அது இதுவோ?? 💞Episode 32💞

2.6K 82 2
                                    


அறையில் கமலா விமலா லதா நுழைய, அபி குளியலறைக்கு சென்று, முகத்தை நன்றாக கழுவி விட்டு வந்தாள். அபி அழுது விட்டு செல்வதையும் அச்சோடி கண்கள் அவதானித்தன.

"என்னக்கா, கண் எல்லாம் சிவந்து இருக்கிறது??" என்று விமலா கேட்க,
"விக்கல் வந்ததால் கண் எல்லாம் கலங்கி விட்டது " என்று சமாளித்தப்படி, கதை அளந்து கொண்டிருந்தனர்.

காலையில் ஏதோ அவசர வேலை என்று சித்தியும் மகள்மார்களும் கிளம்பி போக அபியோ பெரு மூச்சு விட்டாள்.

சமையலறையில் வேலை செய்து கொண்டு இருந்த தாயை மெதுவாக அணுகினாள் அபி.

"அம்மா, அப்பா சித்தி சொன்ன விடயத்திற்கு என்ன சொன்னார்?" என்று தயங்கியபடி கேட்க,

"எதை பற்றி நீ கேட்கிறாய் அபி??" என்று தாய் வினவினார்.

"அது வந்து.. என்னுடைய கல்யாண விடயம்." என,

"அவரும் நானும் நேற்று இராத்திரி யோசித்தோம். அவர் சொல்வதும் நியாயமாக பட, எனவே பேச சொல்லி விட்டோம்" என்று தாய் கூற, அபிக்கு இடி விழுந்தது போல இருந்தது.

"அம்மா, எனக்கு இதில் விருப்பமில்லை. " என்று கண் கலங்கியபடி கூற,

"நீ இன்னும் மாப்பிள்ளையை பார்க்கவே இல்லை. அதற்கிடையில் வேண்டாமா.? " என்று கோபமாக கேட்க,

" அம்மா, நான் ஒருத்தரை லவ் பண்ணுகிறேன்" என்று பயந்தபடி அபி சொன்னாள்.

"என்னது..?? காதலா??? இதுக்காக தான் பயந்து பயந்து இருந்தேன். கலவன் பாடசாலை, க்ளாஸ் அது இது என்று போகும்போதே நினைத்தேன். ஆனாலும் உன்னை நம்பி தானே அனுப்பினேன். இப்படி செய்துவிட்டு வருவாய் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை. நம்பிக்கை துரோகம் பண்ணிவிட்டாயே" என்று திட்டிக் கொண்டு வெளியே செல்ல முற்பட்டபோது,

" அம்மா, தெரியாமல் செய்துவிட்டேன் மா. என்னை மன்னித்து விடுங்கள். நான் அவரை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன்" என்று அழுதபடியே கூற,

அது இதுவோ??(completed) Where stories live. Discover now