அது இதுவோ?? 💞Episode 40💞

2.7K 76 3
                                    


அன்று இரவு தினேஷ் இடமிருந்து கோல் வர, இருவரும் ஆனந்தத்தில் பேசிக் கொண்டு இருந்தனர்.

"அக்கா, கால்கள் வலியா?? பாம் பூசிவிடவா?" என்று லதா கேட்க,

"இப்போது ஓகே டி. வைத்துவிட்டு போ. தேவையென்றால் நானே பூசி கொள்றேன்" என்று அபி கூறினாள்.

இந்த உரையாடலை கேட்டு கொண்டிருந்த தினேஷ்,
"அபி, உனக்கு என்ன நடந்தது? விழுந்துவிட்டாயா??" என்று அக்கறையுடன் கேட்க,
"அது ஒன்றும் இல்லை. நீ சாப்பிட்டியா ??" என்று பேச்சை மாற்ற,
"இப்போது சொல்கிறாயா? இல்லையா? சொல்லாவிட்டால் நான் ஃபோனை வைக்கவா? "என்று அன்பால் மிரட்ட,
"அது வந்து.. வீட்டில் எல்லோரும் உன் வீட்டுக்கு கிளம்பினதிலிருந்து வரும்வரை தரையில் அமர்ந்து கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தேன். வெகு நேரம் இருந்ததால கால் மரத்து போய்விட்டது. அதுதான்.. " என்று அபி கூற,
ஒரு நிமிடம் இறைபக்தியுடன் சேர்ந்த அவளின் காதலின் வலிமை அவனை
நெகிழவைத்தது.

அம்மா இஷ்டம் இல்லை என்று முதலில் கூறினாலும் பிறகு முடிவு மாற காரணம் கடவுளிடம் அபி வேண்டிய வேண்டுதல் என்று புரிந்து போனது. தன்னவள் மீதுள்ள காதல் எல்லையின்றி சென்றது. அத்துடன் தினேஷிற்கு கடவுள் பக்தியும் கூடியது.

அபியை பற்றி எங்கும் விசாரிக்க, அவளை பற்றிய ஆச்சரியமிக்க தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
பரந்த கடலில் எல்லா முத்துக்களிலும்
அபி போல் ஒரு முத்தை எவ்வளவு தேடினாலும் கிடைக்கமுடியாத விலைமதிக்க முடியாத பெறுமதி கொண்ட முத்து என்றும் , குடும்பத்தினர், அயலவர்கள், வயது பாரபட்சமின்றி இரக்கம் காட்டுபவளும், உதவி செய்யும் மனப்பான்மையும், அமைதியானவளும் என்று தெரியவர அபியை நிராகரிக்க எந்தவித காரணங்களும் கிடைக்கவில்லை. தங்களது அதிஷ்டத்துக்கு கிடைக்கப்பெற்ற வரனுக்கு என மனம் மகிழ்ந்தனர்.

தினேஷிடம் அம்மா அவளை பற்றியும் அவளது புகைப்படத்தையும் காட்டி, விருப்பம் கேட்க,
முதன்முறையாக அவளை பார்ப்பதுபோல் பார்த்து விட்டு,
"அம்மா, உங்களுக்கு விருப்பம் என்றால் எனக்கும் பரிபூரண விருப்பம்" என்று கூற,
"உன் க்ளாஸ்மேட்டாமே. உனக்கு இவளை தெரியாதா??" என்று அம்மா கேட்க,
"நான் யார் கூடவும் பேசுவதில்லை மா. க்ளாஸில் இவள் பார்க்க அமைதியாக இருப்பாள்." என்று பொய் சொல்ல, அம்மாவும் நம்பிவிட்டார்.

அது இதுவோ??(completed) Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin