அது இதுவோ?? 💞 Episode 4 💞

4.5K 131 4
                                    


பாடசாலை நாட்களும் அபிக்கு வசந்த காலமாக மாறியது. மலர், அகிலன் என உயிரை தரக்கூடிய நண்பர்கள் கிடைக்கப்பெற்றனர்.

ஒன்றாக குழு கற்றலிலும், பாடசாலை ஓய்வு நேரங்களில் கல கலப்பாக பேசிக் கொண்டனர். இவர்களது நட்பை கண்டு பொறாமைப்பட கூட்டமொன்றே காணப்பட்டது.

இப்போது அபிக்கு தினேஷின் மேல் இருந்த பயமும் படிப்படியாக குறைந்து கொண்டும் வந்தது. ஏனெனில் அகிலன் இருக்கிறான் என்ற தைரியத்தால். ஆகவே அன்றைய கை குழுக்கலுடன் நட்பானது வித்திட, நாளுக்கு நாள் நன்றாக வளர்ந்து கொண்டு இருந்த பயிரை களைநாசினி கொண்டு அழிக்க தினேஷ் திட்டமிடலானான்.

அன்று ஒரு நாள், ஆசிரியர் கூட்டம் என்பதால் வகுப்பில் ஆசிரியர் இல்லை. ஆகவே மாணவர்களுக்கு கொண்டாட்டம். தினேஷின் குழப்படியோ அபிக்கு தாங்க முடியவில்லை. வகுப்பை அமைதிப்படுத்த முடியாமல் போனது. பேசாமல் தனது இருக்கைக்கு சென்று அமர்ந்தாள் அபி. தனது உயிர் தோழர்களின் வராமை அவளை வாட்டி எடுத்தது. இல்லையென்றால் எவ்வாறு அவள் சமாளிப்பாளே.

சிறிது நேரத்தில் தீடீரென வகுப்பிற்குள் நுழைந்த ஆசிரியரை கண்டு எல்லாரும் அமைதியாக,
"வெயர் ஆ, யூ அபி, இஸ் திஸ் த வே ஹொவ் யூ லுக் ஆப்டர் தெ கிளாஸ்?? ப்ரின்ஸ்பல் சென்ட் மீ டூ பிரிங் தெ பீபல் ஹூ சௌடர்ட். லிச்ட் மீ தெ நேம் ப்ளீஸ்" என்று கோபமாக கூற,
தினேஷை திரும்பி பார்த்தாள் அபி.

அவனது கண்கள் அனல் போல எரிய, செய்வது அறியாது நின்றாள் அபி. வகுப்பில் தினேஷை மாட்டிக் கொடுக்கவோ யாரும் முன் வரவில்லை. மாறாக அபி மாட்டி கொடுத்தால் அவன் அவளை சும்மா விடுவதில்லை என்றும் அவள் அறிந்தாள்.

"அபி, வை ஆ யூ சைலன்ட்? ஆ யூ ஜொய்ன் வித் தெம் டு மேக் திஸ் கிளாஸ் வேர்ஸ்?? இப்ஃ யூ கான்ட் ஷோ தெ பீபல் தென் லெட்ஸ் கம் வித் மீ டூ பிரின்சீபல் ஓபிஸ். வென் ஹீ ஆச்க் யூ மே டெல் தெ ட்ரூத்.
கம் இன் 5மினிட்ஸ்" என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

வந்த ஆறு மாதத்திற்கு பிரின்சீபல் ஓபிஸ் பக்கமே அபி போனதில்லையே என்று யாவரும் அறிந்ததே.

அபியின் கண்களிலிருந்து கண்ணீர் மல்க, அந்த இராட்சதனுக்கு ஏனோ அன்று மனம் இறங்கியது.
ஏனெனில் அன்று தான் முதல் முறையாக அவன் அபியை நோக்கினான்.

நிலவை போன்ற வட்டமான முகம், அழகாக வரையப்பட்டது போன்ற புருவங்கள், மை போட்டதுபோல் ஆட்களை கவர செய்கின்ற கண்விழிகள், மேலும் கண்ணை அழகு படுத்தி காட்டுகின்ற வட்ட பெரிய மூக்கு கண்ணாடி, அளவாக செதுக்கப்பட்டது போன்ற மூக்கு, கன்னம் இரு பக்கமும் பருக்கள், சின்னதும் அல்லாத அளவான செவ்விதழ், அழகாக பின்னி கட்டப்பட்ட செழிப்பான கூந்தல். பெரிதாக அழகு இல்லாவிட்டாலும் சுமாரான அழகு தான் அவளும்.

அவளின் கண்ணீரோ அவனை ஏதோ பண்ணியது. உடனே வகுப்பறையை விட்டு வெளியே வந்து ஆசிரியரை சந்தித்து தப்பை ஏற்று கொண்டான் தினேஷ்.
"தான் அதிபரை சந்தித்து உரிய தண்டனை பெற்று கொள்கிறேன். அநியாயமாக அபிக்கு தண்டனை கொடுக்க வேண்டாம்" என்றும் கூறினான்.

இவ்வளவு காலமும் செய்த குற்றங்களை ஏற்று கொள்ளாத தினேஷ் இன்று முதல் முறையாக குற்றத்தை ஏற்று கொண்டதை கண்ட ஆசிரியர் வியப்படைந்து தவறை ஏற்றுக் கொண்டமைக்காக மன்னிப்பும் வழங்கினார். இனி இவ்வாறு அபிக்கு அவமானம் கொடுக்க மாட்டேன் என்று மனதுக்குள் சொல்லி கொண்டான் தினேஷ் .

தொடரும்...

அது இதுவோ??(completed) Where stories live. Discover now