அது இதுவோ?? 💞Episode 33💞

2.6K 77 6
                                    


பெண் பார்க்கும் படலமும் இனிதாக முடிவுறப்பெற்றது.

சீக்கிரம் பதில் சொல்வார்கள் என்று கூறி சென்றனர்.

அபியோ "இவ்வளவு நாளாகியும் உன்னை என்னால் மறக்க முடியவில்லை தினு. நீ என்னை ஏமாற்றியதை நினைத்து மனதிடம் சொன்னாலும் அது ஏனோ நம்ப மறுக்கிறதே. ஆனாலும் இந்த கல்யாணம் சரி வரக் கூடாது. உன் கூட தான் நான் வாழ வேண்டும் ஆயுள் முடியும்வரை" என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.

சிம்மை மாற்றிவிட்டேன். ஆனால் மனதை மாற்றமுடியவில்லையே.
இரண்டு வருடங்கள் மெசேஜ் கால் செய்த அபிக்கு அவனது தொலைபேசி இலக்கத்தை கூட இலகுவில் மறக்க முடியவில்லையே. அடிக்கடி அவனின் நம்பரை சேவ் செய்து அவனது டிப்பி ஐயும், அதன் கீழ் இருக்கும் ஸ்டேடஸையும் பார்க்க மறக்க மாட்டாள்.
"எனக்கு நன்றாகவே தெரியும் ஒரு  நாள் நீ என்னிடம் வருவாய் என்று. அதுதான் வாழ்க்கையும்" என்ற அவனின் ஸ்டேடஸ் அவளை கலங்க வைத்தாலும்,
நான் மற்றவர்களை போல் நண்பி தானே. இவ்வளவு ஃபீல் பண்ண தேவையில்லையே என்று அவள் மனம் ஆத்திரத்தில் சொல்லிற்று.

நாள் போக போக, அபியின் அக்கறை, அன்பு இன்றி தினேஷ் அனாதையானான்.

அடிக்கடி ஃபோனை பார்த்தான்.
ஒரு மெசேஜ் கூட இல்லை, ஃபோனும் பாழடைந்து போனது.
ஒரு தரம் அவளின் குரலை கேட்க மாட்டோமா ?? என்று மனம் ஏங்கிற்று.
அவளது கொஞ்சலும், கதை கூறும் விதமும் நினைவுக்கு வந்தது.
சில சமயம் தனியாக அவைகளை நினைத்து சிரிப்பான்.

அன்று கண்டதுபோல் கோவிலில் அவளை காண மாட்டேனா?? என்று கோவில் சென்றான். ஆனால் அபியை காணவில்லை. அவளது கால் சுளுக்கிய இடம், அவர்கள் இருவரும் அமர்ந்த இடம், தூக்கி சென்ற பாதை எல்லாம் அபியை நினைவு கூறின.
"ஐ மிஸ் யூ சோ மஸ்" என்று மனம் கூற கண்களும் கலங்கின.

மழையில் நனைந்து ஜோரம் பிடிக்கவே, மற்றைய நாட்களில் காய்ச்சல் வந்தால் அவனை நச்சரித்து மருந்து அருந்துமாறு சொல்ல அன்று அபி இருக்கவில்லை.

அது இதுவோ??(completed) Where stories live. Discover now