அது இதுவோ?? 💞Episode 39💞

2.6K 77 7
                                    


"அபி உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். நேற்று என் அம்மாவும் என் அத்தையும் பேசினதை கேட்டேன். ஆனால் நீ எப்படி ரியெக்ட் பண்ணுவியோ தெரியவில்லையடி " என்று தினேஷ் கூற, அபியின் மனது வேகமாக படபடத்தது.

"என்னடா?? சொல்லு அவசரமாக" என்று கேட்க,

"என் அம்மாக்கு தொழில் செய்கின்ற மருமகள் வேண்டாமாம். உன்னுடைய கனவே அதுதானே. நன்றாக படித்து தொழில் செய்து வீட்டினரை பார்க்க வேண்டும். ஆனால் அம்மா இப்படி சொல்வார்கள் என்று நினைக்கவில்லை. என்னடி செய்வது ?? "

" வேறென்னவாம்??" என்று அபி கேட்க,
கோபத்தில் கேட்பதாக உணர்ந்த தினேஷ், நான் நிறைய நேற்று யோசித்தேன்.

" நகரத்தில் வாழ்ந்த உனக்கு எங்கே என் ஊர் எல்லாம் எப்படி செட் ஆகும்டி?? எங்கள் ஊரில் பெண்கள் சாப்பிங் எல்லாம் போக மாட்டார்கள், வெளியே குடும்பத்தோட ஒவ்டிங் போக மாட்டார்கள். கணவர் வீட்டில் தான் மனைவி இருக்க வேண்டும், பிள்ளை கிடைத்து 4மாதத்திற்குள் கணவன் வீட்டுக்கு வரவேண்டும். இதெல்லாம் உன்னால இயலுமா?? இதை யோசித்து என் தலை 2 3 நாளாக வலி. ஒன்று முடிய இன்னொரு பிரச்சனை. " என்று தினேஷ் கூறிக்கொண்டு போக,

" இவ்வளவு கன்டிஷனுக்கு கீழ் என்னால் வாழ முடியாதுடா. நான் தொழில் செய்ய வேண்டும். ஐ அம் சாரி, நான் நகரத்தில் வளர்ந்தவள். நான் குடும்பத்தோட வெளிய ஆட்களோடு போறவள். பேர்த்டே என்றாலே வெளியில் தான் சாப்பிடுவோம். சாப்பிங் வீக்கென்ட் பண்ணுவேன். இதெல்லாம் இல்லாமல் அடிமையாக வாழ சொல்லுகிறாயா?" என்று அபி கூற, தினேஷ் துடிதுடித்து போனான்.
ஆனால் அவளை என்னால் மாற சொல்ல முடியாதே. என்ன செய்யலாம்? அவள் இல்லாத வாழ்க்கை என்னால் நினைத்து பார்க்கவும் முடியாதே.. என்று யோசிக்க,

" தினு, இப்படி நான் பேசுவேன் என்று நினைத்தாயா? இதுக்கெல்லாம் ஓகே. எனக்கு நீ மட்டும் தான் தேவை. உனக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். என் தொழில் உன் குடும்பத்த கண்ணும் கருத்துமாக கவனிப்பேன். உன் செலக்ஷன் எனக்கு பிடிக்கும் சோ நான் சாப்பிங் பண்ணி தான் வாங்க வேண்டும் என்று தேவையில்லையடா. தேவை இல்லாமல் வெளியே சுற்ற தேவையில்லையே. உன் வீட்டிலேயோ என் வீட்டிலேயோ நான் எங்கே இருந்தாலும் நீ என்கூட இருந்தால் அது போதும் தினேஷ் " என்று கூறியது தாமதம் அவனின் கண்கள் நீரானது.
அவளின் தியாகம் அனைத்தும் அவன் மேல் கொண்ட காதலை வெளிப்படுத்தியன. அவளின் சிந்தனைகள் தினேஷை வியக்க வைத்தன.

அது இதுவோ??(completed) Where stories live. Discover now