர்.

பிறந்த நாளும் இனிதாக முடிய,

வகுப்பிலே நுழையும் தினேஷிற்கு அபி எல்லோரிடமும் என்ன ட்ரீட் வேண்டும்? என்று கேட்பது விழ,
அது கோடை காலம் என்பதால் எல்லோரும் ஐஸ்கீரீம் சாப்பிட ஆசையை தெரிவித்தனர். அவளும் ஆள் கணக்கு பார்த்து விட்டு செல்ல,
ஒரு வலிய கரம் அவளை தடுத்தது. யார் என்று பார்க்க, அவளது எனிமி தினேஷ்.

"எனக்கு எல்லோருக்கும் வாங்கி கொண்டு வரப்போற நார்மல் ஐஸ்கிரீம் வேண்டாம். ஐ நீட் சாக்லெட் பேவர் ஐஸ் கிரீம் வித் கித்துள் ஹனீ. புரிகின்றதா? கொண்டு வராவிட்டால் வகுப்பிற்குள் ஐஸ் கீரிமை போக விட மாட்டேன். ஹா ஹா ஹா" என்று சிரித்தபடி வழி விட்டான்.

தொடரும்...

அது இதுவோ??(completed) Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ