அது இதுவோ?? 💞Episode 27💞

2.7K 80 2
                                    


தினேஷ் "போதும்டி, என்னை விழுங்குவது போல் பார்க்கிறாய். ஏன் நான் அவ்வளவு அழகா இருக்கிறேனா ??" என்று பெருமையுடன் கேட்க,
"அவ்வளவு பெரிதாக அழகில்லை. ஏதோ பார்க்கலாம்" என்று சிறு நக்கலுடன் கூறி விலகி கொண்டாள். அச் சந்தர்ப்பம் அவளுக்கு இனிய நாளாக மாற வழிவகுத்தது.

அன்று சனிக்கிழமை,
ஆசிரியரிடம் சில கேள்விக்கான கேள்விகளை தெளிவு செய்து கொண்டு வகுப்பிலிருந்து வர அபிக்கு சற்று தாமதமானது.

வந்து கொண்டிருக்கும்போது அங்கே ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தது. தன்னையே பார்த்து கொண்டிருப்பதை கண்டு பயந்து போனாள். பார்க்கவே ரௌடி போல் காட்சியளித்தனர். அவர்களை தாண்டியே பேருந்து நிலையத்துக்கு செல்ல வேண்டும். தனக்கு உதவி செய்ய யாரும் உள்ளனரா? இவர்களை தாண்டி செல்ல யாரும் உள்ளனரா? என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். அவளின் கெட்ட காலம் யாருமே இல்லை. எவ்வளவு நேரம் ஒரே இடத்தில் நிற்பது?? பயந்து கொண்டே முன்னேறி போனாள்.

"ஹாய் அழகே.." என்று ஒருவன் கூற,
"டேய், அவளை நான் தான் முதலில் பார்த்தேன். சோ அவள் எனக்கு" என்றான் இன்னொருவன்.
"எதற்கு இந்த சண்டை, ஆளுக்கு பாதி எடுத்து கொண்டால் போதுமே?" என்றான் மூன்றாவன்.
இவ்வாறு அவர்கள் அனைவரும் கிண்டலடித்து கொண்டு அவளை செல்ல விடாது மறைத்து கொண்டு,
" உனக்கு இதில் யாரு வேண்டும்??" என்று ஒருவன் கேட்க, அவனை முறைத்தாள் அபி.

அவர்களது கண்கள் பார்க்கவே அருவருப்பாக இருந்தன. இன்னொருவன் அவளை வந்து வேண்டுமென்றே உரச,
இன்னொருவன் அவளது துப்பட்டாவை இழுக்க, அதை விட்டுவிடாது கெட்டியாக பிடித்துக் கொண்டு, பின்னால் உள்ளவர்களை தள்ளிக் கொண்டு அபி ஓடினாள். சிறிது தூரமே ஓட, பின்னால் அவர்களும் துரத்தி கொண்டு வந்தனர். பின்னால் பார்த்து ஓடியவள் முன்னால் ஓர் உருவத்தில் மோதினாள். அது ஆண் உருவம் என்றவளுக்கு அச்சமும் தலைக்கேறியது. அக்கும்பலும் அவனை கண்டு நிற்க, அவளும் புதிராக அவனை நோக்கினாள். அவனை கண்டதும் அவளது இதழோரம் சிறு புன்னகை தளும்பியது. அவனின் பின்னால் ஒளிந்து கொண்டாள் அபி. பயத்தால் அவனை பின்புறமாக கட்டியணைத்துக் கொண்டாள்.

"ஆ நீங்கள்.. தம்பி ..?" என்று ஒருவன் கேட்க,
"ஆமாம் நான் தான். இவள் எனக்கு வேண்டப்பட்ட பொண்ணு. சோ லீவ் ஹ. நான் யாரு என்று உங்களுக்கு நன்றாகவே தெரியுமே. இல்லையென்றால் மறுபடியும் நினைவு படுத்த வேண்டுமா??" என்று நம்முடைய ஹீரோ கேட்க,
" வேண்டாம் வேண்டாம்.. வாருங்கள் போகலாம்" என்றபடி தலைவன் மற்றவர்களை அழைத்து கொண்டு சென்றதை வியப்பாக பார்த்து கொண்டிருந்தாள் அபி. அவள் கட்டியணைப்பிலிருந்து தளர, அவ்வளவு நேரம் அவளது இதயத்துடிப்பு பயத்தால் அதிருவதை தினேஷ் கண்டு கொண்டான்.

" அபி, அவர்கள் போய் விட்டனர். நீ இப்போது பயப்பட தேவையில்லை. இவ்வளவு நேரம் களித்து இந்த வீதியில் போகின்றது பாதுகாப்பு இல்லை எனறு தெரிந்து ஏன் போனாய்??"
என்று தினேஷ் பின்புறம் திரும்பி கேட்க,
அவளது உதடுகள் பயத்தால் பதிலளிக்க மறுத்தன.

இவ்வளவு நாட்களும் கலகல என பேசிக் கொண்டிருந்த அவள் திடீரென்ற இவ்வாறு பயந்து கொண்டு இருப்பது தினேஷை கலங்க வைத்தது.

"சரி, என்னோடு வா" என்று அருகில் இருந்த கடைக்கு அபியை கூட்டி சென்று, குளிர்பானமும், கேக், பட்டிஸ், ரோல்ஸ் ஓடர் செய்ய, அதுவும் வந்து சேர்ந்தது.
" அபி, குளிர்பானத்தை குடி மா" என்று கரிசனையுடன் கூற, அவளும் தாய் சொல்லை தட்டாத சேய் போல் சரி என்ற படி குடித்து முடித்தாள். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்கொண்டு,

" நான் சேர் கிட்ட சந்தேகங்களை தெளிவு பண்ணிவிட்டு வரும்போது தான் அவர்கள்.." என்று கூறும்போது கண் கலங்கியது.

"சரி. உனக்கு ஒன்றும் நடக்கவில்லையே? நான் இருக்கும்போது உனக்கு ஒன்றும் நேராது. இனி இப்படி லேட் ஆகாதே. நல்ல வேளை எனக்கும் செம பசி. சாப்பிட்டு வரும்போது தான் ஓடி வருகின்ற உன்னை கண்டேன். இனி க்ளாஸ் ப்ரேக் டைமில் சந்தேகங்களை கேளு. வீட்டினருக்கு நடந்ததை சொன்னால் தேவையில்லாமல் அவர்கள் யோசிக்க கூடும், இனி க்ளாஸ் அனுப்பவும் பயப்படுவார்கள். உன்னை நான் இன்று வீட்டில் விடுகிறேன். ஒன்றும் யோசிக்காதே" என்று கூறிக்கொண்டு,
அழைத்து செல்ல முற்பட்டபோது,

" தினேஷ், நீ மட்டும் சரியான நேரத்தில் வரவில்லை என்றால் என் கதி என்னவாயிருக்கும்?? அப்படி ஏதும் தப்பாக நடந்து இருந்தால் அதற்கு அப்புறம் என்னை உயிரோடு பார்த்து.. " என்று அபி கூறும்போது, தினேஷ் தன் கரத்தால் அவளது வாயை மூடினான்.

" இப்படி தேவையற்ற கதை எல்லாம் கதைக்காதே. கதைத்தால் இனி பேச மாட்டேன்" என்று சொல்லும்போது அவனது மனம் இனம்தெரியாமல் பதைக்கலாயிற்று.

தொடரும்...

அது இதுவோ??(completed) Where stories live. Discover now