அது இதுவோ?? 💞Episode 9💞

3.3K 103 0
                                    


காலையில் மேலதிக வகுப்பிற்குள் நுழைந்த அபிக்கு நண்பர்களிடம் ஏமாற்றமே கிட்டியது. அவரவர் வேலைகளில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

ஏனென்றால் அன்று அவளது பிறந்த நாள். பழைய நண்பர்களிடம் வாழ்த்துக்கள் பெறப்பட்டாலும் அவளது மனம் ஏனோ புதிய நண்பர்களின் வாழ்த்துக்களுக்காக ஏங்கின.

அபிக்கு அவளது பிறந்த நாளை வருட ஆரம்பம் முதல் எண்ணிய வண்ணமே இருப்பாள். அது போன்ற அவளுக்கு விருப்பமான பிடித்த நாளும் அது மட்டுமே என்று கூறினாலும் தவறில்லை. அந்நாளில் அவளுக்கு வேண்டப்பட்ட வாழ்த்துக்கள் வரும் வரை காத்திருப்பாள். அவர்கள் வாழ்த்து தெரிவிக்கவில்லை எனில் வாழ் முழுவதும் சொல்லி காட்டி கொண்டு இருப்பாள். மேலு‌ம் பெற்றோரிடம் அந் நாளில் குறும்புகள் பண்ணி ஏச்சு கிடைக்கும் வகையில் ஏதும் செய்யவும் மாட்டாள்.
இது போலவே அவளது அதிகமான எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றம் தரும் என்று அவள் அப்போது உணரவில்லை.

அபி உடன் வழமையை போல் எல்லோரும் வந்து பேசினர். ஆனால் பிறந்த நாள் பற்றி வாய் திறக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் அபிக்கு கேட்டு விடுவோம் போல் இருந்தது.

வகுப்பு இடைவேளையின் போது எல்லோரும் கை கழுவ செல்லும்போது அங்கே பரபரப்பு. தினேஷிற்கும் வேறொரு மாணவனுக்கும் சண்டை என்று. சக மாணவர்கள் ஓட, அவளும் பின்னால் மெதுவாக போனாள். ஏனெனில் 
அபிக்கு தினேஷ் என்றாலே பிடிக்காதே. அவனுக்கு என்ன நடந்தால் தான் என்ன என்று யோசித்த படி போய் கொண்டிருந்தாள்.

எல்லாரும் அங்கே கூடி இருக்க, அவள் அங்கே வரவும், கும்பல் இரண்டாக பிளவுபட்டு அவளுக்கு வழி கொடுத்தது.

தயக்கத்துடன் முன்னே செல்ல, அவள் எதிர்ப்பார்த்ததுக்கு நேர்மாற்றமாக அங்கே ஒரு சண்டையும் இருக்கவில்லை. மாறாக அவளை கூட்டி வருவதற்கான ஏற்பாடு என்று தெரிய சில நொடிகள் போதுமாக அபிக்கு இருந்தன.

கனவு உலகில் சஞ்சரிப்பது போல் இருந்தது. தன்னையே மறந்து தன்னை தானே கிள்ளி கொண்டு இது கனவு உலகம் இல்லை என்று சுய நினைவுக்கு வந்தாள்.
அங்கே,

அந்த ஆலமரத்தின் கிளையை கொண்டு அவளுக்கு பிடித்தமான வெள்ளை நிற திரைச்சீலை, அங்கும் இங்கும் மர செடி கொடிகள் தொடங்கிய படி நிறுத்தப்பட்டு இருந்தது.
வெள்ளை நிற மேசை, பெரிய கேக் அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி என்றும் அழகாக பொறிக்கப்பட்டும், அதை சுற்றி பல் வகையான இனிப்பு பண்டங்கள்.

இதை எல்லாம் யார் செய்தது? ஏன் செய்தார்கள்? என்பதை அவள் அறியவில்லை. இவை எல்லாம் தனது சகபாடிகள் திட்டமிட்டு செய்தனர் என்று தப்பு கணக்கு போட்டாள் அபி.

"எவ்வளவு நேரம் தான் இப்படி பேய் அறைந்த மாதிரி பார்த்துக் கொண்டு இருப்பாய்? வா, கேக்கை வெட்டுவோம்" என்று மலர் சொல்ல,
"ஐ எம் ரியலி சேப்ரைஸ் என்ட் ஐ கனோட் எக்ஸ்பிரஸ் மை ஹெபினஸ் பை ஜஸ்ட் வன்ட்ஸ். ரியலீ தேக்ங்ஃபுல் டூ எவ் ரீ வன் " கண் கலங்க கூறினாள் அபி.

நான் இவ்வளவு வேண்டப்பட்டவளா? என்று அவளது மனம் தன்னை தானே கேட்டு கொண்டது.

உலக பூக்களின் வாசம்
உனக்கு சிறை பிடிப்பேன்
உலர்ந்த மேகத்தை கொண்டு
நிலவின் கறை துடைப்பேன்

ஏன் என்றால் உன் பிறந்தநாள்
ஏன் என்றால் உன் பிறந்தநாள்

என்று எல்லோரும் பாட,

தினேஷின் மனது மட்டும் தனியாக
இவ்வரிகளையும் சேர்த்து பாடின.
கிளை  ஒன்றில் மேடை அமைத்து
ஒளிவாங்கி கையில் கொடுத்து
பறவைகளை பாட செய்வேன் 
இலை எல்லாம் கைகள் தட்ட
அதில் வாழும்  பறவை ஒன்றை
உன் காதில் கூவ செய்வேன்
உன் அறையில் கூடு கட்டிட 
கட்டளை இடுவேன் 
அதிகாலை உன்னை எழுப்பிட
உத்தரவு இடுவேன் 

தொடரும்..

அது இதுவோ??(completed) Kde žijí příběhy. Začni objevovat