அது இதுவோ?? 💞Episode 23💞

2.6K 87 2
                                    


அவனது செயலை சற்றும் எதிர்ப்பார்க்காத அபி கதற, உடனே தினேஷ் அவளது வாயை தனது கைகளால் பொத்தினான். வலியை பொறுக்கமுடியாமல் அபியின் கண்ணிலிருந்து கண்ணீர் சிந்தியலாயிற்று.

"என்னடி? இப்படி கத்துகிறாய்?? உன்னை கழுத்து நசுக்கி கொள்வது போல் கதறுகிறாயே? உன் காலை பார்த்து பிடித்த பிறகு அது சுளுக்கு என்று கண்டுபிடித்தேன். என் அம்மம்மா எங்க ஊரில் சுளுக்கு எடுப்பார்கள்.. அதை பார்த்து நானும் பழகி கொண்டேன். அதை தான் நானும் இப்போது பண்ணினேன். இப்போது சரியாகிவிடும். வலி என்று தெரியும் ஆனால் இதற்குபோய் சின்ன பிள்ளை போல் அழுவார்களா ?? "என்று கூறியபடி தனது வாயை மூடிய கையை எடுத்து, சிந்திய கண்ணீரை இரு கைகளால் துடைத்தான். இமை கொட்டாது தினேஷையே அபி பார்த்து கொண்டிருக்க, அவனும் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

இரு கண்ணும் சிறிது நேரம் ரகசியம் பேச, பார்வையை அப்புறம் செலுத்தியபடி," இப்போது நீ எங்கே போக வேண்டும்?? நான் கூட்டு போய் விடுகிறேன் " என்று தினேஷ் கூற,
"இப்போது ஓகே. வாணி வீடு கிட்ட தான் இருக்கு. நான் போகிறேன். உங்களுக்கு என்னால் ஏன் வீண்சிரமம்?? தேங்க்ஸ் தினேஷ். " என்று கூறிக்கொண்டு அவனின் பதிலுக்கு காத்திருக்காமல் நடக்க ஆரம்பித்தாள் அபி.

ஆனால் நாலைந்து அடிகளுக்கு மேல் அவளால் நடக்க முடியவில்லை. அப்பாதை சிறு நடைபாதை என்பதால் துவிச்சக்கர வண்டி ஒன்றாவது கண்ணுக்கு தென்படவில்லை.

ஒரு இடத்தில் பேசாமல் நின்று சுற்றும் முற்றும் பார்க்க,
"என்ன மேடம், பெரிசா நடந்து போகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தீங்க. இப்போது என்ன நடந்தது?"

"அது வந்து... வெயில் கொஞ்சம் அதிகம் என்பதால்? ஆகவே கொஞ்சம் மரநிழலில் இளைப்பாற வந்தேன்" என்று அபி தோற்காமல் பேச,
"ஹாஹா... பொய் சொல்வதென்றால் நம்புகிற மாதிரி சொல்ல வேண்டும். உனக்கு இதெல்லாம் சரிவராது. சரி எங்கே வாணி வீடு இருக்கிறது??? "
" பத்து வீடு தள்ளி, கறுப்பு கேர்ட் போட்ட வீடு. அதுதான்.." என்று சொன்னதும் மாத்திரம்,

திடீரென அவளின் கால்கள் இரண்டையும் வலிய அவனது ஒரு கரம் தாங்க, முதுகை இன்னொரு கரம் தாங்கியது. திடீரென்ற அவனின் செயலில் நிலைகுலைந்த அபி பயத்தால் அவனது கழுத்தை அவளது கரங்களால் மாலையிட்டாள்.

" டேய், இறக்கிவிடுடா" என்று அவனது மார்பில் மெதுவாக அடிக்க,

"டி, பேசாமல் வருகிறாயா?? நீ செய்கின்ற வேலையில் நாம் இரண்டு பேரும் சேர்ந்து விழவா ?? இந்த weight தூக்கிறதே பெரிய விசயம்.." என்று கூற,
அவளும் பேசாமல் இருந்துவிட்டாள்.

இடை இடையே அவனை அபி பார்த்தாலும் அவளை கண்டு கொள்ளாது வேண்டுமென்று முன்னோக்கியபடி பார்வையை செலுத்தினான் தினேஷ்.

"தினேஷ், உன்னோடு பேச வேண்டும் என்றே இருந்தேன்.. அன்று நான்" என்று வாய் திறக்கும்போது, அப் பேச்சை விரும்பாமல் கதையை திசை திருப்பினான் தினேஷ்.

" சரி இப்போ பேசிவிட்டாய் தானே. 1 வருடத்துக்கு முதல் இதை விட வெயிட் கம்மியாகவே இருந்தாய்..ஆனால் இப்போது ஏன் இப்படி வெயிட் கூடி போய் இருக்கிறது?? அப்படி என்ன தான் நீ சாப்பிடுகிறாய் ?? எனக்கும் சொல்லு. சைவமா அசைவமா ??" என்று வாய்க்கு வந்ததெல்லாம் பேச,
"தினேஷ், அதெல்லாம் விடு.. நான் சொல்வதை கொஞ்சம் ஒரு நிமிடம் கேளு.. " என்று அபி கூறலானாள்.

" அதுக்கெல்லாம் இப்போது நேரமில்லை. என் உறவினரின் பிள்ளைக்கு காது குத்த வந்தேன். இவ்வளவு நேரம் என்னை காணவில்லை என்று தேடுவார்கள்.
இதுக்கு மேல் உன்னை சுமக்கவும் என்னால் முடியாது." என்று அவளை அவள் கூறிய வீட்டுக்கு முன்னால் இறக்கிவிட்டான் தினேஷ்.

" உன்னை தூக்கி என் முதுகெலும்பும் முறிந்துவிட்டது போல. அம்மா.. " என்று முதுகை தடவிக் கொண்டு செல்ல முற்பட்டபோது,
அவனை மென்மையான கரமொன்று தடுத்து நிறுத்தியது.

" தினேஷ், இன்று உன்னை விடுகிறேன். என்னுடைய கேள்விகளுக்கு நீ ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும். அப்போது உன்னால் ஒளிந்திட முடியாது. தேங்க்ஸ் ஃபோ எவ்ரிதிங் " என்று அபி கூற,

" நீ தானே சொல்லி இருக்கிறாய் ப்ரெண்ஸ்கிட்ட தேங்க்ஸ், சாரி சொல்ல கூடாது என்று" " எனிவே, ஹப்பி டூ ஹெல்ப் யூ, அங்கு யாராக இருந்தாலும் ஹெல்ப் பண்ணி இருப்பேன்." என்றபடி அவள் பிடித்திருந்த கரத்தை உதறி விட்டு சென்றான் தினேஷ்.

தொடரும்..

அது இதுவோ??(completed) Where stories live. Discover now