அது இதுவோ?? 💞Episode 38💞

2.6K 71 0
                                    


அபியும் தினேஷும் ஆன்லைனில் தினேஷ் இற்கு தொழில் தேடினர். ஆனாலும் பொதுவாக அனுபவம் கேட்டு இருப்பதை கண்டனர். அதுவும் குறைந்தது 2வருட அனுபவம். அதை பார்த்த தினேஷ் இற்கு வாழ்க்கையோ இருண்டு போனது.

"தினு, ஒன்றும் யோசிக்காதே. எல்லாம் சரி ஆகும். எல்லாவற்றிற்கும் காலம் நேரம் வர வேண்டுமே" என்று அபி தினேஷை தேற்றினாள்.

ஒரு கிழமையில்,
"அபி, உன்கிட்ட சொல்ல ஒரு நல்ல செய்தி இருக்கு " என்று தினேஷ் கூற,

"என்னடா??" என்று அபி ஆர்வமாக கேட்க,

"எனக்கு தொழில் கிடைத்துவிட்டது. சைட் ஒன்றில் சுப்பர்வைஸராக  வேலை செய்ய வேண்டும். நாளைக்கு ஜொயின் ஆக சொல்லி இருக்கிறார்கள். 200km தள்ளிய சைட்டில் தான் வேலை." என்று தினேஷ் கூறினான்.

"வாவ்வ்வ்... அப்படி சந்தோசமா இருக்கு டா" என்றபடி அழைப்பு துண்டிக்கப்பட்டது. ஒன்றுமே புரியாமல் தினேஷ் நின்றான்.

5 நிமிடத்திற்கு பின்,
"இப்போது சொல்லுடா." என்று அபி கூற,

"எங்கே போனாய் அபி? என்னை விட உனக்கு அப்படி என்ன முக்கியமான வேலை இருந்தது? "என்று கோபத்துடன் கேட்க,

" ஆமாம், உன்னை விட அந்த வேலை முக்கியம் தான் எனக்கு" என்று அவளும் கோவப்பட,

"அபி நீ அதையே செய், நான் வைக்கிறேன்" என்று கூறலானான்.

"லூசுப்பையனே, நான் கடவுளை வேண்ட போனேன். கடவுளிடம் தினமும் பிரார்த்தனை பண்ணேன். அதே போல் உனக்கு தொழில் கிடைத்துவிட்டது. சோ நன்றி சொல்லி பிரார்த்தனை பண்ண போனேன் டா. உன்னை விட வேறு என்ன வேலை முக்கியமாக செய்ய போவேன்? சரி சரி இப்போது வையுங்கள் ஃபோனை" என்று பொய் கோவப்பட,

" அய்யோ சாரி டி. நீ பேசாமல் வைத்துவிட்டு போக அப்செட்டில் சொல்லிவிட்டேன். உன் கடவுள் பக்தியால் தான் எனக்கு இந்த தொழில் கிடைத்து இருக்கிறது. சோ ஹாப்பி டி" என்று தினேஷ் பேசிக் கொண்டிருக்க,
மற்ற முனையில் அமைதி நிலவியது.

அது இதுவோ??(completed) Where stories live. Discover now