அது இதுவோ?? 💞Episode 29💞

2.6K 77 2
                                    


பல இடங்களில் பார்வையிட்ட மாணவர்கள் இறுதியில் கடலுக்கு சென்றனர். எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி. கடலை யாருக்கு தான் பிடிக்காது??

ஆண் மாணவர்கள் கடலில் நீந்த, பெண்கள் கடற்கரையில் பந்து விளையாடிக் கொண்டு இருந்தனர். வாணியும் அபியும் அவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டு இருக்கையில் பந்து திடீரென கடலை நோக்கி செல்ல, அதை பிடிப்பதற்காக வாணி ஓடினாள்.

பந்தும் அலைகளில் மிதந்து செல்ல, தூரம் போக போகவே ஆழமும் கூடிப்போக, அவளை அறியாமலே நடந்து சென்ற அவள் திடீரென மூழ்க பார்க்க, அதை கண்ட நீந்த தெரியாத அபியும் தனது உற்ற நண்பியை காப்பாற்ற கடலை நோக்கி நடந்தாள். அவளாலும் ஒரு கட்டத்தில் அலைகளின் தாக்கத்தால் நிலைகுலைந்து, தத்தளித்தபடி "யாராவது காப்பாற்றுங்கள்" என்ற கூச்சலைக் கேட்ட தினேஷ் மற்றும் அவனது நண்பர்கள் உடனே தனது உயிரை பணயமாக வைத்து நீந்தி சென்று வாணியை இலகுவாக காப்பாற்றினர்.

அபியை தினேஷ் பெரும் அலைகளின் போராட்டத்துக்கு மத்தியில் காப்பாற்றி அவளை கரைக்கு தாங்கியபடி வந்தான். அவளை காப்பாற்றும்போது மயங்கிய நிலையிலே அபி இருக்க,
தினேஷ் மெதுவாக அவளது மென்மையான கன்னங்களில் மெதுவாக தட்ட, இருமியபடி மெதுவாக கண்களை திறந்தாள்.

அருகில் கண்ட தினேஷின் முகத்தை கண்டு ஒரு கணம் அதிர்ச்சியடைந்தாள் அபி. என்ன நடந்தது என்று அவளால் யூகிக்க பல நிமிடங்கள் தேவைப்பட்டன. தினேஷ் தன்னை தூக்கி செல்வது உண்மை என்று தன்னை கிள்ளி பார்த்து உறுதி செய்தபடி நடந்தவைகளை நினைவு படுத்த முயற்சித்தாள்.

கரைக்கு வந்த அவளையும் வாணி யையும் எல்லோரும் சூழ்ந்து கொண்டு, குளிர் காய கடற்கரை ஓரத்தில் நெருப்பு பற்ற வைத்தனர். கூட்டம் அதிகம் என்பதால் தினேஷிற்கு அபியின் அருகே செல்ல முடியாமல் போனது. ஒரு ஓரத்தில் இருந்து அவளை கவனித்து கொண்டு இருந்தான். அடிக்கடி எட்டி பார்த்தாலும், அவனது அருகாமை இன்மை அவளுக்கு குறையாக காணப்பட்டது. அன்று தினேஷ் உம், அவனது நண்பனும் ஹீரோ என்ற பட்டத்துடன் பலரது பாராட்டுகளையும் பெற்று கொண்டனர்.

அது இதுவோ??(completed) Where stories live. Discover now