அது இதுவோ?? 💞Episode 18💞

2.6K 92 0
                                    

கதவை திறக்கும்போது அங்கே சுமாரான அழகுடன், ஸ்டைல் ஆக நின்று கொண்டு இருந்தாள் ஒரு பேதை.

வெள்ளை பிளவுஸ் கருநீல பாவாடையும் அணிந்து, பாவாடை முழங்காலை தொட்டுக் கொண்டிருந்தது. முடியை விரித்து, கண்களில், உதடுகளிலும் மேக்கப் செய்த அடையாளங்களும், அனைவரையும் இலகுவில் வசீகரிக்கும் சுபாவம் காணவே, "என்னுடைய தினேஷையும் இப்படி தான் கவிழ்த்துவிட்டாய் போல" என்று மனதில் எண்ணி கொண்டாள்.

"அபி.. யாரு, கதவை தட்டியது??" என்று அபியின் அம்மா கேட்கவே உலகிற்கு வந்தாள் அபி.

"ஏதோ யோசனையில் இருந்துவிட்டேன். சாரி.. வாருங்கள் உள்ளே" என்று இன்முகத்துடன் அழைத்தாள்.

"அம்மா, இவள் தான் சுசி. என்னுடைய ப்ரெண்டின் இன் ப்ரெண்ட். ப்ரெண்டிற்கு தேவையான பேப்பர்களை எடுத்து போக வந்திருக்கிறாள்"

"ஆ.. அப்படியா?" சுசியுடன் சிறு உரையாடலை உரையாடிவிட்டு
"நீங்கள் பேசிக் கொண்டு இருங்கள். நான் வருகிறேன். உனக்கு டீ நல்லமா?? "

" ஐயோ. எனக்கு ஒன்றும் வேண்டாம் ஆன்ட்டி " என்று சுசி கூறலானாள்.

"இரு மா. அப்போ கூல் ஜூஸ் ஏதும் கொண்டு வருகிறேன்" என்று கூறி விட்டு அங்கிருந்து நகர,

தினேஷ் கேட்ட பேப்பர்களுடன், பெரிய சாக்லெட் பெட்டி, சிவப்பு நிற இதய வடிவிலான கீ சையின் அதில் லவ் என்று வெள்ளை நிறத்தில் பொறிக்கப்பட்டு இருந்தது. இவை அனைத்தையும் தினேஷிடம் கொடுக்குமாறு அறையில் இருந்தே பார்சல் செய்து கொண்டுவந்து கொடுத்தாள்அபி.

பேசிக் கொண்டிருந்த முழு நேரமும் இருவருக்கும் தினேஷ் புராணமாகவே இருந்தது.

சிறிது நேரத்தில் பலகாரங்கள், கேக், பிஸ்கட், குளிர்பானம் என்று மேசை நிறைய பெற்றது. அபியின் வீட்டு உபசரிப்பில் சுசி மனம் மகிழ்ந்தாள். சிறிது நேரத்தில் விடை பெற்று சென்றாள்.

சுசி சென்ற தனிமையில் தினேஷ் பற்றி சிந்திக்கலானாள் அபி.

சுசி கூறிய மாதிரி அவன் யாரையும் நிவ் காலேஜ்ல அன்பு தொந்தரவு பண்ணியதில்லை. என்னை மட்டும் வித்தியாசமாக கவனித்து இருக்கிறான்.

பாடசாலையில் பிறந்த நாள் ஏற்பாடு, தனக்கு என ஸ்பெஷலா பேத்டே ட்ரீட் கேட்டது, தன்னை பிரின்சிபல் ஆபிஸுக்கு செல்லவிடாமல் தடுத்தது, அகிலனின் ப்ரெண்சிப்பை உடைத்தது....
சில உண்மைகள் அன்று மலரை சந்தித்த போது தெரியப்பெற்றது.

அப்போ....
அவன் அன்று விளையாட்டு தனமாக கேட்டது அவன் மனதில் உள்ளதையோ.. அவன் என்னை லவ் பண்ணுகிறானா ??
அவன் ஏன் அதை சுற்றி வளைத்து சொன்னான் ??
என்று மனம் பல கேள்விகளை கேட்க,
கடந்த சில நாட்களில் தன்னில் ஏற்பட்ட மாற்றத்தை காதல் என்று கண்டு கொண்டே தினேஷிற்கு அந்த இதய கீ சையினை பரிசளித்தாள் அபி.

எனது காதலை விரைவில் சொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்த பேதைக்கு அவனது காதலை அன்று அவள் நிராகரித்த காரணங்கள் ஏனோ மறந்துபோனது.

தினேஷ் உடன் மெசேஜ் பண்ணினாலும் அவளுக்கு தனது காதலை சொல்ல அவளுக்கு தைரியம் வரவில்லை. அவன் அந்த கீ சையினை பார்த்து ஏதாவது கேட்பான் என்ற நம்பிக்கையில் இருந்தாள்.

என்றும் இல்லாது சுசியை சந்தித்ததா? பார்சலை எடுத்ததா ? என்று தினேஷிடம் கேட்க, ஏன் இவ்வளவு ஆர்வம் என்று அவனுக்கு புதிராக காணப்பட்டது.

"அவள் ஸ்கூல்லிற்கு ஒரு கிழமையை வரவில்லை. அவளின் தாத்தா இறந்து போய்விட்டாராம். அடுத்த கிழமை தான் வருவாளாம்" என்ற பதிலை கேட்ட அபியும் "எல்லாவற்றுக்கும் நல்ல நேரம் வர வேண்டுமே. கொஞ்சம் அமைதியா இருங்க" என்று மனதை தேற்றி கொண்டாள்.

தொடரும்..

அது இதுவோ??(completed) Where stories live. Discover now