அது இதுவோ?? 💞Episode 35💞

2.7K 77 5
                                    


அன்று அபியின் தாய் சமையலறையில் இருக்க, மெதுவாக அபி சென்று,
"அம்மா, என் கல்யாண விஷயம் எல்லாம் சரி ஆகவில்லை என்று ஒன்றும் யோசிக்காதீர். நானும் கேட்டு கொண்டு அவதானித்து தான் வருகிறேன் மா. என் ஜோசியத்தில் கோளாறு, நான் அவ்வளவு வெள்ளையாக இருந்தாலும் பிங்க் இல்லை என்று பொய்காரணம் சொல்வதும், அங்கே வீடு தாருங்கள், இங்கே வீடு தாருங்கள், வாகனம் தாருங்கள் என்று சொத்துக்கு ஆசைபடுகின்ற ஆட்களும், பெரும் செல்வந்தர் உறவெல்லாம் நமக்கு வேண்டாம் மா, என்னுடைய கல்யாணத்தை கடன்பட்டு செய்து அதை அடைக்கவே காலம் போகும். என் தங்கைக்கும் அதே அளவு செலவு செய்ய வேண்டுமே. அப்பாவும் எவ்வளவு காலம் உழைக்க?? என்னை தேடி மட்டும் ஒருவர் வருவார். சீதனம் ஒன்றையும் எதிர்ப்பார்க்காமல். அவரை கட்டிதாங்கமா. வாழ்க்கை பூராக சந்தோசமாக இருப்பேன். சொத்து இன்று இருக்கும் நாளை இருக்காது ஆனால் என் மேல் இருக்கின்ற பாசம் இல்லாமல் போகாதுமா"என்று அபி உணர்வு பூர்வமாக மனதிற்கு பட்டதை பேசினாள்.

மேலும் " அம்மா, நான் ஒரு விஷயம் சொல்வேன் ஆனால் ஏசக்கூடாது.. " என்ற பல்லை ஈஈஈஈ என்று காட்டியபடி கேட்க,
" சொல்லு மா... " என்று தாய் கூற,

" ஏன் இதெல்லாம் கடவுள் ஏற்பாடாக கூட இருக்கலாமே. என்னை எல்லோரும் ரிஜேக்ட் பண்ணுவது. ஒரு வேளை.... என் வருங்கால கணவராக தினேஷாக கூட இருக்கலாமே.. " என்று தயங்கியபடி கூற,
தாய் சிலையாகி நின்றார்.

மகள் இன்னும் அவனை மறக்கவில்லையா?? இரண்டு ஆண்டுகள் ஆகிற்றே. என் மகள் அவனை உண்மையாக லவ் பண்ணினாலும் அவன் பண்ணவில்லையே.. என்று வருந்தினாலும் தினேஷ் மனம் மாறி இருப்பான் என்று அவரது உள் மனது கூறலாயிற்று.

" ம்ம்ம்.. இப்போ தினேஷ் என்ன பண்ணுகிறாராம் ?? " என்று வினவ,

" சிவில் இன்ஜினியரிங் 3ம் வருஷ படிக்கிறார். என்று மலர் இப்போதுதான் சொன்னாள்.. " என்று புன் முறுவலுடன் அபி சொன்னாள்.

"சரி, அவன் மனதில் உன்னை பற்றி என்ன இருக்கிறது என்று முதலில் தெரிந்து கொள். உன் ஆசைப்படி எல்லாம் நடைபெறட்டும். ஆனா இதான் கடைசி தடவ"என்று தாய் கூற, அபியோ வானில் பறக்கலானாள்.

அது இதுவோ??(completed) Where stories live. Discover now