அது இதுவோ?? 💞Episode 24💞

2.6K 91 4
                                    


அபி தினேஷின் உருவம் மறையும் வரை மனதில் குழப்பத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்.

"வாணி, வாணி.." என்று நொண்டிக் கொண்டு கதவை தட்டினாள்.
"வாம்மா.. உள்ளே" என்று வாணியின் அம்மா அழைக்க, மெதுவாக நடந்து வரும் தோழியை கண்ட வாணி துடித்து போனாள்.

"என்னடி, நடந்தது உனக்கு??" என்று அவளை அவசரமாக இருக்கையொன்றை கொடுத்து அமர வைத்தாள்.

"படியில் இருந்து இறங்கும்போது கால் கொஞ்சம் சுளுக்கிவிட்டது. அவ்வளவு தான். அது சரியாகிடும். " என்று சரளமாக கூறினாள் அபி.

வாணியின் அம்மாவும் ஆயுர்வேத மருந்து போத்தலொன்றையும், பென்டேஜ் துணியையும் வாணியிடம் கொண்டு வந்து கொடுத்தார். தோழியின் பாதத்துக்கு சிறிது மசாஜ் செய்து மருந்தையும் பூசிவிட்டு பென்டேஜ் துணியால் சுற்றி கட்டிவிட்டாள் வாணி. அவளது நட்பில் அபி நனைந்து போனாள்.

"ஆமா, சொல்லாமல் கொள்ளாமல் எங்கே வந்தாய்டி??" என்று வாணி கேட்க, "உன்னோட சேர்ந்து படிக்க தான்" என்று அபி கூற,
"எப்போதிலிருந்து உனக்கு ஞானம் பிறந்திருக்கிறது படிக்க வேண்டும் என்று??" அவ்வாறு அவளை சீண்டிக் கொண்டு அருகில் உள்ள அறைக்கு மெதுவாக அழைத்து சென்றாள்.

"டி, செம சீன். உன் வீட்டுக்கு வரும்வழியில், கோவிலை கண்டு சாமி கும்புட போனேன். அப்போது அங்கே.." என்று அபி முற்றுப்புள்ளி வைக்க,

"என்னடி, என்றும் இல்லாதவாறு இறை பக்தி எல்லாம் நம்முடைய அபிக்கு வந்து, முகமெல்லாம் இப்படி சிவக்கிறது. அப்படி என்னதான் நடந்தது? பொறுமையை சோதிக்காமல் சொல்லுடி" என்ற நண்பியின் அதட்டலால் நடந்தவை அனைத்தையும் கூறினாள் அபி.

வாணிக்கு ஏனோ தினேஷ் என்றாலே வெறுப்பு ஏனெனில் தனது நண்பியை பிரயோசனம் எடுத்து அவன் ஏமாற்றுவதாக கணக்கு போட்டிருந்தாள். ஆனாலும் தன் நண்பியின் மனது நோகாமல் இருக்க, அவ்வப்போது அவளை ஏதாவது சொல்லி மனதை சந்தோசப்படுத்துவாள். "எப்போதும் தன் நண்பி சந்தோஷமாக இருக்க வேண்டும். அவள் மனதில் ஆசைப்படுவது நடந்தால் நல்லது. அவன் நல்லவனாகவே இருக்க வேண்டும்." என்று வாணியின் மனம் வேண்டிக் கொள்ளும்.

"அநியாயம் அந்த அழகான ரொமன்டிக் சீன்ன பார்க்க ஏலாம போய்ட்டதே" என்று வாணி அறிய பார்த்து நக்கலடித்தாள். கடைசியாக அவன் கூறிய கூற்றை கேட்டு கோபமடைந்தாள் வாணி.

"என்னடி, இவனின் பிரச்சினை ??" என்று கேட்க,
" அவன் வேண்டுமென்று பொய் சொல்லுகிறான். என்னை அவன் உண்மையாக நேசிக்கிறான் ஆனால் என்னமோ ஒரு காரணத்தால ரிஜெக் பண்ணுகிறான். என்ன காரணம் என்று நான் விரைவில் கண்டுபிடித்தே தீருவேன்" என்று அபி நம்பிக்கையாக
கூற, எதுவும் வாணியால் கூற முடியாமல், "அளவுக்கு அதிகமாக நீ யாரையும் நம்பாமல் இருக்கிறது நல்லது டி" மனதுக்கு பட்டதை இக் கூற்றை மட்டும் கூறினாள்.
சிறு நேரம் படித்துவிட்டு அன்று வாணி அபியை வீட்டில் விட்டு வந்தாள்.

நாட்கள் நகர, காலும் குணமானது.
பரீட்சையும் வந்தது. அந்த சம்பவத்தின் பின் பெரிதாக தினேஷ் பேசவில்லை. கல்லூரியின் முதல் ஆண்டு இறுதி பரீட்சை என்பதால் நன்றாக வெறி கொண்டு படித்தாள் அபி. தினேஷ் அவ்வப்போது நினைவு வந்தாலும் தன்னை சமாளித்து கொண்டாள்.

பரீட்சை காலை எழுந்து காலேஜ் செல்ல ரெடி ஆகும்போது தற்செயலாக ஃபோனில் நேரம் பார்க்க எடுத்த போது,
"தினேஷிடமிருந்து ஒரு மெசேஜ் " திறந்து பார்க்கையில்,
" விஷ் யூ ஆல் த பெஸ்ட். பரீட்சைய நல்லபடியாக செய்" என்ற மெசேஜில் அவளது காலைப்பொழுது மேலும் இனிதானது.
"விஷ் யூ த சேம்" என்று பதில் அனுப்பி விட்டு காலேஜை அடைந்தாள்.

படித்த அலகுகளை நன்றாக பரீட்சையில் எழுதிவிட்டு வீடு வந்து சேர்ந்தாள். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்களில் பரீட்சையும்  நிறைவு பெற்றது.

அன்றிரவு,
"அபி, பரீட்சைகள் எல்லாம் எப்படி?" என்று அபியிடம் தினேஷால் வினவ,
"பரவல்ல. நல்லம்" என்ற ஒத்த வரியில் பதிலளித்தாள்.
"ஏன் அபி என் மேல் கோபமா?" என கேட்க ,
"இல்லையே" என்ற அவளது ஒத்த வார்த்தையை கொண்ட பதில் அவள் தன் மேல் கோபம் என்று தினேஷிற்கு உணர்த்தியது. மற்றைய நாளில் பந்தி பந்தியாக மெசேஜ் வரும்.

"நீ எந்த நேரமும் ஃபோனிலே இருந்தாய். உன்னை பரீட்சைக்கு படிக்க வைப்பதற்கு தான் அப்படி புறக்கணித்து நடக்குற மாதிரி நடித்தேன் டி. என்னை நம்புடி" என்ற தினேஷின் பதில் அபியின் மனதை கரையவைத்தது.

தொடரும்..

அது இதுவோ??(completed) Where stories live. Discover now