அது இதுவோ?? 💞episode 1💞

10.1K 153 6
                                    


ஆசிரியர் மாற்றத்தால் சென்னைக்கு வந்தார்கள் ராமின் குடும்பம். ராம் தம்பதினருக்கு இரு புதல்விகள்
அபிராமி, லதா . அபிராமியை எல்லோரும் அபி என்றே செல்லமாக அழைக்கப்பட்டாள். அபி பெரிதாக அழகில்லை. ஆனால் குணத்தில்  அவளை விட்டால் யாருமில்லை அந்த அளவுக்கு வயது பாரபட்சமின்றி உதவி செய்வாள். அது எந்த நேரம்  ஆனால் லதா அபி போலன்றி கொஞ்சம் பிடிவாதக்காரி.

ராம் பிரபல பாடசாலைகளில் அபியையும் லதாவையும் சேர்த்து விட்டார்.

புதிய சூழல், புதிய முகங்கள் என பழகிக்கொள்ளவே இருவருக்கும் பல மாதங்கள் சென்றன. அதுவும் அபிக்கு பெரும் கஷ்டப்பட்டாள் ஏனெனில் அபி அவளது கிராமத்தில் மகளிர் பாடசாலையிலே கல்வி கற்றாள். ஆனால் இது ஒரு கலவன் பாடசாலையே. ஆனால் லதாவிற்கோ அவளது பெறுபேறிக்கு மகளிர் பாடசாலை கிடைத்தமையால் அவளது பாடசாலை நாட்கள் வசந்த காலமாக மாறியது.

அபிக்கு அன்று பாடசாலையில் முதல் நாள். வீட்டிலிருந்து சிட்டுக்குருவி போல் பறந்து சென்றாள். அவளது சிறகுகள் அங்கு உடைக்கப்படும் என்று அந்த பேதை அறியவில்லை.

"குட் மோனிங் ஸ்டுடன்ட். சீ இஸ் அவர் நிவ் எட்மிஷன் டூ அவர் கிளாஸ். லெட்ஸ் வெல்கம் ஹெ. ப்ளீஸ் இன்டயூடிஸ் யுவர் செல்ஃப்" என்று அபியை சுட்டிக்காட்ட, "கும் மோனீங் டூ எவ்ரி வன். ஐ எம் அபிராமி. ஐ கேம் ஃரோம் குஜராத்."என்று ஆசிரியரை பார்க்க, "ஓகே டியர். நொவ் டேக் யுவர் சீட் அபிராமி." என்று கூற, தயக்கத்துடன் சென்று அமர்ந்தாள்.

முதலாவது பாடம் முடிய, ஆசிரியர் வகுப்பை விட்டு வெளியேறியதும் தாமதம், அபியை சுற்றி வகுப்பே கூடியது. கூட்டத்தில் ஒரே சலசலப்பு. கூட்டம் இரண்டாக பிரிபட, அபியை நோக்கி வந்தான் தினேஷ்.

"எல்லோரும் வாங்க .அபி பாட்டு பாட போறா. வாங்க எல்லோரும் வந்து பாடல்ல கேப்போம்" என்று வகுப்பில் ஒதுங்கி இருந்தோரை பார்த்து உத்தரவிட, எல்லோரும் வந்து சேர்ந்தனர். திரு திரு என முழித்தாள் அபி. முதன் முறையாக ஒரு சக மாணவன் இவளுக்கு கட்டளை இட்டதும், ஆண்கள் முன்னிலையில் எவ்வாறு பாடுவேன் என்று கலங்கி போனாள்.

"என்னடி, சொன்னது கேட்கவில்லையா? உனக்கு அவ்வளவு திமிரா?" ஓரிரு வார்த்தையால் திட்டி விட்டு, என்ன பண்ணலாம் என்று யோசித்து விட்டு " ஜோனீ ஜோனி யெஸ் பாப்பா.. அந்த பாடல்ல  இப்ப சுத்த தமிழில் படி டி. இல்லையென்றால் நடக்கிறதே வேற" என்று கர்ச்சிக்க, ஒரு நிமிடம் பயந்து நடுங்கினாள்.

வேறு வழியின்றி,
"பாப்பா, பாப்பா ஆம் பாப்பா" என்று
கண்களை மூடிக் கொண்டு படித்து கொண்டிருக்க, வகுப்பறையே சிரிப்பொலிகளால் அதிர, அபியின் கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் உதிர தொடங்கியன.

திடீரென வகுப்பு அமைதியாக, அருகில் அமர்ந்து இருந்த மலர் அபியை குலுக்கி விட்டாள். கண்களை திறந்து பார்க்க, வாசலில் ஆசிரியர் நின்று கொண்டு இருந்தார்.
" இது பற்றி ஆசிரியரிடம் போட்டு கொடுக்கலாம் நினைத்தால்.." என்று மிரட்டி விட்டு சென்றான் தினேஷ் .

"குட் மோனீங் எவ்ரிவன் . ஹாய். எ நிவ் கமர். கம் ஹியர். இஸ் எனி ப்ரோம்ளம்ஸ்?" என்று வினவ, "நோ மேம், பிகோஸ் ஒஃப் டச்ட் மேட் மீ க்ரை. ஐ ஏம் ஓகே" என்று முதன் முறையாக பொய் உரைத்தாள் அபி.

தொடரும்...

அது இதுவோ??(completed) Where stories live. Discover now