அது இதுவோ?? 💞Episode 22💞

2.6K 92 4
                                    


தினுவை மறக்க பெரும்பாடு பட்டாள் அபி. அவ்வப்போது ஃபோனில் ஏதும் கோல் அல்லது மெசேஜ் அவனிடமிருந்து வந்ததா? இல்லை வந்த கால் அல்லது மெசேஜ் அவனிடம் இருந்து வந்திருக்க கூடாதா? என அவளது மனம் ஏங்கிற்று.
இப்போது அவனுக்கு வேண்டப்படாதவள் ஆகிவிட்டேனே. ஏன் மனதில் உள்ளதை சொன்னால் இப்படியா வீசி விடுவார்களா?? என்றபடி ஃபோனை ஸ்வீட்ச் ஓஃப் பண்ணினாள் அபி.

இரவு நேரம் அவனது உரையாடல் நினைவு கூர்ந்தது. தனிமையில் அழுது தனது கவலைகளை தன்னுள்ளே மூடிக்கொண்டாள் அபி.

பெற்றோரின் முன்னும், தங்கையின் முன்னாலும் தான் சந்தோஷமாக வழமையை போல் இருப்பதாக வேடமிட்டாள்.

ஒரு கிழமைக்கு மேல் அவளால் தாக்குபிடிக்க முடியாமல் போனது. பொய் நோய் சொல்லி சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் க்ளாஸ் போகாமல் நின்றுவிட்டாள். அவனை பார்க்க வேண்டும் என்று மனம் கூறினாலும், தன்னை ஏமாற்றியவனை கண்டால் அழுது விடுவேனா? மனதுக்கு நேசித்தவனை மென்மேலும் நேசிக்க தெரியுமே தவிர, வெறுக்க தெரியாதே... என்ற பயத்தால் போகவில்லை.

திங்கட்கிழமை அன்று விடுமுறை.
வீட்டிலே இருக்க அபிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

"அம்மா, நான் வாணி வீட்டுக்கு போய் படித்துட்டு வரவா??" என்று அபி கேட்க, மறுக்காமல் அனுமதி கொடுத்தாள் அவளது தாய்.

கிட்டதட்ட ஒரு 10 நிமிட நடைதூரம் என்பதால் நடையை கட்டினாள் அபி.  வாணியின் வீட்டு பக்கத்தில் கோவிலை காண, போக வேண்டும் போல் இருந்தது. மனதில் உள்ள கவலைய மனிதரிடம் கொட்டி தீர்ப்பதை விட தன்னை பிறப்பித்து வாழ்விக்கின்ற கடவுள் மேலானவரே. என்று எண்ணியபடி கோவிலினுள் நுழைந்தாள்.

சாமியை கும்பிட்டபடி கோவிலை வலம் வந்தாள்.
"கடவுளே! தினேஷ் தான் என் வருங்கால கணவனாக இருந்தால் அவரையும் என்னையும் சேர வழி பண்ணு. அவர் என் வருங்கால கணவன் இல்லாவிடின் என் மனதில் உள்ளதை மறக்க உதவி செய் கடவுளே. என்னை தைரியமூட்டு" என்று வேண்டியபடி, கோவில் முன்னால் சன நெரிசல் கூடுதலாக இருக்க, கோவிலின் பின் வாயிலில் உள்ள படிகளால் வேண்டுதலை நினைத்தபடி இறங்கவே கடைசி படிக்கு முன்னுள்ள படியில் காலை வைக்காது தவறி அபியின் இடது பாதம் தரையை தொட்டது. அவள் அணிந்திருந்த செருப்பும் அறுந்தது.

" ஆய்.. அம்மா.. " என்று அவளை அறியாமல் கதறிக் கொண்டு, காலை தடவியபடி முன்னோக்கி நடந்தாள். இடது கால் வலி பொறுக்க முடியவில்லை. ஒரு அடி எடுத்து சரி அவளால் நடக்க முடியாமல் போகவே, "கடவுளே, நான் என்ன பாவம் செய்தேன்?? ஏன் எனக்கு இவ்வளவு சோதனை??" என்று நொந்து கொண்டாள்.

"மேடம், உங்களுக்கு ஏதாவது உதவிகள் வேணுமா??" என்று அவளின் கூக்குரலை கேட்டு ஒரு ஜீவன் உதவி செய்ய முன்வந்தது.
அபிக்கோ இது எங்கோ கேட்ட குரலே.. என்று திரும்பி பார்க்க, அங்கே நம்ம ஹீரோ நின்று கொண்டிருந்தான்.
அபிக்கு ஓடிச் சென்று அவனை கட்டியணைக்க வேண்டுமென்று மனம் கூறினாலும்,

"இல்ல. ஐம் ஓகே. நீங்க போகலாம்" என கண்ணீர் சொட்டு சொட்டாக விழ, வீம்பால் அவ்வாறு பதிலுரைத்தாள்.

"ஓகே குட் பாய்" என்று சற்றும் எதிர்ப்பார்க்காத பதிலை தினேஷ் கூற, துடிதுடித்து போனாள் அபி.
இவனுக்கு நான் என்ன செய்தேன் என்று இப்படி மிருகத்தனமாக பிகேவ் பண்ணுகிறான்?? இவ்வளவு காலம் பழகிய என்னை ஒரு ப்ரெண்டாக கூட நினைச்சி ஹெல்ப் பண்ண கூடாதா?? என்று அவளது மனம் ஆயிரம் கேள்விகளை கேட்டது.

அவளின் முன்னால் வந்து தினேஷ் நிற்க, அவளும் தான் தப்புக்கணக்கு போட்டு விட்டோம் என்று உணர முன்னரே அபியின் தோளைப் பற்றி, படியில் உட்கார வைத்து தானும் கீழ் உள்ள படியில் உட்கார்ந்தான்.

அவளது காலில் செருப்பு அறுந்திய காலில் உள்ள செருப்பை கழற்றி, பாதத்தை எடுத்து, தன் தொடையில் வைத்து தன் விரல்களால் காலை வருட, அபியின் மேனிக்கு மின்னல் பாய்ச்ச ஒரு நிமிடம் தன்னையே மறந்து நின்றாள். நேர்த்தியாக வெட்டப்பட்ட நகங்கள், கடும் சிவப்பு நிற நகசாயங்கள் அவளது காலுக்கு மென்மேலும் அழகு சேர்த்தன. மெதுவாக வருடிக்கொண்டிருந்த தினேஷ் இரண்டாவது விரலை திடீரென இழுத்தான்.

தொடரும்...

அது இதுவோ??(completed) Where stories live. Discover now