அது இதுவோ?? 💞episode 8💞

3.4K 111 2
                                    


இரவு உணவையும் பொய் காரணம் சொல்லி உண்ணாது மீண்டும் உறங்கினாள் அபி.

காலை பாடசாலை போவதற்கும் மனசே இல்லை. என்ன நடந்ததோ நடக்க போகிறதோ என்று மனம் தள்ளாடியது.

பேரூந்தில் இருந்து இறங்கி தன் கால் போன போக்கில் நடந்தாள் அபி. வகுப்பறைக்குள் நுழைந்த அவளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது
நலமாக இருந்த அகிலனே...

உடனே ஓடிச்சென்று "அகிலன் உனக்கு ஒன்றுமில்லை தானே? நான் எவ்வளவு பயந்து போனேன் தெரியுமா?" என்று கரிசனையுடன் கூற,
அவனோ பதில் ஏதும் சொல்லாமல் முகத்தை திருப்பி கொண்டான்.

அவ்விடம் நோக்கி தினேஷ் வந்து "நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன். ரொம்ப பாசம் வழிகின்றதே. இது வெறும் நட்பு தானா அல்லது லவ் தானா? அபி??? " என்று கேட்க,
இரு காதுகளையும் பொத்தி கொண்டாள் அபி.

" கேளுடி, இன்னும் சொல்லி முடியவில்லை. வீட்டுக்கு போனதும் கால் செய்து எடுத்தது அப்பா என்று கூட விளங்காமல் அக்கறையாக பேசினியாமே. யார் இந்த பொண்ணு என்று வீட்டை இரண்டாக்கினாராம் அவர். அத்தோடு அகிலன் நீ தான் என்று சொல்ல, அந்த பெண்ணை காதலிக்கிறாயா? காதலிக்கிறீர்களா? இரண்டு பேரும்? அவள் பேசியது அப்படி போலத்தான் இருந்தது. உடனே பார்க்க வேண்டும் போல் இருக்கிறாதாம். அகிலன், இனி உன்னை சுற்றி கவனிக்க ஆள் போட்டு இருக்கிறேன். என் அந்தஸ்து எல்லாம் உனக்கு நன்றாக தெரியுமே. யாரும் ஏதும் சொல்லி கேள்வி பட்டால் தொலைத்துவிடுவேன். இந்த வயதில் லவ் ஒன்று தான் குறை என்று எச்சரித்து விட்டு போனாராம். இதெல்லாம் நடப்பதை கேட்டுக் கொண்டு பக்கத்து வீட்டு பையன் அதாவது நம்ம விமல் இருந்தாம்" என்று சொன்னான்.

" நான் ஒன்றும் அகிலனை லவ் பண்ணல்ல. அவன் என்னுடைய  ப்ரெண்ட் மட்டும் தான். " என்று கதறினாள் அபி என்ற பேதை.

" அகிலன் கூட நீ லவ் பண்ணுவதாக தான் நினைத்து கொண்டு இருக்கிறானாம்" என தினேஷ் கூற,

அவனும் இப்படியா நினைத்து கொண்டு இருக்கிறான்? என்னுடைய தூய்மையான நட்பை ஏன் யாரும் புரிஞ்சி கொள்ளவில்லை என்று நினைக்கையில் அவளது மனம் இரண்டாகப் பிளப்பட்டது போல இருந்தது . வேதனையால் மனம் வலித்தது.

ஒரு ஆணும் பெண்ணும் பழகினால் அது கட்டாயம் காதலா? காதலாக மட்டுமா இருக்க வேண்டும்? ஒரு தூய நட்பாக இருக்க கூடாதா? என்ன உலகமிது? எனக்கு கிடைத்த முதல் ஆண் நட்பு அகிலனால் ஏற்பட்டதே. இதுவும் இப்படியாயிற்றே. என மனம் யோசிக்கலாயிற்று.

வீட்டை அடைந்த அவளுக்கு அவளது மைத்துனர்களின் துணையால் அந்த பாடசாலை விடுமுறையாய் இருந்த ஒரு கிழமையும் கவலைகள் கரைந்து போனது.

அத்துடன் அன்றோடு அகிலனுடன் நட்பு அறுந்தது. காலப்போக்கில் அவளும் அகிலனை மறந்தாள். ஆனாலும் அவனை காணும் போதெல்லாம் அவர்கள் சந்தோஷமாக இருந்த காலம் நினைவு கூறியது. என்னுடைய நட்பை ஒழுங்காக புரியாதவனுக்கு நான் எதற்கு என்று கூறியது மனது.

மற்ற புறத்தில் தினேஷ் அளவில்லாத சந்தோஷம் அடைந்தான். ஏனெனில் தன் காதலுக்கு இனி ஏதும் தடை இல்லையே. அவனுக்கும் தேவைப்பட்டது இவர்களது நட்பை எப்படியாவது அகிலனின் அப்பாவின் காதுக்கு எட்ட வைக்க வேண்டும் என்பதே. அதுவும் தன் திட்டத்திற்கேற்ப நடந்துவிட்டதே.

இனி அபியுடன் காதல் பயணத்தை தொடர எண்ணினான். ஆனால் எப்படி தொடங்குவது என்று அவன் மனம் சிந்திக்கலாயிற்று.

தொடரும்..

அது இதுவோ??(completed) Where stories live. Discover now