அது இதுவோ?? 💞Episode 37💞

2.7K 74 7
                                    

"தினேஷ், உங்களுக்கு நல்ல தொழில் ஒன்று தேட குறைந்தது எவ்வளவு வருடம் பிடிக்கும்? டிக்ரீ உம் சேர்த்து முடிக்க??" என்று அபி கேட்க,

"எப்படியும் 3வருடம் ஆகும். ஏன் அபி??"

"தினேஷ், அதுவர உங்களுக்காக நா காத்திருக்கிறேன். அந்த மூன்று வருஷம் முடியும் வர" என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் கூற,

"உனக்கு பைத்தியமா?? 3வருசம் சின்ன காலமா?? வாய்க்கு வருவதெல்லாம் பேசாதடி. " என்று தினேஷ் கோபப்பட,

"உண்மையாக தான் சொல்லுகிறேன் தினேஷ். உங்க நல்ல மனதுக்கு சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கும். அதில் அனுபவம் எடுக்கலாம். 3வது வருசம் நல்ல தொழிலில் ஜொய்ன் ஆகலாம். உங்கள் தங்கையும் அந்த நேரம் படித்து முடித்திருப்பாள். அவங்களையும் உங்களால் கரை சேர்க்க முடியும்.
நம்பிக்கை வையுங்கள். எல்லாம் சரி ஆகும்." என்று பெரும் நம்பிக்கையுடன் கூறினாள் அபி.

" 3 வருடம் உன்னை வைட் பண்ண சொல்லி, கடைசியில் அம்மா வேண்டாம் என்று சொன்னால் என்னடி செய்வது?? எனக்கு அப்படி உறுதியாக சொல்லமுடியாதுடி. உன்னை பழகி ஏமாற்றியது போல் ஆகிவிடும். " என்று பெரும்பாரத்துடன் தினேஷ் கூற,

" தினு. நீ ஒன்றும் யோசிக்காதே. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நாம் சேர்வோம். கடவுள் நாம் தான் கணவன்-மனைவி என்று விதியில் எழுதி இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது.

நீ என்னை காதலித்ததை சொல்லாமல் உன்னை மாப்பிள்ளை கேட்டு வர வைக்கிறேன். என்னால் உங்களுக்கும் அம்மாவிற்கும் எந்த மன கசப்பும் வராமல் இந்த காரியத்தை நான் செய்கிறேன் டா.
ஆனால் எல்லாவற்றிற்கும் முன் உன் அனுமதி கிடைக்க வேண்டும்.

தினு உனக்காக 3வருடம் அல்ல 30 வருடம் கூட காத்து இருப்பேன். "
என்று அபி கூற, அவள் தன் மேல் வைத்த காதலின் ஆழம் புரிந்தது.

" அபி, உன் வீட்டில் 3வருடம் உன்னை வைத்திருப்பார்களா?? " என்று ஏக்கத்துடன் கேட்க,

" நீ அதை பற்றி யோசித்து மனதை போட்டு குழப்பிக்கொள்ளாதேடா. இதை போய் சொல்கிறேன். அப்படி 3வருசம் இருக்க முடியாது என்றால் வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பாக்கட்டும். நீ என்னோடு பேசாத 2வருடமும் பார்த்தார்கள். ஆனால் ஒன்றும் சரி வரவில்லை. ஆகவே இதுபோல ஒன்றும் சரி வராது என்று எனக்கு தோனுகிறது. என்னுடைய சம்மதம் இல்லாமல் கல்யாணம் நடக்காதே" என்று அபி பயத்துடன் கூற,

அது இதுவோ??(completed) Onde as histórias ganham vida. Descobre agora