அது இதுவோ?? 💞Episode 42💞

3.2K 80 0
                                    

"என் சப்ரைஸ் எப்படி? உனக்கு மட்டும் தானா சப்ரைஸ் பண்ணலாம். எனக்கும் பண்ணலாம்" என்று தினேஷ் கூற,

மோதிரத்தையும், அவன் ப்ரோபோஸ் பண்ணிய முறையும், அவனின் சப்ரைஸ் உம் எண்ணி கண்கள் கலங்க, அவளின் முகத்தில் விழுந்த முடியை அப்புறப்படுத்தி, அபியின் உதடுகளை தன் உதடுகளால் சிறைப்பிடித்தான் தினேஷ்.

ஒரு கட்டத்தில் மூச்சுத்திணரவே, தினேஷை மெதுவாக தள்ளி விட்டாள் அபி.

"இப்படியே இருந்தால் எப்போது கேக் சாப்பிடுவது?? வாருங்கள் போகலாம்" என்று அழைத்து சென்றாள்.
இருவரும் கேக் வெட்டி, ஊட்டிக் கொண்டனர்.

குளிர்பானம் தினேஷ் குடிக்க ஆரம்பிக்கும் போது,
கொஞ்சம் வைட் என கூற, தினேஷ் முளித்து கொண்டு இருந்தான்.
அவளது குளிர்பானத்தில் இருந்த ஸ்ரோவை தினேஷின் குளிர்பானத்தில் போட்டு,
" இப்போ குடிக்கலாம்" என்று கூறிக் கொண்டு மூக்குகள் இரண்டும் உரச உரச காதலுடன் குளிர்பானம் அருந்தினர்.
"நான் நினைத்ததைவிட நீ ரொமன்டிக் குயின் ஆக இருக்கிறாயே" என்று நக்கலடித்தான். சிறிது நேரம் கதைத்து சிரித்துவிட்டு,
"தூங்கலாமா?" என்று தினேஷ் கேட்க, அபியின் முகமோ வெட்கத்திரையை போட்டுக்கொண்டது.
அருகில் இருந்த அபியை தாங்கியபடி அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் கிடத்தி அவளின் அனுமதியுடன் தன்னவளை தனதாக்கி கொண்டான் தினேஷ்.

காலையில் விடிய அபி எழுந்து குளித்து விட்டு, தினேஷை எழுப்பாட்ட,
" கொஞ்சம் படுக்கவிடு. ஆபிஸ் போகாததால் கொஞ்சம் தூங்கிறேனே" என்று கெஞ்ச,
"அப்படியெல்லாம் விட முடியாது. இப்போது 7மணி. எழுந்திரு" என்று கூறிக் கொண்டு, தன் கூந்தலின் உள்ள தண்ணீரை அவன் முகத்தில் தெளித்தால் அபி.

"உன்னால் ஏழாடி." என்று கண்களை திறக்க, அவளின் அழகில் அடிமையானான். சாரியில் சிம்பளாக இருக்க, தன்னவளின் அருகே வர, "போடா. பெரெஷ் பண்ணாமல் வராதே"என்று அவனை செல்லமாக விரட்ட, புலம்பி கொண்டு குளியலறைக்குள் தஞ்சம் புகுந்தான் தினேஷ்.

அது இதுவோ??(completed) Όπου ζουν οι ιστορίες. Ανακάλυψε τώρα