அது இதுவோ?? 💞Episode 28💞

2.7K 80 2
                                    

அந்நிகழ்ச்சியின் பின் அபிக்கு தினேஷ் மீது நல்ல மரியாதையும், தனது கற்பை அன்று காப்பாற்றியது, இவள் எனக்கு வேண்டப்பட்டவள் என்று கூறிய கூற்று, பயத்தில் இருந்த தன்னை அனுசரித்த விதம் அவள் மனதில் இருக்கும் காதலை மேலும் வலுப்படுத்தின.

க்ளாஸின் இறுதிநாட்கள் நெருங்கின. கண்களுக்கு விளங்காமல் ஈராண்டுகள் அவசரமாக சுழன்று சென்றன. அபிக்கு இனி தினேஷை எங்கு எப்போது எப்படி காண்பது என்று மனதில் கவலை குடிக்கொண்டது.
"தினேஷ், இன்னும் 2கிழமை தான் இருக்கிறது. வில் யூ மிஸ் மீ??" என்று குழந்தை தனமாக அவனிடம் கேட்க,
"நா ஏன் உன்ன மிஸ் பண்ணனும்??  இல்ல மிஸ் பண்ண மாட்டேன்" என்ற பதிலே திரும்ப திரும்ப கேட்டும் வந்தது. சில வேளைகளில் மனமுடைந்து போனாள் அபி. ஒரு நாள் அவன் தனது காதலை ஒரு சந்தர்ப்பத்தில் சொல்வான் என்று கண் மூடித்தனமாக நம்பினாள் அபி.

இவ்வாறு இருக்கையில் க்ளாஸினால் சிறிய சுற்றுலா ஒன்று சனிக்கிழமையும், கடைசி வகுப்பு நடக்கும் ஞாயிற்றுக்கிழமை மாணவர்களின் ப்ரோமன்ஸ் டே உம் ஆசிரியர் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

சுற்றுலாவிற்கு அபியின் பெற்றோர் அனுமதிக்கவில்லை. வாணியின் வேண்டுகோளுக்கு இணங்க, கடைசி நாளுக்கு முதல் நாள் அனுமதி கொடுக்க, அபியோ வானத்தில் இறக்கை கட்டி பறந்தாள்.

தினேஷ் இடம் எத்தனையோ தடவை அபி "வருவதா?" என்று கேட்டும், பலன் கிட்டவில்லை. "வந்தால் பார்த்துக்கோ. எனக்கு வேற வேலை இருக்கிறது. ஆனால் வர ட்ரை பண்றேன். ஆனா சுவர் இல்ல" என்று கூற,
காலில் விழாத குறையாக தினேஷிடம் கெஞ்சினாள்.
"ப்ளீஸ், வர பாருடா. இனி இது மாதிரி சந்தர்ப்பமே கிடைக்காது. இது நம்முடைய நட்பின் கடைசி நினைவாக கூட இருக்கட்டுமே" என்று கூற, "பார்க்கலாம்" என்று பதிலும் வந்தது.
கடவுளிடம் தினேஷ் வர வேண்டும் என்று அபியின் மனம் வேண்டிக் கொண்டது.

அன்றைய நாளும் அழகாய் மலர்ந்தது. மனதில் பல ஆசைகளும் அபி சென்றாள்.
கடைசியாக தினேஷ் இற்கு
" இன்னைக்கு வருவீங்களான்னு?? " என்று
மேசேஜ் ஒன்றை அனுப்பி வைத்தாள்.
ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்தில் ஏறி வாணியின் அருகே அமர்ந்தாள்.
அவளது கண்களோ தினேஷை அங்கும் இங்கும் தேடின.
ஃபோன் ஐ அடிக்கடி எடுத்து பார்த்தாள். அவனிடமிருந்து எந்த தகவலும் வந்திருக்கவில்லை.

பேருந்தும் மேலதிக 30 நிமிடங்கள் பார்த்து விட்டு கிளம்ப தொடங்கியது.
ஏமாற்றங்களுடன் அபியின் முகம் வாடி போயிற்று. சிறு தூரத்தில் பேருந்து நிறுத்தப்பட, கரதோசங்களில் மத்தியில் ஒரு ஆண் பேருந்தில் ஏறினான். சத்தம் வந்த திசையை நோக்க அங்கு தினேஷ் கிடார் உடன் வந்து கொண்டிருந்தான்.

சூரியனை கண்டு மலரும் தாமரை போல அபியின் வாடியிருந்த முகமும் அவனை கண்டு மலர்ந்தது.

பேருந்தினுள்ளே கிடார் அடித்து கொண்டு, பாடல்களை அழகாய் படிக்கும் தினேஷை கண் கொட்டாது பார்த்து கொண்டு இருந்தாள் அபி. அப் பாட்டு தனக்கென
நினைத்தபடி மெய் மறந்து கனவுலகில் சஞ்சரித்தாள் அபி.

உன்னைக்கண்டு எண்ணம் யாவும் மெல்ல
ஊமையாகி நின்றதென்ன சொல்ல
நூறு வார்த்தை அல்ல அல்ல ஒரு வார்த்தை புரியாதா

எந்த வார்த்தை சொல்லவில்லையோ நீ
அந்த வார்த்தை எந்தன் கண்களால் நான்
நூறு ஜாடையில் சொன்னேனே தெரியாதா புரியாதா

ஓ… மையைப்போல நானும் கண்ணில் சேர வேண்டும்
மையைப்போல நானும் கண்ணில் சேர வேண்டும்
பூவைப்போல நானும் உந்தன் கூந்தல் சேர வேண்டும்

ஓ… கண்ணில் வைத்த மையும் கரைந்து போகக்கூடும்
கூந்தல் வைத்த வண்ணப் பூவும் வாடிப் போகக்கூடும்

சரி காதல் நெஞ்சை நான் தரலாமா உன் கணவனாக நான் வரலாமா

இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால் ஒரு ஜென்மம் போதும்

உயிரே வா…
அன்பே வா…

(அவன் கிடார் அடிப்பதை அருகில் சென்று அவனை பாராட்டி, எனக்கும் கிடார் அடிக்க பழக்கித்தாருங்களே என்றவுடன், அவனும் அபிக்கு கிடாரை வழங்கி, அவளின் பின்னால் நெருங்கி அமர்ந்து, அவளது விரல்களை பிடித்து கற்பிக்க, அவளும் அவனும் அடிக்கடி காதல் பார்வையை வீசிக்கொள்ள..)

"என்னடி, வந்து 30 நிமிடம் கூட ஆகவில்லை, உனக்கு என்ன தூக்கம்?" என்று அபிக்கு வாணி குட்டு ஒன்றை கொடுக்க தான் கண் விழித்து நிஜ உலகிற்கு வந்தாள் அபி.
"அப்போ.. கிடார் படித்தெல்லாம் வெறும் கனவா?? ச்செ.." என்று மனம் வருந்தலாயிற்று.

தொடரும்..

அது இதுவோ??(completed) Wo Geschichten leben. Entdecke jetzt