அது இதுவோ?? 💞Episode 34💞

2.6K 85 10
                                    


"என்னங்க, எங்கள் அபியை மாப்பிள்ளை வீட்டினருக்கு பிடிக்கவில்லையாம். என் மகளுக்கு என்ன குறை??" என்று அபியின் தாய் தனது கணவரிடம் புலம்பி கொண்டு இருந்தார்.

அபியின் முகமோ சந்தோசத்தால்
பிரகாசித்தது.

அப்படி இருக்கையில் அபியின் தொலைபேசி சிணுங்க,
புதிய தொலைபேசி இலக்கம்...
யாரா இருக்கலாம்??
தினேஷா....???

மலரிடமும் வாணிடமும் என் நம்பரை தினேஷிடம் ஒரு போதும் கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் அவங்களின் ப்ரெண்ட்சிப்பை ஐயும் சேர்த்து கட் பண்ணுவேன் என்று சொல்லி இருக்கேனே...
அதையும் தாண்டி தினேஷ் எடுத்து இருப்பானோ. பழைய நம்பர் எனக்கு தெரியும் என்று வேற நம்பரால எடுத்து இருப்பானோ.. அவ்வளவு முக்கியமானவளா நான்?? ஒரு வேளை என் காதல் புரிந்ததோ ?? என்ற பல கற்பனைகளுடன் தன்னவனின் குரலை கேட்க அழைப்பை எடுத்தாள் அபி..

"ஹாய் அபியா..?" என்று எதிர் முனையில் ஓர் ஆண் குரல்.
" ஆம்." என்று அபி கூற, இது தினேஷ் மாதிரி தெரியலவில்லையே. நல்லாக தெரிந்த குரல். யாரென்று கேட்டால் மானம் போகுமே. சரி பேச பேச விளங்குமே என்று கதைத்தாள்.

"என்னடி, உனக்கு கல்யாணம் எல்லாம் பேசுறதாக கேள்விப்பட்டேன். என்னுடைய தூரத்து சொந்தக்கார பையன் அன்று உன்னை பார்க்க வந்தது. நீ தினேஷை லவ் பண்ணுவறதா கேள்விப்பட்டேன். அத்தோடு உன்னுடைய என்னுடைய நட்புக்காக அந்த கல்யாண சம்மதத்தை நான் தான் பொய் சொல்லி நிறுத்தினேன்" என்று கூறும்போது தான் அது அகிலனின் குரல் என்று உறுதி செய்தாள் அபி.

"என்னடி, என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே. நீ தினேஷை உண்மையாக லவ் பண்ணுகிறாயா..? " என்று அகிலன் கேட்க,

" ஆம் டா. ரொம்ப நன்றி என் கல்யாணத்தை நிறுத்தியதற்கு. இன்னும் என் மனதை அவனை மட்டுமே தான் லவ் பண்ணுகிறது" என்று அபி கூறினாள்.

"நான் ஸ்கூல் விட்டு போன பிறகு, மேடம் அவனோடு செட் ஆகிவிட்டியாமே.. " என்று சிறு பொறாமையுடன் கூற,
நடந்தவற்றை அனைத்தையும் அகிலனிடம் கொட்டினாள். இப்போது அவன் கூட பேசுவதில்லை. லவ் பண்ணுகிறேன் என்று கடைசி வரை அவன் சொல்லவில்லை. ப்ரெண்ட் ப்ரெண்ட் என்று சொல்லியே என்னை நோகடித்தான். இதுவரை அவன் என்னை தேடி வரவில்லை. வீட்டில் வேறு திருமண பொருத்தங்கள் வந்து உயிரை எடுக்கிறார்கள். மனது இன்னும் அவனை நினைத்து கொண்டு இருக்கிறது.
சில வேளை இருதலை கொள்ளி எறும்பாக தவிக்கிறேன் டா " என்று அவளது ஆதங்கத்தை கூறினாள் அபி.

அது இதுவோ??(completed) Where stories live. Discover now