அது இதுவோ?? 💞Episode 26💞

2.6K 81 4
                                    

நாட்கள் வசந்த காலமாக மாறின. பல சந்தர்ப்பங்களில் அபியின் மனதில் காதலும் கூடலாயிற்று. அதேபோல் தினேஷின் மனதிலும்......
தினேஷ் மனதில் அபி மீது காதல் உள்ளதா? இல்லை நட்பு மாத்திரமா ?? என்று பொறுத்திருந்து அடுத்தடுத்த பாகங்களில் பார்ப்போம்.

அன்று க்ளாஸிற்கு பஸ் லேட்டாக, அபி தாமதாக க்ளாஸிற்குள் போக படியில் ஏற, தினேஷ் கண்களை கசக்கி கொண்டு வந்தான். அவனது கண்களில் இருந்து கண்ணீரும் கசங்கியது.

இதை கண்ட அபி துடித்து போனாள். இதுவரை தினேஷ் அழுததை நேரில் பார்த்ததே இல்லையே.
ஓடிச் சென்று தினேஷின் அருகில் சென்று,

"என்னடா? அழுகிறாய் ..? ஏதும் பிரச்சினையா?" என்று அவளது கண்களில் கலங்கியபடி கேட்டாள்.
"இல்லை, வரும்போது தூசு கண்ணில் போய்விட்டது. அதுதான்.."
"பொறு. கண்ணை கசக்காமல் விடு. நான் ஊதி விடுகிறேன்." என்றபடி தினேஷின் கையை அகற்றி விட்டு, அவனது முக அருகில் தனது முகத்தை கொண்டு போனாள்.

தூசு போன கண்ணின் அருகில் தனது வாயால் "uff uff" என்று ஊத, அவளது உதட்டையே தன்னை அறியாமல் பார்த்து கொண்டிருந்தான் தினேஷ்.
சிவப்பு நிற உதட்டில், மின்னும் அழகையும், உதட்டு அசைவையும் பார்க்க,

"உசுரே போகுதே உசுரே போகுதே
ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ... மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே
அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குது"

என்று மனதில் பாட்டுவரிகளும் முணுங்க,
அவனின் மனதில் ஆசைகள் எங்கெங்கோ போக, திடீரென மெதுவாக அபியை பற்றி,
"இப்போது ஓகே டி, வா க்ளாஸ் உள்ளே போகலாம்" என்றபடி, தினேஷ் நகர, பின்னால் அபியும் க்ளாஸை அடைந்தனர்.

"நீ எவ்வளவு மறைத்தாலும் ஒன்று மட்டும் தெரிகின்றது. நீ என்னை லவ் பண்ணுகிறாய் ஆனால் உன்னை என்னமோ ஓர் காரணம் மனதை குழப்புகிறது. உன் கண்களுக்கு என்னிடம் நடிக்க தெரியாதுடா. நீ எனக்கு மட்டும். உனக்கு நான் மட்டும்" என்று மனதில் நினைத்து சிரித்து கொண்டாள் அபி.

இன்னொரு நாள்,

தினேஷின் அபியின் பாடசாலையில் கற்பித்த ஆசிரியரின் திருமணம் அன்று.
ஆசிரியர் சுந்தர் சேரின் முதலாவது பிரிவு தான் அபியின் வகுப்பு. ஆகவே அனைவரும் அத் திருமணத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

அபியும் தற்செயலாக மலரின் கட்டாயத்தால் திருமணத்திற்கு வர, தினேஷ் வந்திருந்தான்.

சுந்தர் சேரை அழைத்து கொண்டு அவரது குடும்பத்தினரும், தினேஷ் மற்றும் சில நண்பர்கள் ஹாலிற்குள் வர, வெகு நாட்களின் பின் சகபாடிகளை சந்தித்தமையால் அபி பேசிக்கொண்டே முன்னே வர, சன நெரிசல் காரணமாக அவள் தள்ளப்பட்டாள். தட்டுதடுமாறி அருகில் உள்ளவனின் காலரையை பிடித்து பெலென்ஸ் பண்ணி நின்றாள்.

அந்த ஆணின் முகத்தை கூட அவளால் பார்க்க முடியவில்லை. "சாரி.." என்றபடி காலரில் இருந்து கை எடுக்க முற்படும்போது,
"நண்பர்களுக்கிடையில் எதுக்கு சாரி சொல்லுகிறாய்?" என்று ஆண்குரல் கூறலாயிற்று. இது தினேஷ் குரலல்லவா?? என்றபடி
கீழிலிருந்து மேலாக அவனை அபி நோட்டமிட்டாள்.

கறுப்பு நிற கோர்ட் சூட்டும், உள்ளே வெள்ளை நிற சேர்ட்டும், அழகாக ஸ்டைல் ஆக சீவப்பட்ட முடி,  சின்னதாக வளர்க்கப்பட்ட தாடி, மொத்தத்தில் ஒரு ஆண் அழகனால் அபிக்கு அப்போது காட்சி அளித்தான்.

தினேஷின் கண்களோ அவளை மேலும் கீழும் பார்த்தபடி சுட்டெரித்தன.
சிவப்பு நிற சுடிதாரில், தங்க நிற அலங்காரங்களுடன், அதற்கு பொருத்தமான நிற வளையல்கள், மோதிரம், லைட் மேக்கப் அவளுக்கு மேலும் அழகு சேர்த்து கொண்டிருந்தன. அவன் எப்போதும் சோடாமூடி என்று கிண்டலடிக்கும் கண்ணாடியும், அழகாக விரித்த சீவப்பட்ட கூந்தலும், தன்னை உற்று நோக்கும் தினேஷை கண்டு வெட்கத்தால் முகம் சிவக்க அவைகளும் கூட அழகு சேர்த்தன.

இறுதியில் இரு கண்களும் ஒன்றுடன் ஒன்று நோக்க,

"பார்க்காத என்ன பார்க்காத
கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
போகாத தள்ளிப் போகாத
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத.."

என்ற பாட்டு வரியுடன் பக்கத்தில் இருந்த மலரின் ஃபோன் ரிங் ஆனது.

தொடரும்...

அது இதுவோ??(completed) Waar verhalen tot leven komen. Ontdek het nu