அது இதுவோ?? 💞Episode 20💞

2.7K 84 3
                                    


"அபி, காலேஜ் போகின்ற நோக்கமே இல்லையா?" என்று அம்மா அழைக்க,
கண்களை கசக்கி கொண்டு ஃபோனில் திங்கட்கிழமை என டிஸ்பிலே ஆக, மனமின்றி தயாராகினாள் அபி.
மீண்டும் கண்ணை மூடி, கனவிலே வாழ்வோமா என்று ஆசை கொண்டாள் அபி.

அன்று இரவு,
இன்னும் தாமதிக்காமல் தினேஷிடம் தன் மனதில் உள்ளதை சொல்லி விட யோசித்து, ஃபோனில் டைப் செய்ய பார்க்கும்போது
" மெசேஜ் ஒன்று அதுவும் தினேஷிடமிருந்து" என்று காட்ட, என் தினுக்கு ஆயுசு 100 என்று தன்னுள்ளே சிரித்து
கொண்டு ஓபன் செய்து மெசேஜினை வாசித்தபோது மலர்ந்த அவளின் முகத்திலிருந்த சிரிப்பு தொலைந்து போனது.

"உன் பார்சல் கிடைச்சது. ஆனால் என்ன தேவையில்லாத கீ சையின் எல்லாம் கொடுத்து அனுப்பிருக்கிறாய். சுசி முன்னால் தான் திறந்து பார்த்தேன். அவள் எங்களை பற்றி என்ன நினைத்து இருப்பாள்?? இனி இப்படி கிறுக்கு கூத்து ஒன்றும் பண்ணாதே. எனக்கு சுத்தமாக இவை பிடிக்கவில்லை " என்ற தினேஷின் மெசேஜை பார்த்து அபிக்கு மனதெல்லாம் சுக்கு நூறானது.

"அவள் என்ன நினைத்தால் எனக்கென்ன?? நான் என் தினேஷூக்கு என்ன வேண்டுமானாலாலும் கொடுப்பேன். ஏன்டா ஐ லவ் ஹிம், அவன் என் லவ்வர். அவ்வளவு தான்" என்று மொத்த சினத்தில் மனதில் உள்ளதையும் சேர்த்து கொட்டி தீர்த்தாள் அபி அடுத்த மெசேஜில்.

மௌனம் அங்கே நிலவ,
அபி எத்தனையோ தடவை ஃபோனை எடுத்து செக் பண்ணினாலும் தினேஷ் இடமிருந்து ஒரு ரிப்ளையும் வரவில்லை.

அப்போ.. அவனுக்கு என்னை பிடிக்கவில்லையா?? அவன் என்னிடம் லவ் பண்ணுகிறாயா என்று கேட்டதெல்லாம் ஏன்?? சும்மா தான் கேட்டானோ ?? நான் தான் தப்பு தப்பா நினைத்துக் கொண்டேனா?? என்று தனக்குள்ளே புலம்பி கொண்டிருக்க,

கையடக்கத் தொலைபேசியோ மின்னியது.

என்ன சொல்லி இருப்பானோ? என்றபடி மெசேஜை ஓபன் செய்ய,
"என்ன??" என்று ஒத்த கேள்வியே அவனிடம் இருந்து பதிலாக வர,

"தினேஷ், ஐ ஃபீல் ஐ ஜச்ட் ஃபோல் லவ் வித் யூ , நீ கேட்ட போது அந்த டைம் எனக்கு அப்படி ஃபீல் ஆகவில்லை, ஆனால் இப்போது நீ தான் எனக்கு எல்லாமே. இதை உன்னோடு சொல்லவேண்டும் என்று இருந்தேன்" என்று அவளது ஆசைகளை வார்த்தைகளாக கூற,

"சாரி அபி. நவ் ஐ டோன்ட் ஹேவ் எனி ஐடியா ஒன் யூ. ஈவன் லவ்.. ஐ டோன்ட் லைக் டு டோக் எபௌட் திஸ் டொபிக் எனிமோர். இஃப் யு கென் பீ மை பிரண்ட், பீ வித் மீ, கன்டெக்ட் மீ, இஃப் நொட், யூ கென் லீவ் மீ ஃபோஏவர். இட்ஸ் அப்டூ யுவர் விஷ். " என்று பதில் வர, அபிக்கு இதயமே நின்று போனது.

ஃபோனை கையை விட்டு நழுவியது.
இதுவரை அவள் எதுக்குமே ஆசைபடவில்லை. ஆனால் முதல் முறையாக ஆசைப்பட்டது நிராகரிக்கப்பட்ட போது ஏற்பட்ட வலியை பொறுத்து கொள்ள முடியாமல் போனது.

தாரை தாரையாக கண்ணீர் வடிய, யாரிடம் போய் ஆறுதல் தேடி செல்ல..

தனிமையில் கவலை தீரும்வரை அழுது முடித்தாள்.

"ஏன் அவனுக்கு என்னை பிடிக்கவில்லை?? நான் அழகில் சுசியை விட குறைவு அல்லவா? அதுவாக இருக்குமா? எனக்கு இல்லாத எண்ணத்தை அவனே தந்துவிட்டு இப்போது ஒன்றுமில்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்? என் மேல் உள்ள காதல் எப்படி தீடீரென இல்லாமல் போனது?? எல்லாம் பொய்யா ?? " என்று யோசித்தபடி இருக்க நித்திராதேவி அவளை தழுவி கொண்டாள்.

தொடரும்...

அது இதுவோ??(completed) Where stories live. Discover now